பீகார் மாநிலம் தர்பங்காவில் பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி, நிறைவடைந்த திட்டங்களை நாட்டுக்கு அர்ப்பணித்து பிரதமர் ஆற்றிய உரையின் தமிழாக்கம்

November 13th, 11:00 am

ஜனக மகாராஜா, அன்னை சீதாவின் புண்ணிய பூமியையும், மகாகவி வித்யாபதியின் பிறப்பிடத்தையும் நான் வணங்குகிறேன். இந்த வளமான, அற்புதமான பூமியில் அனைவருக்கும் எனது அன்பான வணக்கம்!

"பீகாரில் பிரதமர் திரு நரேந்திர மோடி, ரூ.12,100 கோடி மதிப்புள்ள பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை தொடங்கி வைத்து, அடிக்கல் நாட்டி, நாட்டிற்கு அர்ப்பணித்தார்

November 13th, 10:45 am

பீகார் மாநிலம் தர்பங்காவில் சுமார் ரூ.12,100 கோடி மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று அடிக்கல் நாட்டி பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை தொடங்கி வைத்தார். சுகாதாரம், ரயில்வே, சாலை, பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு துறைகளை உள்ளடக்கிய வளர்ச்சித் திட்டங்கள் இதில் அடங்கும்.

பாலி மொழிக்கு செம்மொழி அந்தஸ்து வழங்க மத்திய அரசு முடிவு செய்திருப்பது பகவான் புத்தரின் சிந்தனைகளில் நம்பிக்கை கொண்டவர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது: பிரதமர்

October 24th, 10:43 am

பாலி மொழிக்கு செம்மொழி அந்தஸ்து வழங்க மத்திய அரசு முடிவு செய்ததற்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். பகவான் புத்தரின் சிந்தனைகளில் நம்பிக்கை கொண்டவர்களிடையே இது மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என்றும் அவர் கூறினார். கொழும்பில் இந்திய பண்பாட்டு உறவுகள் சபையால் நடத்தப்பட்ட 'பாலி மொழியை செம்மொழியாக்கல்' என்ற குழு விவாதத்தில் பங்கேற்ற பல்வேறு நாடுகளைச் சேர்ந்த அறிஞர்கள் மற்றும் துறவிகளுக்கும் திரு மோடி நன்றி தெரிவித்தார்.

சர்வதேச அபிதம்ம தினத் தொடக்க விழாவில் பிரதமர் நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்

October 17th, 10:05 am

கலாச்சாரத்துறை அமைச்சர் திரு கஜேந்திர சிங் ஷெகாவத் அவர்களே, சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் திரு கிரண் ரிஜிஜு அவர்களே, பதாந்த் ராகுல் போதி மகாதேரோ அவர்களே, வணக்கத்திற்குரிய ஜங்சுப் சோடென் அவர்களே, மகாசங்கத்தின் மதிப்பிற்குரிய உறுப்பினர்களே, மாண்புமிகு தலைவர்களே, தூதரக சமூகத்தின் உறுப்பினர்களே, புத்த மத அறிஞர்களே, தம்மத்தைப் பின்பற்றுபவர்களே, பெரியோர்களே,

சர்வதேச அபிதம்மா தின கொண்டாட்டம் மற்றும் பாலி மொழி செம்மொழியாக அங்கீகரிக்கப்பட்டதற்கான விழாவில் பிரதமர் திரு நரேந்திர மோடி உரை

October 17th, 10:00 am

புதுதில்லி விஞ்ஞான் பவனில் இன்று நடைபெற்ற சர்வதேச அபிதம்மா தினக் கொண்டாட்டம் மற்றும் பாலி மொழி செம்மொழியாக அங்கீகரிக்கப்பட்டதற்கான விழாவில் பிரதமர் திரு நரேந்திர மோடி கலந்து கொண்டு உரையாற்றினார். புத்தபிரான் அபிதம்மாவைப் போதித்து ஞானம் பெற்ற பிறகு, அவரது பாதையைப் பின்பற்றுவதை நினைவு கூர்வதே அபிதம்மா தினமாகும். அபிதம்மா குறித்த புத்தபிரானின் போதனைகளின் மூலம் பாலி மொழியில் தான் உள்ளது என்பதால், அண்மையில், பாலி மொழிக்கு செம்மொழி அங்கீகாரம் அளிக்கப்பட்டது, இந்த ஆண்டின் அபிதம்மா கொண்டாட்டங்களின் முக்கியத்துவத்தை அதிகரித்துள்ளது.

