பண்டிட் மதன் மோகன் மாளவியாவின் படைப்புகள் அடங்கிய தொகுப்பை டிசம்பர் 25-ம் தேதி பிரதமர் வெளியிடுகிறார்

December 24th, 07:47 pm

சுமார் 4,000 பக்கங்கள் கொண்ட 11 தொகுதிகளாக உள்ள இந்த இருமொழி (ஆங்கிலம் மற்றும் இந்தி) படைப்பு, நாட்டின் ஒவ்வொரு பகுதிகளிலிருந்தும் சேகரிக்கப்பட்ட பண்டிட் மதன் மோகன் மாளவியாவின் எழுத்துக்கள் மற்றும் உரைகளின் தொகுப்பாகும். இத்தொகுப்புகளில் அவரது கடிதங்கள், கட்டுரைகள், உரைகள், குறிப்புகள் உள்ளிட்டவை இடம்பெற்றுள்ளன. 1907 ஆம் ஆண்டில் இவரால் தொடங்கப்பட்ட 'அபயுதயா' என்ற இந்தி வார இதழின் தலையங்க உள்ளடக்கம், அவ்வப்போது அவர் எழுதிய கட்டுரைகள், துண்டுப் பிரசுரங்கள், கையேடுகள், 1903 மற்றும் 1910-ம் ஆண்டுக்கு இடையில் ஆக்ரா மற்றும் அவத் ஐக்கிய மாகாணங்களின் சட்ட மேலவையில் அவர் ஆற்றிய அனைத்து உரைகளும் இதில் இடம்பெற்றிருக்கும். ராயல் கமிஷனில் அளிக்கப்பட்ட வாக்குமூலங்கள், 1910 மற்றும் 1920 க்கு இடையில் பிரிட்டிஷ் மன்னராட்சி நாடாளுமன்றத்தில் மசோதாக்களை சமர்ப்பிக்கும் போது ஆற்றிய உரைகள், பனாரஸ் இந்து பல்கலைக்கழகம் நிறுவப்படுவதற்கு முன்னும் பின்னும் எழுதப்பட்ட கடிதங்கள், கட்டுரைகள் மற்றும் உரைகள், மற்றும் 1923 மற்றும் 1925 க்கு இடையில் அவர் எழுதிய குறிப்புகளும் இந்த தொகுப்பு நூலில் இடம்பெறும்.

வாரணாசியில் பல்வேறு திட்டங்களின் தொடக்க விழா நிகழ்ச்சியில் பிரதமர் ஆற்றிய உரையின் முக்கிய அம்சங்கள்

December 18th, 02:16 pm

உ.பி. முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், துணை முதலமைச்சர் ஸ்ரீ கேசவ் பிரசாத் மவுரியா, குஜராத் சட்டமன்ற சபாநாயகரும் பனாஸ் பால்பண்ணையின் தலைவருமான திரு சங்கர் பாய் சவுத்ரி. மாநில அமைச்சரவை உறுப்பினர்கள், எம்.எல்.ஏ.க்கள், பிற பிரமுகர்கள் மற்றும் வாரணாசியின் எனது குடும்ப உறுப்பினர்களே!

உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசியில் ரூ.19,150 கோடி மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கு பிரதமர் அடிக்கல் நாட்டி, நிறைவடைந்த திட்டங்களை நாட்டுக்கு அர்ப்பணித்தார்

