குஜராத்தின் காந்திநகரில் நடைபெற்ற உலகளாவிய ஆயுஷ் முதலீடு மற்றும் புத்தாக்க உச்சி மாநாட்டில் பிரதமர் வழங்கிய உரையின் தமிழாக்கம்
April 20th, 03:53 pm
மாண்புமிகு மொரீஷியஸ் பிரதமர் பிரவிந்த் ஜக்நாத் அவர்களே, உலக சுகாதார அமைப்பின் தலைமை இயக்குநர் டாக்டர் டெட்ரோஸ் அவர்களே, குஜராத்தின் முதல்வர் திரு பூபேந்திர பாய் படேல் அவர்களே, எனது அமைச்சரவை சகாக்கள் திரு சர்பானந்தா சோனோவால் அவர்களே, திரு மன்சுக் பாய் மாண்டவியா அவர்களே, திரு மகேந்திர பாய் முன்ஜாபரா அவர்களே, உள்நாடு மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்த தொழில்முனைவோர் மற்றும் நிபுணர்களே, தாய்மார்களே!காந்திநகரில் உலகளாவிய ஆயுஷ் முதலீடு மற்றும் புத்தாக்க உச்சி மாநாட்டை பிரதமர் தொடங்கி வைத்தார்
April 20th, 11:01 am
குஜராத் மாநிலம் காந்திநகர் மகாத்மா மந்திரில் பிரதமர் திரு.நரேந்திர மோடி இன்று உலகளவிலான ஆயுஷ் முதலீடு மற்றும் புத்தாக்க உச்சி மாநாட்டை தொடங்கி வைத்தார். மொரீஷியஸ் பிரதமர் திரு.பிரவிந்த் குமார் ஜூக்நாத், உலக சுகாதார அமைப்பின் தலைமை இயக்குனர் டாக்டர் டெட்ரோஸ் கெப்ரியேசஸ் ஆகியோர் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர். டாக்டர் மன்சுக் மாண்டவியா, திரு.சர்பானந்த சோனோவால், திரு.முஞ்சப்பாரா மகேந்திரபாய் ஆகிய மத்திய அமைச்சர்கள் குஜராத் முதலமைச்சர் திரு.பூபேந்திர பாய் பட்டேல் ஆகியோரும் இந்த மாநாட்டில் கலந்து கொண்டனர். இந்த 3 நாள் உச்சி மாநாட்டில் 5 முழு அமர்வுகள், 8 வட்டமேஜை கூட்டங்கள், 6 பயிலரங்குகள், 2 கருத்தரங்குகள் ஆகியவை நடைபெறும். இதில் சுமார் 90 பிரபலமான பேச்சாளர்கள் பங்கேற்பார்கள். 100 கண்காட்சி நிறுவனங்கள் இடம்பெறும். முதலீட்டு ஆதாரத்தை கண்டறியவும், புதுமையான கண்டுபிடிப்புகளை ஊக்குவிக்கவும் ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு, ஸ்டார்ட் அப் சூழல், தொழில் நலன்களை மேம்படுத்தவும் இந்த உச்சிமாநாடு உதவும். தொழில் துறை முன்னணி நிறுவனங்கள், கல்வியாளர்கள், அறிஞர்கள் ஆகியோரை ஒன்றுபடுத்தி எதிர்கால ஒத்துழைப்புக்கு இது உதவும்.நுகர்வோர் பாதுகாப்பு குறித்த சர்வதேச மாநாட்டில் பிரதமர் ஆற்றிய உரையின் தமிழ் வடிவம்
October 26th, 10:43 am
என் அமைச்சரவை தோழர் திரு.ராம்விலாஸ் பஸ்வான், திரு.சி.ஆர்.சவுத்ரி, UNCTADயின் முதன்மை செயலாளர் முனைவர். முகிஷா கிடுயி மற்றும் இங்கு வீற்றிருக்கும் அனைத்து முக்கியமானவர்களுக்கும் என் வணக்கங்கள்.