Every citizen of Delhi is saying – AAP-da Nahin Sahenge…Badal Ke Rahenge: PM Modi
January 05th, 01:15 pm
Prime Minister Narendra Modi addressed a massive and enthusiastic rally in Rohini, Delhi today, laying out a compelling vision for the city’s future under BJP’s governance. With resounding cheers from the crowd, the Prime Minister called upon the people of Delhi to usher in an era of good governance by ending a decade of administrative failures and empowering a “double-engine government” to transform the capital into a global model of urban development.PM Modi Calls for Transforming Delhi into a World-Class City, Highlights BJP’s Vision for Good Governance
January 05th, 01:00 pm
Prime Minister Narendra Modi addressed a massive and enthusiastic rally in Rohini, Delhi today, laying out a compelling vision for the city’s future under BJP’s governance. With resounding cheers from the crowd, the Prime Minister called upon the people of Delhi to usher in an era of good governance by ending a decade of administrative failures and empowering a “double-engine government” to transform the capital into a global model of urban development.அரசியலமைப்புச் சட்டம் எங்களின் வழிகாட்டி வெளிச்சம்: ‘மன் கீ பாத்’தின் (மனதின் குரல்) போது பிரதமர் மோடி
December 29th, 11:30 am
நண்பர்களே, அடுத்த மாதம் 13ஆம் தேதி முதல் பிரயாக்ராஜில் மகாகும்பமேளா நடைபெற இருக்கிறது. இந்த வேளையில், அங்கே சங்கமத்தின் கரையில் தடபுடலாக ஏற்பாடுகள் நடந்தேறி வருகின்றன. சில நாட்கள் முன்பாக நான் பிரயாக்ராஜ் சென்றிருந்த வேளையில், ஹெலிகாப்டர் மூலமாக மொத்த கும்பமேளாவும் நடைபெறவுள்ள இடத்தையும் பார்வையிட்ட போது மனதில் பெரும் நிறைவு உண்டானது. என்னவொரு விசாலம்!! என்னவொரு அழகு!! எத்தனை பிரும்மாண்டம்!! அடேயப்பா!!வேலைவாய்ப்புத் திருவிழாவில் காணொலிக் காட்சி மூலம் 71,000க்கும் அதிகமானோருக்கு நியமனக் கடிதங்களை வழங்கி பிரதமர் நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்
December 23rd, 11:00 am
நான் நேற்று இரவு குவைத்திலிருந்து திரும்பினேன். அங்கு, நான் இந்திய இளைஞர்கள் மற்றும் தொழில் வல்லுநர்களுடன் ஒரு விரிவான சந்திப்பை நடத்தினேன். அர்த்தமுள்ள விவாதங்களில் ஈடுபட்டேன். இப்போது, நான் நாடு திரும்பி வந்தவுடன், எனது முதல் நிகழ்ச்சி நம் தேசத்தின் இளைஞர்களுடனான நிகழ்ச்சியாக உள்ளது - உண்மையில் இது ஒரு மகிழ்ச்சியான தற்செயல் நிகழ்வாகும். உங்களைப் போன்ற ஆயிரக்கணக்கான இளைஞர்களுக்கு இன்றைய நிகழ்வு குறிப்பிடத்தக்க மைல்கல்லைக் குறிக்கிறது. உங்கள் வாழ்க்கையில் ஒரு புதிய அத்தியாயம் தொடங்குகிறது. உங்களின் பல ஆண்டுகால கனவுகள் பலனளித்துள்ளன. உங்களின் இடைவிடாத முயற்சிகளுக்குப் பலன் கிடைத்துள்ளது. கடந்து செல்லும் 2024-ம் ஆண்டு உங்களையும் உங்கள் குடும்பத்தினரையும் புதிய மகிழ்ச்சியுடன் விட்டுச் செல்கிறது. இந்த மகத்தான தருணத்தில் உங்கள் ஒவ்வொருவருக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.வேலைவாய்ப்புத் திருவிழாவின்கீழ் மத்திய அரசுத் துறைகள், நிறுவனங்களில் புதிதாக நியமனம் செய்யப்பட்ட 71,000 -க் கும் மேற்பட்டோருக்கு நியமனக் கடிதங்களை பிரதமர் திரு நரேந்திர மோடி வழங்கினார்