December 18th, 02:15 pm

சுமார் ரூ.10,900 கோடி செலவில் கட்டப்பட்ட புதிய பண்டிட் தீனதயாள் உபாத்யாய் நகர்-நியூ பாவ்பூர் பிரத்யேக சரக்கு வழித்தடம் உள்ளிட்ட திட்டங்கள் இதில் அடங்கும். வாரணாசி-புது தில்லி வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில், தோஹ்ரிகாட்-மவு மெமு ரயில் மற்றும் புதிதாக திறக்கப்பட்ட பிரத்யேக சரக்கு வழித்தடத்தில் ஒரு ஜோடி நீண்ட தூர சரக்கு ரயில்களை அவர் கொடியசைத்துத் தொடங்கி வைத்தார். பனாரஸ் லோகோமோட்டிவ் ஒர்க்ஸ் தயாரித்த 10,000-வது என்ஜினையும் அவர் கொடியசைத்துத் தொடங்கி வைத்தார். ரூ. 370 கோடிக்கும் அதிகமான செலவில் இரண்டு ஆர்.ஓ.பி.க்களுடன் கூடிய பசுமை வயல் ஷிவ்பூர்-புல்வாரியா-லஹர்தாரா சாலையை அவர் திறந்து வைத்தார். 20 சாலைகளை வலுப்படுத்துதல் மற்றும் அகலப்படுத்துதல் உள்ளிட்ட முக்கிய திட்டங்களைப் பிரதமர் தொடங்கி வைத்தார். கைதி கிராமத்தில் சங்கம் படித்துறை சாலை மற்றும் பண்டிட் தீனதயாள் உபாத்யாய் மருத்துவமனையில் குடியிருப்பு கட்டிடங்கள் கட்டுதல், காவலர் குடியிருப்பு மற்றும் பிஏசி புல்லன்பூரில் 200 மற்றும் 150 படுக்கைகள் கொண்ட இரண்டு பல அடுக்குப் பாசறை கட்டிடங்கள், 9 இடங்களில் கட்டப்பட்ட ஸ்மார்ட் பேருந்து நிழற்குடைகள் மற்றும் அலைப்பூரில் 132 கிலோவாட் துணை மின் நிலையம் ஆகியவற்றையும் தொடங்கிவைத்த பிரதமர், ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ஒருங்கிணைந்த சுற்றுலா பாஸ் திட்டத்தையும் தொடங்கி வைத்தார்.

காசி தமிழ் சங்கமம் 2.0 தொடக்க விழாவில் பிரதமர் உரையின் தமிழாக்கம்

December 17th, 06:40 pm

மேடையில் உள்ள உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் அவர்களே, எனது அமைச்சரவை சகாக்கள், காசி மற்றும் தமிழ்நாட்டைச் சேர்ந்த அறிஞர்கள், தமிழ்நாட்டிலிருந்து காசிக்கு வந்துள்ள எனது சகோதர சகோதரிகள், மற்ற அனைத்து முக்கிய பிரமுகர்கள், பெண்கள் மற்றும் பெருமக்களே! நீங்கள் அனைவரும் நூற்றுக்கணக்கான கிலோமீட்டர் பயணித்து இவ்வளவு பெரிய எண்ணிக்கையில் காசிக்கு வந்திருக்கிறீர்கள். நீங்கள் அனைவரும் விருந்தினர்களாக இருப்பதை விட என் குடும்ப உறுப்பினர்களாக காசிக்கு வந்திருக்கிறீர்கள். காசி தமிழ் சங்கமத்திற்கு உங்கள் அனைவரையும் வரவேற்கிறேன்.

காசி தமிழ் சங்கமம் 2023-ஐப் பிரதமர் தொடங்கிவைத்தார்

December 17th, 06:30 pm

உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசியில் காசி தமிழ் சங்கமம் 2023 மாநாட்டைப் பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று தொடங்கி வைத்தார். கன்னியாகுமரி - வாரணாசி தமிழ் சங்கமம் ரயிலைக் கொடியசைத்து தொடங்கி வைத்த பிரதமர் மோடி, திருக்குறள், மணிமேகலை மற்றும் பிற உன்னதமான தமிழ் இலக்கியங்களின் பல மொழி மற்றும் பிரெய்லி மொழிபெயர்ப்புகளை வெளியிட்டார். கண்காட்சியைப் பார்வையிட்ட அவர், கலைநிகழ்ச்சிகளையும் பார்வையிட்டார். நாட்டின் மிக முக்கியமான மற்றும் தொன்மையான கல்வி நிலையங்களான தமிழ்நாட்டிற்கும் காசிக்கும் இடையிலான பழங்கால தொடர்புகளைக் கொண்டாடுவதையும், மீண்டும் உறுதிப்படுத்துவதையும், கண்டறிவதையும் காசி தமிழ் சங்கமம் நோக்கமாகக் கொண்டுள்ளது.

