மத்திய பிரதேசத்தின் கஜுராஹோவில் கென் - பெட்வா நதிகளை இணைக்கும் தேசிய திட்டத்திற்கு அடிக்கல் நாட்டும் விழாவில் பிரதமர் ஆற்றிய உரையின் தமிழாக்கம்

December 25th, 01:00 pm

மாவீரர்களின் பூமியான பண்டேல்கண்ட் மக்கள் அனைவருக்கும் எனது அன்பான வணக்கங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். மத்திய பிரதேசத்தின் மாண்புமிகு ஆளுநர் திரு மங்குபாய் படேல் அவர்களே, முதல்வர் திரு மோகன் யாதவ் அவர்களே, மத்திய அமைச்சர்கள் திரு சிவராஜ் சிங், திரு வீரேந்திர குமார் மற்றும் திரு சிஆர் பாட்டீல் அவர்களே, துணை முதல்வர் திரு ஜெகதீஷ் தேவ்தா அவர்களே, நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களே, எனதன்பு சகோதர சகோதரிகளே.

மத்தியப் பிரதேச மாநிலம் கஜுராஹோவில் கென்-பெட்வா நதிகள் இணைப்புத் தேசியத் திட்டத்திற்கு பிரதமர் திரு நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினார்

December 25th, 12:30 pm

முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாயின் 100-வது பிறந்த நாளை முன்னிட்டு, பிரதமர் திரு நரேந்திர மோடி மத்தியப் பிரதேச மாநிலம் கஜுராஹோவில் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களைத் தொடங்கி வைத்ததுடன், பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கும் அடிக்கல் நாட்டினார். கூட்டத்தினரிடையே உரையாற்றிய திரு நரேந்திர மோடி, இந்திய, உலக கிறிஸ்தவ சமூகத்தினருக்கு கிறிஸ்துமஸ் வாழ்த்துகளைத் தெரிவித்தார். மத்தியப் பிரதேசத்தில் முதலமைச்சர் டாக்டர் மோகன் யாதவ் தலைமையிலான அரசு அமைந்து ஓராண்டு நிறைவடைந்ததை நினைவுகூர்ந்த திரு நரேந்திர மோடி, இதற்காக மத்தியப் பிரதேச மக்களுக்கு வாழ்த்துத் தெரிவித்தார். கடந்த ஓராண்டில் ஆயிரக்கணக்கான கோடி ரூபாய்க்கும் அதிகமான மதிப்பிலான புதிய உள்கட்டமைப்புத் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டதோடு, வளர்ச்சிப் பணிகளும் வேகம் பெற்றுள்ளன என்றும் அவர் கூறினார். வரலாற்றுச் சிறப்புமிக்க கென்-பெட்வா நதிகள் இணைப்புத் திட்டமான தௌதான் அணைக்கட்டு, மத்தியப் பிரதேசத்தின் முதலாவது சூரியசக்தி மின் நிலையமான ஓம்கரேஷ்வர் மிதக்கும் சூரிய மின்சக்தி திட்டம் ஆகியவற்றுக்கும் இன்று அடிக்கல் நாட்டப்பட்டதாகப் பிரதமர் குறிப்பிட்டார். இதற்காக மத்தியப் பிரதேச மக்களுக்கு அவர் பாராட்டுத் தெரிவித்தார்.

கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு பிரதமர் வாழ்த்து

December 25th, 09:36 am

கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று நாட்டு மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இந்திய கத்தோலிக்க ஆயர்கள் பேரவை (சி.பி.சி.ஐ) நடத்திய கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களில் தாம் கலந்து கொண்ட சில காட்சிகளையும் அவர் பகிர்ந்து கொண்டார்.

