தமிழ்நாட்டின் தூத்துக்குடியில் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களைத் தொடங்கி வைத்துப் பிரதமர் ஆற்றிய உரையின் தமிழாக்கம்

July 26th, 08:16 pm

தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி அவர்களே, எனது அமைச்சரவை சகாக்களான கிஞ்சரப்பு ராமமோகன் நாயுடு அவர்களே, டாக்டர் எல்.முருகன் அவர்களே, தமிழ்நாடு அமைச்சர்கள் தங்கம் தென்னரசு அவர்களே, டாக்டர் டி.ஆர்.பி.ராஜா அவர்களே, பி.கீதா ஜீவன் அவர்களே, அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் அவர்களே, நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி அவர்களே, தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சியின் தலைவரும் சட்டப்பேரவை உறுப்பினருமான நயினார் நாகேந்திரன் அவர்களே, தமிழ்நாட்டைச் சேர்ந்த சசோதர சகோதரிகளே!

பிரதமர் திரு. நரேந்திர மோடி, தமிழ்நாட்டின் தூத்துக்குடியில் ₹4800 கோடிக்கும் அதிக மதிப்புள்ள மேம்பாட்டுப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, நிறைவடைந்த திட்டங்களைத் தொடங்கி வைத்து, நாட்டிற்கு அர்ப்பணித்தார்

July 26th, 07:47 pm

தமிழ்நாட்டின் தூத்துக்குடியில் இன்று சுமார் ₹4800 கோடி மதிப்புள்ள மேம்பாட்டுத் திட்டங்களுக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி அடிக்கல் நாட்டியதுடன், நிறைவடைந்த திட்டங்களைத் தொடங்கி வைத்து, நாட்டிற்கு அர்ப்பணித்தார். பல்வேறு துறைகளில் அமைந்துள்ள தொடர்ச்சியான முக்கிய திட்டங்கள், பிராந்திய இணைப்பை கணிசமாக மேம்படுத்தும், தளவாடத் திறனை அதிகரிக்கும், தூய்மையான எரிசக்தி உள்கட்டமைப்பை வலுப்படுத்தும் மற்றும் தமிழ்நாடு முழுவதும் குடிமக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தும். கார்கில் வெற்றி தினத்தை முன்னிட்டு, கார்கிலின் துணிச்சல்மிகு வீரர்களுக்கு திரு. மோடி மரியாதை செலுத்தினார். தீரம் நிறைந்த வீரர்களுக்கு வீர வணக்கம் செலுத்தியதுடன், தேசத்திற்காக தங்கள் இன்னுயிரை நீத்த தியாகிகளுக்கு மனமார்ந்த அஞ்சலி செலுத்தினார்.

மனதின் குரல் நிகழ்ச்சியின் 123-வது அத்தியாயத்தில், 29.06.2025 அன்று பிரதமர் ஆற்றிய உரையின் தமிழாக்கம்

June 29th, 11:30 am

எனதருமை நாட்டுமக்களே, ஒருவர் புனித யாத்திரையாகப் புறப்படும் போது, ஒரே உணர்வு முதன்மையாக மனதில் எழும் – அது என்னவென்றால், ஒருவழியாக கடவுள் அழைத்துவிட்டார் என்பது தான். இந்த உணர்வுதான் நம்முடைய சமயப் பயணங்களின் ஆன்மாவாக விளங்குகிறது. இந்தப் பயணங்கள் உடலின் ஒழுங்குமுறைக்கும், மனதைச் சுத்தப்படுத்துவதற்கும், பரஸ்பர அன்பு, சகோதரத்துவம், இறைவனோடு ஒன்றிணையவுமான ஊடகமாக இருக்கின்றன. இவை தவிர, இந்த யாத்திரைகளின் ஒரு மிகப்பெரிய கோணம் இருக்கிறது. இந்த சமயப்பயணங்கள், சேவைக்கான சந்தர்ப்பங்களின் மாபெரும் நெறியாகவும் ஆகின்றது. எந்தவொரு பயணம் என்றாலும், எத்தனை நபர்கள் யாத்திரையை மேற்கொள்கிறார்களோ, அதைவிட அதிகமானவர்கள் இந்த தீர்த்தயாத்திரீகர்களுக்கு சேவைபுரியும் பணியில் தங்களை ஈடுபடுத்திக் கொள்கிறார்கள். பல இடங்களில் உணவிடங்களும், அன்னதானக் கூடங்களும் அமைக்கப்படுகின்றன. குடிநீர்ப் பந்தல்களை தெருவோரங்களில் மக்கள் அமைக்கிறார்கள். சேவை உணர்வோடு மருத்துவ முகாம்களும், இன்னபிற வசதிகளும் அமைக்கப்படுகின்றன. ஏராளமானவர்கள் தங்கள் பணத்தில் தீர்த்தயாத்திரை மேற்கொள்வோருக்கு தர்ம சத்திரங்களையும், அவர்கள் தங்கி இளைப்பாற அமைப்புகளையும் ஏற்படுத்துகிறார்கள்.

