பிரேசில் அதிபர் விரைவில் குணமடைய பிரதமர் வாழ்த்து
December 12th, 09:50 pm
பிரேசில் அதிபர் திரு லூலா டா சில்வா அறுவை சிகிச்சைக்குப் பிறகு நல்ல உடல்நலம் பெற்று விரைவில் குணமடைய பிரதமர் திரு. நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.2-வது இந்தியா-கரிகாம் உச்சிமாநாட்டில் பிரதமர் ஆற்றிய நிறைவுரை
November 21st, 02:21 am
உங்கள் அனைவரின் மதிப்புமிக்க ஆலோசனைகளையும், நேர்மறையான எண்ணங்களையும் நான் வரவேற்கிறேன். இந்தியாவின் முன்மொழிவுகளுக்கு மதிப்பளித்து, எனது குழுவினர் அனைத்து விவரங்களையும் உங்களுடன் பகிர்ந்து கொள்வார்கள். குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் அனைத்து துறைகளிலும் நாம் முன்னேறிச் செல்வோம்.சிலி அதிபருடன் பிரதமர் சந்திப்பு
November 20th, 08:36 pm
பிரேசில் நாட்டின் ரியோ டி ஜெனிரோ நகரில் ஜி-20 உச்சிமாநாட்டிற்கு இடையே, சிலி குடியரசின் அதிபர் திரு. கேப்ரியல் போரிக் ஃபோன்ட்டை பிரதமர் திரு. நரேந்திர மோடி நவம்பர் 19 அன்று சந்தித்தார். இதுதான் அவர்களின் முதல் சந்திப்பாகும்.அர்ஜென்டினா அதிபருடன் பிரதமர் சந்திப்பு
November 20th, 08:09 pm
பிரேசில் நாட்டின் ரியோ டி ஜெனிரோ நகரில் ஜி-20 உச்சிமாநாட்டிற்கு இடையே, அர்ஜென்டினா குடியரசு அதிபர் திரு ஜேவியர் மைலேயை பிரதமர் திரு. நரேந்திர மோடி நவம்பர் 19 அன்று சந்தித்தார்.பிரேசில் அதிபருடன் பிரதமர் சந்திப்பு
November 20th, 08:05 pm
ரியோ டி ஜெனிரோவில் நடைபெற்ற ஜி-20 உச்சிமாநாட்டிற்கு இடையே, பிரேசில் அதிபர் திரு. லூயிஸ் இனாசியோ லூலா டா சில்வாவை பிரதமர் திரு. நரேந்திர மோடி சந்தித்தார். அதிபர் லூலாவின் விருந்தோம்பலுக்கு நன்றி தெரிவித்த பிரதமர், பிரேசிலின் ஜி20 மற்றும் இப்சா தலைமைப் பதவிகளின் வெற்றிக்காக அவருக்கு வாழ்த்து தெரிவித்தார். வறுமை மற்றும் பட்டினிக்கு எதிரான உலகளாவிய கூட்டணியை உருவாக்கும் பிரேசிலின் முன்முயற்சியைப் பாராட்டிய பிரதமர், அதற்கு இந்தியாவின் வலுவான ஆதரவைத் தெரிவித்தார். ஜி-20 முக்கூட்டு உறுப்பினர் என்ற முறையில், நீடித்த வளர்ச்சி மற்றும் உலகளாவிய ஆளுமை சீர்திருத்தம் ஆகியவற்றில் கவனம் செலுத்தும் பிரேசிலின் ஜி-20 நிகழ்ச்சி நிரலுக்கு இந்தியாவின் ஆதரவை பிரதமர் தெரிவித்தார். அடுத்த ஆண்டு பிரிக்ஸ் மற்றும் COP 30-க்கு பிரேசில் தலைமை வகிப்பதற்கான தமது நல்வாழ்த்துக்களைத் தெரிவித்த அவர், இந்தியாவின் முழு ஆதரவையும் வழங்குவதாக உறுதியளித்தார்.ஜோனாஸ் மாசெட்டி குழுவினரை சந்தித்த பிரதமர், வேதாந்தம் மற்றும் கீதை மீதான அவரது ஆர்வத்தைப் பாராட்டினார்
November 20th, 07:54 am
வேதாந்தம் மற்றும் கீதை மீது ஜோனாஸ் மாசெட்டி கொண்டுள்ள பேரார்வத்தைப் பாராட்டிய பிரதமர் திரு. நரேந்திர மோடி, இந்திய கலாச்சாரம் உலகம் முழுவதும் தாக்கத்தை ஏற்படுத்தியிருப்பது பாராட்டத்தக்கது என்றார். ஜோனாஸ் மாசெட்டி குழுவினர் நிகழ்த்திய சமஸ்கிருத ராமாயண நிகழ்ச்சியைப் பார்த்த பின்னர் பிரதமர் அவர்களைச் சந்தித்தார்.இந்தியா, பிரேசில், தென்னாப்பிரிக்கா ஆகிய நாடுகள் கூட்டாக அளித்த கூட்டறிக்கையை பல ஜி20 நாடுகள், விருந்தினர் நாடுகள் அங்கீகரித்தன