December 23rd, 10:30 am
அரசுத் துறைகள், அமைப்புகளில் புதிதாக நியமனம் செய்யப்பட்ட 71,000 இளைஞர்களுக்கு பணி நியமன ஆணைகளை பிரதமர் திரு. நரேந்திர மோடி, காணொலிக் காட்சி மூலம் இன்று வழங்கினார். வேலைவாய்ப்பு உருவாக்கத்திற்கு முன்னுரிமை அளிப்பதில் பிரதமரின் உறுதிப்பாட்டை இந்த வேலைவாய்ப்புத் திருவிழா எடுத்துக் காட்டுவதாக உள்ளது. நாட்டைக் கட்டமைப்பது, சுய அதிகாரமளித்தல் ஆகியவற்றிற்கு பங்களிப்பதற்கான அர்த்தமுள்ள வாய்ப்புகளை வழங்குவதன் மூலம் இளைஞர்களுக்கு அதிகாரம் அளிக்கும்.பிரதமர் மோடியின் தலைமை மலேரியாவுக்கு எதிராக பிரமிக்க வைக்கும் வெற்றியை அளித்துள்ளது, சுகாதாரத்துறையில் புரட்சியை ஏற்படுத்தியுள்ளது: ஜேபி நட்டா
December 16th, 10:06 am
2017ல் 6.4 மில்லியனாக இருந்த நோயாளிகளின் எண்ணிக்கை 2023ல் வெறும் 2 மில்லியனாக மலேரியா நோயாளிகளில் குறிப்பிடத்தக்க அளவில் 69% குறைப்பை இந்தியா அடைந்துள்ளது. இந்த வெற்றியானது பிரதமர் நரேந்திர மோடியின் கவனமுள்ள கொள்கை மற்றும் தலைமைக்குக் கிடைத்த பரிசாகும். 2015 கிழக்காசிய உச்சி மாநாட்டில் உறுதியளிக்கப்பட்ட 2030 ஆம் ஆண்டிற்குள் மலேரியாவை ஒழிப்பதற்கான பிரதமர் மோடியின் பெரிய இலக்கின் ஒரு பகுதியாக இந்த மைல்கல் உள்ளது.அரசியலமைப்புச் சட்டம் ஏற்றுக்கொள்ளப்பட்டதன் 75-வது ஆண்டு நிறைவையொட்டி மக்களவையில் நடைபெற்ற சிறப்பு விவாதத்தில் பிரதமர் ஆற்றிய உரை
December 14th, 05:50 pm
இது நம் அனைவருக்கும் – நமது சக நாட்டு மக்களுக்கு மட்டுமல்லாமல், உலகெங்கிலும் உள்ள ஜனநாயகத்தை நேசிக்கும் மக்களுக்கும் மிகுந்த பெருமைக்குரிய தருணமாகும். ஜனநாயகத்தின் திருவிழாவை மிகுந்த பெருமிதத்துடன் கொண்டாட வேண்டிய தருணம் இது. அரசியலமைப்புச் சட்டத்தின் கீழ் 75 ஆண்டுகாலப் பயணம் குறிப்பிடத்தக்க ஒன்றாகும். மேலும் இந்தப் பயணத்தின் மையத்தில் நமது அரசியலமைப்பை உருவாக்கியவர்களின் தெய்வீகப் பார்வை உள்ளது, அவர்களின் பங்களிப்புகள் நாம் முன்னேறும்போது தொடர்ந்து நம்மை வழிநடத்துகின்றன. அரசியலமைப்புச் சட்டம் தொடங்கப்பட்டு 75 ஆண்டுகள் நிறைவடைவதைக் கொண்டாடுவது உண்மையிலேயே ஒரு முக்கியமான தருணமாகும். இந்தக் கொண்டாட்டத்தின் போது நாடாளுமன்றமும் தனது உணர்வுகளை வெளிப்படுத்தும் என்பது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. மாண்புமிகு உறுப்பினர்கள் அனைவருக்கும் எனது நன்றியையும், இந்தக் கொண்டாட்டத்தில் பங்கேற்ற அனைவருக்கும் எனது வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.அரசியலமைப்புச் சட்டம் ஏற்றுக்கொள்ளப்பட்டதன் 75-வது ஆண்டு நிறைவையொட்டி மக்களவையில் சிறப்பு விவாதத்தில் பிரதமர் திரு நரேந்திர மோடி உரையாற்றினார்
