பசுமை வளர்ச்சி குறித்த பட்ஜெட்டுக்கு பிந்தைய இணையவழிக்கருத்தரங்கில் பிரதமர் ஆற்றிய உரையின் தமிழாக்கம்

February 23rd, 10:22 am

இன்று உலகம் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி விநியோகச் சங்கிலியில் பன்முகத் தன்மைக் கொண்டதாக உள்ளது. இதைக் கருத்தில் கொண்டு, ஒவ்வொரு பசுமை முதலீட்டாளர்களும் இத்துறையில், முதலீடு செய்ய இந்த பட்ஜெட்டின் மூலம் இந்தியா சிறந்த வாய்ப்புகளை ஏற்படுத்தித் தந்துள்ளது. இத்துறையில், ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கும் இது பலன் அளிக்கும்.

பசுமை வளர்ச்சிக் குறித்து பட்ஜெட்டுக்குப் பிந்தைய இணையக் கருத்தரங்கில் பிரதமர் உரையாற்றினார்

February 23rd, 10:00 am

பசுமை வளர்ச்சிக் குறித்த பட்ஜெட்டுக்குப் பிந்தைய இணையக் கருத்தரங்கில் பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று உரையாற்றினார். மத்திய பட்ஜெட் 2023-ல் அறிவிக்கப்பட்ட முன்னெடுப்புகளை திறம்பட அமல்படுத்துவதற்கு கருத்துக்களைக் கோரும் வகையில், பட்ஜெட்டுக்குப் பிந்தைய 12 இணையக் கருத்தரங்குகளின் முதலாவது பகுதி இதுவாகும்.

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் இந்தியா எரிசக்தி வாரம் 2023-ல் பிரதமர் ஆற்றிய உரையின் முக்கிய அம்சங்கள்

February 06th, 11:50 am

துருக்கியிலும் அண்டை நாடுகளிலும் ஏற்பட்டுள்ள பேரழிவுகள் மற்றும் உயிரிழப்புக்கு இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். சாத்தியமான உதவிகளை வழங்குவதற்கு இந்தியா தயார் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

பெங்களூருவில் இந்தியா எரிசக்தி வாரம் 2023-ஐ பிரதமர் தொடங்கி வைத்தார்

February 06th, 11:46 am

பெங்களூருவில் இந்தியா எரிசக்தி வாரம் 2023-ஐ பிரதமர் திரு.நரேந்திர மோடி இன்று தொடங்கி வைத்தார். பயன்படுத்திய பிளாஸ்டிக் பாட்டில்களில் இருந்து உருவாக்கப்பட்ட இந்திய எண்ணெய் நிறுவனத்தின் சீருடைகளையும் பிரதமர் வெளியிட்டார். இந்திய எண்ணெய் கழகத்தின் உட்புற சூரிய எரிசக்தி சமையல் முறையின் இரட்டை அடுப்பு மாதிரியையும் நாட்டுக்கு அர்ப்பணித்த அவர் இதன் வணிக ரீதியான விற்பனையையும் தொடங்கி வைத்தார்.

சர்வதேச அளவிலான எண்ணெய் மற்றும் எரிவாயு நிறுவனங்களின் தலைமைச் செயல் அதிகாரிகள் மற்றும் நிபுணர்களுடன் அக்டோபர் 20 அன்று பிரதமர் கலந்துரையாடுகிறார்

October 19th, 12:41 pm

பிரதமர் திரு நரேந்திர மோடி, 20 அக்டோபர் 2021 மாலை 6 மணி அளவில், சர்வதேச அளவிலான எண்ணெய் மற்றும் எரிவாயு நிறுவனங்களின் தலைமைச் செயல் அதிகாரிகள் மற்றும் நிபுணர்களுடன் காணொலி வாயிலாக கலந்துரையாட உள்ளார். 2016-ல் தொடங்கப்பட்ட இது போன்ற வருடாந்திர கலந்துரையாடல், தற்போது 6-வது முறையாக நடைபெற உள்ளது, இதில் எண்ணெய் மற்றும் எரிவாயுத் தொழில் துறையில், சர்வதேச அளவில் முன்னோடியாக உள்ள நிறுவனங்களின் தலைவர்கள் பங்கேற்று விவாதிக்க இருப்பதுடன், இத்துறையில் நிலவும் முக்கியப் பிரச்சினைகள் மற்றும் இந்தியாவுடனான ஒத்துழைப்பு மற்றும் முதலீட்டு வாய்ப்புகள் குறித்தும் ஆராய உள்ளனர்.

உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி பிரதமர் ஆற்றிய உரையின் முக்கிய அம்சங்கள்

June 05th, 11:05 am

பெட்ரோலியம் & இயற்கை எரிவாயு அமைச்சகமும் சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாறுதல் அமைச்சகமும் இணைந்து இன்று ஏற்பாடு செய்திருந்த உலகச் சுற்றுச்சூழல் தின நிகழ்வில் பிரதம மந்திரி திரு நரேந்திர மோடி காணொலி மூலம் உரையாற்றினார். இந்த நிகழ்வின் போது பூனாவில் இருந்து கலந்து கொண்ட விவசாயி ஒருவரிடம் பிரதமர் கலந்துரையாடினார். அப்போது அந்த விவசாயி இயற்கை முறை விவசாயம் மற்றும் வேளாண்மையில் உயிரி எரிபொருளின் பயன்பாடு குறித்த தனது அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டார்.

உலகச் சுற்றுச்சூழல் தின நிகழ்வில் பிரதமர் உரை

June 05th, 11:04 am

பெட்ரோலியம் & இயற்கை எரிவாயு அமைச்சகமும் சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாறுதல் அமைச்சகமும் இணைந்து இன்று ஏற்பாடு செய்திருந்த உலகச் சுற்றுச்சூழல் தின நிகழ்வில் பிரதம மந்திரி திரு நரேந்திர மோடி காணொலி மூலம் உரையாற்றினார். இந்த நிகழ்வின் போது பூனாவில் இருந்து கலந்து கொண்ட விவசாயி ஒருவரிடம் பிரதமர் கலந்துரையாடினார். அப்போது அந்த விவசாயி இயற்கை முறை விவசாயம் மற்றும் வேளாண்மையில் உயிரி எரிபொருளின் பயன்பாடு குறித்த தனது அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டார்.

இந்தியாவுக்கு பிரேசில் அதிபர் அரசுமுறைப் பயணம் மேற்கொண்ட போது பரிமாறிக் கொள்ளப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் / உடன்பாடுகளின் பட்டியல்

January 25th, 03:00 pm

இந்தியாவுக்கு பிரேசில் அதிபர் அரசுமுறைப் பயணம் மேற்கொண்ட போது பரிமாறிக் கொள்ளப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் / உடன்பாடுகளின் பட்டியல்

PM Modi's remarks at joint press meet with President Bolsonaro of Brazil

January 25th, 01:00 pm

Addressing the joint press meet, PM Modi welcomed President Bolsonaro of Brazil. PM Modi said, Discussions were held with President Bolsonaro on areas including bio-energy, cattle genomics, health and traditional medicine, cyber security, science and technology and oil and gas sectors. The PM also said that both the countries were working to strengthen defence industrial cooperation.

எதிர்காலத்தில் சர்வதேச சூரியசக்தி கூட்டமைப்பு பருவ நடவடிக்கை நிதிகளை உருவாக்கும்: பிரதமர் மோடி

October 02nd, 08:17 pm

இந்தியாவில் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் மின்சாரம் உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும் சர்வதேச சூரியசக்தி கூட்டமைப்புஎதிர்கால ஓபெக்-காக சர்வதேச சூரியசக்தி கூட்டமைப்பாக விளங்கும் என்று பிரதமர் மோடி செவ்வாய்க்கிழமையன்று கூறினார். சூரிய மற்றும் காற்றாலை மின்சக்தி ஆற்றல் மட்டுமல்லாமல் பயோ மின்சக்தி ஆற்றலை ஊக்குவிக்கும் விதமாகவும் நடைமுறைகள் ஏற்படுத்த திட்டமிடப்பட்டுள்ளன என்று அவர் கூறினார்

சர்வதேச சூரியசக்தி கூட்டமைப்பின் முதலாவது மாநாட்டை பிரதமர் தொடங்கி வைத்தார்

October 02nd, 08:16 pm

பிரதமர் திரு. நரேந்திர மோடி சர்வதேச சூரியசக்தி கூட்டமைப்பின் முதலாவது மாநாட்டை இன்று விஞ்ஞான் பவனில் தொடங்கி வைத்தார். இந்தியப் பெருங்கடல் எல்லைப் பகுதி நாடுகள் கூட்டமைப்பின் (IORA) புதுப்பிக்கத்தக்க எரிசக்திக்கான அமைச்சர்கள் கூட்டம் மற்றும் இரண்டாவது சர்வதேச ரீ-இன்வெஸ்ட் (புதுப்பிக்கத்தக்க எரிசக்தி முதலீட்டாளர்கள் மாநாடு மற்றும் கண்காட்சி) ஆகியவையும் இந்த நிகழ்ச்சியின்போது தொடங்கப்பட்டது. ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் ஆண்டோனியோ கட்டரஸும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றார்.