ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் பிரதமர் வீட்டுவசதித் திட்ட பயனாளிகளுடன் பிரதமர் திரு நரேந்திர மோடி கலந்துரையாடினார்

September 17th, 04:02 pm

ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் பிரதமர் வீட்டுவசதித் திட்டத்தின் பயனாளிகளுடன் பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று கலந்துரையாடினார்.

நேபாள பிரதமராக நியமிக்கப்பட்டுள்ள திரு கே.பி.சர்மா ஒலிக்கு பிரதமர் திரு மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்

July 15th, 11:39 am

நேபாள பிரதமராக நியமிக்கப்பட்டுள்ள திரு. கே.பி. சர்மா ஒலிக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இந்தியாவுக்கும் நேபாளத்துக்கும் இடையிலான நட்புறவின் ஆழமான பிணைப்பை மேலும் வலுப்படுத்தவும், பரஸ்பர நன்மை பயக்கும் ஒத்துழைப்பை விரிவுபடுத்தவும் நெருக்கமாகப் பணியாற்ற ஆர்வமாக இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

பிரதமரின் சாலையோர வியாபாரிகளுக்கான நிதியுதவித் திட்டத்தின் பயனாளிகளுடன் பிரதமர் தில்லியில் மார்ச் 14 அன்று உரையாட உள்ளார்

March 13th, 07:10 pm

தில்லியில் உள்ள ஜவஹர்லால் நேரு மைதானத்தில் மார்ச் 14 அன்று மாலை 5 மணிக்கு பிரதமரின் சாலையோர வியாபாரிகளுக்கான நிதியுதவித் திட்டத்தின் பயனாளிகளிடையே பிரதமர் திரு நரேந்திர மோடி உரையாற்றுகிறார். இந்த நிகழ்ச்சியின் போது, தில்லியைச் சேர்ந்த 5,000 சாலையோர வியாபாரிகள் உட்பட 1 லட்சம் சாலையோர வியாபாரிகளுக்கு இந்தத் திட்டத்தின் கீழ் கடன்களை வழங்கவுள்ளார். இந்நிகழ்ச்சியின் போது தில்லி மெட்ரோவின் 4-ம் கட்டப் பணிகளில் கூடுதலாக இரண்டு வழித்தடங்களுக்கும் பிரதமர் அடிக்கல் நாட்டவுள்ளார்.

பிரதமரின் சூரஜ் இணைய தளத்தைத் தொடங்கி வைத்து பிரதமர் ஆற்றிய உரையின் தமிழாக்கம்

March 13th, 04:30 pm

சமூக நீதித் துறை அமைச்சர் திரு வீரேந்திர குமார் அவர்களே, நாட்டின் பல்வேறுப் பகுதிகளில் உள்ள இருக்கும் அரசுத் திட்டங்களின் பயனாளிகளே, நமது துப்புரவுப் பணியாளர் சகோதர சகோதரிகளே, இதர பிரமுகர்களே, தாய்மார்களே, பெரியோர்களே! நாட்டின் 470 மாவட்டங்களைச் சேர்ந்த சுமார் 3 லட்சம் பேர் இந்தத் திட்டத்தில் நேரடியாக ஈடுபட்டுள்ளனர். அனைவருக்கும் எனது வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

நலிவடைந்த பிரிவினருக்கு கடன் ஆதரவு அளிக்கும் நாடு தழுவிய நிகழ்ச்சியில் பிரதமர் உரையாற்றினார்