December 14th, 05:47 pm
அரசியலமைப்புச் சட்டம் ஏற்றுக்கொள்ளப்பட்டதன் 75-வது ஆண்டு நிறைவையொட்டி மக்களவையில் இன்று நடைபெற்ற சிறப்பு விவாதத்திற்குப் பதிலளித்து, பிரதமர் திரு. நரேந்திர மோடி உரையாற்றினார். அவையில் உரையாற்றிய திரு மோடி, ஜனநாயகத்தின் இந்தத் திருவிழாவை நாம் கொண்டாடுவது இந்தியாவின் அனைத்து மக்களுக்கும், ஜனநாயகத்தை மதிக்கும் உலகெங்கிலும் உள்ள அனைத்து மக்களுக்கும் பெருமை மற்றும் கவுரவம் அளிக்கும் விஷயமாகும் என்று குறிப்பிட்டார். நமது அரசியலமைப்பின் 75 ஆண்டுகால குறிப்பிடத்தக்க மற்றும் மகத்தான பயணத்தில் நமது அரசியலமைப்பை உருவாக்கியவர்களின் தொலைநோக்கு பார்வை மற்றும் முயற்சிகளுக்கு நன்றி தெரிவித்த அவர், 75 ஆண்டுகளை வெற்றிகரமாக நிறைவு செய்த ஜனநாயக விழாவை கொண்டாடுவதற்கான நேரம் இது என்று கூறினார். நாடாளுமன்ற உறுப்பினர்களும் இந்த கொண்டாட்டத்தில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டு தங்கள் கருத்துக்களை வெளியிட்டது குறித்து திரு மோடி மகிழ்ச்சி தெரிவித்தார். அதற்காக அவர்களுக்கு நன்றி தெரிவித்து வாழ்த்து தெரிவித்தார்.புதுதில்லியில் அஷ்டலட்சுமி மகோத்சவ் தொடக்க விழாவில் பிரதமர் ஆற்றிய உரையின் தமிழாக்கம்
December 06th, 02:10 pm
அசாம் முதலமைச்சர் திரு ஹிமந்தா பிஸ்வா சர்மா அவர்களே, மேகாலயா முதலமைச்சர் திரு கான்ராட் சங்மா அவர்களே, திரிபுரா முதலமைச்சர் திரு மாணிக் சாஹா அவர்களே, சிக்கிம் முதலமைச்சர் திரு பிரேம் சிங் தமாங் அவர்களே, எனது அமைச்சரவை சகாக்களான திரு ஜோதிராதித்ய சிந்தியா அவர்களே, திரு சுகந்தா மஜும்தார் அவர்களே, அருணாச்சலப் பிரதேச துணை முதல்வர் பிற மக்கள் பிரதிநிதிகளே, வடகிழக்கைச் சேர்ந்த சகோதர, சகோதரிகளே!அஷ்டலட்சுமி மஹோத்சவத்தை பிரதமர் திரு நரேந்திர மோடி தொடங்கி வைத்தார்
December 06th, 02:08 pm
புதுதில்லி பாரத மண்டபத்தில் அஷ்டலட்சுமி மஹோத்சவத்தை பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியின்போது சிறப்பு அஞ்சல் தலையையும் பிரதமர் வெளியிட்டார். நிகழ்ச்சியில் பேசிய திரு நரேந்திர மோடி, இன்று பாபாசாகேப் டாக்டர் பி.ஆர்.அம்பேத்கரின் மஹாபரி நிர்வாண் தினம் என்பதைக் குறிப்பிட்டார். பாபாசாஹேப் அம்பேத்கரால் உருவாக்கப்பட்ட அரசியலமைப்புச் சட்டம் அனைத்து மக்களுக்கும் பெரும் உத்வேகத்தை அளிக்கிறது என்றும் அவர் கூறினார்.உச்சநீதிமன்றத்தில் நடைபெற்ற அரசியலமைப்பு தின விழாவில் பிரதமர் ஆற்றிய உரையின் தமிழாக்கம்
November 26th, 08:15 pm
தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா அவர்களே, நீதிபதி பி.ஆர்.கவாய் அவர்களே, நீதிபதி சூர்ய காந்த் அவர்களே, மத்திய அமைச்சரவையில் உள்ள எனது நண்பர் திரு. அர்ஜுன் ராம் மேக்வால் அவர்களே, அட்டர்னி ஜெனரல் திரு. வெங்கடரமணி அவர்களே, பார் கவுன்சில் தலைவர் மனன் குமார் மிஸ்ரா அவர்களே, உச்சநீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கத் தலைவர் திரு. கபில் சிபல் அவர்களே, உச்சநீதிமன்ற நீதிபதிகளே, முன்னாள் தலைமை நீதிபதிகளே, இதர சிறப்பு விருந்தினர்களே, தாய்மார்களே, அன்பர்களே!உச்சநீதிமன்றத்தில் நடைபெற்ற அரசியல் சாசன தின நிகழ்ச்சியில் பிரதமர் திரு. நரேந்திர மோடி பங்கேற்பு