இந்திய கலாசாரத்தின் அதிர்வு உலகெங்கிலும் உள்ள மக்களை எப்போதும் ஈர்த்துள்ளது: ‘மன் கீ பாத்’தின் (மனதின் குரல்) போது பிரதமர் மோடி.

January 30th, 11:30 am

நண்பர்களே, சுதந்திரத்தின் அமிர்த மஹோத்சவத்தின் இந்த வேளையில் தேசம் இந்த முயற்சிகள் வாயிலாக தேசிய அடையாளங்களை மீண்டும் நிறுவிக் கொண்டிருக்கிறது. இண்டியா கேட்டிற்கு அருகே, அமர் ஜவான் ஜோதி, இதன் அருகிலேயே தேசிய போர் நினைவுச்சின்னத்தில் ஒளிவிடும் தீபங்கள் ஒருங்கிணைக்கப்பட்டன. இந்த உணர்ச்சிபூர்வமான சந்தர்ப்பத்தின் போது எத்தனையோ நாட்டுமக்கள் மற்றும் தியாகிகளின் குடும்பங்களின் கண்களில் கண்ணீர் நிரம்பியது. தேசிய போர் நினைவுச்சின்னத்தில், சுதந்திரத்திற்குப் பிறகு உயிர்த்தியாகம் செய்த, தேசத்தின் அனைத்துத் தியாகிகளின் பெயர்களும் பொறிக்கப்பட்டிருக்கின்றன. உயிர்த்தியாகிகளின் நினைவகத்தின் முன்னால் ஒளிவிடும் அமர் ஜவான் ஜோதி, தியாகிகளின் அமரத்துவத்தை எடுத்துக்காட்டுகிறது, என்று சில முன்னாள் இராணுவத்தினர் எனக்குக் கடிதம் வாயிலாகத் தெரிவித்திருந்தார்கள். உண்மையில், அமர் ஜவான் ஜோதியைப் போலவே நமது உயிர்த்தியாகிகள், அவர்கள் அளிக்கும் உத்வேகம்-பங்களிப்பு ஆகியவையும் அமரத்துவம் வாய்ந்தவை. எப்போது உங்களுக்கு வாய்ப்புக் கிடைக்கிறதோ, நீங்கள் கண்டிப்பாக தேசிய போர் நினைவுச்சின்னம் சென்று பாருங்கள் என்று உங்கள் அனைவரிடத்திலும் நான் வேண்டிக் கொள்கிறேன். உங்கள் குடும்பத்தார்-குழந்தைகளோடு சென்று காணுங்கள். ஒரு அலாதியான ஆற்றலையும் உத்வேகத்தையும் இங்கே உங்களால் அனுபவிக்க இயலும்.

தமிழ்நாட்டில் 11 புதிய மருத்துவக் கல்லூரிகள் மற்றும் செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் புதிய வளாக திறப்பு விழாவில் பிரதமர் ஆற்றிய உரையின் தமிழாக்கம்

January 12th, 03:37 pm

தமிழக ஆளுநர் திரு. ஆர். என். ரவி அவர்களே, தமிழக முதல்வர் திரு. மு. க. ஸ்டாலின் அவர்களே, மத்திய அமைச்சர் திரு. மன்சுக் மாண்டவியா அவர்களே, எனது சக அமைச்சர்கள் திரு எல். முருகன் அவர்களே, திருமதி. பாரதி பவார் அவர்களே, தமிழக அரசின் அமைச்சர்களே, நாடாளுமன்ற உறுப்பினர்களே, தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினர்களே,