செனாப் ரயில் பால கட்டுமானப்பணியில் ஈடுபட்ட பணியாளர்களுடன் பிரதமர் கலந்துரையாடல்

June 06th, 03:01 pm

செனாப் ரயில் கட்டுமானப்பணியில் ஈடுபட்ட பணியாளர்களுடன் பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று கலந்துரையாடினார். நாட்டிற்கான நவீன உள்கட்டமைப்பு வசதிகளை உருவாக்குவதில் அவர்களது உறுதியான அர்ப்பணிப்பு உணர்வுடன் கூடிய சேவைகளுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி பாராட்டு தெரிவித்தார்.

செனாப் ரயில் பாலத்தின் மீது மூவண்ணக் கொடி உயரமாகப் பறக்கிறது: பிரதமர்

June 06th, 02:59 pm

பிரதமர் திரு நரேந்திர மோடி, நாட்டின் அடையாளச் சின்னமாக உள்ள செனாப் ரயில் பாலத்தில் மூவண்ணக் கொடியை ஏற்றி வைத்தார். இது நாட்டின் மகத்தான பெருமையின் தருணமாக உள்ளது என்றும், மிகவும் சவாலான பகுதிகளில் எதிர்காலத்தில் உள்கட்டமைப்பு வசதிகளை உருவாக்குவதற்கும், நாட்டின் அதிகரித்து வரும் திறனுக்கும் சான்றாக திகழ்கிறது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

ஜம்மு காஷ்மீரின் கத்ராவில் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களைத் தொடங்கி வைத்துப் பிரதமர் ஆற்றிய உரையின் தமிழாக்கம்

June 06th, 12:50 pm

ஜம்மு காஷ்மீர் துணைநிலை ஆளுநர் திரு மனோஜ் சின்ஹா அவர்களே, முதல்வர் திரு உமர் அப்துல்லா அவர்களே, மத்திய அமைச்சரவையில் உள்ள எனது சகாக்கள் திரு அஸ்வினி வைஷ்ணவ், திரு ஜிதேந்திர சிங், திரு வி. சோமன்னா அவர்களே, துணை முதல்வர் திரு சுரேந்திர குமார் அவர்களே, ஜம்மு காஷ்மீர் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் திரு சுனில் அவர்களே, நாடாளுமன்றத்தில் எனது நண்பர் திரு ஜூகல் கிஷோர் அவர்களே, இதர மக்கள் பிரதிநிதிகளே மற்றும் எனது அன்பான சகோதர சகோதரிகளே. இது வீர் ஜோராவர் சிங்கின் நிலம், இந்த நிலத்தை நான் வணங்குகிறேன்.

