மகாராஷ்டிராவில் ரூ.75,000 கோடி மதிப்பிலான தேசியத் திட்டங்களுக்கு பிரதமர் அடிக்கல் நாட்டி, நாட்டிற்கு அர்ப்பணிக்கிறார்
December 09th, 07:39 pm
காலை 9.30 மணிக்கு நாக்பூர் ரயில் நிலையம் சென்றடையும் பிரதமர், அங்கு வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் சேவையைக் கொடியசைத்துத் தொடங்கிவைக்கிறார்.ஜெய்ப்பூர் பெட்ரோ கெமிக்கல்ஸ் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி சிஐபிஇடி : திறப்பு விழாவில் பேசிய பிரதமர் உரையின் தமிழ் மொழிபெயர்ப்பு
September 30th, 11:01 am
ராஜஸ்தானின் மண்ணின் மகனும், இந்தியாவின் மிகப்பெரிய பஞ்சாயத்து, மக்களவையின் பாதுகாவலருமான, எங்கள் மாண்புமிகு சபாநாயகர் திரு ஓம் பிர்லா, ராஜஸ்தான் முதல்வர் திரு. அசோக் கெலாட், மத்திய சுகாதார அமைச்சர் திரு. மன்சுக் மாண்டவியா, எனது மற்ற சக ஊழியர்கள் மத்திய அமைச்சரவை சகாக்கள் திரு. கஜேந்திர சிங் ஷெகாவத், திரு. பூபேந்திர யாதவ், திரு.அர்ஜுன் ராம் மேக்வால், திரு. கைலாஷ் சவுத்ரி, டாக்டர் பாரதி பவார் திரு. பகவந்த் குபா, ராஜஸ்தான் முன்னாள் முதல்வர் திரு. வசுந்தரா ராஜே, எதிர்க்கட்சித் தலைவர் திரு. குலாப் சந்த் கட்டாரியா, மற்ற அமைச்சர்கள் ராஜஸ்தான் அரசாங்கத்தின் எம்.பி.க்கள், எம்எல்ஏக்கள், நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிரமுகர்கள் மற்றும் ராஜஸ்தானின் எனது அன்பு சகோதர சகோதரிகள் அனைவரையும் வரவேற்கிறேன்.ஜெய்பூரில் சிபெட்: பெட்ரோ ரசாயனங்கள் தொழில்நுட்ப நிறுவனத்தை பிரதமர் திறந்து வைத்தார்
September 30th, 11:00 am
ஜெய்பூரில் சிபெட்: பெட்ரோ ரசாயனங்கள் தொழில்நுட்ப நிறுவனத்தை காணொலி காட்சி வாயிலாக பிரதமர் திரு நரேந்திர மோடி திறந்து வைத்தார். மேலும் ராஜஸ்தான் மாநிலத்தின் பன்ஸ்வாரா, சிரோஹி, ஹனுமன்கர் மற்றும் தௌசா ஆகிய மாவட்டங்களில் 4 புதிய மருத்துவக் கல்லூரிகளுக்கும் அவர் அடிக்கல் நாட்டினார். 4 புதிய மருத்துவக் கல்லூரிகள் மற்றும் சிபெட் நிறுவனத்திற்காக ராஜஸ்தான் மாநில மக்களுக்கு பிரதமர் வாழ்த்து தெரிவித்தார். 2014-ஆம் ஆண்டுக்குப் பிறகு ராஜஸ்தானில் 23 புதிய மருத்துவக் கல்லூரிகளுக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளதாகவும், இவற்றில் 7 மருத்துவக் கல்லூரிகள் ஏற்கனவே பயன்பாட்டிற்கு வந்திருப்பதாகவும் அவர் கூறினார்.ஜெய்ப்பூரில் சிபெட்: பெட்ரோ ரசாயனங்கள் தொழில்நுட்ப நிறுவனத்தை செப்டம்பர் 30-ஆம் தேதி பிரதமர் திறந்து வைக்கிறார்
September 29th, 12:57 pm
ஜெய்ப்பூரில் சிபெட்: பெட்ரோ ரசாயனங்கள் தொழில்நுட்ப நிறுவனத்தை செப்டம்பர் 30-ஆம் தேதி காலை 11 மணிக்கு காணொலி காட்சி வாயிலாக பிரதமர் திரு நரேந்திர மோடி திறந்து வைப்பார். மேலும் ராஜஸ்தான் மாநிலத்தின் பன்ஸ்வாரா, சிரோஹி, ஹனுமன்கர் மற்றும் தௌசா ஆகிய மாவட்டங்களில் 4 புதிய மருத்துவ கல்லூரிகளுக்கும் அவர் அடிக்கல் நாட்டுவார்.