இந்தியா-வங்கதேசம் நட்புறவு குழாய்ப்பாதை கூட்டு மெய்நிகர் தொடக்க விழாவில் பிரதமர் திரு நரேந்திர மோடியின் கருத்துகளின் முக்கிய அம்சங்கள்
March 18th, 05:10 pm
மாண்புமிகு பிரதமர் ஷேக் ஹசீனா அவர்களே, அசாம் முதலமைச்சர் ஹிமந்த பிஸ்வா சர்மா அவர்களே, எனது அமைச்சரவை தோழர்கள் திரு ஹர்தீப் பூரி, திரு ராமேஸ்வர் டெலி, வங்கதேச அரசின் அமைச்சர்களே, அனைவருக்கும் வணக்கம்!பிரதமர் நரேந்திர மோடி மற்றும் வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா இணைந்து இந்தியா-வங்கதேசம் நட்புறவு குழாய்த்திட்டத்தை கூட்டாகத் தொடங்கி வைத்தனர்
March 18th, 05:05 pm
பிரதமர் திரு நரேந்திர மோடி மற்றும் வங்கதேச பிரதமர் திருமதி ஷேக் ஹசீனா ஆகியோர் இணைந்து இன்று இந்தியா- பங்களாதேஷ் நட்புறவு குழாய்த்த்திட்டத்தை (IBFP) மெய்நிகர் முறையில் திறந்து வைத்தனர். இந்தக்குழாய் அமைப்பதற்கான அடிக்கல் 2018 செப்டம்பரில் இரு பிரதமர்களாலும் நாட்டப்பட்டது. இது இந்தியாவிற்கும் அதன் அண்டை நாடுகளுக்கும் இடையிலான இரண்டாவது எல்லை தாண்டிய எரிசக்தி குழாய்த்திட்டம் ஆகும்.பங்கபந்து ஷேக் முஜிபூர் ரஹ்மானின் நினைவிடத்தில் பிரதமர் மரியாதை
March 27th, 01:16 pm
இரண்டு நாள் சுற்றுப்பயணமாக வங்கதேசம் சென்றுள்ள பிரதமர் திரு நரேந்திர மோடி, இரண்டாவது நாளன்று துங்கிபாராவில் உள்ள பங்கபந்து ஷேக் முஜிபூர் ரஹ்மானின் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார்.