பிரதமர் திரு. நரேந்திர மோடி ஜம்மு & காஷ்மீரில் ரூ.46,000 கோடிக்கும் அதிக மதிப்புள்ள பல மேம்பாட்டுத் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி, நிறைவடைந்த திட்டங்களைத் தொடங்கி வைத்து நாட்டுக்கு அர்ப்பணித்தார்

June 06th, 12:45 pm

ஜம்மு - காஷ்மீரின் கத்ராவில் இன்று பிரதமர் திரு. நரேந்திர மோடி ரூ.46,000 கோடிக்கும் அதிகமான மதிப்புள்ள பல மேம்பாட்டுத் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டியதுடன், நிறைவடைந்த திட்டங்களைத், தொடங்கி வைத்து, நாட்டுக்கு அர்ப்பணித்தார். துணிச்சலான வீர ஜோராவர் சிங்கின் மண்ணுக்கு வணக்கம் செலுத்திய அவர், இன்றைய நிகழ்வு இந்தியாவின் ஒற்றுமை மற்றும் உறுதிப்பாட்டின் ஒரு பெரிய கொண்டாட்டம் என்று குறிப்பிட்டார். மாதா வைஷ்ணோ தேவியின் ஆசீர்வாதத்துடன், காஷ்மீர் பள்ளத்தாக்கு இப்போது இந்தியாவின் பரந்த ரயில்வே கட்டமைப்புடன் இணைக்கப்பட்டுள்ளது என்று திரு மோடி கூறினார். நாங்கள் எப்போதும் ஆழ்ந்த பயபக்தியுடன் அன்னை பாரதியை வணங்கி வருகிறோம், 'காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை' என்று கூறி வருகிறோம். இன்று இது நமது ரயில்வே கட்டமைப்பிலும் கூட ஒரு யதார்த்தமான நடைமுறையாகிவிட்டது என்று பிரதமர் கூறினார், உதம்பூர்-ஸ்ரீநகர்-பாரமுல்லா ரயில் பாதை திட்டம் வெறும் பெயரல்ல, ஜம்மு-காஷ்மீரின் புதிய வலிமையின் சின்னமாகவும், இந்தியாவின் வளர்ந்து வரும் திறன்களுக்கு ஒரு சான்றாகவும் உள்ளது என்று அவர் கூறினார். பிராந்தியத்தில் ரயில் உள்கட்டமைப்பு மற்றும் இணைப்பை மேம்படுத்துவதற்கான உறுதிப்பாட்டிற்கு இணங்க, அவர் செனாப் மற்றும் அஞ்ஜி ரயில் பாலங்களைத் திறந்து வைத்தார். மேலும் வந்தே பாரத் ரயில்களைக் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இது ஜம்மு-காஷ்மீருக்குள் இணைப்பை மேம்படுத்துகிறது. கூடுதலாக, ஜம்முவில் ஒரு புதிய மருத்துவக் கல்லூரிக்கும் திரு. மோடி அடிக்கல் நாட்டினார், பிராந்தியத்தில் சுகாதார வசதிகளை வலுப்படுத்துவதற்கான அரசின் உறுதிப்பாட்டை அவர் வலுப்படுத்தினார், ரூ 46,000 கோடி மதிப்புள்ள திட்டங்கள் ஜம்மு-காஷ்மீரில் வளர்ச்சியை துரிதப்படுத்தும், முன்னேற்றம் மற்றும் செழிப்பை ஊக்குவிக்கும் என்றும் அவர் கூறினார். பிரதமர் தனது வாழ்த்துக்களைத் தெரிவித்து, வளர்ச்சி மற்றும் மாற்றத்தின் இந்த புதிய சகாப்தத்திற்கு மக்களை வாழ்த்தினார்.

