பவாலியாலி தாம் நிகழ்ச்சியின் போது பிரதமர் தெரிவித்த கருத்துகள்

பவாலியாலி தாம் நிகழ்ச்சியின் போது பிரதமர் தெரிவித்த கருத்துகள்

March 20th, 04:35 pm

மஹந்த் ஸ்ரீ ராம் பாபு அவர்களே, சமூகத்தின் மதிப்பிற்குரியவர்களே மற்றும் இங்கு கூடியிருக்கும் லட்சக்கணக்கான பக்தியுள்ள சகோதர சகோதரிகளே – வணக்கம். ஜெய் தக்கர்!

பவலியாலி தாம் நிகழ்ச்சியில் பிரதமர் திரு. நரேந்திர மோடி உரையாற்றினார்

பவலியாலி தாம் நிகழ்ச்சியில் பிரதமர் திரு. நரேந்திர மோடி உரையாற்றினார்

March 20th, 04:30 pm

குஜராத் பர்வாட் சமாஜ் தொடர்பான பவலியாலி தாம் நிகழ்ச்சியில் பிரதமர் திரு. நரேந்திர மோடி காணொலிக் காட்சி மூலம் இன்று உரையாற்றினார். நிகழ்ச்சியில் பேசிய திரு மோடி, மஹந்த் ஸ்ரீ ராம் பாபு அவர்களுக்கும், சமூகத் தலைவர்கள் மற்றும் குழுமியிருந்த ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்தார். பர்வாட் சமூகத்தின் பாரம்பரியங்கள் மற்றும் இந்த பாரம்பரியங்களை நிலைநிறுத்துவதற்காக தங்கள் வாழ்க்கையை அர்ப்பணித்த வணக்கத்திற்குரிய துறவிகள் மற்றும் மஹந்த்களுக்கு மரியாதை செலுத்தி அவர் தனது உரையைத் தொடங்கினார். வரலாற்றுச் சிறப்புமிக்க மகா கும்பமேளாவுடன் தொடர்புடைய அளவற்ற மகிழ்ச்சி மற்றும் பெருமிதத்தை எடுத்துரைத்த திரு மோடி, இந்தப் புனிதமான நிகழ்வின் போது மஹந்த் ஸ்ரீ ராம் பாபு அவர்களுக்கு மகாமண்டலேஷ்வர் என்ற பட்டம் வழங்கப்பட்ட குறிப்பிடத்தக்க தருணத்தை குறிப்பிட்டு, இது ஒரு குறிப்பிடத்தக்க சாதனை என்றும், அனைவருக்கும் மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது என்றும் கூறினார். மஹந்த் ஸ்ரீ ராம் பாபு மற்றும் அவரது குடும்பத்தினருக்கு தனது வாழ்த்துகளைத் தெரிவித்த பிரதமர், அவர்களின் பங்களிப்புகள் மற்றும் சாதனைகளை எடுத்துரைத்தார்.