பாலி மொழிக்கு செம்மொழி அந்தஸ்து வழங்க மத்திய அரசு முடிவு செய்திருப்பது பகவான் புத்தரின் சிந்தனைகளில் நம்பிக்கை கொண்டவர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது: பிரதமர்

October 24th, 10:43 am

பாலி மொழிக்கு செம்மொழி அந்தஸ்து வழங்க மத்திய அரசு முடிவு செய்ததற்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். பகவான் புத்தரின் சிந்தனைகளில் நம்பிக்கை கொண்டவர்களிடையே இது மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என்றும் அவர் கூறினார். கொழும்பில் இந்திய பண்பாட்டு உறவுகள் சபையால் நடத்தப்பட்ட 'பாலி மொழியை செம்மொழியாக்கல்' என்ற குழு விவாதத்தில் பங்கேற்ற பல்வேறு நாடுகளைச் சேர்ந்த அறிஞர்கள் மற்றும் துறவிகளுக்கும் திரு மோடி நன்றி தெரிவித்தார்.

இந்தியாவின் நாகப்பட்டினம் மற்றும் இலங்கையின் காங்கேசன்துறை இடையே படகு சேவையைத் தொடங்கி வைத்துப் பிரதமர் நிகழ்த்திய உரை

October 14th, 08:15 am

இந்த முக்கியமான தருணத்தில் உங்களுடன் இணைவது எனது பெரும்பேறாகும். இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான ராஜீய மற்றும் பொருளாதார உறவுகளில் ஒரு புதிய அத்தியாயத்தை நாம் தொடங்குகிறோம். நாகப்பட்டினத்திற்கும் காங்கேசன்துறைக்கும் இடையில் படகுச் சேவை தொடங்கப்பட்டிருப்பது நமது உறவுகளை வலுப்படுத்துவதில் ஒரு முக்கிய மைல்கல்லாகும்.

இந்தியாவின் நாகப்பட்டினம் மற்றும் இலங்கையின் காங்கேசன்துறை இடையே படகு சேவையைத் தொடங்கி வைத்துப் பிரதமர் உரையாற்றினார்

October 14th, 08:05 am

இந்தியாவின் நாகப்பட்டினம் மற்றும் இலங்கையின் காங்கேசன்துறை இடையே படகு சேவையை இன்று காணொலிக் காட்சி மூலம் தொடங்கி வைத்துப் பிரதமர் திரு நரேந்திர மோடி உரையாற்றினார்.

அக்டோபர் 20-ல் உத்தரப்பிரதேசம் செல்லும் பிரதமர், குஷிநகர் சர்வதேச விமான நிலையத்தை திறந்து வைக்கிறார்

October 19th, 10:35 am

பிரதமர் திரு நரேந்திர மோடி, 20 அக்டோபர் 2021 அன்று உத்தப்பிரதேசம் செல்கிறார். அன்று காலை பத்து மணி அளவில் குஷிநகர் சர்வதேச விமானநிலையத்தைப் பிரதமர் திறந்து வைக்க உள்ளார். அதனைத் தொடர்ந்து காலை 11.30 மணி அளவில் அபிதாம்மா தினத்தையொட்டி மகாபரிநிர்வானா கோவிலில் நடைபெறும் நிகழ்ச்சியிலும் அவர் பங்கேற்கிறார். அதன் பின், சுமார் 1.15 மணி அளவில், குஷிநகரில் நடைபெறும் விழாவில் பங்கேற்று, பல்வேறு வளர்ச்சித் திட்டங்களைத் தொடங்கி வைத்து புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்ட உள்ளார்.

ஸ்ரீலங்கா வெள்ளம் மற்றும் நிலச்சரிவால், உயிர் இழந்தவர்களுக்கு இரங்கலும், உடைமைகள் இழப்புக்கு வருத்தமும் பிரதமர் தெரிவித்தார்

May 27th, 12:59 pm

வெள்ளம் மற்றும் நிலச்சரிவால், உயிர் இழந்தவர்களுக்கு இரங்கலும், உடைமைகள் இழப்புக்கு வருத்தமும் பிரதமர் தெரிவித்தார். ”வெள்ளம் மற்றும் நிலச்சரிவால், உயிர் இழந்தவர்களுக்கு இரங்கல், உடைமைகள் இழப்புக்கு வருத்தமும் இந்தியா தெரிவித்து கொள்கிறது. இந்த தேவையான தருணத்தில், ஸ்ரீலங்கா சகோதர, சகோதரிகளுக்கு இந்தியா உறுதுணையாக இருக்கும். நம் கப்பல்கள் நிவாரண உதவிகளுடன் ஸ்ரீலங்கா சென்றுள்ளன. நாளை காலை முதல் கப்பல் கொலம்போ சென்றடையும். இரண்டாவது கப்பல் ஞாயிறன்று சென்றடையும். மேலும் உதவிகளுக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன,” என்று பிரதமர் கூறினார்.