ஜம்மு காஷ்மீரில் ஜூன் 6 அன்று பிரதமர் பயணம் மேற்கொள்கிறார்

June 04th, 12:37 pm

பிரதமர் திரு நரேந்திர மோடி ஜூன் 6 அன்று ஜம்மு காஷ்மீர் பயணம் மேற்கொள்கிறார். அப்பகுதியில் ரயில் உள்கட்டமைப்பு மற்றும் போக்குவரத்தை மேம்படுத்துவதற்கான தமது உறுதிப்பாட்டிற்கு இணங்க, பிரதமர் செனாப் பாலத்தைத் திறந்து வைத்து, காலை 11 மணியளவில் பாலத்தைப் பார்வையிடுகிறார். அதன் பிறகு, அவர் அஞ்சி பாலத்தைப் பார்வையிட்டு திறந்து வைக்கிறார். நண்பகல் 12 மணியளவில் அவர் வந்தே பாரத் ரயில் சேவையை கொடியசைத்து தொடங்கி வைக்கிறார். அதைத் தொடர்ந்து, கத்ராவில் ரூ.46,000 கோடிக்கும் அதிக மதிப்புடைய பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டும் அவர், நிறைவடைந்த திட்டங்களைத் தொடங்கி வைத்து, நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார்.

ராஜஸ்தான் மாநிலம் பிகானிரில் வளர்ச்சிப் பணிகளின் அடிக்கல் நாட்டல் மற்றும் தொடக்க விழாவில் பிரதமர் ஆற்றிய உரையின் தமிழாக்கம்

May 22nd, 12:00 pm

ராஜஸ்தான் ஆளுநர் ஹரிபாவ் பகடே அவர்களே, மாநில முதல்வர் திரு. பஜன்லால் சர்மா அவர்களே, முன்னாள் முதல்வர் சகோதரி வசுந்தரா ராஜே அவர்களே, மத்திய அமைச்சரவையில் உள்ள எனது சகாக்கள் அஸ்வினி வைஷ்ணவ் அவர்களே, அர்ஜுன் ராம் மேக்வால் அவர்களே, ராஜஸ்தான் துணை முதல்வர் தியா குமாரி அவர்களே, பிரேம் சந்த் அவர்களே, ராஜஸ்தான் அரசின் பிற அமைச்சர்களே, நாடாளுமன்ற உறுப்பினர் மதன் ரத்தோர் அவர்களே, இதர நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களே, என் அன்பான சகோதர, சகோதரிகளே.

ராஜஸ்தானின் பிகானிரில் 26,000 ஆயிரம் கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டிய பிரதமர்

May 22nd, 11:30 am

ராஜஸ்தானின் பிகானிரில் 26,000 ஆயிரம் கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு இன்று அடிக்கல் நாட்டிய பிரதமர் திரு நரேந்திர மோடி, நிறைவடைந்த திட்டங்களை தொடங்கி வைத்து, வளர்ச்சித் திட்டங்களை நாட்டுக்கு அர்ப்பணித்தார். இந்த நிகழ்வில் உரையாற்றிய அவர், பெருமளவில் திரண்டிருந்தோரை வரவேற்றார். 18 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களிலிருந்து இணையதளம் வழியாக குறிப்பிடத்தக்க அளவில் பங்கேற்றவர்களையும் வரவேற்றார். பல ஆளுநர்கள், முதலமைச்சர்கள், துணை நிலை ஆளுநர்கள் மற்றும் பொதுமக்களின் பிரதிநிதிகளின் பங்கேற்பையும் அவர் எடுத்துரைத்தார். நாடு முழுவதிலுமிருந்து இந்த நிகழ்வில் இணைந்த அனைத்து பிரமுகர்களுக்கும், குடிமக்களுக்கும் பிரதமர் வாழ்த்து தெரிவித்தார்.

ஸ்ரீநகரில் நடைபெற்ற "இளைஞர்களுக்கு அதிகாரமளித்தல், ஜம்மு காஷ்மீரை மாற்றியமைத்தல்" நிகழ்ச்சியில் பிரதமர் நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்

June 20th, 07:00 pm

இன்று காலை, நான் தில்லியிலிருந்து ஸ்ரீநகருக்குப் பயணம் செய்யத் தயாரானபோது, எனக்குள் மிகுந்த உற்சாகம் நிறைந்திருந்தது. அதற்கு இரண்டு முக்கிய காரணங்களை நான் அடையாளம் கண்டேன். அவை ஜம்மு-காஷ்மீரின் வளர்ச்சி தொடர்பான இன்றைய நிகழ்வு மற்றும் மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு காஷ்மீர் மக்களுடனான எனது முதல் சந்திப்பு இதுவாகும்.

