அகில இந்திய ஆயுர்வேத நிறுவனத்தில் பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டும் விழாவில் பிரதமர் ஆற்றிய உரையின் தமிழாக்கம்

October 29th, 01:28 pm

இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ள மத்திய அமைச்சரவை நண்பர்கள் திரு ஜகத் பிரகாஷ் நத்தா, திரு மன்சுக் மாண்டவியா, திரு பிரதாப்ராவ் ஜாதவ், திருமதி அனுப்ரியா படேல் மற்றும் திருமதி ஷோபா கரந்த்லாஜே அவர்களே, நாடாளுமன்ற உறுப்பினர் திரு ராம்வீர் சிங் பிதுரி அவர்களே, மாநில ஆளுநர்களே, முதலமைச்சர்களே, சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்களே, மருத்துவர்களே, நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள சுகாதார நிறுவனங்களுடன் தொடர்புடைய ஆயுஷ் மற்றும் சுகாதார வல்லுநர்களே, சுகாதார அமைப்பில் ஈடுபட்டுள்ள சகோதர சகோதரிகளே!

சுகாதாரத் துறை தொடர்பான ரூ.12,850 கோடி மதிப்பிலான பல்வேறு திட்டங்களை பிரதமர் திரு நரேந்திர மோடி தொடங்கி வைத்துப் புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார்

October 29th, 01:00 pm

தன்வந்தரி ஜெயந்தி, 9-வது ஆயுர்வேத தினம் ஆகியவற்றை முன்னிட்டு, பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று (29.10.2024) புதுதில்லியில் உள்ள அகில இந்திய ஆயுர்வேத நிறுவனத்தில் (AIIA) சுமார் ரூ.12,850 கோடி மதிப்பிலான சுகாதாரத் துறை தொடர்பான பல திட்டங்களை தொடங்கி வைத்துப் புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார்.

பண்டிட் மதன் மோகன் மாளவியாவின் நூல் வெளியீட்டு விழாவில் பிரதமர் ஆற்றிய உரையின் முக்கிய அம்சங்கள்

December 25th, 04:31 pm

எனது அமைச்சரவை சகாக்கள் திரு அனுராக் தாக்கூர் மற்றும் அர்ஜுன் ராம் மேக்வால் அவர்களே, எனது நீண்டகால நண்பரும் மஹாமனா சம்பூர்ண வங்கமே பத்திரிகையின் தலைமை ஆசிரியருமான ராம் பகதூர் ராய் அவர்களே, மகாமனா மாளவியா மிஷனின் தலைவர் பிரபு நாராயண் ஸ்ரீவஸ்தவ் அவர்களே, இங்கு உள்ள அனைத்து புகழ்பெற்ற ஆளுமைகளே!

பண்டிட் மதன் மோகன் மாளவியாவின் 162-வது பிறந்தநாளை முன்னிட்டு அவரது படைப்புகள் அடங்கிய தொகுப்பைப் பிரதமர் வெளியிட்டார்

December 25th, 04:30 pm

பண்டிட் மதன் மோகன் மாளவியாவின் 162-வது பிறந்தநாளை முன்னிட்டு, புதுதில்லியில் உள்ள விஞ்ஞான் பவனில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரதமர் திரு நரேந்திர மோடி, 'பண்டிட் மதன் மோகன் மாளவியாவின் தொகுக்கப்பட்ட படைப்புகள்' என்ற 11 பகுதிகள் அடங்கிய முதல் தொகுப்பை வெளியிட்டார். பண்டிட் மதன் மோகன் மாளவியாவின் நினைவிடத்திலும் பிரதமர் திரு நரேந்திர மோடி மலர் தூவி மரியாதை செலுத்தினார். பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தின் நிறுவனர் பண்டிட் மதன் மோகன் மாளவியா நவீன இந்தியாவை உருவாக்கியவர்களில் முன்னணி இடத்தைப் பிடித்துள்ளார். மக்களிடையே தேசிய விழிப்புணர்வை ஏற்படுத்த அளப்பரிய பாடுபட்ட சிறந்த அறிஞராகவும், சுதந்திரப் போராட்ட வீரராகவும் அவர் நினைவுகூரப்படுகிறார்.

ஆயுஷ்மான் பாவ் இயக்கத்திற்கு நல்ல வரவேற்பு: பிரதமர் பாராட்டு

October 16th, 09:22 pm

ஆயுஷ்மான் பாவ் திட்டத்தின் கீழ் 80,000-க்கும் மேற்பட்ட இந்தியர்கள் தங்கள் உடல் உறுப்புகளை தானம் செய்ய உறுதிமொழி எடுத்துள்ள நிலையில், உடல் உறுப்பு தான இயக்கத்தின் வெற்றியைப் பிரதமர் திரு நரேந்திர மோடி பாராட்டியுள்ளார்.