'மன் கீ பாத்' (மனதின் குரல்) மீது மக்கள் காட்டிய பாசம் முன்னெப்போதும் இல்லாதது: பிரதமர் மோடி

May 28th, 11:30 am

எனதருமை நாட்டுமக்களே, வணக்கம். மனதின் குரலில் மீண்டும் ஒருமுறை உங்களனைவரையும் நெஞ்சம் நிறைய வரவேற்கிறேன். இந்த முறை மனதின் குரலின் இந்தப் பகுதி இரண்டாவது சதத்தின் தொடக்கம். கடந்த மாதம் நாமனைவரும் இதன் சிறப்பான சதத்தினைக் கொண்டாடினோம். உங்களனைவரின் பங்களிப்பு மட்டுமே இந்த நிகழ்ச்சியின் மிகப்பெரிய பலம். 100ஆவது பகுதி ஒலிபரப்பான வேளையிலே, ஒருவகையில் நாடு முழுவதும் ஒரே இழையில் இணைந்தது என்று கூறலாம். துப்புரவுப் பணியில் ஈடுபட்டிருக்கும் நம்முடைய சகோதர சகோதரிகள் ஆகட்டும், அல்லது பல்வேறு துறைகளைச் சேர்ந்த வல்லநர்கள் ஆகட்டும், மனதின் குரலானது அனைவரையும் ஒருங்கிணைக்கும் பணியைப் புரிந்திருக்கிறது. நீங்கள் அனைவரும் மனதின் குரலின் மீது வெளிப்படுத்தியிருக்கும் நேசம், பாசம், இது, இதுவரை காணாதது, உணர்ச்சிவயப்படச் செய்யக்கூடியது. மனதின் குரல் ஒலிபரப்பு செய்யப்பட்ட போது, உலகின் பல்வேறு நாடுகளிலும், பல்வேறு நேர மண்டலங்களிலும், ஓரிடத்தில் மாலையாக இருக்கலாம், ஓரிடத்தில் இரவாக இருக்கலாம், இதையெல்லாம் தாண்டி, அதிக எண்ணிக்கையிலான மக்கள் இந்த 100ஆவது பகுதியைக் கேட்கத் தங்கள் நேரத்தை ஒதுக்கினார்கள். ஆயிரக்கணக்கான மைல்கள் தொலைவில் இருக்கும் நியூசிலாந்தின் ஒரு காணொளியை நான் பார்க்க நேர்ந்தது, இதிலே 100 வயது நிரம்பிய ஒரு தாய் தனது நல்லாசிகளை வழங்கிக் கொண்டிருந்தார். மனதின் குரல் தொடர்பாக நாட்டிலும் சரி, அயல்நாடுகளிலும் இருக்கும் மக்களும் சரி, தங்களுடைய கருத்துக்களை முன்வைத்திருக்கின்றார்கள். பலர் இதனை ஆக்கப்பூர்வமாக ஆராயவும் செய்திருக்கிறார்கள். மனதின் குரலில் நாடு மற்றும் நாட்டுமக்களின் சாதனைகளைப் பற்றி மட்டுமே பேசப்படுகிறது என்ற இந்த விஷயத்தைப் பலர் பாராட்டியிருக்கிறார்கள். நான் மீண்டும் ஒரு முறை உங்கள் அனைவருக்கும், உங்களுடைய இந்த நல்லாசிகளுக்காக, மிகுந்த மரியாதையோடு என் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

தண்ணீரை சேமிக்க அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ள வேண்டும்: ‘மன் கீ பாத்’ (மனதின் குரல்) நிகழ்ச்சியில் பிரதமர் மோடி

March 27th, 11:00 am

எனதருமை நாட்டுமக்களே, வணக்கம். கடந்த வாரத்தில் நாம் ஒரு சாதனையைப் படைத்திருக்கிறோம், இது நம்முள்ளே பெருமிதத்தை நிரப்பியிருக்கின்றது. பாரதம் கடந்த வாரத்தில் 400 பில்லியன் டாலர், அதாவது, 30 இலட்சம் கோடி ரூபாய் என்ற ஏற்றுமதி இலக்கை எட்டியிருக்கிறது.

கொல்கத்தாவில் உள்ள விக்டோரியா நினைவு மண்டபத்தில் பிப்லோபி பாரத் காட்சிக் கூடத்தை திறந்து வைத்து பிரதமர் ஆற்றிய உரையின் தமிழாக்கம்

March 23rd, 06:05 pm

மேற்கு வங்க ஆளுநர் திரு ஜகதீப் தன்கர் அவர்களே, மத்திய கலாச்சாரம் மற்றும் சுற்றுலாத் துறை அமைச்சர், திரு கிஷன் ரெட்டி அவர்களே, விக்டோரியா நினைவு மண்டபத்துடன் தொடர்புடைய அனைத்து முக்கிய பிரமுகர்களே, பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்களே, கலை மற்றும் கலாச்சாரத்தின் தலைசிறந்தவர்களே, தாய்மார்களே மற்றும் பெரியோர்களே!

ஷாஹீத் தினத்தன்று கொல்கத்தாவில் உள்ள விக்டோரியா நினைவு மண்டபத்தில் பிப்லோபி பாரத் காட்சிக் கூடத்தை பிரதமர் திறந்து வைத்தார்

March 23rd, 06:00 pm

ஷாஹீத் தினமான இன்று கொல்கத்தாவில் உள்ள விக்டோரியா நினைவு மண்டபத்தில் பிப்லோபி பாரத் காட்சிக் கூடத்தை பிரதமர் திரு நரேந்திர மோடி காணொலி மூலம் திறந்து வைத்தார். மேற்கு வங்க ஆளுநர் திரு ஜக்தீப் தன்கர் மற்றும் மத்திய அமைச்சர் திரு ஜி கிஷன் ரெட்டி ஆகியோர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

தியாகிகள் தினத்தையொட்டி கொல்கத்தாவின் விக்டோரியா நினைவு அரங்கில் புரட்சிகர இந்தியா கலைக்கூடத்தைப் பிரதமர் தொடங்கிவைக்கிறார்

March 22nd, 11:45 am

தியாகிகள் தினத்தையொட்டி கொல்கத்தாவின் விக்டோரியா நினைவு அரங்கில் புரட்சிகர இந்தியா கலைக்கூடத்தைப் பிரதமர் திரு.நரேந்திர மோடி மார்ச் 23 அன்று மாலை 6 மணிக்கு காணொலி காட்சி மூலம் தொடங்கிவைக்கிறார். இந்த நிகழ்வின் போது திரண்டிருப்போரிடையே பிரதமர் உரையாற்ற உள்ளார்.