ஜப்பான்-இந்தியா வர்த்தக ஒத்துழைப்புக் குழு பிரதிநிதிகள் பிரதமர் திரு. மோடியைச் சந்தித்தனர்
March 05th, 07:52 pm
புதுதில்லியில் இன்று (2025 மார்ச் 6) நடைபெறவுள்ள ஜப்பான் – இந்தியா வர்த்தக ஒத்துழைப்புக் குழுவுடன் இந்திய வர்த்தக ஒத்துழைப்புக் குழுவின் 48-வது கூட்டுக் கூட்டம் குறித்து திரு. யசுனாகா பிரதமரிடம் விளக்கினார். இந்தியாவில் குறைந்த செலவில் உயர்தரமான பொருட்களை உற்பத்தி செய்தல், ஆப்பிரிக்கா மீது சிறப்பு கவனம் செலுத்தும் வகையில் உலக சந்தைகளுக்கான உற்பத்தியை விரிவுபடுத்துதல், மனிதவள மேம்பாடு மற்றும் பரிமாற்றங்களை மேம்படுத்துதல் உள்ளிட்ட முக்கிய துறைகள் குறித்து இந்த விவாதங்கள் நடைபெற்றன.ஈடி நவ் உலகளாவிய வணிக உச்சிமாநாட்டில் பிரதமர் நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்
February 15th, 08:30 pm
கடந்த முறை ஈடி நவ் உச்சிமாநாட்டில் நான் பங்கேற்ற போது, தேர்தல் நடைபெற்றுக் கொண்டிருந்தது. அந்த சமயத்தில், எங்களின் மூன்றாவது பதவிக்காலத்தில் புதிய வேகத்துடன் பாரதம் செயலாற்றும் என்று நான் பணிவுடன் குறிப்பிட்டிருந்தேன். அந்த வேகம் தற்போது, நடைமுறையாகியிருப்பதில் நான் திருப்தியடைந்துள்ளேன். நாடும் அதற்கு ஆதரவாக இருக்கிறது. புதிய அரசு அமைந்தபின், நாடு முழுவதும் உள்ள பல்வேறு மாநில மக்களின் வாழ்த்துகளை பிஜேபி- என்டிஏ தொடர்ந்து பெற்று வருகிறது. ஜூன் மாதத்தில் வளர்ச்சியடைந்த இந்தியா லட்சியத்தை ஒடிசா மக்கள் வேகப்படுத்தினர். பின்னர், ஹரியானா மக்கள் தங்களின் ஆதரவை அளித்தனர். தற்போது, தில்லி மக்கள் அமோக ஆதரவை அளித்துள்ளனர். வளர்ச்சியடைந்த இந்தியா என்ற இலக்கை அடைவதற்கு நாட்டுமக்கள் எவ்வாறு தோளோடு தோள் சேர்ந்து நிற்கிறார்கள் என்பதற்கு இவை அங்கீகாரமாகும்.எகனாமிக் டைம்ஸ் நவ் உலக வர்த்தக உச்சி மாநாடு 2025-ல் பிரதமர் திரு நரேந்திர மோடி உரையாற்றினார்
February 15th, 08:00 pm
புதுதில்லியில் நடைபெற்ற எக்கனாமிக் டைம்ஸ் நவ் உலகளாவிய வர்த்தக உச்சி மாநாடு 2025-ல் உரையாற்றிய பிரதமர் திரு நரேந்திர மோடி, கடந்த எக்னாமிக் டைம்ஸ் நவ் உச்சிமாநாட்டின் போது, இந்தியா புதிய வேகத்தில் பணியாற்றி வருவதாக தெரிவித்ததை நினைவு கூர்ந்தார். இந்த வேகம் இப்போது தெளிவாகத் தெரிவது குறித்தும், மக்களிடம் இருந்து ஆதரவு கிடைத்திருப்பது குறித்தும் அவர் திருப்தி தெரிவித்தார். வளர்ச்சி அடைந்த பாரதம் என்ற உறுதிப்பாட்டிற்கு மகத்தான ஆதரவை அளித்த ஒடிசா, மகாராஷ்டிரா, ஹரியானா, புதுதில்லி மக்களுக்கு அவர் நன்றி தெரிவித்தார். வளர்ந்த இந்தியா என்ற இலக்கை அடைவதில் மக்கள் எவ்வாறு தோளோடு தோள் நின்று செயல்படுகிறார்கள் என்பதற்கு இது ஒரு சான்று என்று அவர் கூறினார்.புதுதில்லி பாரத் மண்டபத்தில் நடைபெற்ற வளர்ச்சியடைந்த இந்தியா இளம் தலைவர்கள் கலந்துரையாடல் 2025-ல் பிரதமர் நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்
January 12th, 02:15 pm
