அர்ஜுன் எரிகேசி செஸ் தரவரிசையில் 2800 புள்ளிகளைக் கடந்ததற்கு பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து
October 27th, 11:08 am
செஸ் தரவரிசையில் 2800 புள்ளிகளைக் கடந்ததற்காக இந்திய செஸ் கிராண்ட் மாஸ்டர் அர்ஜுன் எரிகேசிக்குப் பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.45-வது செஸ் ஒலிம்பியாட் போட்டியில் ஓபன் மற்றும் மகளிர் பிரிவு போட்டிகளில் இந்திய அணி தங்கம் வென்றதற்கு பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்
September 23rd, 01:15 am
45-வது செஸ் ஒலிம்பியாட் போட்டியில் ஓபன் மற்றும் மகளிர் பிரிவுகளில் தங்கப் பதக்கம் வென்ற இந்திய அணிக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி பாராட்டு தெரிவித்துள்ளார். ஆண்கள் மற்றும் பெண்கள் சதுரங்க அணிகள் அவர்களின் ஈர்க்கக்கூடிய செயல்திறனுக்காக அவரால் பாராட்டப்பட்டன.அரசியலமைப்பு மற்றும் ஜனநாயக அமைப்புகளின் மீது அசைக்க முடியாத நம்பிக்கையை மீண்டும் உறுதிப்படுத்தியதற்காக நாட்டு மக்களுக்கு நன்றி: மன் கீ பாத்தின் (மனதின் குரல்) போது பிரதமர் மோடி.
June 30th, 11:00 am
நண்பர்களே, நமது அரசியலமைப்புச்சட்டம் மற்றும் தேசத்தின் ஜனநாயக அமைப்புகள் மீது தங்களுடைய அசைக்கமுடியாத நம்பிக்கையை மீண்டும் நிரூபித்திருக்கும் நமது நாட்டுமக்களுக்கு நான் என் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். 2024ஆம் ஆண்டின் தேர்தல், உலகின் மிகப்பெரிய தேர்தலாகும். உலகின் எந்த ஒரு தேசத்திலும், இத்தனை பெரிய தேர்தல் இதுவரை எப்போதும் நடந்ததில்லை. இதிலே 65 கோடி மக்கள் வாக்களித்தார்கள். நான் தேர்தல் ஆணையத்திற்கும், வாக்களிப்பு முறையோடு தொடர்புடைய அனைத்து பேருக்கும், இந்தக் காரணத்திற்காக பாராட்டுக்களைத் தெரிவிக்கிறேன்.பிரதமரின் தேசிய பால புரஸ்கார் விருது பெற்றவர்களுடன் பிரதமர் கலந்துரையாடல்
January 23rd, 06:01 pm
பிரதமரின் தேசிய பால புரஸ்கார் விருது பெற்றவர்களுடன் பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று காலை 7, லோக் கல்யாண் மார்க்கில் உள்ள தனது இல்லத்தில் கலந்துரையாடினார்.Organization of mega sporting events is crucial for making India a top sporting nation: PM
January 19th, 06:33 pm
Prime Minister Narendra Modi inaugurated the opening ceremony of the Khelo India Youth Games 2023 in Chennai, Tamil Nadu. Addressing the gathering, the Prime Minister welcomed everyone to the 13th Khelo India Games and said that it is a great way to begin 2024. He said that the people gathered on the occasion represent a young India, a new India whose energy is taking the country to new heights in the world of sports. He extended his best wishes to all athletes and sports lovers who have arrived in Chennai from across the country.தமிழ்நாட்டின் சென்னையில் கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டுப் போட்டிகளைப் பிரதமர் தொடங்கி வைத்தார்
January 19th, 06:06 pm
தமிழ்நாட்டின் சென்னையில் கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டுப் போட்டிகள் 2023-ன் தொடக்க விழாவில் பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று (19-01-2024) கலந்து கொண்டு போட்டியை முறைப்படி தொடங்கி வைத்தார். சுமார் ரூ. 250 கோடி மதிப்பிலான தகவல் ஒலிபரப்புத் துறை தொடர்பான திட்டங்களையும் திரு நரேந்திர மோடி தொடங்கி வைத்துப் புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். கலை நிகழ்ச்சிகளையும் அவர் பார்வையிட்டார். கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டுப் போட்டிகளின் தொடக்க விழாவைக் குறிக்கும் வகையில் இரண்டு விளையாட்டு வீரர்கள் வழங்கிய விளையாட்டு ஜோதியை அவர் பெற்றுக் கொண்டார்.மனதின் குரல், டிசம்பர் 2023
