இங்கிலாந்து மன்னர் மூன்றாம் சார்லஸுடன் பிரதமர் மோடி உரையாடினார்

December 19th, 06:15 pm

இங்கிலாந்து மன்னர் மூன்றாம் சார்லஸுடன் பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று உரையாடினார்.

கிரெனடா பிரதமருடன் பிரதமர் திரு மோடி சந்திப்பு

November 21st, 10:44 pm

கயானாவின் ஜார்ஜ்டவுன் நகரில் நவம்பர் 20 அன்று நடைபெற்ற இந்திய-கேரிகாம் 2-வது உச்சிமாநாட்டின் இடையே, பிரதமர் திரு. நரேந்திர மோடி.கிரெனடா பிரதமர் மேதகு திரு. டிக்கோன் மிட்செல்லை சந்தித்தார்.

The bond between India & Guyana is of soil, of sweat, of hard work: PM Modi

November 21st, 08:00 pm

Prime Minister Shri Narendra Modi addressed the National Assembly of the Parliament of Guyana today. He is the first Indian Prime Minister to do so. A special session of the Parliament was convened by Hon’ble Speaker Mr. Manzoor Nadir for the address.

கயானா நாடாளுமன்றத்தில் பிரதமர் ஆற்றிய உரை

November 21st, 07:50 pm

கயானாவின் தேசிய நாடாளுமன்றத்தில் பிரதமர் திரு. நரேந்திர மோடி உரையாற்றினார். இதன்மூலம் இவ்வாறு உரையாற்றிய முதல் இந்தியப் பிரதமர் என்ற பெருமையை இவர் படைத்தார். இந்த உரைக்காக நாடாளுமன்றத்தின் சிறப்புக் கூட்டத்தை மாண்புமிகு சபாநாயகர் திரு.மன்சூர் நாதிர் கூட்டியிருந்தார்.

ஆன்டிகுவா மற்றும் பார்புடா பிரதமருடன் பிரதமர் சந்திப்பு

November 21st, 09:37 am

கயானாவின் ஜார்ஜ்டவுன் நகரில் நடைபெற்ற 2-வது இந்தியா-கரிகாம் உச்சிமாநாட்டின் இடையே, ஆன்டிகுவா மற்றும் பார்புடா பிரதமர் திரு. கேஸ்டன் பிரவுனை பிரதமர் திரு. நரேந்திர மோடி நவம்பர் 20 அன்று சந்தித்தார்.

பார்படோஸ் பிரதமருடன் பிரதமர் மோடி சந்திப்பு

November 21st, 09:13 am

கயானாவின் ஜார்ஜ்டவுன் நகரில் நடைபெற்ற இந்தியா-கரிகாம் உச்சிமாநாட்டிற்கு இடையே பிரதமர் திரு. நரேந்திர மோடி பார்படாஸ் பிரதமர் திரு மியா அமோர் மோட்லியை நவம்பர் 20 அன்று சந்தித்தார். இந்த உயர்மட்டப் பேச்சுவார்த்தை இந்தியா மற்றும் பார்படாஸ் இடையேயான இருதரப்பு உறவை மீண்டும் உறுதிப்படுத்தவும், வலுப்படுத்தவும் இரு தலைவர்களுக்கும் ஒரு வாய்ப்பை அளித்தது.

கயானா அதிபருடன் பிரதமர் பேச்சுவார்த்தை

November 21st, 04:23 am

பிரதமர் திரு. நரேந்திர மோடி நவம்பர் 20 அன்று ஜார்ஜ்டவுனில் உள்ள அரசு இல்லத்தில் கயானா அதிபர் டாக்டர் முகமது இர்பான் அலியை சந்தித்தார். அரசு மாளிகைக்கு வந்தபோது, அவரை அதிபர் அலி வரவேற்று மரியாதை அளித்தார்.