மத்திய அமைச்சரவையில் உள்ள எனது சகாக்களான திருவாளர்கள் மன்சுக் மாண்டவியா அவர்களே, தர்மேந்திர பிரதான் அவர்களே, ஜெயந்த் சவுத்ரி அவர்களே, ரக்ஷா காட்ஸே அவர்களே, நாடாளுமன்ற உறுப்பினர்களே, இதர பிரமுகர்களே, நாட்டின் அனைத்துப் பகுதியிலிருந்தும் வந்துள்ள எனது இளம் நண்பர்களே! இந்த பாரத் மண்டபம் இந்திய இளைஞர்களின் ஆற்றலாலும், சக்தியாலும் நிரம்பியுள்ளது. இன்று நாடு முழுவதும் சுவாமி விவேகானந்தரை நினைவுகூர்கிறது. அவருக்கு மரியாதை செலுத்தி வருகிறது. சுவாமி விவேகானந்தர் நாட்டின் இளைஞர்கள் மீது மிகுந்த நம்பிக்கை வைத்திருந்தார். இளைய தலைமுறையினர் மீது, புதிய தலைமுறையினர் மீது எனக்கு நம்பிக்கை உள்ளது என்று சுவாமி விவேகானந்தர் அடிக்கடி கூறுவார். எனது தொண்டர்கள் சிங்கங்களைப் போல், இளம் தலைமுறையிலிருந்து வருவார்கள். அவர்கள் ஒவ்வொரு பிரச்சனைக்கும் தீர்வு காண்பார்கள் என்று அவர் கூறுவார். விவேகானந்தர் உங்கள் மீது நம்பிக்கை வைத்திருந்தது போலவே, விவேகானந்தர் மீதும் எனக்கு நம்பிக்கை உள்ளது. அவர் சொன்ன எல்லாவற்றிலும் எனக்கு நம்பிக்கை உள்ளது. இந்திய இளைஞர்களுக்காக அவர் என்ன நினைத்தாரோ, என்ன சொன்னாரோ அதில் எனக்கு முழுமையான நம்பிக்கை உண்டு. உண்மையில், சுவாமி விவேகானந்தர் இன்று நம்மிடையே இருந்திருந்தால், 21-ம் நூற்றாண்டு இளைஞர்களின் விழிப்புணர்வு பெற்ற சக்தியைக் கண்டு, உங்களின் தீவிர முயற்சிகளைப் பார்த்து, பாரதத்தின் புதிய நம்பிக்கை, புதிய சக்தி ஆகியவற்றால் அவர் பூரிப்படைந்திருப்பார். புதிய கனவுகளுக்கான விதைகளை விதைத்திருப்பார்.வளர்ச்சி அடைந்த பாரதம் இளம் தலைவர்கள் உரையாடல் 2025-ல் பிரதமர் திரு நரேந்திர மோடி பங்கேற்றார்
January 12th, 02:00 pm
சுவாமி விவேகானந்தரின் பிறந்த நாளை நினைவுகூரும் வகையில், தேசிய இளைஞர் தினத்தை முன்னிட்டு, புதுதில்லியில் உள்ள பாரத மண்டபத்தில் நடைபெற்ற விக்சித் பாரத் இளம் தலைவர்கள் உரையாடல் 2025-ல் பிரதமர் திரு நரேந்திர மோடி பங்கேற்றார். இந்தியா முழுவதிலும் இருந்து 3,000 துடிப்பான இளம் தலைவர்களுடன் அவர் உரையாடலில் ஈடுபட்டார். நிகழ்ச்சியில் கூடியிருந்தவர்களிடையே உரையாற்றிய அவர், இந்திய இளைஞர்களின் துடிப்பான சக்தி, பாரத் மண்டபத்திற்கு உயிர்ப்பையும் சக்தியையும் கொண்டு வந்திருப்பதை எடுத்துரைத்தார். நாட்டின் இளைஞர்கள் மீது அளப்பரிய நம்பிக்கை வைத்திருந்த சுவாமி விவேகானந்தரை ஒட்டுமொத்த தேசமும் நினைவுகூர்ந்து அஞ்சலி செலுத்தி வருவதாக அவர் குறிப்பிட்டார். தமது சீடர்கள் இளைய தலைமுறையிலிருந்து வருவார்கள் என்றும், அவர்கள் சிங்கங்களைப் போல ஒவ்வொரு பிரச்சினையையும் தீர்ப்பார்கள் என்றும் சுவாமி விவேகானந்தர் நம்பினார் என்றும் அவர் கூறினார். சுவாமிஜி இளைஞர்கள் மீது நம்பிக்கை வைத்ததைப் போல, சுவாமிஜி மீதும், அவரது நம்பிக்கைகள் மீதும் தமக்கு முழு நம்பிக்கை இருப்பதாக அவர் மேலும் கூறினார். குறிப்பாக இளமை குறித்த அவரது பார்வை குறித்து அவரை முழுமையாக நம்புவதாகவும் அவர் மேலும் கூறினார். சுவாமி விவேகானந்தர் இன்று நம்மிடையே இருந்தால், 21-ம் நூற்றாண்டின் இளைஞர்களின் விழிப்புற்ற சக்தியையும் துடிப்பான முயற்சிகளையும் காணும் போது அவர் புதிய நம்பிக்கையால் மகிழ்வார் என்று பிரதமர் கூறினார்.Our government's intentions, policies and decisions are empowering rural India with new energy: PM