சர்வதேச வேசக் தின கொண்டாட்டங்களில் பங்கேற்ற பிரதமர் மோடிக்கு ஸ்ரீலங்கா

May 12th, 12:25 pm

தலைவர்கள் பாராட்டு தெரிவித்தனர். ஜனாதிபதி மைத்ரிபால ஸிரிஸேனா பிரதமர் மோடியை வரவேற்று, ஸ்ரீலங்காவின் கொண்டாட்டத்தில் பங்கேற்றதற்கு நன்றி தெரிவித்தார். புத்தரின் உயர்ந்த போதனைகள் பற்றியும், அவை எப்படி இன்றும் சமூகத்தை பலப்படுத்துகிறது என்று பேசினார்.

இந்தியா-ஸ்ரீலங்கா உறவில் பெளத்தம் எப்போதும் மங்காத ஒரு ஒளியை அளிக்கிறது: பிரதமர் மோடி

May 12th, 10:20 am

ஸ்ரீலங்கா, வேஸக் தின கொண்டாட்டத்தில், பேசிய பிரதமர் நரேந்திர மோடி, புத்தரின் போதனைகள் எவ்வாறு ஆளுமையில், கலாச்சாரத்தில் மற்றும் தத்துவத்தில் வேரோடி இருக்கின்றன என்பதை குறிப்பிட்டு பேசினார். “விலைமதிப்பில்லாத புத்தர் மற்றும் அவரின் போதனைகளை உலகத்துக்கு பரிசாக அளித்துள்ள இந்த பகுதி ஆசிர்வதிக்கப்பட்டதாகும்,” என்றார் பிரதமர்.

ஸ்ரீலங்கா ஜனாதிபதி மைத்ரிபால ஸிரிஸேனாவை பிரதமர் நரேந்திர மோடி சந்தித்தார்

May 11th, 10:30 pm

ஸ்ரீலங்கா ஜனாதிபதி மைத்ரிபால ஸிரிஸேனாவை பிரதமர் நரேந்திர மோடி இன்று சந்தித்தார். இந்தியா-ஸ்ரீலங்கா இடையேயான உறவை மேலும் மேம்படுத்த இரு தலைவர்களும் பல தலைப்புகளில் பேச்சுவார்த்தைகள் நடத்தினார்கள்.

கெலொம்போ, ஸ்ரீலங்கா-வில் உள்ள ஸீமா மலாகா கோவிலில் பிரதமர் நரேந்திர மோடி பிரார்த்தனை செய்தார்

May 11th, 07:11 pm

கெலொம்போ, ஸ்ரீலங்கா-வில் உள்ள சிறப்புமிக்க ஸீமா மலாகா கோவிலுக்கு சென்று, பிரதமர் நரேந்திர மோடி பிரார்த்தனை செய்தார். ஸ்ரீலங்கா பிரதம மந்திரி திரு ரணில் விகரமஸிங்கேவும் பிரதமர் மோடியுடன் கோவிலுக்கு சென்றார்.

உற்சாக வரவேற்புடன் பிரதமர் மோடி ஸ்ரீலங்கா சென்றடைந்தார்

May 11th, 07:05 pm

பிரதமர் நரேந்திர மோடி கொலம்போ, ஸ்ரீலங்கா சென்றடைந்தார். ஸ்ரீலங்கா பிரதம மந்திரி திரு ரணில் விக்ரமசிங்கே மற்றும் பல உயரதிகாரிகள், அவரை வரவேற்றனர்.

பிரதமர் ஸ்ரீலங்காவுக்கு பயணம் செய்கிறார்

May 11th, 11:06 am

மே 11 மற்றும் 12, 2017-ல், பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி ஸ்ரீலங்காவுக்கு பயணம் மேற்கொள்ள இருக்கிறார். அவருடைய ஃபேஸ்புக் பக்கத்தில், “நான், மே 11 தொடங்கி, இரண்டு நாள் பயணமாக ஸ்ரீலங்கா செல்ல இருக்கிறேன். இது, இரண்டு வருடங்களில், இரு தரப்பு இணைப்பை மேம்படுத்த மேற்கொள்ளும் என் இரண்டாவது பயணமாகும். இது இரு நாடுகளுக்கிடையே நிலவும் உறுதியான உறவை குறிக்கிறது,” என்று பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.