November 26th, 08:10 pm
கூட்டத்தினரிடையே உரையாற்றிய பிரதமர் திரு. மோடி, அரசியலமைப்புச் சட்ட தினத்தை முன்னிட்டு அனைத்து பிரமுகர்கள், பிரதிநிதிகள் மற்றும் குடிமக்களுக்கு வாழ்த்து தெரிவித்தார். இந்திய அரசியலமைப்பின் 75-வது ஆண்டு நிறைவு என்பது பெருமைக்குரிய விஷயம் என்று அவர் குறிப்பிட்டார். இந்த நிகழ்ச்சியில் அரசியல் நிர்ணய சபை உறுப்பினர்கள் மற்றும் அரசியலமைப்பு உறுப்பினர்களுக்கு அவர் மரியாதை செலுத்தினார்.கயானாவில் இந்திய சமூகத்தினரிடையே பிரதமர் ஆற்றிய உரை
November 22nd, 03:02 am
இன்று உங்கள் அனைவருடனும் இருப்பதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன். எங்களுடன் இணைந்ததற்காக அதிபர் இர்பான் அலிக்கு முதலில் நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். நான் வந்ததிலிருந்து எனக்கு வழங்கப்பட்ட அன்பு மற்றும் பாசத்தால் நான் மிகவும் நெகிழ்ந்து போனேன். தமது இல்லத்தின் கதவுகளை எனக்காக திறந்து வைத்ததற்காக அதிபர் அலிக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். அவரது குடும்பத்தினரின் அன்பு மற்றும் கருணைக்கு நான் நன்றி கூறுகிறேன். விருந்தோம்பல் உணர்வு நமது கலாச்சாரத்தின் இதயத்தில் உள்ளது. கடந்த இரண்டு நாட்களாக அதை என்னால் உணர முடிந்தது. அதிபர் அலி மற்றும் அவரது பாட்டியுடன் இணைந்து நாங்களும் ஒரு மரத்தை நட்டோம். இது தாயின் பெயரில் ஒரு மரக்கன்று என்ற எங்கள் முன்முயற்சியின் ஒரு பகுதியாகும். அது நான் எப்போதும் நினைவில் வைத்திருக்கும் ஒரு உணர்ச்சிகரமான தருணம் ஆகும்.கயானாவில் வசிக்கும் இந்திய வம்சாவளியினர் பல்வேறு துறைகளில் தாக்கத்தை ஏற்படுத்தி கயானாவின் வளர்ச்சிக்கு பங்களித்துள்ளனர்: பிரதமர்
November 22nd, 03:00 am
கயானாவின் ஜார்ஜ்டவுன் நகரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரதமர் திரு. நரேந்திர மோடி இந்திய சமூகத்தினரிடையே உரையாற்றினார். கயானா அதிபர் டாக்டர் இர்பான் அலி, பிரதமர் மார்க் பிலிப்ஸ், துணை அதிபர் பரத் ஜக்தியோ, முன்னாள் அதிபர் டொனால்ட் ராமோதர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். கூட்டத்தினரிடையே உரையாற்றிய திரு மோடி, அதிபருக்கு நன்றி தெரிவித்ததோடு, அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டதற்கு மகிழ்ச்சி தெரிவித்தார். அதிபர் மற்றும் அவரது குடும்பத்தினரின் அரவணைப்பு மற்றும் கருணைக்கு அவர் மேலும் நன்றி தெரிவித்தார். விருந்தோம்பல் உணர்வு நமது கலாச்சாரத்தின் இதயத்தில் உள்ளது என்று திரு மோடி கூறினார். தாயின் பெயரில் ஒரு மரக்கன்று என்ற முன்முயற்சியின் ஒரு பகுதியாக அதிபர் மற்றும் அவரது பாட்டியுடன் இணைந்து மரம் ஒன்றை நட்டதாக பிரதமர் குறிப்பிட்டார். இது ஒரு உணர்ச்சிகரமான தருணம் என்றும், அதை அவர் என்றென்றும் நினைவில் வைத்திருப்பார் என்றும் அவர் கூறினார்.ஹிந்துஸ்தான் டைம்ஸ் தலைமைத்துவ உச்சி மாநாடு 2024-ல் பிரதமர் ஆற்றிய உரை
