மத்தியப் பிரதேசத்தின் பினாவில் வளர்ச்சிப் பணிகளுக்கான அடிக்கல் நாட்டு விழாவில் பிரதமர் ஆற்றிய உரையின் சாராம்சம்

September 14th, 12:15 pm

மத்தியப் பிரதேச முதலமைச்சர் திரு சிவராஜ் அவர்களே, மத்திய அமைச்சரவையில் உள்ள எனது சகா ஹர்தீப் சிங் பூரி, மத்தியப் பிரதேசத்தின் பிற அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், எம்.எல்.ஏ.க்கள் மற்றும் எனது அன்பான குடும்ப உறுப்பினர்களே!

மத்தியப் பிரதேச மாநிலம் பினாவில் ரூ.50,700 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்களுக்கு பிரதமர் அடிக்கல் நாட்டினார்

September 14th, 11:38 am

பிரதமர் திரு. நரேந்திர மோடி மத்தியப் பிரதேசத்தின் பினாவில் ரூ.50,700 கோடிக்கும் அதிகமான வளர்ச்சித் திட்டங்களுக்கு இன்று அடிக்கல் நாட்டினார். பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் நிறுவனத்தின் (பிபிசிஎல்) பினா சுத்திகரிப்பு நிலையத்தில் உள்ள பெட்ரோகெமிக்கல் வளாகம் சுமார் 49,000 கோடி ரூபாய் செலவில் உருவாக்கப்படும் திட்டங்களில் அடங்கும்; நர்மதாபுரம் மாவட்டத்தில் மின்சாரம் மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உற்பத்தி மண்டலம்; இந்தூரில் இரண்டு ஐடி பூங்காக்கள்; ரத்லாமில் ஒரு மெகா தொழில் பூங்கா; மத்தியப் பிரதேசம் முழுவதும் ஆறு புதிய தொழில்துறை பகுதிகள் ஆகியவற்றுக்கும் அடிக்கல் நாட்டப்பட்டது.