மஹாராஷ்டிராவில் 511 திறன் மேம்பாட்டு மையங்கள் திறப்பு விழாவில் பிரதமர் ஆற்றிய உரையின் தமிழாக்கம்
October 19th, 05:00 pm
நவராத்திரிப் பண்டிகை நடந்து வருகிறது. அன்னையின் ஐந்தாவது வடிவமான ஸ்கந்தமாதாவை வணங்கும் நாள் இன்று. ஒவ்வொரு தாயும் தன் பிள்ளைக்கு எல்லா சந்தோஷமும், புகழும் கிடைக்க வேண்டும் என்று விரும்புவார்கள். இந்த மகிழ்ச்சியையும் புகழையும் அடைவது கல்வி மற்றும் திறமையால் மட்டுமே சாத்தியமாகும். இத்தகைய நல்ல தருணத்தில், மகாராஷ்டிராவின் பிள்ளைகளுக்காகத் திறன் மேம்பாட்டிற்காக ஒரு பெரிய திட்டம் தொடங்கப்படுகிறது. திறன் மேம்பாட்டுப் பாதையில் முன்னேற உறுதி பூண்டுள்ள லட்சக்கணக்கான இளைஞர்களின், வாழ்க்கை இன்று காலை மங்களகரமானதாக மாறிவிட்டது என்றுதான் சொல்ல வேண்டும். மகாராஷ்டிராவில் 511 ஊரகத் திறன் மேம்பாட்டு மையங்கள் அமைக்கப்பட உள்ளன.மகாராஷ்டிராவில் 511 பிரமோத் மகாஜன் கிராமிய திறன் மேம்பாட்டு மையங்களை பிரதமர் தொடங்கி வைத்தார்
October 19th, 04:30 pm
மகாராஷ்டிராவில் 511 பிரமோத் மகாஜன் கிராமிய திறன் மேம்பாட்டு மையங்களை பிரதமர் திரு நரேந்திர மோடி காணொலிக் காட்சி மூலம் இன்று தொடங்கி வைத்தார். மகாராஷ்டிராவின் 34 கிராமப்புற மாவட்டங்களில் நிறுவப்பட்டுள்ள இந்த மையங்கள் கிராமப்புற இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகளை வழங்குவதற்காக பல்வேறு துறைகளில் திறன் மேம்பாட்டு பயிற்சி திட்டங்களை நடத்தும்.ஐதராபாத்தில் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களைத் தொடங்கிவைத்துப் பிரதமர் ஆற்றிய உரையின் முக்கிய அம்சங்கள்
April 08th, 12:30 pm
தெலங்கானா மாநில ஆளுநர் திருமதி தமிழிசை சௌந்தரராஜன் அவர்களே, எனது அமைச்சரவை தோழர் திரு அஸ்வினி வைஷ்ணவ் அவர்களே, மண்ணின் மைந்தரும், எனது தோழருமான திரு ஜி கிஷன் ரெட்டி அவர்களே, தெலங்கானா மாநில சகோதர, சகோதரிகளே உங்கள் அனைவருக்கும் வணக்கம்.தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் ரூ. 11,300 கோடி மதிப்பிலான பல்வேறு திட்டங்களுக்கு பிரதமர் அடிக்கல் நாட்டித் தொடங்கி வைத்தார்
April 08th, 12:10 pm
தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் உள்ள பரேட் மைதானத்தில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரதமர் திரு நரேந்திர மோடி ரூ. 11,300 கோடி மதிப்பிலான பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டியதுடன், முடிவுற்ற திட்டங்களையும் தொடங்கி வைத்தார். இந்தத் திட்டங்களில் பிபிநகரில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல், ஹைதராபாத்தில் 5 தேசிய நெடுஞ்சாலைத் திட்டங்கள், செகந்திராபாத் ரயில் நிலையத்தின் மறு சீரமைப்புப் பணிகள் ஆகியவை முக்கியமானவையாகும். ரயில்வே சார்ந்த மற்ற வளர்ச்சித்திட்டங்களுக்கும் அவர் அடிக்கல் நாட்டினார். முன்னதாக இன்று காலை ஹைதராபாத்தில் உள்ள செகந்திராபாத் ரயில் நிலையத்தில், செகந்திராபாத்-திருப்பதி வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் சேவையை பிரதமர் கொடியசைத்துத் தொடங்கி வைத்தார்.