December 31st, 11:30 am
எனதருமை நாட்டுமக்களே, வணக்கம். மனதின் குரல் என்பது உங்களோடு கலந்துறவாடும் ஒரு சுபமான சந்தர்ப்பம். குடும்பச் சொந்தங்களோடு இணையும் போது, அது மிகவும் சுகமான அனுபவமாக இருக்கிறது, இனிமை தருவதாக அமைகிறது. மனதின் குரல் வாயிலாக, உங்களோடு கலந்து பேசும் போது என் உணர்வு இப்படித் தான் இருக்கிறது, மேலும் இன்றோ, தொடரும் நமது பயணத்தின் 108ஆவது பகுதியாக இருக்கிறது. நம் நாட்டிலே 108 என்ற எண்ணுக்கு மிகப் பெரிய மகத்துவம் உண்டு, அதன் புனிதத்துவம் என்பது ஆழமான ஆய்வுக்கான விஷயம். மாலையில் 108 முத்துமணிகள், 108 முறை ஜபித்தல், 108 திவ்யதேசங்கள், கோயில்களில் 108 படிகள், 108 மணிகள், 108 என்ற இந்த எண் மிக ஆழமாக நம்பிக்கையோடு இணைந்திருக்கிறது. ஆகையால் மனதின் குரலின் இந்த 108ஆவது பகுதி என்னைப் பொறுத்த மட்டிலே, மிகவும் சிறப்பானதாக ஆகி விட்டது. இந்த 108 பகுதிகளிலும் நாம் மக்களின் பங்களிப்புக்கான எத்தனையோ எடுத்துக்காட்டுகளைப் பார்த்திருக்கிறோம், அவற்றிலிருந்து கருத்தூக்கம் பெற்றிருக்கிறோம். இப்போது இந்தக் கட்டத்தை எட்டிய பிறகு, நாம் புதிய வகையில், புதிய சக்தியோடு, விரைவோடு முன்னேற உறுதிப்பாடு மேற்கொள்ள வேண்டும். நாளைய சூரியோதயம் 2024ஆம் ஆண்டிற்கான முதல் சூரியோதயமாக இருக்கும் என்பது எத்தனை இயல்பாக அமைந்த ஒன்று!! அப்போது நாம் 2024இலே கால் பதித்திருப்போம். உங்கள் அனைவருக்கும் 2024ஆம் ஆண்டிற்கான பலப்பல நல்வாழ்த்துக்கள்.எஃப்ஐடிஇ கிராண்ட் சுவிஸ் ஓபனில் வென்ற விதித் குஜராத்தி, வைஷாலிக்கு பிரதமர் வாழ்த்து
November 06th, 08:23 pm
சர்வதேச சதுரங்கக் கூட்டமைப்பின் எஃப்ஐடிஇ கிராண்ட் சுவிஸ் ஓபனில் சிறப்பான வெற்றிகளைப் பெற்ற விதித் குஜராத்தி மற்றும் வைஷாலிக்குப் பிரதமர் திரு நரேந்திர மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.ஆசிய பாரா விளையாட்டுப் போட்டியில் சதுரங்கத்தில் வெண்கலப் பதக்கம் வென்ற கிஷன் கங்கோலிக்கு பிரதமர் வாழ்த்து
October 28th, 08:48 pm
ஹாங்சோவில் நடைபெற்ற ஆசிய பாரா விளையாட்டுப் போட்டியில் ஆடவருக்கான சதுரங்கப் போட்டியின் பி2 பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்றதற்காக கிஷன் கங்கோலிக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகளில் சதுரங்கத்தில் வெண்கலம் வென்ற ஹிமான்ஷி ரதி, சன்ஸ்க்ருதி மோரே, விருத்தி ஜெயின் ஆகியோருக்கு பிரதமர் வாழ்த்து
October 28th, 08:45 pm
ஹாங்சோ ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகளில் மகளிர் சதுரங்க பி 1 பிரிவு அணியில் வெண்கலப் பதக்கம் வென்ற ஹிமான்ஷி ரதி, சன்ஸ்க்ருதி மோர், விருத்தி ஜெயின் ஆகியோருக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகளில் சதுரங்கத்தில் வெண்கலம் வென்ற கிஷன் கங்கோலி, ஆர்யன் ஜோஷி, சோமேந்திரா ஆகியோருக்கு பிரதமர் வாழ்த்து
October 28th, 08:44 pm
ஹாங்சோ ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகளில் ஆடவர் சதுரங்க பி 2 பிரிவு அணியில் வெண்கலப் பதக்கம் வென்ற கிஷன் கங்கோலி, ஆர்யன் ஜோஷி, சோமேந்திரா ஆகியோருக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகளில் சதுரங்கத்தில் வெண்கலம் வென்ற அஸ்வின் மக்வானாவுக்கு பிரதமர் வாழ்த்து