இந்திய கத்தோலிக்க பிஷப்புகள் கூட்டமைப்பு ஏற்பாடு செய்திருந்த கிறிஸ்துமஸ் கொண்டாட்ட நிகழ்ச்சியில் பிரதமர் ஆற்றிய உரையின் தமிழாக்கம்

December 23rd, 09:24 pm

சில நாட்களுக்கு முன்பு, எனது சகாவும் மத்திய இணையமைச்சருமான ஜார்ஜ் குரியன் வீட்டில் நடந்த கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தில் நான் கலந்து கொண்டேன். இன்று, உங்கள் அனைவர் மத்தியிலும் இருப்பதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன். இந்திய கத்தோலிக்க பிஷப் கூட்டமைப்பால் (சிபிசிஐ) ஏற்பாடு செய்யப்பட்ட இந்த நிகழ்வு, கிறிஸ்துமஸ் மகிழ்ச்சியில் உங்கள் அனைவருடனும் சேர ஒரு வாய்ப்பை வழங்குகிறது. இந்த நாள் நம் அனைவருக்கும் மறக்க முடியாத நாளாக இருக்கப் போகிறது. இந்த ஆண்டு சிபிசிஐ நிறுவப்பட்டு 80 ஆண்டுகள் நிறைவடைவதால் இந்த நிகழ்ச்சி மிகவும் சிறப்பு வாய்ந்தது. இந்த முக்கியமான தருணத்தில், சிபிசிஐ-க்கும் அதனுடன் தொடர்புடைய அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்திய கத்தோலிக்க ஆயர்கள் மாநாடு ஏற்பாடு செய்துள்ள கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களில் பிரதமர் திரு. நரேந்திர மோடி பங்கேற்பு

December 23rd, 09:11 pm

புதுதில்லியில் உள்ள சி.பி.சி.ஐ. மைய வளாகத்தில் இந்திய கத்தோலிக்க ஆயர்கள் மாநாடு ஏற்பாடு செய்திருந்த கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களில் பிரதமர் திரு. நரேந்திர மோடி பங்கேற்றார். இந்தியாவில் உள்ள கத்தோலிக்க திருச்சபையின் தலைமையகத்தில் நடைபெறும் இதுபோன்ற நிகழ்ச்சியில் பிரதமர் ஒருவர் கலந்து கொள்வது இதுவே முதல் முறையாகும். கர்தினால்கள், பிஷப்கள் மற்றும் திருச்சபையின் முக்கிய தலைவர்கள் உட்பட கிறிஸ்தவ சமூகத்தைச் சேர்ந்த முக்கிய தலைவர்களுடன் பிரதமர் கலந்துரையாடினார்.

டிசம்பர் 23-ம் தேதி புதுதில்லியில் உள்ள சிபிசிஐ மையத்தில் இந்திய கத்தோலிக்க ஆயர்கள் மாநாட்டில் நடைபெறும் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களில் பிரதமர் பங்கேற்கிறார்

December 22nd, 02:39 pm

டிசம்பர் 23ஆம் தேதி மாலை 6:30 மணிக்கு புதுதில்லியில் உள்ள சிபிசிஐ மைய வளாகத்தில் இந்திய கத்தோலிக்க ஆயர்கள் பேரவை நடத்தும் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களில் பிரதமர் திரு நரேந்திர மோடி கலந்து கொள்கிறார்.

மத்திய அமைச்சர் திரு. ஜார்ஜ் குரியன் இல்லத்தில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களில் பிரதமர் பங்கேற்பு

December 19th, 09:57 pm

மத்திய அமைச்சர் திரு. ஜார்ஜ் குரியன் இல்லத்தில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களில் பிரதமர் திரு. நரேந்திர மோடி பங்கேற்று கிறிஸ்தவ சமூகத்தைச் சேர்ந்த முக்கிய உறுப்பினர்களுடன் கலந்துரையாடினார்.

இங்கிலாந்து மன்னர் மூன்றாம் சார்லஸுடன் பிரதமர் மோடி உரையாடினார்

December 19th, 06:15 pm

இங்கிலாந்து மன்னர் மூன்றாம் சார்லஸுடன் பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று உரையாடினார்.

“Seems my office passed the ultimate test,” says PM Modi as children get exclusive peek of 7, LKM

December 27th, 12:20 pm

On the festive occasion of Christmas, Prime Minister Narendra Modi hosted a special program at his official residence. As a delightful addition to the event, several children who performed the choir were given a unique and insightful opportunity to explore the Prime Minister's official residence.

A Special Christmas at PM Modi’s Residence

December 26th, 05:08 pm

Prime Minister Narendra Modi recently celebrated Christmas with the Christian community. His interaction, imbued with warmth and respect, underscored the deep-rooted values of pluralism and inclusivity that are the bedrock of India's vibrant democracy.

