தகுதியுள்ள தலைவர்களையும், மாவீரர்களையும் கவுரவிக்காத வரலாற்றுத் தவறுகளை நாங்கள் சரி செய்கிறோம்: பிரதமர்
February 16th, 02:45 pm
நமது நாடு சுதந்திரம் பெற்று 75வது ஆண்டில் நாம் நுழையும் இந்தத் தருணத்தில், நாட்டுக்காக பெரும் பங்களிப்பு செய்த வரலாற்று நாயகர்ககளையும், நாயகிகளை நினைவுகூர வேண்டியது மிக முக்கியமானதாக உள்ளது என்று பிரதமர் திரு. நரேந்திர மோடி கூறியுள்ளார். இந்தியாவுக்காக தங்களின் அனைத்து விஷயங்களையும் தியாகம் செய்தவர்களுக்கு வரலாற்றுப் புத்தகங்களில் உரிய பங்கு அளிக்கப்படவில்லை என்று பிரதமர் வருத்தம் தெரிவித்துள்ளார். இந்தியாவின் வரலாற்றை உருவாக்கியவர்கள் பற்றிய தகவல்களை சரியாகப் பதிவு செய்யாமல், இந்திய வரலாற்றுப் பதிவாளர்கள் இழைத்த அநீதி, சுதந்திரம் அடைந்த 75வது ஆண்டில் நாம் நுழையும் இத்தருணத்தில் சரி செய்யப்படுகின்றது என்று அவர் கூறினார். அவர்களுடைய பங்களிப்புகளை இந்தத் தருணத்தில் நினைவுகூர வேண்டியது முக்கியம் என்று பிரதமர் குறிப்பிட்டார். உத்தரப்பிரதேசத்தில் மகாராஜா சுகல்தேவ் நினைவிடத்துக்கு அடிக்கல் நாட்டி, பஹ்ராச்சில் சித்துவாரா ஏரி மேம்பாட்டு பணியைத் தொடங்கி வைத்து அவர் பேசினார். இந்த நிகழ்ச்சி இன்று காணொலி மூலமாக நடைபெற்றது.உத்தரப்பிரதேச மாநிலம் பஹ்ரைச்சில் மகாராஜா சுகல்தேவ் நினைவு சின்னம் மற்றும் சித்தவுரா ஏரி மேம்பாட்டுப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டு விழாவில் பிரதமர் ஆற்றிய உரையின் முக்கிய அம்சங்கள்
February 16th, 11:24 am
உத்தரப் பிரதேசம் மாநிலம் பஹ்ரைச்சில் மகாராஜா சுகல்தேவ் நினைவு சின்னம் மற்றும் சித்தவுரா ஏரி மேம்பாட்டுப் பணிகளுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி காணொலி மூலம் இன்று அடிக்கல் நாட்டினார். மகாராஜா சுகல்தேவ் பெயர் சூட்டப்பட்ட மருத்துவக் கல்லூரிக் கட்டடத்தை பிரதமர் திறந்து வைத்தார். மாநில ஆளுநர், முதலமைச்சர் ஆகியோர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.மகாராஜா சுகல்தேவ் நினைவு சின்னம் மற்றும் சித்தவுரா ஏரி மேம்பாட்டு பணிகளுக்கு பிரதமர் அடிக்கல் நாட்டினார்
February 16th, 11:23 am
உத்தரப் பிரதேசம் மாநிலம் பஹ்ரைச்சில் மகாராஜா சுகல்தேவ் நினைவு சின்னம் மற்றும் சித்தவுரா ஏரி மேம்பாட்டுப் பணிகளுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி காணொலி மூலம் இன்று அடிக்கல் நாட்டினார். மகாராஜா சுகல்தேவ் பெயர் சூட்டப்பட்ட மருத்துவக் கல்லூரிக் கட்டடத்தை பிரதமர் திறந்து வைத்தார். மாநில ஆளுநர், முதலமைச்சர் ஆகியோர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.PM Modi visits the birth place of Dr. Bhimrao Ambedkar
April 14th, 02:00 pm