October 28th, 08:38 pm
ஹாங்சோ ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகளில் ஆடவர் சதுரங்க பி 1 பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்ற அஸ்வின் மக்வானாவுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகளில் சதுரங்கப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற தர்பன் இனானிக்குப் பிரதமர் வாழ்த்து தெரிவித்துள்ளார்
October 28th, 11:50 am
ஹாங்சோ ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகளில் ஆடவர் சதுரங்கப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற தர்பன் இனானிக்குப் பிரதமர் திரு. நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகளில் சதுரங்கப் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற சவுந்தர்யா பிரதானுக்குப் பிரதமர் வாழ்த்து தெரிவித்துள்ளார்
October 28th, 11:46 am
ஹாங்சோ ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகளில் ஆடவருக்கான சதுரங்கப் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற சவுந்தர்யா பிரதானுக்குப் பிரதமர் திரு. நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகளில் சதுரங்கப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற தர்பன் இனானி, சவுந்தர்யா பிரதான் மற்றும் அஸ்வினுக்குப் பிரதமர் வாழ்த்து தெரிவித்துள்ளார்
October 28th, 11:44 am
ஹாங்சோ ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகளில் ஆடவர் சதுரங்கப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற தர்பன் இனானி, சவுந்தர்யா பிரதான் மற்றும் அஸ்வினுக்குப் பிரதமர் திரு. நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.உலகின் முதல் நிலை வீரர் மேக்னஸ் கார்ல்சனுக்கு எதிராக வெற்றி பெற்ற கார்த்திகேயன் முரளிக்கு பிரதமர் பாராட்டு
October 19th, 06:27 pm
கத்தார் மாஸ்டர்ஸ் 2023 செஸ் போட்டியில் உலகின் முதல் நிலை வீரரான மேக்னஸ் கார்ல்சனுக்கு எதிராக வெற்றி பெற்ற கார்த்திகேயன் முரளிக்கு பிரதமர் பாராட்டு தெரிவித்துள்ளார்.ஃபிடே உலக ஜூனியர் ரேபிட் செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் வெற்றி பெற்ற ரௌனக் சத்வானிக்கு பிரதமர் வாழ்த்து
October 14th, 01:55 pm
ஃபிடே உலக ஜூனியர் ரேபிட் செஸ் சாம்பியன்ஷிப் 2023 இல் குறிப்பிடத்தக்க வெற்றியைப் பெற்றதற்காக ரவுனக் சத்வானிக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்தார்.ஆசிய விளையாட்டுப் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற செஸ் ஆண்கள் அணிக்கு பிரதமர் வாழ்த்து
October 07th, 10:26 pm
ஹாங்சோவில் நடைபெறும் ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் வெள்ளிப் பதக்கம் வென்ற செஸ் ஆடவர் அணிக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்தார்.ஆசிய விளையாட்டுப் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற செஸ் மகளிர் அணிக்கு பிரதமர் வாழ்த்து
October 07th, 10:23 pm
ஹாங்சோவில் நடைபெறும் ஆசிய விளையாட்டுப் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்றதற்காக, செஸ் மகளிர் அணிக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்தார்.ஃபிடே உலகக் கோப்பை போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய பிரக்ஞானந்தாவுக்கு பிரதமர் பாராட்டு
August 24th, 07:01 pm
ஃபிடே உலகக் கோப்பையில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய செஸ் கிராண்ட் மாஸ்டர் ஆர்.பிரக்ஞானந்தாவை பிரதமர் திரு. நரேந்திர மோடி பாராட்டியுள்ளார்.