இந்தியா-கரிகாம் 2-வது உச்சி மாநாட்டில் பிரதமர் ஆற்றிய தொடக்க உரையின் தமிழாக்கம்

November 21st, 02:15 am

எனது நண்பர்கள், அதிபர் இர்பான் அலி, பிரதமர் டிக்கோன் மிட்செல் ஆகியோருடன் இரண்டாவது இந்தியா-கரிகாம் உச்சிமாநாட்டில் பங்கேற்பதில் நான் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். கரிகாம் குடும்பத்தைச் சேர்ந்த அனைவரையும் நான் மனதார வரவேற்கிறேன். குறிப்பாக, இந்த உச்சிமாநாட்டை சிறப்பாக ஏற்பாடு செய்ததற்காக அதிபர் இர்பான் அலிக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

இரண்டாவது இந்தியா-கரிகாம் உச்சி மாநாடு

November 21st, 02:00 am

பிரதமர் திரு நரேந்திர மோடி மற்றும் கிரெனடா பிரதமர் திரு. டிக்கோன் மிட்செல் ஆகியோர் 20 நவம்பர் 2024 அன்று ஜார்ஜ்டவுனில் நடைபெற்ற 2-வது இந்தியா-கரிகாம் உச்சிமாநாட்டிற்கு தலைமை தாங்கினர். இந்த உச்சிமாநாட்டை ஏற்பாடு செய்ததற்காக கயானா அதிபர் இர்பான் அலிக்கு பிரதமர் நன்றி தெரிவித்தார். முதலாவது இந்தியா-கரிகாம் உச்சி மாநாடு, 2019-ல் நியூயார்க்கில் நடைபெற்றது. இந்த உச்சிமாநாட்டில் கயானா அதிபர் மற்றும் கிரெனடா பிரதமர் ஆகியோரும் கலந்து கொண்டனர்:

பிரதமர் திரு. நரேந்திர மோடியும், கயானா அதிபர் டாக்டர் இர்பான் அலியும் 'தாயின் பெயரில் ஒரு மரக்கன்று' நடும் இயக்கத்தில் பங்கேற்றனர்

November 20th, 11:27 pm

கயானாவின் ஜார்ஜ்டவுனில் நடைபெற்ற தாயின் பெயரில் ஒரு மரக்கன்று நடும் இயக்கத்தில் பிரதமர் திரு. நரேந்திர மோடியும், கயானா அதிபர் டாக்டர் இர்பான் அலியும் பங்கேற்றனர். இது நீடித்த நிலைத்தன்மைக்கான பகிரப்பட்ட உறுதிப்பாடு என்று திரு மோடி குறிப்பிட்டார்.

"சமூக உள்ளடக்கம் மற்றும் பசி, வறுமைக்கு எதிரான போராட்டம்" என்ற தலைப்பில் ஜி20 அமர்வில் பிரதமர் ஆற்றிய உரை

November 18th, 08:00 pm

ஜி-20 உச்சிமாநாட்டை நடத்துவதற்கான பிரம்மாண்டமான ஏற்பாடுகளுக்காக அதிபர் லூலாவை நான் முதலில் பாராட்ட விரும்புகிறேன்.

சமூக உள்ளடக்கம் மற்றும் பசி, வறுமைக்கு எதிரான போராட்டம் குறித்த ஜி-20 அமர்வில் பிரதமர் உரையாற்றினார்

