பிரதமரின் ஜன்மன் திட்டத்தின் கீழ் 1 லட்சம் பயனாளிகளுக்கு முதல் தவணை வழங்கும் விழாவில் பிரதமர் ஆற்றிய உரையின் தமிழாக்கம்

January 15th, 12:15 pm

வாழ்த்துகள்! உத்தராயணம், மகர சங்கராந்தி, பொங்கல், பிஹு போன்ற கொண்டாட்டங்களால் தற்போது நாடு முழுவதும் ஒரு பண்டிகை சூழல் பரவியுள்ளது. இந்த சந்தர்ப்பத்தில் உங்களுடன் உரையாடுவதை ஒரு கொண்டாட்டமாக உணர்கிறேன். தற்போது, அயோத்தியில் கொண்டாட்டங்கள் நடந்து வருகின்றன. அதே நேரத்தில், என் குடும்பத்தின் ஒரு பகுதியாகக் கருதப்படும் மிகவும் பின்தங்கிய ஒரு லட்சம் பழங்குடி சகோதர சகோதரிகள் தங்கள் வீடுகளில் மகிழ்ச்சியுடன் இதனைக் கொண்டாடி வருகின்றனர். இது எனக்கு மிகுந்த உற்சாகத்தை அளிக்கிறது. இன்று வீடு கட்டுவதற்காக அவர்களின் வங்கிக் கணக்கில் பணம் செலுத்தப்படுகிறது. இந்தக் குடும்பங்கள் அனைத்திற்கும் எனது மனமார்ந்த நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்வதுடன், அவர்களுக்கு மகிழ்ச்சியான மகர சங்கராந்தி நல்வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

பிரதமர்-ஜன்மனின் கீழ் 1 லட்சம் பிரதமரின் ஊரக வீட்டுவசதித் திட்டத்தின் பயனாளிகளுக்கு முதல் தவணையை பிரதமர் வெளியிட்டார்

January 15th, 12:00 pm

பிரதமரின் ஜன்ஜாதி ஆதிவாசி நியாய மகா அபியான் (பி.எம்-ஜன்மன்) திட்டத்தின் கீழ், பிரதமரின் கிராமப்புற வீட்டு வசதி திட்டத்தின் முதல் தவணையை பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று காணொலி மூலம் வெளியிட்டார். இந்நிகழ்ச்சியில் பிரதமர்-ஜன்மனின் பயனாளிகளுடன் பிரதமர் கலந்துரையாடினார்.

புதுதில்லியில் பொங்கல் கொண்டாட்டத்தின் போது பிரதமர் ஆற்றிய உரையின் தமிழாக்கம்

January 14th, 12:00 pm

பொங்கல் திருநாளன்று தமிழகத்தில் உள்ள அனைத்து வீடுகளிலும் பொங்கல் பண்டிகையின் உணர்வு காணப்படுகிறது. உங்கள் வாழ்விலும் மகிழ்ச்சி, செழிப்பு, மனநிறைவு ஆகியவை தடையின்றி தொடர வேண்டும் என்பதே எனது விருப்பம். நேற்று, நாடு முழுவதும் லோஹ்ரி திருவிழா வெகு விமரிசையாகக் கொண்டாடப்பட்டது. சிலர் இன்று மகர சங்கராந்தி-உத்தராயணத்தை அனுசரிக்கிறார்கள், மற்றவர்கள் நாளை கொண்டாடலாம். மாக் பிஹுவும் ஒரு மூலையில் நடைபெருகிறது. இவ்விழாக்களுக்காக நாட்டு மக்கள் அனைவருக்கும் எனது இதயம் கனிந்த நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

தில்லி பொங்கல் விழாவில் பிரதமர் பங்கேற்பு

January 14th, 11:30 am

புதுதில்லியில் உள்ள மத்திய அமைச்சர் டாக்டர் எல்.முருகன் இல்லத்தில் இன்று நடைபெற்ற பொங்கல் விழாவில் பிரதமர் திரு. நரேந்திர மோடி பங்கேற்றார்.

கட்டி பிஹு பண்டிகையை முன்னிட்டு அசாம் மக்களுக்குப் பிரதமர் வாழ்த்து தெரிவித்துள்ளார்

October 18th, 10:47 pm

கட்டி பிஹு பண்டிகையை முன்னிட்டு அசாம் மக்களுக்குப் பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

காசி விஸ்வநாத் மற்றும் பிஹு கொண்டாட்டங்கள் குறித்த பொதுமக்களின் கருத்துகளுக்கு பிரதமர் பதிலளித்துள்ளார்

April 16th, 10:04 am

பிரதமர் திரு நரேந்திர மோடி காசி விஸ்வநாதர் மற்றும் பிஹு கொண்டாட்டங்கள் வரையிலான பொதுமக்களின் ட்விட்டர் பதிவுகளுக்குப் பதிலளித்துள்ளார். தனது தந்தையை காசி விஸ்வநாதர் ஆலயத்திற்கு அழைத்துச் செல்லும் வாய்ப்பைப் பெற்றவர் மகிழ்ச்சியோடு பதிவிட்டுள்ள ட்விட்டர் பதிவுக்குப் பதிலளித்துள்ள பிரதமர், “அழகானது!” என்று ட்வீட் செய்துள்ளார்.

குவஹாத்தியில் நடைபெற்ற பிஹு நிகழ்ச்சியில் பிரதமர் நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்

April 14th, 06:00 pm

ரொங்காலி பிஹு விழாவையொட்டி அசாம் மக்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்!

அசாமின் கவுகாத்தியில் ரூ .1௦,9௦௦ மதிப்பீட்டிலான திட்டங்களுக்கு பிரதமர் அடிக்கல் நாட்டி, தொடங்கி வைத்து, நாட்டுக்கு அர்ப்பணித்தார்

April 14th, 05:30 pm

அசாமின் கவுகாத்தியில் உள்ள சருசாஜெய் விளையாட்டு அரங்கத்தில் ரூ .1௦,9௦௦ மதிப்பீட்டிலான திட்டங்களுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி அடிக்கல் நாட்டி, நாட்டுக்கு அர்ப்பணித்தார். இதில் பலாசபரி மற்றும் சுயல்குச்சி பகுதிகளை இணைக்கும் வகையில் பிரம்மபுத்ரா நதியின் மீது கட்டப்படும் பாலம், சிவசாகரில் உள்ள ரங் கார் அழகுபடுத்தும் திட்டம், நம்ரப்பில் உள்ள மென்தால் உற்பத்தி மையம், நிறைவடைந்த ஐந்து ரயில்வே திட்டங்களை நாட்டு அர்பணித்தல் ஆகியவைகள் அடங்கும். மேலும் பாரம்பரிய பிஹு நடனக்கலைஞர்களின் வண்ணமயமான கலாச்சார நிகழ்ச்சியையும் பிரதமர் கண்டு களித்தார்.

ஏப்ரல் 14-ஆம் தேதி பிரதமர் அசாம் பயணம்

April 12th, 09:45 am

ஏப்ரல் 14, 2023 அன்று பிரதமர் திரு நரேந்திர மோடி அசாமிற்கு பயணம் மேற்கொள்வார்.

அஸ்ஸாம் மக்களுக்கு பிரதமரின் போஹக் பிஹு வாழ்த்துகள்

April 14th, 09:54 am

அஸ்ஸாம் மக்களுக்கு போஹக் பிஹு வாழ்த்துகளை பிரதமர் திரு நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.