போபால் - புதுதில்லி இடையே வந்தே பாரத் விரைவு ரயிலைத் தொடங்கி வைத்து பிரதமரின் உரையின் ஆங்கில மொழியாக்கம்
April 01st, 03:51 pm
ராமநவமி அன்று இந்தூர் கோவிலில் நடந்த சோகம் குறித்து முதலில் எனது வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த விபத்தால் நம்மை விட்டு பிரிந்தவர்களுக்கு எனது அஞ்சலியை செலுத்துவதுடன் அவர்களது குடும்பத்தினருக்கு எனது இரங்கலையும் தெரிவித்துக் கொள்கிறேன். மேலும் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பக்தர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன்.மத்திய பிரதேசம் போபாலில் உள்ள ராணி கமலாபதி நிலையத்தில் வந்தே பாரத் அதிவிரைவு ரயிலை பிரதமர் கொடியசைத்து தொடங்கி வைத்தார்
April 01st, 03:30 pm
போபால் மற்றும் புது தில்லி இடையேயான வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலை மத்திய பிரதேச மாநிலம் போபாலில் உள்ள ராணி கமலாபதி ரயில் நிலையத்தில் பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று கொடியசைத்து தொடங்கி வைத்தார். பிரதமர் ராணி கமலாபதி புது தில்லி வந்தே பாரத் - எக்ஸ்பிரஸை ஆய்வு செய்தார். ரயிலில் குழந்தைகள் மற்றும் பணியாளர்களுடன் கலந்துரையாடினார்.பெண்களுக்குப் பொருளாதார அதிகாரமளித்தல் குறித்த பட்ஜெட்டுக்குப் பிந்தைய இணையவழிக்கருத்தரங்கில் பிரதமர் ஆற்றிய உரையின் முக்கிய அம்சங்கள்
March 10th, 10:23 am
2047 ஆம் ஆண்டுக்குள் இந்தியாவை வளர்ந்த நாடாக்கும் இலக்கை இந்த ஆண்டில் பட்ஜெட் தொடங்கி வைத்திருப்பதை இந்த நாடு கண்டிருப்பது நம் அனைவருக்கும் மகிழ்ச்சியளிக்கும் விஷயமாகும். அமிர்த காலம் என்ற எதிர்காலத்தின் இலக்குகளுடன் நாட்டின் மக்கள் தங்களை இணைத்துக் கொண்டிருப்பது நல்ல அறிகுறியாகும்.“பெண்களுக்கு பொருளாதார அதிகாரவழிமளித்தல்” குறித்த பட்ஜெட்டுக்குப் பிந்தைய இணையக் கருத்தரங்கில் பிரதமர் உரையாற்றினார்
March 10th, 10:00 am
பிரதமர் திரு நரேந்திர மோடி, பெண்களுக்கு பொருளாதார அதிகாரமளித்தல் என்பது குறித்த பட்ஜெட்டுக்குப் பிந்தைய இணையவழிக் கருத்தரங்கில் உரையாற்றினார். 2023 மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட முன்முயற்சிகளை திறம்பட செயல்படுத்துவதற்கான யோசனைகள் மற்றும் பரிந்துரைகளைப் பெறுவதற்காக அரசால் ஏற்பாடு செய்யப்பட்ட பட்ஜெட்டுக்குப் பிந்தைய இணையவழிக் கருத்தரங்கு வரிசையில் இது 11-வது கருத்தரங்காகும்.நிதித்துறை குறித்த நிதிநிலை அறிக்கைக்குப் பிந்தைய இணைய வழி கருத்தரங்கில் பிரதமர் ஆற்றிய உரையின் தமிழாக்கம்