November 18th, 07:55 pm

'சமூக உள்ளடக்கம் மற்றும் பசி, வறுமைக்கு எதிரான போராட்டம்' என்ற தலைப்பில் ஜி 20 மாநாட்டின் தொடக்க அமர்வில் பிரதமர் திரு நரேந்திர மோடி உரையாற்றினார். இந்த உச்சிமாநாட்டிற்கு ஏற்பாடு செய்ததற்காகவும், சிறப்பான விருந்தோம்பலுக்காகவும் பிரேசில் அதிபர் மேதகு திரு. லூயிஸ் இனாசியோ லூலா டா சில்வாவுக்கு பிரதமர் நன்றி தெரிவித்தார். நிலையான வளர்ச்சி இலக்குகளை மையமாகக் கொண்ட பிரேசிலின் ஜி 20 செயல்திட்டத்தைப் பாராட்டிய அவர், இந்த அணுகுமுறை உலகளாவிய தெற்கின் கவலைகளை எடுத்துக்காட்டுகிறது என்றும் புதுதில்லி ஜி 20 உச்சிமாநாட்டில் மேற்கொள்ளப்பட்ட மக்களை மையமாகக் கொண்ட முடிவுகளை முன்னெடுத்துச் செல்கிறது என்றும் குறிப்பிட்டார். ஒரே பூமி, ஒரே குடும்பம், ஒரே எதிர்காலம் என்ற இந்திய ஜி20 தலைமைத்துவத்தின் அழைப்பு ரியோ உரையாடல்களில் தொடர்ந்து எதிரொலிக்கிறது என்பதை அவர் மேலும் அடிக்கோடிட்டுக் காட்டினார்.

அனைவரும் தங்கள் அன்னையின் பெயரில் ஒரு மரக்கன்றை நட்டு, பூமியின் நிலையான சூழல் பாதுகாப்பிற்குப் பங்களிக்குமாறு மக்களைப் பிரதமர் கேட்டுக்கொண்டுள்ளார்

November 16th, 09:56 pm

மக்கள் தங்கள் அன்னையின் பெயரில் மரக்கன்று நட்டு, பூமியின் நிலையான சுற்றுச் சூழல் பாதுகாப்பிற்குப் பங்களிக்க வேண்டும் என்று பிரதமர் திரு நரேந்திர மோடி வலியுறுத்தியுள்ளார். அன்னையின் பெயரில் மரக்கன்று நடும் இயக்கத்திற்கு உத்வேகம் அளித்த அனைவருக்கும் திரு நரேந்திர மோடி நன்றி தெரிவித்துள்ளார்.

Tribal society is the one that led the fight for centuries to protect India's culture and independence: PM Modi

November 15th, 11:20 am

PM Modi addressed Janjatiya Gaurav Diwas, emphasizing India's efforts to empower tribal communities, preserve their rich heritage, and acknowledge their vital role in nation-building.

பழங்குடியினர் கௌரவ தினத்தையொட்டி பகவான் பிர்சா முண்டாவின் 150-வது பிறந்த நாள் கொண்டாட்டம் பிரதமர் திரு. நரேந்திர மோடி தொடங்கி வைத்தார்

November 15th, 11:00 am

பழங்குடியினர் கௌரவ தினத்தை முன்னிட்டு பகவான் பிர்சா முண்டாவின் 150-வது பிறந்த நாள் கொண்டாட்டத்தை தொடங்கி வைத்த பிரதமர் திரு நரேந்திர மோடி, பீகார் மாநிலம் ஜமுயில் இன்று ரூ.6,640 கோடி மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி, நிறைவடைந்த திட்டங்களை தொடங்கி வைத்தார். நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் நடைபெற்ற பழங்குடியினர் தின நிகழ்ச்சிகளில் பங்கேற்ற மாநிலங்களின் ஆளுநர்கள், முதலமைச்சர்கள், மத்திய அமைச்சர்கள் ஆகியோரைப் பிரதமர் வரவேற்றார். இந்தியா முழுவதிலும் இருந்து இந்த நிகழ்ச்சியில் இணைந்த எண்ணற்ற பழங்குடியின சகோதர சகோதரிகளையும் பிரதமர் வரவேற்றார். கார்த்திகை பூர்னிமா, தேவ் தீபாவளி, ஸ்ரீ குருநானக் தேவ் அவர்களின் 555-வது பிறந்த நாள் ஆகியவை அனுசரிக்கப்படுவதாகக் குறிப்பிட்ட திரு மோடி, அதற்காக இந்திய குடிமக்களுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டார். பகவான் பிர்சா முண்டாவின் பிறந்த நாள் பழங்குடியினர் கௌரவ தினமாகக் கொண்டாடப்படும் நாள் என்பதால் குடிமக்களுக்கு இன்று வரலாற்றுச் சிறப்புமிக்க நாள் என்று பிரதமர் கூறினார். இந்தியக் குடிமக்கள், குறிப்பாக பழங்குடியின சகோதர சகோதரிகளுக்கு அவர் வாழ்த்து தெரிவித்தார். இன்றைய பழங்குடியினர் கௌரவ தினத்திற்கு முன்னோட்டமாக கடந்த 3 நாட்களில் தூய்மை இயக்கம் ஜமுயில் நடைபெற்றது என்று பிரதமர் குறிப்பிட்டார். தூய்மை இயக்கத்திற்காக, ஜமுய் நிர்வாகம், குடிமக்கள், குறிப்பாக பெண்கள் போன்ற பல்வேறு பங்குதாரர்களுக்கு அவர் பாராட்டு தெரிவித்தார்.