January 04th, 11:15 am
PM Modi inaugurated Grameen Bharat Mahotsav in Delhi. He highlighted the launch of campaigns like the Swamitva Yojana, through which people in villages are receiving property papers. He remarked that over the past 10 years, several policies have been implemented to promote MSMEs and also mentioned the significant contribution of cooperatives in transforming the rural landscape.பிரதமர் திரு நரேந்திர மோடி கிராமப்புற பாரதப் பெருவிழா 2025- ஐ தொடங்கி வைத்தார்
January 04th, 10:59 am
புதுதில்லி பாரத மண்டபத்தில் பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று கிராமப்புற பாரத மஹோத்சவ் 2025 என்னும் பெருவிழாவைத் தொடங்கி வைத்தார். வளர்ச்சியடைந்த பாரதம் 2047- க்கு ஒரு நெகிழ்திறன் கொண்ட கிராமப்புற இந்தியாவை உருவாக்குவது இந்தப் பெருவிழாவின் கருப்பொருளாகும். நிகழ்ச்சியில் கூடியிருந்தவர்களிடையே உரையாற்றிய பிரதமர், கலந்துகொண்டுள்ள அனைவருக்கும் 2025 புத்தாண்டு வாழ்த்துகளைத் தெரிவித்தார். இந்த ஆண்டின் தொடக்கத்தில் கிராமப்புற பாரதப் பெருவிழா என்ற பிரம்மாண்டமான அமைப்பு, இந்தியாவின் வளர்ச்சிப் பயணத்தின் ஒரு பார்வையை அளித்து, அதற்கான அடையாளத்தை உருவாக்குகிறது என்று அவர் கூறினார். இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த நபார்டு மற்றும் அதன் கூட்டுறவு அமைப்புகளுக்கு அவர் பாராட்டு தெரிவித்தார்.இந்தியாவின் பொதுத்துறை வங்கிகள் ஏன் முன் எப்போதும் இல்லாத வகையில் செழித்து வருகின்றன - மோடி சகாப்தத்தின் வங்கி வெற்றிக் கதையின் உள்ளே
December 18th, 07:36 pm
மோடி சகாப்தத்தை அதன் முன்னோடிகளிலிருந்து வேறுபடுத்தும் ஒரு போட்டி நன்மை வெற்றிகரமான கொள்கைகளை நிலைநிறுத்துவது மட்டுமல்லாமல், சரியான நேரத்தில் தேசிய நலனுக்காக அவற்றைப் பெருக்கி விரிவுபடுத்துகிறது.ஹரியானா மாநிலம் பானிபட்டில் வளர்ச்சித் திட்டப் பணிகளைத் தொடங்கி வைத்து பிரதமர் ஆற்றிய உரை
December 09th, 05:54 pm
ஹரியின் இருப்பிடம் ஹரியானா, இங்கே, உள்ள அனைவரும் 'ராம் ராம்' என ஒருவருக்கொருவர் மனமார வாழ்த்திக் கொள்கின்றனர்.எல்.ஐ.சியின் பீமா சகி திட்டத்தை பிரதமர் திரு நரேந்திர மோடி தொடங்கி வைத்தார்
December 09th, 04:30 pm
மகளிருக்கு அதிகாரமளித்தல் மற்றும் நிதி உள்ளடக்கம் குறித்த உறுதிப்பாட்டின் அடிப்படையில், ஆயுள் காப்பீட்டுக் கழகத்தின் பீமா சகி திட்டத்தை பிரதமர் திரு. நரேந்திர மோடி ஹரியானா மாநிலம் பானிபட்டில் இன்று தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியின் போது, கர்னாலில் உள்ள மஹாராணா பிரதாப் தோட்டக்கலை பல்கலைக்கழகத்தின் பிரதான வளாகத்திற்கும் அவர் அடிக்கல் நாட்டினார். அப்போது உரையாற்றிய திரு மோடி, மகளிருக்கு அதிகாரம் அளிப்பதை நோக்கி இந்தியா மற்றொரு வலுவான அடியை எடுத்து வைக்கிறது என்று கூறினார். இன்று மாதத்தின் 9 வது நாளாக இருப்பது சிறப்பு வாய்ந்தது, ஏனெனில் எண் 9 நமது புனிதங்களில் மங்களகரமானதாகக் கருதப்படுகிறது மற்றும் நவராத்திரியின் போது வணங்கப்படும் நவ துர்க்கையின் ஒன்பது வடிவங்களுடன் தொடர்புடையது என்று அவர் கூறினார். இன்றைய தினம் பெண் சக்தியை வழிபடும் நாளாகவும் உள்ளது என்று அவர் குறிப்பிட்டார்.