லாவோ மக்கள் ஜனநாயகக் குடியரசின் வியன்டியானில் நடைபெற்ற 19-வது கிழக்கு ஆசிய உச்சி மாநாட்டில் பிரதமர் நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்

October 11th, 08:15 am

ஆசியானின் ஒற்றுமையையும் மையத்தன்மையையும் இந்தியா தொடர்ந்து ஆதரித்து வருகிறது. இந்தியாவின் இந்தோ-பசிஃபிக் கண்ணோட்டத்திற்கும் குவாட் ஒத்துழைப்புக்கும் ஆசியான் முக்கியமானது. இந்தியாவின் இந்தோ-பசிஃபிக் பெருங்கடல் முன்முயற்சி, இந்தோ-பசிஃபிக் மீதான ஆசியான் கண்ணோட்டம் ஆகியவற்றுக்கிடையே முக்கியமான ஒற்றுமைகள் உள்ளன. சுதந்திரமான, வெளிப்படையான, அனைவரையும் உள்ளடக்கிய, வளமான மற்றும் விதிகள் அடிப்படையிலான இந்தோ-பசிஃபிக் என்பது ஒட்டுமொத்த பிராந்தியத்தின் அமைதிக்கும் முன்னேற்றத்திற்கும் முக்கியமானது.

19-வது கிழக்கு ஆசிய உச்சிமாநாட்டில் பிரதமர் பங்கேற்றார்

October 11th, 08:10 am

லாவோ மக்கள் ஜனநாயகக் குடியரசில் உள்ள வியன்டியானில் 2024, அக்டோபர் 11 அன்று நடைபெற்ற 19 வது கிழக்கு ஆசிய உச்சி மாநாட்டில் பிரதமர் கலந்து கொண்டார்.

அரசியலமைப்பு மற்றும் ஜனநாயக அமைப்புகளின் மீது அசைக்க முடியாத நம்பிக்கையை மீண்டும் உறுதிப்படுத்தியதற்காக நாட்டு மக்களுக்கு நன்றி: மன் கீ பாத்தின் (மனதின் குரல்) போது பிரதமர் மோடி.

June 30th, 11:00 am

நண்பர்களே, நமது அரசியலமைப்புச்சட்டம் மற்றும் தேசத்தின் ஜனநாயக அமைப்புகள் மீது தங்களுடைய அசைக்கமுடியாத நம்பிக்கையை மீண்டும் நிரூபித்திருக்கும் நமது நாட்டுமக்களுக்கு நான் என் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். 2024ஆம் ஆண்டின் தேர்தல், உலகின் மிகப்பெரிய தேர்தலாகும். உலகின் எந்த ஒரு தேசத்திலும், இத்தனை பெரிய தேர்தல் இதுவரை எப்போதும் நடந்ததில்லை. இதிலே 65 கோடி மக்கள் வாக்களித்தார்கள். நான் தேர்தல் ஆணையத்திற்கும், வாக்களிப்பு முறையோடு தொடர்புடைய அனைத்து பேருக்கும், இந்தக் காரணத்திற்காக பாராட்டுக்களைத் தெரிவிக்கிறேன்.

புத்தபிரானின் கோட்பாடுகளுக்குப் பிரதமர் புகழாரம்

March 05th, 09:47 am

தாய்லாந்தில் 2024 பிப்ரவரி 23 முதல் மார்ச் 3, வரை புத்தபிரான் மற்றும் அவரது சீடர்களான அரஹந்த் சாரி புத்தா மற்றும் அரஹந்த் மகா மொக்கல்லனா ஆகியோரின் புனிதச் சின்னங்களை லட்சக்கணக்கான பக்தர்கள் தலைவணங்கி மரியாதை செலுத்தியதை அடுத்து, பிரதமர் திரு நரேந்திர மோடி புத்தரின் கோட்பாடுகளைப் பாராட்டியுள்ளார்.

ஜி 20 கலாச்சார அமைச்சர்கள் கூட்டத்தில் பிரதமர் ஆற்றிய உரையின் தமிழாக்கம்

August 26th, 10:15 am

காசி என்று அழைக்கப்படும் வாரணாசிக்கு உங்களை வரவேற்கிறோம். எனது நாடாளுமன்றத் தொகுதியான வாரணாசியில் உங்களைச் சந்திப்பதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். காசி உலகின் மிகப்பழமையான நகரம் மட்டுமல்ல. புத்தர் தனது முதல் பிரசங்கத்தை நிகழ்த்திய சாரநாத் இங்கிருந்து சற்று தொலைவில் உள்ளது. காசி நகரம் ஞானம், கடமை, சத்தியம் ஆகியவற்றின் பொக்கிஷமாக உள்ளது. இது உண்மையில் இந்தியாவின் கலாச்சார மற்றும் ஆன்மீகத் தலைநகரம் ஆகும். கங்கா ஆரத்தியைப் பார்ப்பதற்கும், சாரநாத்தைப் பார்வையிடுவதற்கும், காசியின் சுவையான உணவுகளை சுவைப்பதற்கும் நீங்கள் சிறிது நேரம் ஒதுக்கியிருப்பீர்கள் என்று நம்புகிறேன்.

