அயோத்தி தாம் சந்திப்பு ரயில் நிலையத்தை பிரதமர் திறந்து வைத்தார்
December 30th, 05:22 pm
இதனைத் தொடர்ந்து, நடைபெற்ற ஒரு பொது நிகழ்ச்சியில் உரையாற்றிய பிரதமர், அயோத்தி தாம் ரயில் நிலையம் இப்போது 10 ஆயிரம் மக்களைக் கையாளுகிறது. இப்போது மறுசீரமைப்பு முடிந்ததும் இது 60 ஆயிரத்தை எட்டும் என்று கூறினார். வந்தே பாரத் மற்றும் நமோ பாரத் ரயில்களுக்குப் பிறகு 'அமிர்த பாரத்' என்ற புதிய ரயில் தொடர் குறித்து தெரிவித்த பிரதமர், முதல் அமிர்த பாரத் ரயில் அயோத்தி வழியாகச் செல்வது குறித்து மகிழ்ச்சி தெரிவித்தார். இந்த ரயில்களை இன்று பெற்றதற்காக உ.பி, தில்லி, பீகார், மேற்கு வங்கம் மற்றும் கர்நாடகா மக்களுக்கு அவர் வாழ்த்து தெரிவித்தார்.