இஸ்ரேலை ஒரு முக்கிய மேம்பாடு கூட்டாளியாக நாங்கள் கருதுகிறோம்: பிரதமர் மோடி

July 04th, 07:26 pm

பிரதமர் மோடி, டெல் அவிவ் விமான நிலையத்தில் பேசும் போது, அன்பான வரவேற்பு அளித்ததற்கு, பிரதமர் நெடான்யாஹுவுக்கு நன்றி தெரிவித்தார். இந்த சிறப்பான பயணம் மேற்கொண்ட முதல் இந்திய பிரதமராக இருப்பதில் நான் பெருமை கொள்கிறேன். “இந்தியா ஒரு பண்டைய நாகரித்தை பின்பற்றும் நாடு, ஆனால் இளமையான நாடு. எங்களிடம் திறமையுள்ள இளம் வயதினர் இருக்கின்றனர். அவர்கள் தான் எங்களின் இயக்கும் சக்தி. இஸ்ரேல் ஒரு முக்கிய மேம்பாடு கூட்டாளி.”

நீங்கள் ஒரு பெரிய உலக தலைவர்: பிரதமர் மோடியிடம், பிரதமர் நெடான்யாஹு

July 04th, 07:17 pm

இஸ்ரேலுக்கு பிரதமர் மோடியை வரவேற்ற பிரதமர் நெடான்யாஹு, “இஸ்ரேலுக்கு உங்களை இனிதே வரவேற்கிறோம்……ஆப்கா ஸ்வாகத் ஹே மேரே தோஸ்த். நீண்ட நாட்களாக, நாங்கள் உங்களுக்காக காத்திருக்கிறோம். நாங்கள் இந்தியாவை நேசிக்கிறோம்.” “ஐக்கிய நாடுகள் சபையில், நீங்கள் என்னிடம் முதன் முதலாக என்ன சொன்னீர்கள் என்பதை நினைவில் கொண்டுள்ளேன் – இந்தியா, இஸ்ரேல் உறவுகள் என்று வரும்போது, வானமே எல்லை. ஆனால், இப்போது, பிரதமர், நாங்கள் விண்வெளியிலும் ஒத்துழைப்புடன் செயல்படுகிறோம்.”

வரலாற்று சிறப்புமிக்க வருகைக்கு வரலாற்று சிறப்புமிக்க வரவேற்பு

July 04th, 06:45 pm

பிரதமர் நரேந்திர மோடி ஒரு நிறைவான வரவேற்புடன் டெல் அவிவ், இஸ்ரேல், சென்றடைந்தார். இது ஒரு இந்திய பிரதமரின் வரலாற்று சிறப்புமிக்க பயணத்தின் தொடக்கம் ஆகும்.