உத்தராகண்ட் உருவாக்க தினத்தையொட்டி பிரதமர் நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்

November 09th, 11:00 am

உத்தராகண்ட் மாநிலத்தின் வெள்ளி விழா ஆண்டு இன்று தொடங்குகிறது. அதாவது, உத்தரகண்ட் அதன் 25 வது ஆண்டில் நுழைகிறது. நாம் முன்னோக்கிப் பார்க்கும்போது, உத்தராகண்டின் பிரகாசமான மற்றும் வளமான எதிர்காலத்தை உருவாக்க உறுதிபூண்டு, அடுத்த 25 ஆண்டுகளுக்கான பயணத்தை நாம் தொடங்க வேண்டும். இதில் ஒரு மகிழ்ச்சிகரமான தற்செயல் நிகழ்வு உள்ளது: நமது முன்னேற்றம் தேசிய வளர்ச்சிக்காக அர்ப்பணிக்கப்பட்ட 25 ஆண்டுகால குறிப்பிடத்தக்க காலகட்டமான பாரதத்தின் அமிர்த காலத்துடன் ஒத்துப்போகிறது. இந்த சங்கமம், வளர்ச்சியடைந்த இந்தியாவின் ஒரு பகுதியாக வளர்ச்சியடைந்த உத்தராகண்ட் என்ற தொலைநோக்குப் பார்வையை எடுத்துக்காட்டுகிறது. இந்த சகாப்தத்தில் நமது பகிரப்பட்ட விருப்பங்கள் நனவாகின்றன. வரும் 25 ஆண்டுகளுக்கான இலக்குகளை மையமாகக் கொண்டு உத்தராகண்ட் மக்கள் மாநிலம் முழுவதும் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்து வருவது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த நிகழ்வுகள் மூலம், உத்தராகண்டின் பெருமை கொண்டாடப்படும். வளர்ந்த உத்தராகண்ட் என்ற பார்வை ஒவ்வொரு குடியிருப்பாளரிடமும் எதிரொலிக்கும். இந்த முக்கியமான தருணத்தில், இந்த முக்கியமான தீர்மானத்திற்காக, உங்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். இரண்டு நாட்கள் முன்பாக, வெளிநாடுவாழ் இந்தியத் தலைவர் உத்தராகண்ட் சம்மேளனமும் வெற்றிகரமாக நடைபெற்றது. மாநிலத்தின் வளர்ச்சிப் பயணத்தில் புலம்பெயர்ந்த நமது உத்தராகண்ட் மக்கள் தொடர்ந்து குறிப்பிடத்தக்க பங்காற்றுவார்கள் என்று நான் நம்புகிறேன்.