உச்சநீதிமன்றத்தில் நடைபெற்ற அரசியலமைப்பு தின விழாவில் பிரதமர் ஆற்றிய உரையின் தமிழாக்கம்
November 26th, 08:15 pm
தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா அவர்களே, நீதிபதி பி.ஆர்.கவாய் அவர்களே, நீதிபதி சூர்ய காந்த் அவர்களே, மத்திய அமைச்சரவையில் உள்ள எனது நண்பர் திரு. அர்ஜுன் ராம் மேக்வால் அவர்களே, அட்டர்னி ஜெனரல் திரு. வெங்கடரமணி அவர்களே, பார் கவுன்சில் தலைவர் மனன் குமார் மிஸ்ரா அவர்களே, உச்சநீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கத் தலைவர் திரு. கபில் சிபல் அவர்களே, உச்சநீதிமன்ற நீதிபதிகளே, முன்னாள் தலைமை நீதிபதிகளே, இதர சிறப்பு விருந்தினர்களே, தாய்மார்களே, அன்பர்களே!உச்சநீதிமன்றத்தில் நடைபெற்ற அரசியல் சாசன தின நிகழ்ச்சியில் பிரதமர் திரு. நரேந்திர மோடி பங்கேற்பு
November 26th, 08:10 pm
கூட்டத்தினரிடையே உரையாற்றிய பிரதமர் திரு. மோடி, அரசியலமைப்புச் சட்ட தினத்தை முன்னிட்டு அனைத்து பிரமுகர்கள், பிரதிநிதிகள் மற்றும் குடிமக்களுக்கு வாழ்த்து தெரிவித்தார். இந்திய அரசியலமைப்பின் 75-வது ஆண்டு நிறைவு என்பது பெருமைக்குரிய விஷயம் என்று அவர் குறிப்பிட்டார். இந்த நிகழ்ச்சியில் அரசியல் நிர்ணய சபை உறுப்பினர்கள் மற்றும் அரசியலமைப்பு உறுப்பினர்களுக்கு அவர் மரியாதை செலுத்தினார்.சர்வதேச கூட்டுறவு மாநாட்டைத் தொடங்கி வைத்து பிரதமர் ஆற்றிய உரை
November 25th, 03:30 pm
எனது இளம் சகோதரர் போன்ற பூடான் பிரதமர் , ஃபிஜியின் துணைப் பிரதமர், பாரதத்தின் மத்திய கூட்டுறவுத் துறை அமைச்சர் அமித் ஷா, சர்வதேச கூட்டுறவு நிறுவன கூட்டமைப்பின் தலைவர் அவர்களே, ஐக்கிய நாடுகள் சபையின் பிரதிநிதிகளே, கூட்டுறவு அமைப்புகளுடன் தொடர்புடைய பிரதிநிதிகளே, தாய்மார்களே,ஐசிஏ உலகளாவிய கூட்டுறவு மாநாடு 2024-ஐ பிரதமர் திரு நரேந்திர மோடி தொடங்கி வைத்தார்
November 25th, 03:00 pm
புதுதில்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் ஐசிஏ உலகளாவிய கூட்டுறவு மாநாடு 2024-ஐ பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் உரையாற்றிய திரு மோடி, பூடான் பிரதமர் திரு தாஷோ ஷெரிங் டோப்கே, ஃபிஜி துணைப் பிரதமர் திரு மனோவா காமிகாமிகா, மத்திய உள்துறை அமைச்சர் திரு அமித் ஷா, இந்தியாவுக்கான ஐ.நா.வின் உள்ளுறை ஒருங்கிணைப்பாளர் திரு ஷோம்பி ஷார்ப், சர்வதேச கூட்டுறவு கூட்டணியின் (ஐசிஏ) தலைவர் திரு ஏரியல் குவார்கோ பல்வேறு நாடுகளின் பிரமுகர்கள், ஐசிஏ உலகளாவிய கூட்டுறவு மாநாடு 2024- ல் கலந்து கொண்டவர்களை வரவேற்றார்.With the support BJP is receiving at booth level, the defeat of the corrupt JMM government is inevitable: PM Modi
November 11th, 01:00 pm
