தேசிய நெடுஞ்சாலை 334 பி-இல் 40.2 கிலோ மீட்டர் தூரத்திற்கு நிலைத்தன்மை வாய்ந்த பொருட்கள் பயன்படுத்தப்பட்டிருப்பதற்கு பிரதமர் பாராட்டு

June 14th, 10:57 pm

நிலைத்தன்மை வாய்ந்த பொருட்களுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டு, தேசிய நெடுஞ்சாலை 334 பி-இல் 40.2 கிலோ மீட்டர் தூரத்திற்கு நெகிழி கழிவுகள் மற்றும் சாம்பல் போன்றவை பயன்படுத்தப்பட்டிருப்பதன் காரணமாக குறைந்த செலவு மற்றும் சுற்றுச்சூழலுக்கு உகந்த நடைமுறை கடைபிடிக்கப்பட்டிருப்பதற்கு பிரதமர் திரு நரேந்திர மோடி பாராட்டு தெரிவித்துள்ளார். உத்தரப்பிரதேசம்- ஹரியானா எல்லை அருகே உள்ள பாக்பாத்திலிருந்து ஹரியானாவின் ரோனா வரை இந்தப் பாதை அமைந்துள்ளது.

டேராடூனில் ரூ.18,000 கோடி மதிப்பிலான பல வகை திட்டங்களை டிசம்பர் 4 அன்று பிரதமர் தொடங்கி வைக்கவும், அடிக்கல் நாட்டவும் உள்ளார்

December 01st, 12:06 pm

டேராடூனுக்குப் பயணம் செய்யவிருக்கும் பிரதமர் திரு நரேந்திர மோடி ரூ.18,000 கோடி மதிப்பிலான பல வகை திட்டங்களை 2021 டிசம்பர் 4 அன்று பிற்பகல் 1 மணிக்குத் தொடங்கி வைக்கவும், அடிக்கல் நாட்டவும் உள்ளார். இந்த மண்டலத்தில் சுமூகமாகவும், பாதுகாப்பாகவும் பயணத்தை மாற்றுவதற்கும், சுற்றுலாவை அதிகரிப்பதற்கும் சாலைக் கட்டமைப்பை மேம்படுத்தும் திட்டங்கள் பற்றியதாக இந்த பயணத்தின் நோக்கம் இருக்கும். ஒருகாலத்தில் மிகவும் தொலைதூரத்தில் உள்ளவை என்று கருதப்பட்ட பகுதிகளுக்கு எளிதாகப் போக்குவரத்துத் தொடர்பை அதிகப்படுத்தும் பிரதமரின் தொலைநோக்குப் பார்வையின் அடிப்படையிலானதாக இது இருக்கும்.