தமிழ்நாட்டில் 11 புதிய மருத்துவக் கல்லூரிகள் மற்றும் செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் புதிய வளாகத்தை பிரதமர் தொடங்கி வைத்தார்

January 12th, 03:34 pm

தமிழ்நாட்டில் 11 புதிய மருத்துவக் கல்லூரிகள் மற்றும் செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் புதிய வளாகத்தை பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று (12 ஜனவரி 2022) காணொலி வாயிலாக தொடங்கி வைத்தார். மத்திய அமைச்சர்கள் டாக்டர் மன்சுக் மாண்டவியா, டாக்டர் எல் முருகன் மற்றும் டாக்டர் பாரதி பவார், தமிழக ஆளுநர் திரு. ஆர். என். ரவி, முதலமைச்சர் திரு மு க ஸ்டாலின் ஆகியோர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

Strengthening India's dairy sector is one of the top priorities of our government: PM Modi

December 23rd, 11:15 am

Prime Minister Narendra Modi laid the foundation stone of ‘Banas Dairy Sankul’ in Varanasi, Uttar Pradesh. In his speech, PM Modi called for adoption of natural methods of farming and said, “For the rejuvenation of mother earth, to protect our soil, to secure the future of the coming generations, we must once again turn to natural farming.

PM inaugurates and lays the foundation of multiple projects in Varanasi

December 23rd, 11:11 am

Prime Minister Narendra Modi laid the foundation stone of ‘Banas Dairy Sankul’ in Varanasi, Uttar Pradesh. In his speech, PM Modi called for adoption of natural methods of farming and said, “For the rejuvenation of mother earth, to protect our soil, to secure the future of the coming generations, we must once again turn to natural farming.

வாரணாசியில் டிசம்பர் 23 அன்று பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை பிரதமர் தொடங்கி வைக்கிறார்

December 21st, 07:41 pm

தமது வாரணாசியின் தொகுதியின் வளர்ச்சி மற்றும் பொருளாதார முன்னேற்றத்திற்கான தொடர் முயற்சிகளை பிரதமர் மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில், 23 டிசம்பர் 2021 அன்று பிற்பகல் 1 மணி அளவில், வாரணாசி செல்லும் பிரதமர் திரு நரேந்திர மோடி, பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளை தொடங்கி வைக்க உள்ளார்.

மருத்துவப் படிப்புகளில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் மற்றும் பொருளாதார ரீதியில் நலிவடைந்த பிரிவினருக்கு இட ஒதுக்கீடு வழங்கும் அரசின் முடிவிற்கு பிரதமர் பாராட்டு

July 29th, 05:17 pm

நடப்பு கல்வியாண்டு முதல் மருத்துவ/ பல்மருத்துவ இளங்கலை மற்றும் முதுகலை படிப்புகளுக்கு அகில இந்திய ஒதுக்கீட்டு திட்டத்தில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27%, பொருளாதார ரீதியில் பின்தங்கியுள்ள பிரிவினருக்கு 10% இட ஒதுக்கீடு வழங்கும் அரசின் மைல்கல் முடிவை பிரதமர் திரு நரேந்திர மோடி பாராட்டியுள்ளார்.

Landmark decision taken by Government of India in Medical Education

July 29th, 03:38 pm

Under the visionary guidance of the Prime Minister Shri Narendra Modi, Ministry of Health and Family Welfare has taken a historic and a landmark decision for providing 27% reservation for OBCs and 10% reservation for Economically Weaker Section (EWS) in the All India Quota (AIQ) Scheme for undergraduate and postgraduate medical / dental courses (MBBS / MD / MS / Diploma / BDS / MDS) from the current academic year 2021-22 onwards.

