புதுதில்லியில் உள்ள பாரத் டெக்ஸ் 2024-இல் பிரதமர் ஆற்றிய உரையின் தமிழாக்கம்

February 26th, 11:10 am

எனது அமைச்சரவை சகாக்களான பியூஷ் கோயல் அவர்களே, தர்ஷனா ஜர்தோஷ் அவர்களே, பல்வேறு நாடுகளின் தூதர்கள் மற்றும் மூத்த தூதர்களே, மத்திய மற்றும் மாநில அரசுகளின் அதிகாரிகளே, ஆடை மற்றும் ஜவுளி உலகின் கூட்டாளிகளே, இளம் தொழில்முனைவோர்களே, தாய்மார்களே, அன்பர்களே! பாரத மண்டபத்தில் நடந்த பாரத டெக்ஸில் பங்கேற்ற அனைவருக்கும் வாழ்த்துகள்! இன்றைய நிகழ்வு மிகவும் சிறப்பு வாய்ந்தது. பாரதத்தின் இரண்டு பெரிய கண்காட்சி மையங்களான பாரத மண்டபம் மற்றும் யசோபூமி ஆகியவற்றில் ஒரே நேரத்தில் நடப்பதால் இது சிறப்பு வாய்ந்தது. 3,000 க்கும் மேற்பட்ட கண்காட்சியாளர்கள்... 100 நாடுகளைச் சேர்ந்த 3,000 வாங்குபவர்கள்... 40,000 க்கும் மேற்பட்ட வர்த்தக பார்வையாளர்கள்... இந்த நிகழ்வில் பங்கேற்கின்றனர்.

புதுதில்லியில் பாரத் டெக்ஸ் 2024-ஐ பிரதமர் தொடங்கி வைத்தார்

February 26th, 10:30 am

புதுதில்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று மிகப்பெரிய உலகளாவிய ஜவுளி நிகழ்வுகளில் ஒன்றான பாரத் டெக்ஸ் 2024-ஐ தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் காட்சிப்படுத்தப்பட்ட கண்காட்சியையும் பிரதமர் பார்வையிட்டார்.

பாரத் டெக்ஸ் 2024-ஐ பிரதமர் பிப்ரவரி 26 அன்று தொடங்கி வைக்கிறார்

February 25th, 03:32 pm

புதுதில்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் பிப்ரவரி 26 ஆம் தேதி காலை 10:30 மணிக்கு நாட்டின் மிகப்பெரிய உலகளாவிய ஜவுளி நிகழ்வுகளில் ஒன்றான பாரத் டெக்ஸ் 2024 ஐ பிரதமர் திரு நரேந்திர மோடி தொடங்கி வைக்கிறார்.