தேவபூமி உத்தராகண்ட் மாநிலத்தின் வெள்ளி விழா ஆண்டை முன்னிட்டு உத்தராகண்ட் மக்களுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து

November 09th, 10:40 am

உத்தராகண்ட் மாநிலம் உருவான தினத்தை முன்னிட்டு அம்மாநில மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ள பிரதமர், உத்தராகண்ட் மாநிலம் உருவான வெள்ளி விழா ஆண்டு இன்று முதல் தொடங்குகிறது என்று குறிப்பிட்டார். உத்தராகண்ட் மாநிலம் 25-வது ஆண்டில் அடியெடுத்து வைப்பதைக் குறிப்பிட்டுள்ள திரு நரேந்திர மோடி, அடுத்த 25 ஆண்டுகளில் ஒளிமயமான எதிர்காலத்திற்காக மாநில மக்கள் பாடுபட வேண்டும் என்று வலியுறுத்தினார். வரவிருக்கும் உத்தராகண்டின் 25 ஆண்டுகால பயணம் ஒரு பெரிய நிகழ்வு என்று கூறிய அவர், இந்தியா அதன் அடுத்த 25 ஆண்டு கால அமிர்த காலத்தில், வளர்ச்சி அடைந்த பாரதத்தில் வளர்ச்சியடைந்த உத்தராகண்டையும் உள்ளடக்கியுள்ளது என்று கூறினார். இந்தக் காலகட்டத்தில் நமது தீர்மானம் நிறைவேற்றப்படுவதை நாடு காணும் என்று திரு நரேந்திர மோடி குறிப்பிட்டார். எதிர்வரும் 25 ஆண்டுகளில் தீர்மானங்களுடன் பல்வேறு திட்டங்களை மக்கள் மேற்கொண்டிருப்பது குறித்து பிரதமர் மகிழ்ச்சி தெரிவித்தார். இந்தத் திட்டங்கள் மூலம் உத்தராகண்டின் பெருமை பரவும் என்றும், வளர்ச்சியடைந்த உத்தராகண்ட் என்ற இலக்கு மாநிலத்தின் ஒவ்வொரு நபரையும் சென்றடையும் என்றும் அவர் கூறினார். இந்த முக்கியமான தருணத்தில், இந்த முக்கியமான தீர்மானத்தை ஏற்றுக்கொண்டதற்காகவும் மாநிலத்தின் அனைத்து மக்களுக்கும் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்தார். அண்மையில் வெற்றிகரமாக ஏற்பாடு செய்யப்பட்ட 'பிரவாசி உத்தராகண்ட் சம்மேளனம்' நிகழ்ச்சியை குறிப்பிட்ட பிரதமர், வெளிநாடு வாழ் உத்தராகண்ட் மக்கள் உத்தராகண்டின் வளர்ச்சியில் முக்கிய பங்காற்றுவார்கள் என்று நம்பிக்கை தெரிவித்தார்.

16-வது பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பிரதமர் துவக்க நிகழ்ச்சியில் ஆற்றிய உரையின் தமிழாக்கம்

October 23rd, 05:22 pm

பிரிக்ஸ் அமைப்பில் இணைந்துள்ள அனைத்து புதிய நண்பர்களையும் மீண்டும் ஒருமுறை அன்புடன் வரவேற்கிறேன். உலக மனிதகுலத்தில் 40 சதவீதத்தையும், உலகப் பொருளாதாரத்தில் 30 சதவீதத்தையும் பிரிக்ஸ் அமைப்பு தனது புதிய வடிவத்தில் கொண்டுள்ளது.

16-வது பிரிக்ஸ் உச்சி மாநாட்டின் நிறைவு விழாவில் பிரதமர் ஆற்றிய உரையின் தமிழாக்கம்

October 23rd, 03:25 pm

இன்றைய கூட்டத்தை அற்புதமாக ஏற்பாடு செய்ததற்காக ரஷ்ய அதிபர் புதினுக்கு எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

16-வது பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பிரதமர் பங்கேற்பு

October 23rd, 03:10 pm

கசான் நகரில் ரஷ்யா தலைமையில் இன்று நடைபெற்ற 16-வது பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பிரதமர் திரு நரேந்திர மோடி பங்கேற்றார்.