November 20th, 07:52 am
டிஜிட்டல் பொது கட்டமைப்பு, செயற்கை நுண்ணறிவு, நிர்வாகத்திற்கான தரவுகள் குறித்து இந்தியா, பிரேசில், தென்னாப்பிரிக்கா ஆகிய 3 நாடுகள் வழங்கிய முக்கூட்டு அறிக்கைக்கு ஜி20 உச்சிமாநாட்டில் வரவேற்பு கிடைத்துள்ளது. ஜி20 அமைப்பில் உள்ள பல்வேறு நாடுகள், விருந்தினர் நாடுகள் மற்றும் சர்வதேச அமைப்புகள் இந்த அறிக்கையை அங்கீகரித்துள்ளன.டிஜிட்டல் பொது உள்கட்டமைப்பு, செயற்கை நுண்ணறிவு, நிர்வாகத்திற்கான தரவு ஆகியவற்றுக்கு அளிக்கப்படும் முக்கியத்துவம், உள்ளடக்கிய வளர்ச்சியை அடைவதற்கும், உலக அளவில் வாழ்க்கையை மாற்றுவதற்கும் முக்கியமானதாகும்: பிரதமர்
November 20th, 05:04 am
உள்ளடக்கிய வளர்ச்சியை அடைவதற்கும், உலகளவில் வாழ்க்கையை மாற்றியமைப்பதற்கும் டிஜிட்டல் பொது உள்கட்டமைப்பு, செயற்கை நுண்ணறிவு, நிர்வாகத்திற்கான தரவு ஆகியவை முக்கியமானவை என்று பிரதமர் திரு. நரேந்திர மோடி வலியுறுத்தியுள்ளார்.தொழில்நுட்பத்தை ஒருங்கிணைப்பதற்கு அதிக முன்னுரிமை அளித்து சுகாதாரத் துறையில் இந்தியா தீவிரமாக செயல்பட்டு வருகிறது: பிரதமர்
November 20th, 05:02 am
ஆரோக்கியமான பூமி சிறந்த கிரகம் என்று குறிப்பிட்ட பிரதமர் திரு. நரேந்திர மோடி, தொழில்நுட்பத்தை ஒருங்கிணைப்பதற்கு அதிக முன்னுரிமை அளித்து சுகாதாரத் துறையில் இந்தியா தீவிரமாக செயல்பட்டு வருவதாகத் தெரிவித்தார். இந்த விஷயத்தில் உலகளாவிய முயற்சிகளை இந்தியா வலுப்படுத்தும் என்று அவர் கூறினார்.நிலையான வளர்ச்சிக்கான இலக்குகளில் முன்னேற்றத்தை ஏற்படுத்தவும், உலக அளவில் வாழ்க்கைக்கு அதிகாரம் அளிக்கவும் தொழில்நுட்பம் மகத்தான ஆற்றலைக் கொண்டுள்ளது: பிரதமர்
November 20th, 05:00 am
நிலையான வளர்ச்சிக்கான இலக்குகளில் முன்னேற்றத்தை ஏற்படுத்தவும், உலக அளவில் வாழ்க்கைக்கு அதிகாரம் அளிக்கவும் தொழில்நுட்பம் அளப்பரிய ஆற்றலைக் கொண்டுள்ளதாக பிரதமர் திரு. நரேந்திர மோடி குறிப்பிட்டுள்ளார்.நிலையான வளர்ச்சி மற்றும் எரிசக்தி இடைமாற்றம் குறித்த ஜி20 அமர்வில் பிரதமர் ஆற்றிய உரை
November 20th, 01:40 am
இன்றைய அமர்வின் கருப்பொருள் மிகவும் பொருத்தமானது, மேலும் இது அடுத்த தலைமுறையின் எதிர்காலத்துடன் நெருக்கமாக பிணைக்கப்பட்டுள்ளது. புதுதில்லி ஜி-20 உச்சிமாநாட்டின்போது, நிலையான வளர்ச்சிக்கான இலக்குகளை அடைவதை விரைவுபடுத்த வாரணாசி செயல் திட்டத்தை நாம் ஏற்றுக்கொண்டோம்.நிலையான வளர்ச்சி மற்றும் எரிசக்தி மாற்றம் குறித்த ஜி20 அமர்வில் பிரதமரின் உரை
November 20th, 01:34 am
நிலையான வளர்ச்சி மற்றும் எரிசக்தி மாற்றம் குறித்த ஜி-20 உச்சி மாநாட்டில் பிரதமர் திரு. நரேந்திர மோடி உரையாற்றினார். 2030-ம் ஆண்டுக்குள் புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் திறனை மும்மடங்காக உயர்த்தவும், எரிசக்தி சிக்கன விகிதத்தை இரட்டிப்பாக்கவும் இந்தக் குழு புதுதில்லி ஜி-20 உச்சிமாநாட்டின் போது தீர்மானித்திருந்ததை பிரதமர் குறிப்பிட்டார். இந்த நிலையான வளர்ச்சி முன்னுரிமைகளை முன்னெடுத்துச் செல்வதற்கான பிரேசிலின் முடிவை அவர் வரவேற்றார்.இந்திய-ஆஸ்திரேலிய 2-வது வருடாந்திர உச்சிமாநாடு
November 19th, 11:22 pm
இந்தியப் பிரதமர் திரு நரேந்திர மோடி மற்றும் ஆஸ்திரேலிய பிரதமர் மாண்புமிகு திரு அந்தோணி அல்பானீஸ் ஆகியோர் நவம்பர் 19, 2024 அன்று ரியோ டி ஜெனிரோவில் ஜி20 உச்சிமாநாட்டின் ஒரு பகுதியாக இந்திய-ஆஸ்திரேலிய இரண்டாவது வருடாந்திர உச்சிமாநாட்டை நடத்தினர்.இந்தியா - இத்தாலி இடையிலான ராஜாங்க ரீதியிலான கூட்டு செயல் திட்டம் 2025-2029
November 19th, 09:25 am
பிரேசில் நாட்டின் ரியோ டி ஜெனிரோ நகரில் 2024 நவம்பர் 18 அன்று நடைபெற்ற ஜி20 உச்சி மாநாட்டில் சந்தித்துக் கொண்ட பிரதமர் திரு. நரேந்திர மோடி, இத்தாலி பிரதமர் திருமதி ஜியோர்ஜியா மெலோனி ஆகியோர் இந்தியா இத்தாலி ராஜாங்க கூட்டாண்மையின் இணையற்ற ஆற்றலுக்கு, காலவரையறைக்குட்பட்ட முன்முயற்சிகள் மற்றும் ராஜதந்திர நடவடிக்கைக்கான கூட்டுத் திட்டம் ஆகியவற்றின் மூலம் மேலும் உத்வேகம் அளிக்க முடிவு செய்தனர். இந்த நோக்கத்திற்காக, இத்தாலியும் இந்தியாவும் இணைந்து செயல்பட ஒப்புக் கொண்டன.இத்தாலி பிரதமருடன் பிரதமர் சந்திப்பு
November 19th, 08:34 am
ரியோ டி ஜெனிரோவில் நடைபெற்ற ஜி-20 உச்சிமாநாட்டையொட்டி இத்தாலி பிரதமர் திருமதி ஜார்ஜியா மெலோனியை, பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று சந்தித்தார். கடந்த இரண்டு ஆண்டுகளில் இரு பிரதமர்களுக்கும் இடையிலான ஐந்தாவது சந்திப்பு இதுவாகும். இரு தலைவர்களும் கடைசியாக கடந்த ஜூன் மாதத்தில் இத்தாலியின் புக்லியாவில் பிரதமர் மெலோனி தலைமையில் நடந்த ஜி7 உச்சிமாநாட்டை முன்னிட்டு சந்தித்தனர். இந்தச் சவாலான காலகட்டத்தில் ஜி-7 அமைப்பை வழிநடத்தியதற்காக பிரதமர் மெலோனியை பிரதமர் திரு நரேந்திர மோடி பாராட்டினார்.இந்தோனேசிய அதிபருடன் பிரதமர் சந்திப்பு
November 19th, 06:09 am
பிரேசில் நாட்டின் ரியோ டி ஜெனிரோ நகரில் நடைபெற்று வரும் ஜி20 உச்சிமாநாட்டின் இடையே, புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள இந்தோனேஷிய அதிபர் திரு பிரபோவோ சுபியான்டோவை பிரதமர் திரு. நரேந்திர மோடி சந்தித்தார். இரு தலைவர்களும் சந்தித்துப் பேசுவது இதுவே முதல் முறையாகும்.போர்ச்சுகல் பிரதமருடன் பிரதமர் சந்திப்பு
November 19th, 06:08 am