PM Modi interacted with BJP karyakartas from Jharkhand through the NaMo App, delivering an energizing call to action ahead of the upcoming state elections. Addressing a variety of key issues, PM Modi expressed his support for the grassroots workers while underscoring the BJP’s commitment to progress, inclusivity, and integrity.PM Modi Connects with BJP Karyakartas in Jharkhand via NaMo App
November 11th, 12:30 pm
PM Modi interacted with BJP karyakartas from Jharkhand through the NaMo App, delivering an energizing call to action ahead of the upcoming state elections. Addressing a variety of key issues, PM Modi expressed his support for the grassroots workers while underscoring the BJP’s commitment to progress, inclusivity, and integrity.3-வது கவுடில்யா பொருளாதார மாநாடு 2024-ல் பிரதமர் ஆற்றிய உரை
October 04th, 07:45 pm
நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்களே, பொருளாதார வளர்ச்சி நிறுவனத்தின் தலைவர் என்.கே.சிங் அவர்களே, இந்த மாநாட்டில் இந்தியா மற்றும் வெளிநாடுகளில் இருந்து வந்துள்ள இதர சிறப்பு விருந்தினர்களே, தாய்மார்களே! இது கௌடில்யர் மாநாட்டின் மூன்றாவது பதிப்பாகும். உங்கள் அனைவரையும் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன். அடுத்த மூன்று நாட்களில் பல்வேறு பொருளாதார பிரச்சினைகள் குறித்து விவாதிக்கும் பல அமர்வுகள் இங்கு நடைபெறும். இந்த விவாதங்கள் இந்தியாவின் வளர்ச்சியை துரிதப்படுத்த உதவும் என்று நான் நம்புகிறேன்.புதுதில்லியில் நடைபெற்ற மூன்றாவது கௌடில்யா பொருளாதார மாநாட்டில் பிரதமர் திரு நரேந்திர மோடி உரையாற்றினார்
October 04th, 07:44 pm
புதுதில்லியில் இன்று (04.10.2024) நடைபெற்ற கௌடில்யா பொருளாதார மாநாட்டில் பிரதமர் திரு நரேந்திர மோடி உரையாற்றினார். நிதி அமைச்சகத்துடன் இணைந்து பொருளாதார வளர்ச்சி நிறுவனத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட கௌடில்யா பொருளாதார மாநாடு, பசுமை மாற்றத்திற்கு நிதியளித்தல், புவி-பொருளாதார பாதிப்பு, வளர்ச்சிக்கான தாக்கங்கள், பின்னடைவைத் தவிர்ப்பதற்கான கொள்கைகள் போன்ற கருப்பொருள்களில் கவனம் செலுத்தியது.அமெரிக்காவின் நியூயார்க்கில் இந்திய வம்சாவளியினர் மத்தியில் பிரதமர் ஆற்றிய உரை
September 22nd, 10:00 pm
அமெரிக்காவுக்கு வணக்கம் நமது நமஸ்தே உலகளாவிய வகையில் பரவியுள்ளது. இது உங்களால்தான் நடந்துள்ளது. உங்கள் பங்களிப்புகளுக்கு நன்றி. பாரதத்தை உயர்வாக மதிக்கும் ஒவ்வொரு இந்தியனின் வலுவான பாசத்தால் இது சாத்தியமாகியுள்ளது.நியூயார்க்கில் இந்திய சமூகத்தினர் இடையே பிரதமர் உரையாற்றினார்
September 22nd, 09:30 pm
நியூயார்க் லாங் தீவில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரதமர் திரு. நரேந்திர மோடி ஏராளமான இந்திய சமூகத்தினரிடையே உரையாற்றினார். இந்த நிகழ்ச்சியில் 15,000 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.