November 16th, 10:15 am
100 ஆண்டுகளுக்கு முன்பு, இந்துஸ்தான் டைம்ஸ் வணக்கத்திற்குரிய பாபுவால் தொடங்கப்பட்டது . அவர் குஜராத்தி மொழி பேசுபவர். 100 ஆண்டுகளுக்குப் பிறகு மற்றொரு குஜராத்தியை நீங்கள் அழைத்திருக்கிறீர்கள். நான், ஹிந்துஸ்தான் டைம்ஸ் மற்றும் கடந்த 100 ஆண்டுகளாக இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க பயணத்துடன் தொடர்புடைய அனைவருக்கும், இதை வளர்ப்பதற்கு பங்களிப்பு செய்தவர்களுக்கும், போராடியவர்களுக்கும், சவால்களை எதிர்கொண்டவர்களுக்கும், உறுதியாக நின்றவர்களுக்கும் என் பாராட்டுதல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவர்கள் அனைவரும் இன்று பாராட்டுக்கு உரியவர்கள், மரியாதைக்குரியவர்கள். 100 ஆண்டுகால பயணத்தை நிறைவு செய்தது உண்மையில் முக்கியத்துவம் வாய்ந்தது. நீங்கள் அனைவரும் இந்த அங்கீகாரத்திற்கு தகுதியானவர்கள், எதிர்காலத்திற்கு எனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். 100 ஆண்டு பயணத்தை காண்பிக்கும் ஒரு குறிப்பிடத்தக்க கண்காட்சியைக் காண வாய்ப்பு கிடைத்தது. உங்களுக்கு நேரம் இருந்தால் புறப்படுவதற்கு முன்பு சிறிது நேரம் அங்கு செலவிடுமாறு உங்கள் அனைவரையும் நான் ஊக்குவிக்கிறேன். இது வெறும் கண்காட்சி அல்ல, ஒரு அனுபவம். 100 வருட வரலாறு என் கண் முன்னே கடந்து போனது போல் உணர்ந்தேன். நாடு சுதந்திரம் அடைந்த நாளிலிருந்து, அரசியலமைப்பு நடைமுறைப்படுத்தப்பட்ட நாள் முதல் செய்தித்தாள்களைப் பார்த்தேன். மார்ட்டின் லூதர் கிங், நேதாஜி சுபாஷ் சந்திர போஸ், டாக்டர் சியாமா பிரசாத் முகர்ஜி, அடல் பிஹாரி வாஜ்பாய், டாக்டர் எம்.எஸ்.சுவாமிநாதன் போன்ற புகழ்பெற்றவர்கள் ஹிந்துஸ்தான் டைம்ஸில் எழுதி வந்தனர். அவர்களின் எழுத்துக்கள் செய்தித்தாளை மிகவும் வளப்படுத்தின. உண்மையிலேயே, நாம் வெகுதூரம் வந்துவிட்டோம். சுதந்திரத்திற்காக போராடுவது முதல் சுதந்திரத்திற்குப் பிறகு எல்லையற்ற நம்பிக்கையின் அலைகளில் சவாரி செய்வது வரை, இந்தப் பயணம் அசாதாரணமானது மற்றும் நம்பமுடியாதது. 1947 அக்டோபரில் காஷ்மீரை இணைத்த பிறகு ஒவ்வொரு குடிமகனும் அடைந்த உற்சாகத்தை உங்கள் பத்திரிகையில் நான் உணர்ந்தேன். ஏழு தசாப்தங்களாக காஷ்மீர் எவ்வாறு வன்முறையில் மூழ்கியிருந்தது, முடிவெடுக்க முடியாத தன்மை எவ்வாறு இருந்தது என்பதையும் அந்தத் தருணத்தில் நான் உணர்ந்தேன். இன்று உங்கள் செய்தித்தாள் ஜம்மு-காஷ்மீரில் சாதனை வாக்குப்பதிவு பற்றிய செய்திகளை வெளியிடுகிறது, இது கடந்த காலத்திலிருந்து கடுமையாக வேறுபடுகிறது.புதுதில்லியில் நடைபெற்ற இந்துஸ்தான் டைம்ஸ் தலைமைத்துவ உச்சிமாநாடு 2024-ல் பிரதமர் திரு நரேந்திர மோடி உரையாற்றினார்
November 16th, 10:00 am