பிரேசில் நாட்டின் ரியோ டி ஜெனிரோ நகரில் நடைபெற்ற ஜி-20 உச்சிமாநாட்டிற்கு இடையே, போர்ச்சுகீசிய குடியரசு பிரதமர் திரு. லூயிஸ் மாண்டிநீக்ரோவை பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று சந்தித்தார். இரு தலைவர்களுக்கும் இடையிலான முதல் சந்திப்பு இதுவாகும். 2024 ஏப்ரலில் பிரதமராக மாண்டிநீக்ரோ பிரதமர் பதவியேற்றதற்கு வாழ்த்து தெரிவித்த பிரதமர் மோடி, இந்தியா மற்றும் போர்ச்சுகல் இடையேயான இருதரப்பு உறவுகளை வலுப்படுத்த இணைந்து பணியாற்ற விருப்பம் தெரிவித்தார். மூன்றாவது முறையாக பிரதமராக பதவியேற்றுள்ள பிரதமர் மோடிக்கு மாண்டிநீக்ரோ வாழ்த்து தெரிவித்தார்.நார்வே பிரதமருடன் பிரதமர் சந்திப்பு
November 19th, 05:44 am
இருதரப்பு உறவுகளில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்து இரு பிரதமர்களும் ஆய்வு செய்ததுடன், பல்வேறு துறைகளில் ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவதற்கான வழிமுறைகள் குறித்தும் விவாதித்தனர். இந்தியா-ஐரோப்பிய சுதந்திர வர்த்தக சங்கம் – வர்த்தகம் மற்றும் பொருளாதார கூட்டு ஒப்பந்தம் (இந்தியா-EFTA-TEPA) கையெழுத்தானது என்பது இருதரப்பு உறவுகளில் ஒரு முக்கிய மைல்கல் என்று குறிப்பிட்ட இரு தலைவர்களும், நார்வே உள்ளிட்ட இஎஃப்டிஏ நாடுகளிலிருந்து இந்தியாவிற்கு அதிக முதலீடுகளை ஈர்ப்பதற்கான அதன் முக்கியத்துவத்தை மீண்டும் உறுதிப்படுத்தினர்.இங்கிலாந்து பிரதமருடன் பிரதமர் சந்திப்பு
November 19th, 05:41 am
பிரேசில் நாட்டின் ரியோ டி ஜெனிரோ நகரில் நடைபெற்று வரும் ஜி-20 உச்சிமாநாட்டிற்கு இடையே, இங்கிலாந்து பிரதமர் சர் கெய்ர் ஸ்டார்மரை பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று சந்தித்தார். இரு பிரதமர்களும் சந்திப்பது இதுவே முதல் முறையாகும். புதிய பிரதமராக பதவியேற்றுள்ள ஸ்டார்மருக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்தார். வரலாற்றுச் சிறப்புமிக்க மூன்றாவது முறையாக பதவியேற்றுள்ள பிரதமர் திரு மோடிக்கு பிரதமர் ஸ்டார்மர் மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.பிரான்ஸ் அதிபருடன் பிரதமர் சந்திப்பு
November 19th, 05:26 am
இந்தச் சந்திப்பின் போது, இந்தியா-பிரான்ஸ் பாதுகாப்பு கூட்டாண்மையை முன்னெடுத்துச் செல்வதற்கான தங்களது உறுதிப்பாட்டையும், ஹொரைசன் 2047 செயல்திட்டம் மற்றும் பிற இருதரப்பு பிரகடனங்களில் கோடிட்டுக் காட்டப்பட்டுள்ள இருதரப்பு ஒத்துழைப்பு மற்றும் சர்வதேச கூட்டாண்மை குறித்த பகிரப்பட்ட தொலைநோக்கையும் இரு தலைவர்களும் மீண்டும் உறுதிப்படுத்தினர். பாதுகாப்பு, விண்வெளி மற்றும் சிவில் அணுசக்தி போன்ற முக்கியத்துவம் வாய்ந்த துறைகள் உட்பட இருதரப்பு ஒத்துழைப்பில் ஏற்பட்டுள்ள முன்னேற்றத்திற்கு பாராட்டு தெரிவித்த அவர்கள், பாதுகாப்பு சுயாட்சி குறித்த தங்களது பகிரப்பட்ட உறுதிப்பாட்டை வலுப்படுத்தும் நோக்கில் அதை மேலும் துரிதப்படுத்த உறுதி பூண்டனர். இந்தியாவின் தேசிய அருங்காட்சியகத் திட்டத்தில் ஒத்துழைப்பின் முன்னேற்றம் குறித்தும் அவர்கள் ஆய்வு செய்தனர்.