ஜம்மு காஷ்மீரின் ஸ்ரீநகரில் 'இளைஞர்களுக்கு அதிகாரமளித்தல், ஜம்மு-காஷ்மீரை மாற்றியமைத்தல்' நிகழ்ச்சியில் பிரதமர் உரை

June 20th, 06:30 pm

ஜம்மு காஷ்மீரின் ஸ்ரீநகரில் உள்ள ஷெர்-இ-காஷ்மீர் சர்வதேச மாநாட்டு மையத்தில் நடைபெற்ற இளைஞர்களுக்கு அதிகாரமளித்தல், ஜம்மு-காஷ்மீரில் மாற்றத்தை ஏற்படுத்துதல் நிகழ்ச்சியில் பிரதமர் திரு நரேந்திர மோடி உரையாற்றினார். ஜம்மு-காஷ்மீரில் சாலை, குடிநீர் விநியோகம் மற்றும் உயர்கல்வியில் உள்கட்டமைப்பு ஆகிய துறைகளை உள்ளடக்கிய ரூ.1,500 கோடிக்கும் அதிக மதிப்பிலான பல வளர்ச்சித் திட்டங்களைப் பிரதமர் தொடங்கி வைத்து அடிக்கல் நாட்டினார். ரூ.1,800 கோடி மதிப்பிலான வேளாண்மை சார்ந்த துறைகளில் போட்டித்திறன் மேம்பாட்டுத் திட்டத்தையும் அவர் தொடங்கி வைத்தார். புதிதாக அரசுப் பணியில் சேர்ந்த 200 பேருக்கு வேலைவாய்ப்பு கடிதங்களை வழங்கும் பணியையும் திரு மோடி தொடங்கினார்.

இல்லந்தோறும் மூவண்ணக்கொடி இயக்கத்தின் உற்சாக கொண்டாட்டங்களை பிரதமர் பகிர்ந்துள்ளார்

August 14th, 02:34 pm

நாடு முழுவதும் இல்லந்தோறும் மூவண்ணக்கொடி இயக்கத்தின் பல்வேறு உற்சாக கொண்டாட்டங்களை பிரதமர் திரு நரேந்திர மோடி தமது டுவிட்டர் பதிவில் பகிர்ந்து கொண்டுள்ளார்.

உலகின் உயரமான ரயில்வே பாலமான செனாப் பாலத்தின் வளைவு இணைப்புப்பணி நிறைவடைந்ததை ஒட்டி பிரதமர் பாராட்டு

April 05th, 08:51 pm

உலகின் உயரமான ரயில்வே பாலமான செனாப் பாலத்தின் வளைவு இணைப்புப் பணியை இந்திய ரயில்வே நிறைவு செய்ததை ஒட்டி பிரதமர் திரு நரேந்திர மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.

பிரதமர் முக்கிய உள்கட்டமைப்பு செயல்திட்டங்களை சீராய்வு செய்தார்

April 26th, 12:25 pm

பிரதமர் நரேந்திர மோடி சாலைகள், ரயில், விமான நிலையங்கள், துறைமுகம், டிஜிடல் மற்றும் நிலக்கரி துறை தொடர்பான முக்கிய உள்கட்டமைப்பு பணிகளின் தொடர் வளர்ச்சியை சீராய்வு செய்தார். பல செயல்திட்டங்களின் முக்கிய மேம்பாடுகள் நிகழ்ந்துள்ளன. கிராமப்புற சாலைகள் கட்டுமானம் மற்றும் தரத்தில் திறனுள்ள, கண்டிப்பான கண்பாணிப்புக்கு தேவையானவற்றை செய்யுமாறு பிரதமர் ஆணையிட்டார். சாலை கட்டுமானத்தில் புதிய தொழில்நுட்பங்களை பயன்படுத்துமாறு பிரதமர் மோடி. வலியுறுத்தினார்.