புதுதில்லியில் இன்று நடைபெற்ற இந்துஸ்தான் டைம்ஸ் தலைமைத்துவ உச்சிமாநாடு 2024-ல் பிரதமர் திரு. நரேந்திர மோடி உரையாற்றினார். 100 ஆண்டுகளுக்கு முன்பு மகாத்மா காந்தியால் தொடங்கி வைக்கப்பட்ட இந்துஸ்தான் டைம்ஸ் நாளிதழுக்கு பிரதமர் பாராட்டு தெரிவித்தார். இந்துஸ்தான் டைம்ஸ் நாளிதழின் வரலாற்றுச் சிறப்புமிக்க 100 ஆண்டுகால பயணத்திற்காக மட்டுமல்லாமல், அது தொடங்கப்பட்டதிலிருந்து அதனுடன் தொடர்புடைய அனைவருக்கும் பாராட்டு தெரிவித்தார். அவர்களின் எதிர்கால முயற்சிகளுக்கு நல்வாழ்த்து தெரிவித்தார். கண்காட்சி நடைபெறும் இடத்தில் நடைபெற்ற கண்காட்சியைப் பார்வையிட்ட திரு மோடி, இது ஒரு அனுபவம் என்று கூறினார். இந்தியா சுதந்திரம் பெற்று, அரசியல் சாசனம் அமல்படுத்தப்பட்ட காலகட்டத்தின் பழைய செய்தித்தாள்களை தாம் பார்த்ததாகவும் அவர் கூறினார். மார்ட்டின் லூதர் கிங், நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ், டாக்டர் ஷியாமா பிரசாத் முகர்ஜி, அடல் பிஹாரி வாஜ்பாய், டாக்டர் எம்.எஸ்.சுவாமிநாதன் போன்ற பல தலைவர்கள் இந்துஸ்தான் டைம்ஸ் நாளிதழுக்கு கட்டுரைகள் எழுதியதை திரு மோடி சுட்டிக்காட்டினார். சுதந்திரப் போராட்டத்தைக் கண்ட நீண்ட பயணம், சுதந்திரத்திற்குப் பிந்தைய காலகட்டத்தில் நம்பிக்கையுடன் முன்னோக்கி நடைபெற்றது தனித்துவமானது மற்றும் ஆச்சரியமானது என்று அவர் கூறினார். 1947 அக்டோபரில் காஷ்மீர் இந்தியாவுடன் இணைக்கப்பட்டது குறித்த செய்தியைப் படிக்கும்போது மற்ற குடிமக்களைப் போலவே தாமும் அதே உற்சாகத்தை உணர்ந்ததாக பிரதமர் கூறினார். எவ்வாறாயினும், ஏழு தசாப்தங்களாக காஷ்மீரை எவ்வாறு முடிவெடுக்க முடியாத தன்மை வன்முறையில் மூழ்கடித்துள்ளது என்பதையும், அந்தத் தருணத்தில் உணர்ந்ததாகவும் அவர் கூறினார். ஆனால் இப்போதெல்லாம் ஜம்மு காஷ்மீரில் நடைபெற்ற தேர்தலில் அதிக அளவில் வாக்குப்பதிவு நடைபெற்ற செய்திகள் நாளிதழ்களில் வெளியாகி வருவது மகிழ்ச்சி அளிக்கிறது என்று திரு மோடி கூறினார். பிரபலமாக விளங்கும் மற்றொரு நாளிதழ், அதன் ஒரு பக்கத்தில் அசாம் கலவரப் பகுதி என்று அறிவிக்கப்பட்டதாகவும், மறுபுறம் அடல் ஜி பாரதிய ஜனதா கட்சிக்கு அடிக்கல் நாட்டினார் என்ற செய்தி வெளியிட்டதையும் திரு மோடி குறிப்பிட்டார். அசாமில் நிரந்தர அமைதியைக் கொண்டுவருவதில் இன்று பாஜக பெரும் பங்கு வகிக்கிறது என்பது ஒரு இனிமையான தற்செயல் நிகழ்வு என்று அவர் மேலும் கூறினார்.Tribal society is the one that led the fight for centuries to protect India's culture and independence: PM Modi
November 15th, 11:20 am
PM Modi addressed Janjatiya Gaurav Diwas, emphasizing India's efforts to empower tribal communities, preserve their rich heritage, and acknowledge their vital role in nation-building.பழங்குடியினர் கௌரவ தினத்தையொட்டி பகவான் பிர்சா முண்டாவின் 150-வது பிறந்த நாள் கொண்டாட்டம் பிரதமர் திரு. நரேந்திர மோடி தொடங்கி வைத்தார்
November 15th, 11:00 am
