14-வது பிரிக்ஸ் உச்சிமாநாட்டில் பிரதமர் பங்கேற்பு
June 24th, 09:40 pm
சீன அதிபர் திரு ஜீ ஜின்பிங் தலைமையில் ஜூன் 23-24 2022 ஆகிய தேதிகளில் காணொலி வாயிலாக நடைபெற்ற 14வது பிரிக்ஸ் உச்சிமாநாட்டில் இந்தியாவின் சார்பாக பிரதமர் திரு நரேந்திர மோடி பங்கேற்றார். ஜூன் 23-ஆம் தேதி நடைபெற்ற உச்சிமாநாட்டில் பிரேசில் அதிபர் திரு ஜெர்மன் போல்சோனாரோ, ரஷ்ய அதிபர் திரு விளாடிமிர் புட்டின், தென்னாபிரிக்க அதிபர் திரு சிரில் ரமஃபோசா ஆகியோரும் கலந்து கொண்டனர். உச்சிமாநாட்டின் பிரிக்ஸ் அமைப்பு அல்லாத பிரிவான சர்வதேச மேம்பாடு பற்றிய உயர்நிலை பேச்சுவார்த்தை ஜூன் 24 அன்று நடைபெற்றது.13-வது பிரிக்ஸ் உச்சி மாநாட்டிற்கு பிரதமர் தலைமை வகித்தார்
September 09th, 09:21 pm
13-வது பிரிக்ஸ் உச்சி மாநாட்டிற்கு பிரதமர் திரு நரேந்திர மோடி காணொலி மூலம் இன்று தலைமை வகித்தார்.13-வது பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பிரதமரின் தொடக்கவுரை
September 09th, 05:43 pm
இந்த பிரிக்ஸ் உச்சி மாநாட்டுக்கு உங்கள் அனைவரையும் நான் வரவேற்கிறேன். பிரிக்ஸ் அமைப்பின் 15-வது ஆண்டு விழாவையொட்டி நடைபெறும் இந்த உச்சி மாநாட்டிற்கு தலைமை வகிப்பது எனக்கும் இந்தியாவுக்கும் மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. இன்றைய உச்சி மாநாட்டிற்கான விரிவான செயல்திட்டம் உங்கள் முன்னால் உள்ளது. நீங்கள் ஒப்புதல் அளித்தால் இந்த செயல்திட்டத்தை நாம் ஏற்றுக்கொள்ளலாம். நன்றி, செயல்திட்டம் தற்போது ஏற்றுக்கொள்ளப்பட்டு விட்டது.13 வது பிரிக்ஸ் உச்சி மாநாடு
September 07th, 09:11 am
2021 ஆண்டின் 13 வது பிரிக்ஸ் உச்சி மாநாட்டை இந்தியா தலைமை தாங்கி நடத்துகிறது. அந்த வகையில், செப்டம்பர் 9, 2021 அன்று நடைபெறும் மாநாட்டை பிரதமர் திரு. நரேந்திர மோடி மெய்நிகர் வழியாக தலைமையேற்று நடத்துகிறார்.