7, லோக் கல்யாண் மார்க்கில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் நிகழ்ச்சியில் பிரதமர் ஆற்றிய உரையின் தமிழாக்கம்

December 25th, 02:28 pm

முதலாவதாக, உங்கள் அனைவருக்கும், உலகெங்கிலும் உள்ள மக்களுக்கு, குறிப்பாக கிறிஸ்தவ சமூகத்திற்கு, இந்த முக்கியமான பண்டிகையை முன்னிட்டு நல்வாழ்த்துகளைத் தெரிவிக்க விரும்புகிறேன்.

கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு கிறிஸ்தவ சமூகத்தினருடன் பிரதமர் கலந்துரையாடல்

December 25th, 02:00 pm

பிரதமரின் அதிகாரப்பூர்வ இல்லமான புதுதில்லி, லோக் கல்யாண் மார்க்கில் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று கிறிஸ்தவ சமூகத்தினருடன் கலந்துரையாடினார். கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தை குறிக்கும் நிகழ்ச்சியிலும் அவர் உரையாற்றினார். பள்ளி மாணவ, மாணவியர் இசை நிகழ்ச்சியும் நடைபெற்றது.

கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு நாட்டு மக்களுக்குப் பிரதமர் வாழ்த்து தெரிவித்துள்ளார்

December 25th, 09:56 am

கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டுப் பிரதமர் திரு. நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

2022 மிகவும் ஊக்கமளிக்கிறது, அற்புதமானது: ‘மன் கீ பாத்’தின் (மனதின் குரல்) போது பிரதமர் மோடி

December 25th, 11:00 am

நண்பர்களே, இவை அனைத்துடன் கூடவே 2022ஆம் ஆண்டு, மேலும் ஒரு காரணத்திற்காக நினைவில் கொள்ளத்தக்கதாக இருக்கும். அது என்னவென்றால், ஒரே பாரதம் உன்னத பாரதம் என்ற உணர்வின் விரிவாக்கம் தான் அது. நாட்டுமக்களின் ஒற்றுமையையும் ஒருமைப்பாட்டையும் கொண்டாடும் விதமாக அற்புதமான பல நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டன. குஜராத்தின் மாதவ்புரின் திருவிழாவிலே ருக்மணி திருக்கல்யாணம், பகவான் கிருஷ்ணரின் வடகிழக்குடனான தொடர்புகள் ஆகியவை கொண்டாடப்படுகின்றன; அல்லது காசி-தமிழ் சங்கமம் ஆகட்டும், இந்தக் காலங்களில் ஒற்றுமையின் பல வண்ணங்கள் தென்பட்டன. 2022ஆம் ஆண்டிலே நாட்டுமக்கள் மேலும் ஒரு அமர இதிஹாசத்தை எழுதினார்கள். ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற வீடுதோறும் மூவண்ணம் இயக்கத்தை யாரால் மறந்து விட முடியும்!! அந்த ஒப்பற்ற கணங்களிலே நாட்டுமக்கள் ஒவ்வொருவரும் சிலிர்ப்பை உணர்ந்தார்கள். சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் கழிந்த நிலையில், இந்த இயக்கம் நாடு முழுவதையும் மூவண்ணத்தால் நிரப்பியது. 6 கோடிக்கும் அதிகமானோர் மூவண்ணக்கொடியோடு செல்ஃபி புகைப்படத்தை எடுத்து அனுப்பினார்கள். சுதந்திரத்தின் இந்த அமுதப் பெருவிழாவிலே அடுத்த ஆண்டும் இதே போலவே நடக்கும் – அமுதகாலத்தின் அடித்தளத்தை இது மேலும் பலமுடையதாக ஆக்கும்.

கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி மக்களுக்குப் பிரதமர் வாழ்த்து தெரிவித்துள்ளார்

December 25th, 09:52 am

கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ள பிரதமர் திரு நரேந்திர மோடி, ஏசு கிறிஸ்துவின் உன்னதமான சிந்தனைகளை நினைவுகூர்ந்துள்ளார்

பிரதமரின் ஏழைகள் நல உணவுத்திட்டத்தை மேலும் 3 மாதங்களுக்கு (அக்டோபர் 2022-டிசம்பர்2022) மத்திய அரசு நீடித்துள்ளது

September 28th, 04:06 pm

2021-ல் பிரதமரால் அறிவிக்கப்பட்ட மக்கள் நலத்திட்டமான பிரதமரின் ஏழைகள் நல உணவுத்திட்டத்தின் கீழ் கூடுதல் உணவுப் பாதுகாப்பு வெற்றிகரமாக அமலாவதை அடுத்து இந்த திட்டத்தின் 7-வது கட்டத்தை மேலும் 3 மாதங்களுக்கு அதாவது அக்டோபர் 2022 முதல் டிசம்பர் 2022 வரை நீடிக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி மக்களுக்குப் பிரதமர் வாழ்த்துத் தெரிவித்துள்ளார்

December 25th, 10:17 am

கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி மக்களுக்குப் பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.

PM’s remarks at review meeting with districts having low vaccination coverage

November 03rd, 01:49 pm

கிளாஸ்கோவிலிருந்து தமது பயணத்தை முடித்துக் கொண்டு திரும்பிய பிரதமர் திரு.நரேந்திர மோடி உடனடியாக குறைந்த அளவில் தடுப்பூசி செலுத்திய மாவட்ட அதிகாரிகளுடன் ஆய்வு கூட்டத்தை மேற்கொண்டார். முதல் தவணை தடுப்பூசி 50 சதவீதத்திற்கும் குறைவாக செலுத்தியுள்ள மாவட்டங்கள், இரண்டாவது தவணை தடுப்பூசி செலுத்துவதில் தொய்வு காணப்படும் மாவட்டங்கள் இதில் அடங்கும். குறைந்த அளவு தடுப்பூசி செலுத்தியுள்ள ஜார்க்கண்ட், மணிப்பூர், நாகாலாந்து, அருணாச்சலப்பிரதேசம், மகாராஷ்டிரா, மேகாலயா மற்றும் இதர மாநிலங்களைச் சேர்ந்த 40-க்கும் மேற்பட்ட மாவட்டங்களின் ஆட்சியர்களுடன் பிரதமர் கலந்துரையாடினார்

குறைந்த அளவு தடுப்பூசி செலுத்தியுள்ள மாவட்டங்கள் குறித்து பிரதமர் ஆய்வு மேற்கொண்டார்

November 03rd, 01:30 pm

கிளாஸ்கோவிலிருந்து தமது பயணத்தை முடித்துக் கொண்டு திரும்பிய பிரதமர் திரு.நரேந்திர மோடி உடனடியாக குறைந்த அளவில் தடுப்பூசி செலுத்திய மாவட்ட அதிகாரிகளுடன் ஆய்வு கூட்டத்தை மேற்கொண்டார். முதல் தவணை தடுப்பூசி 50 சதவீதத்திற்கும் குறைவாக செலுத்தியுள்ள மாவட்டங்கள், இரண்டாவது தவணை தடுப்பூசி செலுத்துவதில் தொய்வு காணப்படும் மாவட்டங்கள் இதில் அடங்கும். குறைந்த அளவு தடுப்பூசி செலுத்தியுள்ள ஜார்க்கண்ட், மணிப்பூர், நாகாலாந்து, அருணாச்சலப்பிரதேசம், மகாராஷ்டிரா, மேகாலயா மற்றும் இதர மாநிலங்களைச் சேர்ந்த 40-க்கும் மேற்பட்ட மாவட்டங்களின் ஆட்சியர்களுடன் பிரதமர் கலந்துரையாடினார்.

கோவாவைச் சேர்ந்த சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் கொவிட் தடுப்பூசி பயனாளிகளிடம் கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பிரதமர் ஆற்றிய உரை

September 18th, 10:31 am

ஆற்றல் மிக்க மற்றும் பிரபலமான கோவா முதல்வர் திரு பிரமோத் சாவந்த் அவர்களே, என்னுடன் பணியாற்றும் மத்திய அமைச்சரும், கோவாவின் புதல்வருமான ஸ்ரீபத் நாயக் அவர்களே, மத்திய அமைச்சர் டாக்டர் பாரதி பிரவீன் பவார் அவர்களே, கோவா அமைச்சர்களே, எம்.பி.க்களே மற்றும் எம்.எல்ஏ.க்களே, சகோதர, சகோதரிகளே!