PM remembers heroes of freedom struggle on completion of hundred years of Chauri Chaura incident
February 04th, 07:40 pm
The Prime Minister, Shri Narendra Modi has remembered the heroes of our freedom struggle on completion of hundred years of Chauri Chaura incident. He also shared his last year's speech when the centenary celebrations of the incident began.தகுதியுள்ள தலைவர்களையும், மாவீரர்களையும் கவுரவிக்காத வரலாற்றுத் தவறுகளை நாங்கள் சரி செய்கிறோம்: பிரதமர்
February 16th, 02:45 pm
நமது நாடு சுதந்திரம் பெற்று 75வது ஆண்டில் நாம் நுழையும் இந்தத் தருணத்தில், நாட்டுக்காக பெரும் பங்களிப்பு செய்த வரலாற்று நாயகர்ககளையும், நாயகிகளை நினைவுகூர வேண்டியது மிக முக்கியமானதாக உள்ளது என்று பிரதமர் திரு. நரேந்திர மோடி கூறியுள்ளார். இந்தியாவுக்காக தங்களின் அனைத்து விஷயங்களையும் தியாகம் செய்தவர்களுக்கு வரலாற்றுப் புத்தகங்களில் உரிய பங்கு அளிக்கப்படவில்லை என்று பிரதமர் வருத்தம் தெரிவித்துள்ளார். இந்தியாவின் வரலாற்றை உருவாக்கியவர்கள் பற்றிய தகவல்களை சரியாகப் பதிவு செய்யாமல், இந்திய வரலாற்றுப் பதிவாளர்கள் இழைத்த அநீதி, சுதந்திரம் அடைந்த 75வது ஆண்டில் நாம் நுழையும் இத்தருணத்தில் சரி செய்யப்படுகின்றது என்று அவர் கூறினார். அவர்களுடைய பங்களிப்புகளை இந்தத் தருணத்தில் நினைவுகூர வேண்டியது முக்கியம் என்று பிரதமர் குறிப்பிட்டார். உத்தரப்பிரதேசத்தில் மகாராஜா சுகல்தேவ் நினைவிடத்துக்கு அடிக்கல் நாட்டி, பஹ்ராச்சில் சித்துவாரா ஏரி மேம்பாட்டு பணியைத் தொடங்கி வைத்து அவர் பேசினார். இந்த நிகழ்ச்சி இன்று காணொலி மூலமாக நடைபெற்றது.உத்தரப்பிரதேச மாநிலம் பஹ்ரைச்சில் மகாராஜா சுகல்தேவ் நினைவு சின்னம் மற்றும் சித்தவுரா ஏரி மேம்பாட்டுப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டு விழாவில் பிரதமர் ஆற்றிய உரையின் முக்கிய அம்சங்கள்
February 16th, 11:24 am
உத்தரப் பிரதேசம் மாநிலம் பஹ்ரைச்சில் மகாராஜா சுகல்தேவ் நினைவு சின்னம் மற்றும் சித்தவுரா ஏரி மேம்பாட்டுப் பணிகளுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி காணொலி மூலம் இன்று அடிக்கல் நாட்டினார். மகாராஜா சுகல்தேவ் பெயர் சூட்டப்பட்ட மருத்துவக் கல்லூரிக் கட்டடத்தை பிரதமர் திறந்து வைத்தார். மாநில ஆளுநர், முதலமைச்சர் ஆகியோர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.மகாராஜா சுகல்தேவ் நினைவு சின்னம் மற்றும் சித்தவுரா ஏரி மேம்பாட்டு பணிகளுக்கு பிரதமர் அடிக்கல் நாட்டினார்
February 16th, 11:23 am
உத்தரப் பிரதேசம் மாநிலம் பஹ்ரைச்சில் மகாராஜா சுகல்தேவ் நினைவு சின்னம் மற்றும் சித்தவுரா ஏரி மேம்பாட்டுப் பணிகளுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி காணொலி மூலம் இன்று அடிக்கல் நாட்டினார். மகாராஜா சுகல்தேவ் பெயர் சூட்டப்பட்ட மருத்துவக் கல்லூரிக் கட்டடத்தை பிரதமர் திறந்து வைத்தார். மாநில ஆளுநர், முதலமைச்சர் ஆகியோர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.செளரி சௌரா தியாகிகளுக்கு போதிய அங்கீகாரம் அளிக்கப்படவில்லை
February 04th, 05:37 pm
வரலாற்றில் செளரி சௌரா தியாகிகளுக்கு போதிய அங்கீகாரம் அளிக்கப்படவில்லை என பிரதமர் இன்று வருத்தத்துடன் கூறினார்.உத்திரப்பிரதேசம் கோரக்பூரில் சௌரி சௌரா நூற்றாண்டு விழா கொண்டாட்டங்களின் துவக்க விழாவில் பிரதமர் ஆற்றிய உரையின் சிறப்பு அம்சங்கள்
February 04th, 02:37 pm
சிவபெருமானின் திருத்தலமான கோரக்நாத் தலத்திற்கு நான் தலை வணங்குகிறேன். கடவுளின் அருளால் இம்மாவட்டம் முன்னேறி வருகிறது. சௌரி சௌரா மக்களுக்கு தலை வணங்குகிறேன்.சௌரி சௌரா‘ நூற்றாண்டு விழாக் கொண்டாட்டங்களை பிரதமர் தொடங்கி வைத்தார்
February 04th, 02:36 pm
உத்தரபிரதேச மாநிலம் கோரக்பூர் மாவட்டம் சௌரி சௌரா பகுதியில், ‘சௌரி சௌரா‘ நூற்றாண்டு விழாக் கொண்டாட்டங்களை பிரதமர் திரு.நரேந்திரமோடி, காணொளிக் காட்சி வாயிலாக இன்று தொடங்கி வைத்தார். நாட்டின் விடுதலைப் போராட்டத்தில் ஒரு முக்கிய நிகழ்வான ‘சௌரி சௌரா‘ சம்பவம் நிகழ்ந்து, இன்றுடன் நூறாண்டுகள் ஆவதை குறிக்கும் வகையில் இந்நாள் கொண்டாடப்படுகிறது. சௌரி சௌரா சம்பவத்தை நினைவுகூறும் அஞ்சல் தலை ஒன்றையும் பிரதமர் வெளியிட்டார். உத்தரபிரதேச மாநில ஆளுனர் திருமதி.ஆனந்திபென் படேல் மற்றும் முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் ஆகியோர் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.பிப்ரவரி 4 அன்று `சவுரி சவுரா’ நூற்றாண்டு விழா கொண்டாட்டங்களை பிரதமர் தொடங்கி வைக்கிறார்
February 02nd, 12:23 pm
பிரதமர் திரு நரேந்திர மோடி, உத்திரப்பிரதேசம் கோரக்பூரில் உள்ள சவுரி சவுராவில், இம்மாதம் 4ஆம் தேதியன்று (4.2.21), காலை 11 மணிக்கு, சவுரி சவுரா நூற்றாண்டு விழா கொண்டாட்டங்களைக் காணொலி வாயிலாகத் தொடங்கி வைக்கிறார். இந்திய சுதந்திரப் போராட்டத்தின் முக்கிய நிகழ்வான `சவுரி சவுரா’ சம்பவம் நடந்து அன்றுடன் நூறு ஆண்டுகள் ஆகின்றன.