March 07th, 10:14 am
நிதிநிலை அறிக்கைக்குப் பிந்தைய இணைய வழிக் கருத்தரங்குகளின் வாயிலாக நிதிநிலை அறிக்கையின் அறிவிப்புகளை அமல்படுத்துவதில் கூட்டு உடைமை மற்றும் சம கூட்டுமுயற்சிக்கு அரசு வழிவகை செய்கிறது. கொரோனா பெருந்தொற்றின் போது நிலவிய இந்தியாவின் நிதி மற்றும் நிதிசார் கொள்கையின் தாக்கங்களை தற்போது ஒட்டுமொத்த உலகமும் கண்டு வருகிறது. கடந்த 9 ஆண்டுகளில் இந்திய பொருளாதாரத்தின் அடிப்படை அம்சங்களை வலுப்படுத்த அரசு மேற்கொண்ட முயற்சிகளின் விளைவாக இது நிகழ்ந்தது. நிதி சீர்திருத்தம், வெளிப்படைத் தன்மை மற்றும் உள்ளடக்கிய அணுகுமுறையை நோக்கி இந்தியா தற்போது முன்னேறுவதால் மிகப்பெரிய மாற்றத்தையும் நாம் சந்திக்கிறோம். விவாதங்களின் தொடக்கம் மற்றும் முடிவில் நிலவி வந்த கேள்விக்குறிகளுக்கு, நம்பிக்கையும், எதிர்பார்ப்புகளும் தற்போது மாற்றாக விளங்குகின்றன. உலகளாவிய பொருளாதாரத்தின் வளமான தலமாக இந்தியா அழைக்கப்படுகிறது. 2021-22 ஆம் ஆண்டில் இதுவரை இல்லாத அளவில் அதிக அந்நிய நேரடி முதலீடுகளை இந்தியா ஈர்த்தது. இதில் அதிக முதலீடுகள் உற்பத்தித் துறையில் மேற்கொள்ளப்பட்டன.‘வளர்ச்சி வாய்ப்புகளை உருவாக்குவதற்காக நிதிச் சேவைகளின் செயல் திறனை மேம்படுத்துதல்' குறித்த நிதிநிலை அறிக்கைக்குப் பிறகான இணைய வழி கருத்தரங்கில் பிரதமர் உரை
March 07th, 10:00 am
‘வளர்ச்சி வாய்ப்புகளை உருவாக்குவதற்காக நிதிச் சேவைகளின் செயல் திறனை மேம்படுத்துதல்’ குறித்த நிதிநிலை அறிக்கைக்குப் பிறகான இணைய வழிக் கருத்தரங்கில் பிரதமர் திரு நரேந்திர மோடி உரையாற்றினார். 2023 மத்திய நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்ட திட்டங்களை சிறப்பாக அமல்படுத்துவதற்கு கருத்துக்களைப் பெறும் வகையில் நடைபெறும் நிதிநிலை அறிக்கைக்குப் பிந்தைய 12 இணைய வழிக் கருத்தரங்குகள் தொடரில் இது பத்தாவதாகும்.குஜராத் வேலைவாய்ப்பு முகாமில் காணொளி வாயிலாக பிரதமர் ஆற்றிய உரையின் தமிழாக்கம்
March 06th, 04:35 pm
உங்கள் அனைவருக்கும் இனிய ஹோலி பண்டிகை நல்வாழ்த்துகள். ஆயிரக்கணக்கான குடும்பங்களை இன்றைய நிகழ்வு மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தியுள்ளது. குறுகிய காலத்திலேயே இரண்டாவது முறையாக குஜராத்தில் வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்படுகிறது. இளைஞர்களுக்கு வாய்ப்பை வழங்கவும், நாட்டின் முன்னேற்றத்தில் அவர்களது திறனை பயன்படுத்திக் கொள்ளவும் பாரதிய ஜனதா கட்சி அரசுகள் மேற்கொண்டுள்ள உறுதிப்பாட்டிற்கு இது ஓர் உதாரணம்.“குஜராத் வேலைவாய்ப்பு முகாமில் பிரதமர் உரையாற்றினார்”