பழங்குடியினர் கௌரவ தினத்தை முன்னிட்டு பகவான் பிர்சா முண்டாவின் 150-வது பிறந்த நாள் கொண்டாட்டத்தை தொடங்கி வைத்த பிரதமர் திரு நரேந்திர மோடி, பீகார் மாநிலம் ஜமுயில் இன்று ரூ.6,640 கோடி மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி, நிறைவடைந்த திட்டங்களை தொடங்கி வைத்தார். நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் நடைபெற்ற பழங்குடியினர் தின நிகழ்ச்சிகளில் பங்கேற்ற மாநிலங்களின் ஆளுநர்கள், முதலமைச்சர்கள், மத்திய அமைச்சர்கள் ஆகியோரைப் பிரதமர் வரவேற்றார். இந்தியா முழுவதிலும் இருந்து இந்த நிகழ்ச்சியில் இணைந்த எண்ணற்ற பழங்குடியின சகோதர சகோதரிகளையும் பிரதமர் வரவேற்றார். கார்த்திகை பூர்னிமா, தேவ் தீபாவளி, ஸ்ரீ குருநானக் தேவ் அவர்களின் 555-வது பிறந்த நாள் ஆகியவை அனுசரிக்கப்படுவதாகக் குறிப்பிட்ட திரு மோடி, அதற்காக இந்திய குடிமக்களுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டார். பகவான் பிர்சா முண்டாவின் பிறந்த நாள் பழங்குடியினர் கௌரவ தினமாகக் கொண்டாடப்படும் நாள் என்பதால் குடிமக்களுக்கு இன்று வரலாற்றுச் சிறப்புமிக்க நாள் என்று பிரதமர் கூறினார். இந்தியக் குடிமக்கள், குறிப்பாக பழங்குடியின சகோதர சகோதரிகளுக்கு அவர் வாழ்த்து தெரிவித்தார். இன்றைய பழங்குடியினர் கௌரவ தினத்திற்கு முன்னோட்டமாக கடந்த 3 நாட்களில் தூய்மை இயக்கம் ஜமுயில் நடைபெற்றது என்று பிரதமர் குறிப்பிட்டார். தூய்மை இயக்கத்திற்காக, ஜமுய் நிர்வாகம், குடிமக்கள், குறிப்பாக பெண்கள் போன்ற பல்வேறு பங்குதாரர்களுக்கு அவர் பாராட்டு தெரிவித்தார்.The BJP-NDA government will fight the mafia-driven corruption in recruitment: PM Modi in Godda, Jharkhand
November 13th, 01:47 pm
Attending and addressing rally in Godda, Jharkhand, PM Modi expressed gratitude to the women of the state for their support. He criticized the local government for hijacking benefits meant for women, like housing and water supply. PM Modi assured that under the BJP-NDA government, every family in Jharkhand will get permanent homes, water, gas connections, and free electricity. He also promised solar panels for households, ensuring free power and compensation for any surplus electricity generated.We ensured that government benefits directly reach beneficiaries without intermediaries: PM Modi in Sarath, Jharkhand
November 13th, 01:46 pm
PM Modi addressed a large gathering in Jharkhand's Sarath. He said, Today, the first phase of voting is happening in Jharkhand. The resolve to protect livelihood, daughters, and land is visible at every booth. There is strong support for the guarantees that the BJP has given for the future of women and youth. It is certain that the JMM-Congress will be wiped out in the Santhali region this time.