'ஹர் கர் திரங்கா அபியான்' (வீடுதோறும் தேசியக் கொடி) மூவர்ணக் கொடியின் மகிமையை நிலைநிறுத்துவதில் ஒரு தனித்துவமான திருவிழாவாக மாறியுள்ளது: மன் கீ பாத்தின் (மனதின் குரல்) போது பிரதமர் மோடி
July 28th, 11:30 am
எனதருமை நாட்டுமக்களே, மனதின் குரலில் உங்களனைவரையும் வரவேற்கிறேன். இந்த வேளையில், உலகம் முழுவதும் பேரீஸ் ஒலிம்பிக்ஸின் நிழல் படர்ந்திருக்கிறது. ஒலிம்பிக்ஸ் என்பது உலக அரங்கிலே நமது மூவண்ணக் கொடியைப் பெருமையோடு பறக்க விடும் ஒரு சந்தர்ப்பத்தை, தேசத்தின் பொருட்டு சாதிக்க வேண்டும் என்பதற்கான ஒரு வாய்ப்பை, நமது விளையாட்டு வீரர்களுக்கு அளிக்கிறது. நீங்கள் அனைவரும் நமது விளையாட்டு வீரர்களுக்குத் தெம்பை அளியுங்கள், சியர் ஃபார் பாரத்!!மைதாம்கள் உலக பாரம்பரிய பட்டியலில் இணைந்ததற்கு பிரதமர் மகிழ்ச்சி
July 26th, 02:50 pm
அசாமின், சராய்தேவ் மைதாம், யுனெஸ்கோ உலக பாரம்பரிய தலங்கள் பட்டியலில் இடம்பெற்றது குறித்து பிரதமர் திரு நரேந்திர மோடி, மகிழ்ச்சியும், பெருமிதமும் தெரிவித்துள்ளார். இது இந்தியாவிற்கு மிகுந்த மகிழ்ச்சியையும், பெருமிதத்தையும் அளிக்கக் கூடியது என்றும் திரு மோடி தெரிவித்துள்ளார்.