March 06th, 04:15 pm
குஜராத் அரசு வேலைவாய்ப்பு முகாமில் பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று, காணொலிக்காட்சி வாயிலாக உரையாற்றினார்.சுகாதாரம் மற்றும் மருத்துவ ஆராய்ச்சித் தொடர்பான பட்ஜெட்டுக்குப் பிந்தைய இணையவழிக் கருத்தரங்கில் பிரதமரின் உரை
March 06th, 10:30 am
கொவிட் பெருந்தொற்றுக்கு முந்தைய மற்றும் பிந்தைய நிலைகளில் சுகாதாரத்தைக் காண முடியும். வளமிக்க நாடுகளைக்கூடப் பெருந்தொற்று சோதித்தது. தொற்றுநோய் உடல்நலத்தில் உலகளாவிய கவனத்தை ஈர்த்த நிலையில், இந்தியா அதற்கு மேலாக ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தியது. அதனால்தான் ஒரே பூமி, ஒரே மாதிரியான சுகாதாரம் என்ற நமது தொலைநோக்குப் பார்வையே உலகிற்கு உணர்த்தியது. இது மனிதர்கள், விலங்குகள் அல்லது தாவரங்கள் ஆகிய அனைத்துப் படைப்பினங்களின் ஒட்டுமொத்த உடல்நலன் தொடர்புடையது.“சுகாதாரம் மற்றும் மருத்துவ ஆராய்ச்சித் தொடர்பான பட்ஜெட்டுக்குப் பிந்தைய இணையவழிக் கருத்தரங்கில் பிரதமர் உரையாற்றினார்”
March 06th, 10:00 am
சுகாதாரம் மற்றும் மருத்துவ ஆராய்ச்சி தொடர்பான பட்ஜெட்டுக்குப் பிந்தைய இணையவழிக் கருத்தரங்கில் பிரதமர் திரு நரேந்திர மோடி உரையாற்றினார். 2023-ம் ஆண்டு பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டத் திட்டங்களை திறனுடன் அமல்படுத்துவது குறித்து கருத்துகளைக் கேட்டறிவதற்காக அரசு ஏற்பாடு செய்துள்ள பட்ஜெட்டுக்குப் பிந்தைய 12 இணையவழிக் கருத்தரங்குகளின்‘போர்க்கால முறையில் சுற்றுலாவை மேம்படுத்துதல்’ என்ற தலைப்பில் பட்ஜெட்டுக்குப் பிந்தைய இணையவழிக் கருத்தரங்கில் பிரதமர் உரை
March 03rd, 10:21 am
இன்றைய புதிய இந்தியா புதிய வேலை முறையுடன் முன்னேறி வருகிறது. இந்த ஆண்டுக்கான பட்ஜெட் பலத்த பாராட்டுகளைப் பெற்றுள்ளதுடன், நாட்டு மக்கள் அதனை ஏற்றுக்கொண்டுள்ளனர். பழைய வேலை முறை தொடர்ந்திருந்தால், இதுபோன்ற பட்ஜெட்டை யாரும் நினைத்திருக்க மாட்டார்கள். இன்று நாட்டின் சுற்றுலாத் துறையின் மாற்றத்திற்காக இந்த இணையவழிக் கருத்தரங்கை நடத்துகிறோம்.சுற்றுலாவை தீவிர இயக்கமாக மேம்படுத்துதல் என்ற தலைப்பிலான பட்ஜெட்டுக்குப் பிந்தைய இணையவழிக் கருத்தரங்கில் பிரதமர் உரையாற்றினார்
March 03rd, 10:00 am