ஜூலை 15 அன்று பிரதமர் வாரணாசி செல்கிறார்

July 13th, 06:18 pm

ஜூலை 15, 2021 அன்று பிரதமர் திரு நரேந்திர மோடி வாரணாசிக்குப் பயணம் மேற்கொள்ளவிருக்கிறார். தமது பயணத்தின் போது பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை பிரதமர் தொடங்கி வைத்து, அடிக்கல் நாட்டுவார்.

Gurudev's vision for Visva Bharati is also the essence of self-reliant India: PM Modi

December 24th, 11:01 am

PM Modi addressed centenary celebrations of Visva Bharati University. In his address, PM Modi said, Gurudev Rabindranath Tagore called for a ‘swadeshi samaj’. He wanted to see self-reliance in agriculture, commerce and business, art, literature etc. Tagore wanted the entire humanity to benefit from India’s spiritual awakening. The vision for a self-reliant India is also a derivative of this sentiment. The call for a self reliant India is for the world’s benefit too.

PM Modi addresses centenary celebrations of Visva Bharati University

December 24th, 11:00 am

PM Modi addressed centenary celebrations of Visva Bharati University. In his address, PM Modi said, Gurudev Rabindranath Tagore called for a ‘swadeshi samaj’. He wanted to see self-reliance in agriculture, commerce and business, art, literature etc. Tagore wanted the entire humanity to benefit from India’s spiritual awakening. The vision for a self-reliant India is also a derivative of this sentiment. The call for a self reliant India is for the world’s benefit too.

2020 பிப்ரவரி 16 ஆம் தேதி பிரதமர் வாரணாசிக்கு செல்கிறார்

February 14th, 02:33 pm

பிரதமர் திரு.நரேந்திர மோடி, தமது நாடாளுமன்றத் தொகுதியான வாரணாசிக்கு வரும் 16 ஆம் தேதி ஒருநாள் பயணம் மேற்கொள்கிறார்.

Our efforts are towards making a modern Kashi that also retains its essence: PM Modi

February 19th, 01:01 pm

PM Narendra Modi today launched various development initiatives in Varanasi. The projects pertaining to healthcare would greatly benefit people in Varanasi and adjoining areas. Addressing a gathering, PM Modi commended the engineers and technicians behind development of the Vande Bharat Express. He termed the train as a successful example of ‘Make in India’ initiative.

ரூ.3350 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்களை வாரணாசியில் பிரதமர் துவக்கி வைத்தார்

February 19th, 01:00 pm

வாரணாசியில் இன்று ரூ.3350 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்களை பிரதமர் திரு. நரேந்திர மோடி துவக்கி வைத்தார். சுகாதாரம், துப்புரவு, நவீன நகரங்கள், போக்குவரத்து இணைப்பு, மின் சக்தி, வீட்டு வசதி மற்றும் பல்வேறு துறைகள் தொடர்பான திட்டங்களை அவர் துவக்கி வைத்தார். உத்தரப்பிரதேச ஆளுநர் திரு. ராம் நாயக், முதல்வர் திரு. யோகி ஆதித்யநாத் மற்றும் பிற பிரமுகர்கள் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

கிழக்கு இந்தியாவுக்கான நுழைவு வாயிலாக வாரணாசி நகரம் மேம்படுத்தப்படும்: பிரதமர் நரேந்திர மோடி

September 18th, 12:31 pm

உத்தர பிரதேச மாநிலம் வாரணாசியின் பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் பிரதமர் மோடி செப்டம்பர் 18 ஆம் தேதி உரையாற்றுகையில் கிழக்கு இந்தியாவுக்கான நுழைவு வாயிலாக வாரணாசி நகரம் மேம்படுத்தப்படும் என்று அவர் கூறினார். வாரணாசி பாராளுமன்ற தொகுதியில் ரூ. 550 கோடி மதிப்பீட்டில் புதிய திட்டங்களை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார்