செளரி சௌரா தியாகிகளுக்கு போதிய அங்கீகாரம் அளிக்கப்படவில்லை
February 04th, 05:37 pm
வரலாற்றில் செளரி சௌரா தியாகிகளுக்கு போதிய அங்கீகாரம் அளிக்கப்படவில்லை என பிரதமர் இன்று வருத்தத்துடன் கூறினார்.உத்திரப்பிரதேசம் கோரக்பூரில் சௌரி சௌரா நூற்றாண்டு விழா கொண்டாட்டங்களின் துவக்க விழாவில் பிரதமர் ஆற்றிய உரையின் சிறப்பு அம்சங்கள்
February 04th, 02:37 pm
சிவபெருமானின் திருத்தலமான கோரக்நாத் தலத்திற்கு நான் தலை வணங்குகிறேன். கடவுளின் அருளால் இம்மாவட்டம் முன்னேறி வருகிறது. சௌரி சௌரா மக்களுக்கு தலை வணங்குகிறேன்.சௌரி சௌரா‘ நூற்றாண்டு விழாக் கொண்டாட்டங்களை பிரதமர் தொடங்கி வைத்தார்
February 04th, 02:36 pm
உத்தரபிரதேச மாநிலம் கோரக்பூர் மாவட்டம் சௌரி சௌரா பகுதியில், ‘சௌரி சௌரா‘ நூற்றாண்டு விழாக் கொண்டாட்டங்களை பிரதமர் திரு.நரேந்திரமோடி, காணொளிக் காட்சி வாயிலாக இன்று தொடங்கி வைத்தார். நாட்டின் விடுதலைப் போராட்டத்தில் ஒரு முக்கிய நிகழ்வான ‘சௌரி சௌரா‘ சம்பவம் நிகழ்ந்து, இன்றுடன் நூறாண்டுகள் ஆவதை குறிக்கும் வகையில் இந்நாள் கொண்டாடப்படுகிறது. சௌரி சௌரா சம்பவத்தை நினைவுகூறும் அஞ்சல் தலை ஒன்றையும் பிரதமர் வெளியிட்டார். உத்தரபிரதேச மாநில ஆளுனர் திருமதி.ஆனந்திபென் படேல் மற்றும் முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் ஆகியோர் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.பிப்ரவரி 4 அன்று `சவுரி சவுரா’ நூற்றாண்டு விழா கொண்டாட்டங்களை பிரதமர் தொடங்கி வைக்கிறார்
February 02nd, 12:23 pm
பிரதமர் திரு நரேந்திர மோடி, உத்திரப்பிரதேசம் கோரக்பூரில் உள்ள சவுரி சவுராவில், இம்மாதம் 4ஆம் தேதியன்று (4.2.21), காலை 11 மணிக்கு, சவுரி சவுரா நூற்றாண்டு விழா கொண்டாட்டங்களைக் காணொலி வாயிலாகத் தொடங்கி வைக்கிறார். இந்திய சுதந்திரப் போராட்டத்தின் முக்கிய நிகழ்வான `சவுரி சவுரா’ சம்பவம் நடந்து அன்றுடன் நூறு ஆண்டுகள் ஆகின்றன.