ஜி 20 கலாச்சார அமைச்சர்கள் கூட்டத்தில் பிரதமர் உரை

August 26th, 09:47 am

பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று உத்தரப் பிரதேச மாநிலம் வாரணாசியில் நடைபெற்ற ஜி 20 கலாச்சார அமைச்சர்கள் கூட்டத்தில் காணொலிக் காட்சி மூலம் உரையாற்றினார்.

சிறுத்தைகளுக்கு பெயரிடும் போட்டியின் வெற்றியாளர்களுக்கு பிரதமர் வாழ்த்து

April 19th, 08:48 pm

சிறுத்தைகளுக்கு பெயரிடும் போட்டியின் வெற்றியாளர்களுக்கு பிரதமர் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இந்தியா ஜனநாயகத்தின் தாய்: ‘மன் கீ பாத்’தின் (மனதின் குரல்) போது பிரதமர் மோடி

January 29th, 11:30 am

எனதருமை நாட்டுமக்களே, வணக்கம். இது 2023ஆம் ஆண்டின் முதல் மனதின் குரல், மேலும் மனதின் குரல் நிகழ்ச்சியின் 97ஆவது பகுதியும் இதுவாகும். உங்களனைவரோடும் மீண்டும் ஒருமுறை உரையாடுவதில் எனக்கு மகிழ்ச்சி ஏற்படுகிறது. ஒவ்வொர் ஆண்டும் ஜனவரி மாதத்தில் கணிசமான நிகழ்ச்சிகள் நடக்கின்றன. இந்த மாதம் சுமார் 14ஆம் தேதி வாக்கில், வடக்கு முதல் தெற்கு வரையும், கிழக்குத் தொடங்கி மேற்கு வரையும், நாடெங்கிலும் பண்டிகைகளின் ஒளி பளிச்சிட்டு வந்தது. இதன் பிறகு தேசம் தனது குடியரசுத் திருநாள் கொண்டாட்டங்களில் திளைத்தது. இந்த முறையும் கூட, குடியரசுத் திருநாள் கொண்டாட்டத்தின் பல பரிமாணங்களுக்குப் பல பாராட்டுக்களும் கிடைத்து வருகின்றன. ஜைஸால்மேரிலிருந்து புல்கித் என்பவர் எழுதியிருக்கிறார், ஜனவரி 26ஆம் தேதியன்று நடந்த அணிவகுப்பின் போது, கர்த்தவ்ய பத்தினை ஏற்படுத்திய தொழிலாளர்களைக் காண்பது தனக்கு மிகவும் பிடித்திருந்ததாக எழுதியிருக்கிறார். அணிவகுப்பில் இடம் பெற்ற காட்சிகளில் பாரதநாட்டுக் கலாச்சாரத்தின் பல்வேறு பரிமாணங்களைப் பார்த்து ஆனந்தப்பட்டதாக கான்பூரைச் சேர்ந்த ஜயா அவர்கள் எழுதியிருக்கிறார். இதே அணிவகுப்பில், முதன்முறையாகக் கலந்து கொண்ட ஒட்டகச்சவாரி செய்யும் வீராங்கனைகள் பிரிவும், மத்திய ரிசர்வ் பாதுகாப்பு படையினரின் பெண்கள் பிரிவும் நிறைய பாராட்டுக்களைப் பெற்றன.

ஆஷாத் பூர்ணிமா புனித நாளையொட்டி புத்தபிரானின் உயரிய போதனைகளை பிரதமர் நினைவுகூர்ந்துள்ளார்

July 13th, 09:34 am

ஆஷாத் பூர்ணிமா புனித நாளையொட்டி, பிரதமர் திரு நரேந்திர மோடி, மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

