பஞ்சாரா கலாச்சாரம் மற்றும் அதன் மக்கள் குறித்த தமது மறக்கமுடியாத அனுபவங்களை பிரதமர் பகிர்ந்து கொள்கிறார்
October 05th, 06:20 pm
பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று மகாராஷ்டிராவில் உள்ள வாஷிம் நகருக்கு பயணம் மேற்கொண்டபோது, பஞ்சாரா கலாச்சாரம் மற்றும் அதன் மக்கள் குறித்த தமது மறக்கமுடியாத அனுபவங்களை பகிர்ந்து கொண்டுள்ளார்.வாஷிமில் உள்ள பஞ்சாரா சமூகத்தைச் சேர்ந்த துறவிகளைப் பிரதமர் சந்தித்தார்
October 05th, 05:47 pm
வாஷிமில் உள்ள பஞ்சாரா சமூகத்தைச் சேர்ந்த மதிப்புக்குரிய துறவிகளைப் பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று சந்தித்தார். சமூகத்திற்கு சேவை செய்யும் அவர்களின் முயற்சிகளை அவர் பாராட்டினார்.பொஹராதேவியில் உள்ள பஞ்சாரா பாரம்பரிய அருங்காட்சியகம் பஞ்சாரா கலாச்சாரத்தை கொண்டாடும் பாராட்டத்தக்க முயற்சியாகும்: பிரதமர்
October 05th, 04:39 pm
பொஹராதேவியில் பஞ்சாரா பாரம்பரிய அருங்காட்சியகத்தை பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று திறந்து வைத்தார். வரலாறு மற்றும் கலாச்சாரத்தில் ஆர்வம் கொண்ட அனைவரும் இந்த அருங்காட்சியகத்தைப் பார்வையிட வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.பஞ்சாரா கலாச்சாரத்தின் முக்கிய இசைக்கருவியான நங்கராவை பிரதமர் இசைத்தார்
October 05th, 02:31 pm
பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று வாஷிமில் உள்ள நங்கரா இசைக்கருவியை வாசிக்கும் முயற்சியை மேற்கொண்டார். சிறந்த பஞ்சாரா கலாச்சாரத்தில் நங்கரா மிகவும் சிறப்பு வாய்ந்த இடத்தைப் பிடித்துள்ளது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.மகாராஷ்டிர மாநிலம் வாஷிமில் வேளாண் மற்றும் கால்நடை பராமரிப்புத் துறை முன்முயற்சிகளைத் தொடங்கி வைத்து பிரதமர் ஆற்றிய உரையின் தமிழாக்கம்
October 05th, 12:05 pm
மகாராஷ்டிர ஆளுநர் திரு சி.பி.ராதாகிருஷ்ணன் அவர்களே, மாநில முதலமைச்சர் திரு ஏக்நாத் ஷிண்டே அவர்களே, மத்திய அமைச்சரவையில் உள்ள எனது சக உறுப்பினர்களான திரு சிவராஜ் சிங் சவுகான், திரு ராஜீவ் ரஞ்சன் சிங் அவர்களே, மகாராஷ்டிர துணை முதலமைச்சர்கள் திரு தேவேந்திர ஃபட்னாவிஸ், திரு அஜித் பவார் அவர்களே, மத்திய, மாநில அரசுகளின் இதர அமைச்சர்களே, நாடாளுமன்ற உறுப்பினர்களே, சட்டமன்ற உறுப்பினர்களே, தொலைதூரத்திலிருந்து வந்துள்ள பஞ்சாரா சமூகத்தைச் சேர்ந்த எனது சகோதர, சகோதரிகளே, நாடு முழுவதிலும் இருந்து வந்துள்ள விவசாய சகோதர சகோதரிகளே!மகாராஷ்டிர மாநிலம் வாஷிமில் ரூ.23,300 கோடி மதிப்பிலான வேளாண் மற்றும் கால்நடை பராமரிப்புத் துறை தொடர்பான பல்வேறு திட்டங்களை பிரதமர் திரு. நரேந்திர மோடி தொடங்கி வைத்தார்
October 05th, 12:01 pm
பிரதமர் திரு. நரேந்திர மோடி மகாராஷ்டிரா மாநிலம் வாஷிமில் ரூ.23,300 கோடி மதிப்பிலான வேளாண் மற்றும் கால்நடை பராமரிப்புத் துறை தொடர்பான பல்வேறு முன்முயற்சிகளை இன்று தொடங்கி வைத்தார். பிரதமரின் உழவர் நல நிதியின் 18 வது தவணையை வழங்குதல், நமோ விவசாயிகள் பெருங்கவுரவ நிதி திட்டத்தின் 5- வது தவணையைத் தொடங்குதல், வேளாண் உள்கட்டமைப்பு நிதியத்தின் கீழ் 7,500 க்கும் மேற்பட்ட திட்டங்களை அர்ப்பணித்தல், 9,200 உழவர் உற்பத்தியாளர் அமைப்புகள், மகாராஷ்டிரா முழுவதும் மொத்தம் 19 மெகாவாட் திறன் கொண்ட ஐந்து சூரிய பூங்காக்கள் மற்றும் கால்நடைகளுக்கான ஒருங்கிணைந்த மரபணு சிப் மற்றும் உள்நாட்டு பாலின வகைப்படுத்தப்பட்ட விந்து தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்துதல் ஆகியவை இந்த முன்முயற்சிகளில் அடங்கும்.அக்டோபர் 5 அன்று பிரதமர் மகாராஷ்டிரா பயணம்
October 04th, 05:39 am
பிரதமர் திரு. நரேந்திர மோடி அக்டோபர் 5 அன்று மகாராஷ்டிர மாநிலத்திற்கு பயணம் மேற்கொள்கிறார். காலை 11:15 மணியளவில் போஹாராதேவியில் உள்ள ஜகதாம்பா மாதா கோவிலில் தரிசனம் செய்கிறார். வாஷிமில் உள்ள துறவி சேவாலால் மகாராஜ் மற்றும் துறவி ராம்ராவ் மகாராஜ் ஆகியோரின் நினைவிடங்களிலும் அவர் அஞ்சலி செலுத்துகிறார். அதன்பிறகு, காலை 11.30 மணியளவில், பஞ்சாரா சமூகத்தின் வளமான பாரம்பரியத்தை போற்றும் பஞ்சாரா விராசத் அருங்காட்சியகத்தை பிரதமர் திறந்து வைக்கிறார். நண்பகல் 12 மணியளவில், சுமார் ரூ .23,300 கோடி மதிப்புள்ள விவசாயம் மற்றும் கால்நடை வளர்ப்புத் துறை சார்ந்த பல முயற்சிகளை அவர் தொடங்கிவைக்கிறார். மாலை 4 மணியளவில், தானேவில் ரூ .32,800 கோடிக்கும் அதிகமான மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை பிரதமர் தொடங்கி வைக்கிறார். அதன்பிறகு, மாலை 6 மணியளவில், பி.கே.சி மெட்ரோ நிலையத்திலிருந்து, மும்பையின் ஆரே ஜே.வி.எல்.ஆர் வரை இயக்க திட்டமிடப்பட்டுள்ள மெட்ரோ ரயிலை அவர் கொடியசைத்து தொடங்கி வைப்பார். பி.கே.சி மற்றும் சாண்டாக்ரூஸ் நிலையங்களுக்கு இடையிலான மெட்ரோவில் அவர் பயணம் செய்கிறார்.