மஹாராஷ்டிர மாநிலம் புனேயில் பல்வேறு திட்டங்களுக்கான அடிக்கல் நாட்டு விழா மற்றும் தொடக்க விழாவில் பிரதமர் நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்

August 01st, 02:00 pm

உண்மையில், இந்திய சுதந்திர இயக்கத்தில் புனே ஒரு குறிப்பிடத்தக்க பங்களிப்பை செய்துள்ளது. பாலகங்காதர திலகர் உள்ளிட்ட பல புரட்சியாளர்களையும், சுதந்திரப் போராட்ட வீரர்களையும் நாட்டிற்கு புனே வழங்கியுள்ளது. இன்று லோக்ஷாஹிர் அன்னா பாவ் சாத்தேயின் பிறந்த நாள். இந்த நாள் நம் அனைவருக்கும் மிகவும் சிறப்பு வாய்ந்தது. அன்னா பாவ் சாத்தே ஒரு சிறந்த சமூக சீர்திருத்தவாதி மற்றும் டாக்டர் பி.ஆர்.அம்பேத்கரின் கருத்துக்களால் ஈர்க்கப்பட்டவர். இன்றளவும் ஏராளமான மாணவர்களும், அறிஞர்களும் இவரது இலக்கியம் குறித்து ஆராய்ச்சி செய்து வருகின்றனர். அன்னா பாவ் சாத்தேயின் பணிகளும், போதனைகளும் நம் அனைவருக்கும் தொடர்ந்து உத்வேகம் அளிக்கின்றன.

மஹாராஷ்டிர மாநிலம் புனேயில் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்குப் பிரதமர் அடிக்கல் நாட்டினார்

August 01st, 01:41 pm

கூட்டத்தில் உரையாற்றிய பிரதமர், ஆகஸ்ட் மாதம் கொண்டாட்டங்கள் மற்றும் புரட்சிகளின் மாதம் என்று கூறினார். சுதந்திரப் போராட்டத்தில் புனே நகரின் பங்களிப்பை எடுத்துரைத்த பிரதமர், பால கங்காதர திலகர் உட்பட பல சுதந்திரப் போராட்ட வீரர்களை இந்த நகரம் நாட்டிற்குத் தந்துள்ளது என்றார். சமூக சீர்திருத்தவாதியாகவும், டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கரின் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டவருமான மாபெரும் அன்னா பாவ் சாத்தேவின் பிறந்த தினம் இன்று என்றும் அவர் தெரிவித்தார். இன்றும் கூட, பல மாணவர்களும் கல்வியாளர்களும் அவரது இலக்கியப் படைப்புகள் குறித்து ஆராய்ச்சி செய்கிறார்கள் என்றும், அவரது பணிகளும் லட்சியங்களும் அனைவருக்கும் உத்வேகம் அளிப்பதாகவும் பிரதமர் தெரிவித்தார்.

பிரகதி மைதானத்தில் உயிரி தொழில்நுட்ப புதிய தொழில் கண்காட்சி 2022-ஐ ஜூன் 9 அன்று பிரதமர் தொடங்கி வைப்பார்

June 07th, 06:44 pm

புதுதில்லி பிரகதி மைதானத்தில் ஜூன் 9 அன்று காலை 10.30 மணிக்கு உயிரி தொழில்நுட்ப புதியதொழில் கண்காட்சி 2022-ஐ பிரதமர் திரு நரேந்திர மோடி தொடங்கி வைப்பார். இதைத்தொடர்ந்து இந்த நிகழ்ச்சியில் அவர் உரையாற்றுவார்.