குஜராத் மாநிலம் அம்ரேலியில் அடிக்கல் நாட்டி வளர்ச்சிப் பணிகளைத் தொடங்கி வைத்து பிரதமர் ஆற்றிய உரை

October 28th, 04:00 pm

குஜராத் ஆளுநர் ஆச்சார்ய தேவ்ரத் அவர்களே, குஜராத் முதலமைச்சர் பூபேந்திரபாய் படேல் அவர்களே, மத்திய அரசில் எனது சகாவான சி.ஆர். பாட்டீல் அவர்களே, குஜராத்தின் எனது சகோதர சகோதரிகளே, குறிப்பாக அம்ரேலியின் எனது சகோதர சகோதரிகளே,

குஜராத் மாநிலம் அம்ரேலியில் ரூ.4,900 கோடி மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்

October 28th, 03:30 pm

குஜராத் மாநிலம் அம்ரேலியில் ரூ.4,900 கோடி மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று அடிக்கல் நாட்டி பல்வேறு வளர்ச்சித் திட்டங்களையும் தொடங்கி வைத்தார். இன்றைய வளர்ச்சித் திட்டங்கள் ரயில், சாலை, நீர் மேம்பாடு மற்றும் சுற்றுலாத் துறைகளை உள்ளடக்கியதாகும். இவை அம்ரேலி, ஜாம்நகர், மோர்பி, துவாரகா, ஜூனாகத், போர்பந்தர், கட்ச் மற்றும் போடாட் மாவட்டங்களின் மக்களுக்கு பயனளிக்கும்.

பிரதமர், அக்டோபர் 28 அன்று குஜராத் பயணம் மேற்கொள்கிறார்

October 26th, 03:28 pm

பிரதமர் திரு நரேந்திர மோடி அக்டோபர் 28 அன்று குஜராத் செல்கிறார். காலை 10 மணியளவில், ஸ்பெயின் பிரதமர் திரு பெட்ரோ சான்செஸுடன் இணைந்து டாடா அட்வான்ஸ்டு சிஸ்டம்ஸ் லிமிடெட் வளாகத்தில் சி-295 போர் விமானங்களை தயாரிப்பதற்கான டாடா விமான வளாகத்தை கூட்டாக பிரதமர் திறந்து வைப்பார். அதன்பிறகு காலை 11 மணியளவில் வதோதராவில் உள்ள லட்சுமி விலாஸ் அரண்மனைக்கு செல்கிறார். வதோதராவிலிருந்து அம்ரேலி செல்லும் பிரதமர், அங்கு பிற்பகல் 2.45 மணிக்கு அம்ரேலியில் உள்ள துதாலாவில் பாரத மாதா சரோவாரைத் தொடங்கி வைக்கிறார். பிற்பகல் 3 மணியளவில், அம்ரேலியில் உள்ள லாத்தியில் ரூ .4,800 கோடிக்கும் அதிக மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை அவர் தொடங்கி வைக்கிறார்.