ரோட்டரி இன்டர்நேஷனல் வேர்ல்ட் மாநாட்டில் பிரதமர் நிகழ்த்திய உரை

June 05th, 09:46 pm

உலகளாவிய சிறிய மகாசபை போல இங்கே பெருமளவில் கூடியிருக்கின்ற ரோட்டரி இன்டர்நேஷனல் மாநாட்டில் உரையாற்ற நான் மகிழ்ச்சி அடைகிறேன். இது பன்முகத்தன்மை கொண்டது, துடிப்புமிக்கது. சுழற்சங்கத்தினராகிய நீங்கள் அனைவரும் உங்களின் சொந்தத்துறைகளில் வெற்றி பெற்றிருக்கிறீர்கள். இருப்பினும் பணியுடன் மட்டும் நீங்கள் கட்டுப்படுத்திக் கொள்ளவில்லை. இந்த புவிக்கோளினை சிறப்பானதாக மாற்றும் விருப்பம் உங்களை இந்தத் தளத்திற்கு ஒருங்கிணைத்து அழைத்து வந்துள்ளது. வெற்றி மற்றும் சேவையின் உண்மையான கலவையாக இது இருக்கிறது.

சர்வதேச ரோட்டரி உலக உச்சிமாநாட்டில் பிரதமர் உரை

June 05th, 09:45 pm

சர்வதேச ரோட்டரி உலக உச்சிமாநாட்டில் பிரதமர் திரு நரேந்திர மோடி காணொலி காட்சி வாயிலாக இன்று உரையாற்றினார். ரோட்டரி சங்க உறுப்பினர்களை ‘வெற்றி மற்றும் சேவையின் உண்மையான கலவை' என்று குறிப்பிட்ட பிரதமர், “ரோட்டரி சங்கத்தின் இதுபோன்ற ஒவ்வொரு கூட்டமும் சிறிய அளவிலான சர்வதேச மன்றத்தைப் போல் உள்ளது. இவற்றில் பன்முகத்தன்மையும், துடிப்பும் உள்ளன”, என்று கூறினார்.

ஜப்பான் தலைநகர் டோக்கியோவி்ல் இந்திய வம்சாவளியினரிடையே பிரதமர் ஆற்றிய உரை

May 23rd, 08:19 pm

நான் ஒவ்வொரு முறையும் ஜப்பான் வருகை தரும் போதெல்லாம் உங்களுடைய அன்பும் பாசமும் அதிகரித்திருப்பதை நான் காண்கிறேன். உங்களில் பலர், பல வருடங்களாக ஜப்பானில் வசித்து வருகிறீர்கள். ஜப்பான் நாட்டின் மொழி, ஆடை, கலாச்சாரம், உணவு ஆகியவை உங்களின் வாழ்க்கையின் ஒரு அங்கமாக உள்ளது. ஏனெனில், இந்திய வம்சாவளியினரின் கலாச்சாரம், எப்பொழுதும் அதை உள்ளடக்கியதாக உள்ளது ஒரு காரணமாகும்.

ஜப்பானில் இந்திய சமூகத்தினருடன் பிரதமர் கலந்துரையாடல்

May 23rd, 04:15 pm

ஜப்பானில் 700-க்கும் மேற்பட்ட இந்திய வம்சாவளியினர் மத்தியில் இன்று உரையாற்றிய பிரதமர் திரு.நரேந்திர மோடி, அவர்களுடன் கலந்துரையாடலையும் நடத்தினார்.

உத்தரப்பிரதேசத்தில் 9 மருத்துவ கல்லூரிகள் தொடக்க விழாவில் பிரதமர் உரை

October 25th, 10:31 am

புத்தபிரானின் புனித பூமியான சித்தார்த் நகர மக்களாகிய உங்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். புத்தபிரான் தமது இளமை காலத்தில் வசித்த இந்த பூமியிலிருந்து 9 மருத்துவ கல்லூரிகள் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. இது ஆரோக்கியமான மற்றும் கட்டுடல் இந்தியாவை நோக்கிய மிகப்பெரும் நடவடிக்கையாகும். உங்கள் அனைவருக்கும் பாராட்டுகள்.

உத்தரப்பிரதேசம் சித்தார்த் நகரில் 9 மருத்துவக் கல்லூரிகளைப் பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்

October 25th, 10:30 am

உத்தரப் பிரதேசத்தின் சித்தார்த் நகரிலிருந்து 9 மருத்துவக் கல்லூரிகளைப் பிரதமர் திரு. நரேந்திர மோடி தொடங்கி வைத்தார். இந்த ஒன்பது மருத்துவக் கல்லூரிகள் சித்தார்த் நகர், இட்டா, ஹர்தோய், பிரதாப்கட், ஃபதேபூர் , தியோரியா, காசிப்பூர், மீர்சாப்பூர், ஜான்பூர் ஆகிய மாவட்டங்களில் அமைந்துள்ளன. இந்த நிகழ்வில் உத்தரப் பிரதேச ஆளுநரும் முதலமைச்சரும் கலந்துகொண்டனர்.