எதிர்காலத்தில் சர்வதேச சூரியசக்தி கூட்டமைப்பு பருவ நடவடிக்கை நிதிகளை உருவாக்கும்: பிரதமர் மோடி

October 02nd, 08:17 pm

இந்தியாவில் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் மின்சாரம் உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும் சர்வதேச சூரியசக்தி கூட்டமைப்புஎதிர்கால ஓபெக்-காக சர்வதேச சூரியசக்தி கூட்டமைப்பாக விளங்கும் என்று பிரதமர் மோடி செவ்வாய்க்கிழமையன்று கூறினார். சூரிய மற்றும் காற்றாலை மின்சக்தி ஆற்றல் மட்டுமல்லாமல் பயோ மின்சக்தி ஆற்றலை ஊக்குவிக்கும் விதமாகவும் நடைமுறைகள் ஏற்படுத்த திட்டமிடப்பட்டுள்ளன என்று அவர் கூறினார்

சர்வதேச சூரியசக்தி கூட்டமைப்பின் முதலாவது மாநாட்டை பிரதமர் தொடங்கி வைத்தார்

October 02nd, 08:16 pm

பிரதமர் திரு. நரேந்திர மோடி சர்வதேச சூரியசக்தி கூட்டமைப்பின் முதலாவது மாநாட்டை இன்று விஞ்ஞான் பவனில் தொடங்கி வைத்தார். இந்தியப் பெருங்கடல் எல்லைப் பகுதி நாடுகள் கூட்டமைப்பின் (IORA) புதுப்பிக்கத்தக்க எரிசக்திக்கான அமைச்சர்கள் கூட்டம் மற்றும் இரண்டாவது சர்வதேச ரீ-இன்வெஸ்ட் (புதுப்பிக்கத்தக்க எரிசக்தி முதலீட்டாளர்கள் மாநாடு மற்றும் கண்காட்சி) ஆகியவையும் இந்த நிகழ்ச்சியின்போது தொடங்கப்பட்டது. ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் ஆண்டோனியோ கட்டரஸும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றார்.