சுற்றுலாவை தீவிர இயக்கமாக மேம்படுத்துதல் என்ற தலைப்பிலான பட்ஜெட்டுக்குப் பிந்தைய இணையவழிக் கருத்தரங்கில் பிரதமர் திரு.நரேந்திர மோடி இன்று உரையாற்றினார். மத்திய பட்ஜெட் 2023ல் அறிவிக்கப்பட்ட திட்டங்களை திறம்பட அமல்படுத்துவது தொடர்பான கருத்துக்கள் மற்றும் ஆலோசனைகளை கேட்கும் விதமாக மத்திய அரசால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள 12 இணையவழிக் கருத்தரங்குகளில் இது 7-வது ஆகும்.‘தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி வாழ்க்கையை எளிதாக்குதல்’ என்னும் பட்ஜெட்டுக்குப் பிந்தைய இணையவழி கருத்தரங்கில் பிரதமர் ஆற்றிய உரையின் முக்கிய அம்சங்கள்
February 28th, 10:05 am
தேசிய அறிவியல் நாள் குறித்த இன்றைய பட்ஜெட் கருத்தரங்கின் தலைப்பு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். தொழில்நுட்பத்தின் உதவியுடன் மக்களை தொடர்ந்து அதிகாரப்படுத்தி 21 ஆம் நூற்றாண்டுக்கு அரசு தயார்படுத்தி வருகிறது.தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி வாழ்வை எளிதாக்குதல் என்ற தலைப்பில் பட்ஜெட்டுக்குப் பிந்தைய இணையவழிக் கருத்தரங்கில் பிரதமர் உரையாற்றினார்
February 28th, 10:00 am
தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி வாழ்வை எளிதாக்குதல் என்ற தலைப்பில் பட்ஜெட்டுக்குப் பிந்தைய இணையவழிக் கருத்தரங்கில் பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று உரையாற்றினார். மத்திய பட்ஜெட் 2023-ல் அறிவிக்கப்பட்ட முன்முயற்சிகளை திறன்பட அமல்படுத்துவது குறித்து கருத்துகள் மற்றும் ஆலோசனைகளைக் கோரும் வகையில் அரசால் நடத்தப்படும் பட்ஜெட்டுக்குப் பிந்தைய 12 இணையவழிக் கருத்தரங்குகளில், 5-வது கருத்தரங்கில் பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று உரையாற்றினார்.‘கடைக்கோடிக்கும் சென்றடைதல்’ என்பது குறித்த பட்ஜெட்டுக்குப் பிந்தைய இணைய வழிக்கருத்தரங்கில் பிரதமர் ஆற்றிய உரையின் தமிழாக்கம்
February 27th, 10:16 am
நாடாளுமன்றத்தில் பட்ஜெட் மீதான விவாதங்கள் முக்கியத்துவம் வாய்ந்தவையாகும். அரசு ஒரு படி முன்னேறி, பட்ஜெட்டுக்குப் பிந்தைய கருத்துக்களை சம்பந்தப்பட்டவர்களுடன் பரிமாறிக் கொள்ளும் புதிய நடைமுறையை அரசு கடந்த சில ஆண்டுகளாக தொடங்கியுள்ளது. அமலாக்கம் மற்றும் உரிய காலத்தில் விநியோகிப்பதன் கண்ணோட்டத்தில் இந்த பட்ஜெட்டுக்கு பிந்தைய கருத்துப் பரிமாற்றம் மிக முக்கியத்துவம் பெறுகிறது.‘கடைக்கோடியும் சென்றடைதல்’ பற்றிய நிதிநிலை அறிக்கை சம்பந்தமான இணையவழிக் கருத்தரங்கில் பிரதமர் உரை
February 27th, 10:00 am
‘கடைக்கோடியும் சென்றடைதல்’ பற்றிய நிதிநிலை அறிக்கை சம்பந்தமான இணையவழிக் கருத்தரங்கில் பிரதமர் திரு நரேந்திர மோடி உரையாற்றினார். 2023 மத்திய நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்ட திட்டங்களை சிறப்பாக அமல்படுத்துவதற்கு கருத்துக்களைப் பெறும் வகையில் நடைபெறும் நிதிநிலை அறிக்கைக்குப் பிந்தைய 12 இணையவழிக் கருத்தரங்குகள் தொடரில் இது நான்காவது ஆகும்.