நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் தொடக்கத்தில் பிரதமர் ஆற்றிய உரையின் தமிழாக்கம்
July 22nd, 10:30 am
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் இன்று தொடங்குகிறது. இந்த கூட்டத்தொடர் நேர்மறையானதாகவும், ஆக்கப்பூர்வ மானதாகவும், மக்களின் கனவுகளை நனவாக்குவதற்கான வலுவான அடித்தளத்தை அமைப்பதாகவும் இருக்கும் என்று ஒட்டுமொத்த தேசமும் உன்னிப்பாகக் கவனித்து வருகிறது.நாடாளுமன்ற கூட்டத் தொடர் தொடங்குவதற்கு முன்பாக பிரதமர் செய்தியாளர்களிடம் பேசினார்
July 22nd, 10:15 am
அப்போது பேசிய பிரதமர், 60 ஆண்டுகளுக்குப் பிறகு, ஒரே அரசு தொடர்ந்து மூன்றாவது முறையாக பொறுப்பேற்றிருப்பது மிகுந்த பெருமிதத்திற்குரியது என்றார். எனவே மூன்றாவது முறையாக பொறுப்பேற்றுள்ள அரசு, பட்ஜெட் தாக்கல் செய்வதை மதிப்பு வாய்ந்ததாக இந்த நாடு பார்க்கிறது. இந்த பட்ஜெட் அமிர்த காலத்திற்கான ஒரு மைல்கல் பட்ஜெட் என்று குறிப்பிட்ட பிரதமர், மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற அரசு பாடுபட்டு வருவதாகவும் தெரிவித்தார். “இந்த பட்ஜெட், தற்போதைய அரசுக்கு அடுத்த ஐந்தாண்டுகளுக்கு வழிகாட்டுவதுடன், 2047-க்குள் வளர்ச்சியடைந்த பாரதம் என்ற கனவை நனவாக்குவதற்கான வலுவான அடித்தளமாகவும் அமையும்” என்று அவர் குறிப்பிட்டார்.குடியரசுத் தலைவரின் உரை வரும் ஆண்டுகளில் இந்தியாவை மேலும் மேம்படுத்துவதற்கான தொலைநோக்குப் பார்வையை எடுத்துக்காட்டுவதாக உள்ளது: பிரதமர்
January 31st, 05:28 pm
குடியரசுத்தலைவர் திருமதி திரௌபதி முர்முவின் இன்றைய உரை 140 கோடி இந்தியர்களின் கூட்டு வலிமையை எடுத்துக்காட்டியுள்ளது என்று பிரதமர் திரு நரேந்திர மோடி கூறினார்நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் தொடக்கத்தில் பிரதமர் நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்
January 31st, 10:45 am
நாடாளுமன்ற புதியக் கட்டிடத்தின் முதலாவது அமர்வின் முடிவில், மிக முக்கியத்துவம் வாய்ந்த முடிவாக - மகளிர் இடஒதுக்கீடு மசோதா நிறைவேற்றப்பட்டது. அதைத்தொடர்ந்து, ஜனவரி 26 அன்று, 'கடைமைப் பாதையில்' நடைபெற்ற அணிவகுப்பில் பெண்களின் துணிச்சல், வலிமை மற்றும் மனஉறுதியைக் காணமுடிந்தது. இன்று, பட்ஜெட் கூட்டத்தொடரின் தொடக்கத்தில் குடியரசுத் தலைவர் திருமதி திரௌபதி முர்முவின் வழிகாட்டுதல்கள், நிதியமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்யவுள்ள இடைக்கால பட்ஜெட் போன்றவை பெண்களின் வலிமையை எடுத்துக்காட்டுவதாக உள்ளன. பெண்களின் வலிமையை வெளிப்படுத்தும் அம்சமாக இத்தகைய நிகழ்வுகள் அமைந்துள்ளன.நாடாளுமன்ற கூட்டத்தொடருக்கு முன் பிரதமர் செய்தியாளர்களிடையே உரையாற்றினார்
January 31st, 10:30 am
புதிய நாடாளுமன்றத்தின் முதல் கூட்டத்தொடரை நினைவுகூர்ந்து, முதல் கூட்டத்தொடரில் எடுக்கப்பட்ட குறிப்பிடத்தக்க முடிவை எடுத்துரைத்தார். மகளிருக்கு அதிகாரமளித்தல் மற்றும் மூத்த குடிமக்கள் சட்டம் நிறைவேற்றப்பட்டது நம் நாட்டிற்கான ஒரு முக்கிய தருணம் என்று திரு மோடி கூறினார். ஜனவரி 26-ம் தேதி நடைபெற்ற குடியரசு தின விழா பற்றிக் குறிப்பிட்ட பிரதமர், மகளிர் சக்தியின் வலிமை, வீரம், உறுதிப்பாடு ஆகியவற்றை நாடு ஏற்றுக்கொண்டதை சுட்டிக்காட்டினார். குடியரசுத் தலைவர் திருமதி திரௌபதி முர்முவின் உரை, நிதியமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன் சமர்ப்பிக்கவுள்ள இடைக்கால பட்ஜெட் ஆகியவற்றின் முக்கியத்துவத்தையும் குறிப்பிட்ட பிரதமர் நரேந்திர மோடி, இது மகளிருக்கு அதிகாரமளித்தலின் கொண்டாட்டம் என்று விவரித்தார்.