கங்கை ஆற்றின் குறுக்கே புதிய ரயில் மற்றும் சாலைப் பாலம் அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்

October 16th, 03:18 pm

பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையில் இன்று நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், சுமார் ரூ.2,642 கோடி மதிப்பீட்டிலான ரயில்வே அமைச்சகத்தின் ஒரு திட்டத்திற்கு ஒப்புதல் அளித்தது. முன்மொழியப்பட்ட இந்தத் திட்டம் போக்குவரத்தை எளிதாக்குவதுடன், நெரிசலைக் குறைக்கும், இது இந்திய ரயில்வேயின் பரபரப்பான பிரிவுகளில் மிகவும் தேவையான உள்கட்டமைப்பு வளர்ச்சியை வழங்கும். இந்தத் திட்டம் உத்தரபிரதேசத்தின் வாரணாசி மற்றும் சந்தெளலி மாவட்டங்கள் வழியாக செல்கிறது.

நவி மும்பையில் அடல் பிகாரி வாஜ்பாய் சேவ்ரி-நவ சேவா அடல் பாலத்தைப் பிரதமர் திறந்து வைத்தார்

January 12th, 07:29 pm

மும்பை துறைமுக இணைப்புக்கான அடல் பாலம் ரூ.17,840 கோடிக்கும் கூடுதலான செலவில் கட்டப்பட்டுள்ளது. இது கடலில் சுமார் 16.5 கி.மீ நீளமும், நிலத்தில் சுமார் 5.5 கி.மீ நீளமும் கொண்ட 21.8 கி.மீ நீளமுள்ள 6 வழிப் பாலமாகும்.

ஜனவரி 12 அன்று பிரதமர் மகாராஷ்டிரா செல்கிறார்

January 11th, 11:12 am

பிரதமர் திரு. நரேந்திர மோடி 2024 ஜனவரி 12 அன்று மகாராஷ்டிரா செல்கிறார். மதியம் 12.15 மணியளவில் நாசிக் செல்லும் பிரதமர், அங்கு 27-வது தேசிய இளைஞர் விழாவைத் தொடங்கி வைக்கிறார். பிற்பகல் 3.30 மணியளவில், மும்பையில், அடல் பிஹாரி வாஜ்பாய் சேவாரி - நவ சேவா அடல் பாலத்தைப் பிரதமர் திறந்து வைத்து அதில் பயணம் செய்கிறார். மாலை 4.15 மணியளவில் நவி மும்பையில் நடைபெறும் பொது நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டும் பிரதமர் முடிவடைந்த திட்டங்களைத். தொடங்கி வைத்து நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார்.