புதுதில்லியில் உள்ள பிரகதி மைதானத்தில் சர்வதேச கண்காட்சி மற்றும் மாநாட்டு மைய (ஐ.இ.சி.சி) வளாகத்தை திறந்து வைத்து பிரதமர் திரு நரேந்திர மோடி ஆற்றிய உரையின் தமிழாக்கம்
July 26th, 11:28 pm
பாரத மண்டபம் கட்டும் பணியில் ஈடுபட்ட ஒவ்வொரு தொழிலாளர், சகோதர, சகோதரிகளுக்கும் எனது மனமார்ந்த பாராட்டுக்களையும், வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். இன்று காலை, இந்த தொழிலாளர்கள் அனைவரையும் சந்திக்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. அவர்களை கௌரவிப்பது எனது பாக்கியம். அவர்களின் கடின உழைப்பைக் கண்டு இன்று ஒட்டுமொத்த இந்தியாவும் வியக்கிறது.புதுதில்லியில் உள்ள பிரகதி மைதானத்தில் சர்வதேச கண்காட்சி மற்றும் மாநாட்டு மைய (ஐஇசிசி) வளாகத்தை பிரதமர் திறந்து வைத்தார்
July 26th, 06:30 pm
புதுதில்லியில் உள்ள பிரகதி மைதானத்தில் சர்வதேச கண்காட்சி மற்றும் மாநாட்டு மைய (ஐஇசிசி) வளாகத்தை பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று திறந்து வைத்தார். ஜி-20 நாணயம் மற்றும் ஜி-20 அஞ்சல்தலையை அவர் வெளியிட்டார். மாநாட்டு மையத்திற்கு ‘பாரத மண்டபம்’ என பெயர் சூட்டும் விழா ஆளில்லா விமானம் மூலம் நடத்தப்பட்டதையும், அந்நிகழ்ச்சியில் நடத்தப்பட்ட கலாச்சார நிகழ்ச்சியையும் பிரதமர் கண்டு களித்தார். இது பிரதமரின் தொலைநோக்குப் பார்வையால், சுமார் 2,700 கோடி ரூபாய் செலவில் தேசிய திட்டமாக உருவாக்கப்பட்டது. பிரகதி மைதானத்தில் உள்ள இந்த புதிய ஐஇசிசி வளாகம் இந்தியாவை ஒரு சர்வதேச வர்த்தக மையமாக மேம்படுத்த உதவும்.பிரதமரின் விரைவு சக்தி எனும் பன்முனை தொடர்புக்கான தேசியப் பெருந்திட்ட தொடக்க விழாவில் பிரதமர் நிகழ்த்திய உரையின் மொழியாக்கம்
October 13th, 11:55 am
மத்திய அமைச்சரவையில் எனது சகாக்களான திரு நிதின் கட்கரி அவர்களே, திரு பியூஷ் கோயல் அவர்களே, திரு ஹர்தீப் சிங் பூரி அவர்களே, திரு சர்பானந்த சோனோவால் அவர்களே, திரு ஜோதிராதித்ய சிந்தியா அவர்களே, திரு அஸ்வினி வைஷ்ணவ் அவர்களே, திரு ராஜ்குமார் சிங் அவர்களே, பல்வேறு மாநிலங்களின் முதலமைச்சர்களே துணை நிலை ஆளுநர்களே, மாநில அமைச்சர்களே, தொழில்துறை நண்பர்களே, மற்ற பிரமுகர்களே, எனதருமை சகோதரர்களே, சகோதரிகளே,பிரதமரின் கதி (அதிவிரைவு) சக்தி திட்டத்தை பிரதமர் தொடங்கி வைத்தார்
October 13th, 11:54 am
பிரதமரின் அதிவிரைவுத் திட்டம் பன்முனை இணைப்புக்கான தேசிய பெருந்திட்டத்தை பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று தொடங்கினார். பிரகதி மைதானத்தில் புதிய கண்காட்சி வளாகத்தையும் அவர் தொடங்கி வைத்தார். மத்திய அமைச்சர்கள் திரு நிதின் கட்கரி. திரு பியூஷ் கோயல், திரு ஹர்தீப் சிங் பூரி, திரு சர்பானந்த சோனாவால், திரு ஜோதிர் ஆதித்யா சிந்தியா மற்றும் திரு அஸ்வினி வைஷ்ணவ், திரு ஆர் கே சிங், மாநில முதலமைச்சர்கள், துணை நிலை ஆளுநர்கள், மாநில அமைச்சர்கள், பிரபல தொழிலதிபர்கள் ஆகியோர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். தொழில்துறையிலிருந்து ஆதித்ய பிர்லா குழுமத்தலைவர் திரு குமாரமங்கலம் பிர்லா, டிராக்டர்ஸ் & ஃபார்ம் எக்யூப்மென்ட்ஸ் தலைமை நிர்வாக இயக்குநர் திருமிகு மல்லிகா சீனிவாசன், டாடா ஸ்டீல் நிறுவன நிர்வாக இயக்குநர் திரு டி வி நரேந்திரன், சிஐஐஏ தலைவர் மற்றும் ரிவிகோ நிறுவனத்தின் துணை நிர்வாகி திரு தீபக் கார்க் ஆகியோர் இந்நிகழ்ச்சியில் தங்கள் கருத்துக்களைத் தெரிவித்தனர்.ஜூலை 15 அன்று பிரதமர் வாரணாசி செல்கிறார்
July 13th, 06:18 pm
ஜூலை 15, 2021 அன்று பிரதமர் திரு நரேந்திர மோடி வாரணாசிக்குப் பயணம் மேற்கொள்ளவிருக்கிறார். தமது பயணத்தின் போது பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை பிரதமர் தொடங்கி வைத்து, அடிக்கல் நாட்டுவார்.