March 13th, 04:00 pm

நாடு முழுவதும் நலிவடைந்த பிரிவினருக்கு கடன் ஆதரவு அளிக்கும் வகையில் காணொலிக் காட்சி மூலம் நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரதமர் திரு நரேந்திர மோடி உரையாற்றினார். பிரதமரின் சமாஜிக் உத்தன் ஏவம் ரோஜ்கர் ஆதாரித் ஜன்கல்யாண் என்ற பிஎம்-சுராஜ் (PM-SURAJ - பிரதமரின் சமூக மேம்பாடு மற்றும் வேலைவாய்ப்பு அடிப்படையிலான மக்கள் நலன்) தேசிய தளத்தை அவர் தொடங்கி வைத்தார். நாட்டில் பின்தங்கிய பிரிவுகளைச் சேர்ந்த ஒரு லட்சம் தொழில்முனைவோருக்கு கடன் உதவியையும் அவர் வழங்கினார். பட்டியல் சமூகத்தினர், பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் மற்றும் தூய்மைப் பணியாளர்கள் உள்ளிட்ட பின்தங்கிய பிரிவுகளைச் சேர்ந்த, பல்வேறு அரசுத் திட்டங்களின் பயனாளிகளுடனும் அவர் கலந்துரையாடினார்.

மார்ச் 13 அன்று, நலிவடைந்த பிரிவினருக்கு கடன் ஆதரவு அளிப்பதற்காக நாடு தழுவிய அளவில் மக்களைச் சென்றடையும் நிகழ்ச்சியில் பிரதமர் பங்கேற்கிறார்

March 12th, 06:43 pm

பிரதமர் திரு நரேந்திர மோடி 2024 மார்ச் 13 அன்று மாலை 4 மணிக்கு காணொலி காட்சி மூலம் சமூகத்தின் பின்தங்கிய பிரிவினருக்கு கடன் வழங்கும் நிகழ்ச்சியில் பங்கேற்கிறார். பிரதமரின் சமூக மேம்பாடு மற்றும் வேலைவாய்ப்பு அடிப்படையிலான மக்கள் நலன் (சூராஜ்) தேசிய இணைய தளத்தை பிரதமர் தொடங்கி வைக்கவுள்ளார். நாட்டில் பின்தங்கிய பிரிவுகளைச் சேர்ந்த ஒரு லட்சம் தொழில் முனைவோருக்கு கடன் உதவி வழங்குகிறார். மேலும், தாழ்த்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் மற்றும் துப்புரவுத் தொழிலாளர்கள் உள்ளிட்ட பின்தங்கிய குழுக்களைச் சேர்ந்த பல்வேறு அரசுத் திட்டங்களின் பயனாளிகளுடனும் பிரதமர் கலந்துரையாடுகிறார்.

வளர்ச்சியடைந்த பாரதம் லட்சியப் பயண பயனாளிகளுடன் ஜனவரி 18 அன்று பிரதமர் கலந்துரையாடுகிறார்

January 17th, 05:13 pm

பிரதமர் திரு. நரேந்திர மோடி, 2024, ஜனவரி 18 அன்று பிற்பகல் 12:30 மணிக்கு வளர்ச்சியடைந்த பாரதம் லட்சியப் பயண பயனாளிகளுடன் காணொலிக் காட்சி வாயிலாக கலந்துரையாடுகிறார்.

பிரதமர்-ஜன்மன் திட்டத்தின் கீழ் 1 லட்சம் பயனாளிகளுக்கு முதலாவது தொகுப்பை ஜனவரி 15 அன்று பிரதமர் ஒப்படைக்கிறார்

January 14th, 01:22 pm

பிரதமர்-ஜன்மன் திட்டத்தின் கீழ் பிரதமரின் கிராமப்புற வீட்டுவசதித் திட்டத்தின் முதலாவது தொகுப்பைப் பிரதமர் திரு. நரேந்திர மோடி 15 ஜனவரி 2024 அன்று நண்பகல் 12 மணிக்கு காணொலிக் காட்சி மூலம் ஒப்படைக்கிறார். இந்நிகழ்ச்சியில் பிரதமர்-ஜன்மனின் பயனாளிகளுடன் பிரதமர் கலந்துரையாடுவார்.

லட்சத்தீவில் மத்திய அரசின் பல்வேறு திட்டங்களின் பயனாளிகளுடன் பிரதமர் கலந்துரையாடினார்

January 03rd, 01:49 pm

லட்சத்தீவுகளில் மத்திய அரசின் பல்வேறு நலத் திட்டங்களின் பயனாளிகளுடன் பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று (03.01.2024) கலந்துரையாடினார்.