சுகாதாரம் மற்றும் மருத்துவ ஆராய்ச்சித் தொடர்பான பட்ஜெட்டுக்குப் பிந்தைய இணையவழிக் கருத்தரங்கில் பிரதமரின் உரை
March 06th, 10:30 am
கொவிட் பெருந்தொற்றுக்கு முந்தைய மற்றும் பிந்தைய நிலைகளில் சுகாதாரத்தைக் காண முடியும். வளமிக்க நாடுகளைக்கூடப் பெருந்தொற்று சோதித்தது. தொற்றுநோய் உடல்நலத்தில் உலகளாவிய கவனத்தை ஈர்த்த நிலையில், இந்தியா அதற்கு மேலாக ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தியது. அதனால்தான் ஒரே பூமி, ஒரே மாதிரியான சுகாதாரம் என்ற நமது தொலைநோக்குப் பார்வையே உலகிற்கு உணர்த்தியது. இது மனிதர்கள், விலங்குகள் அல்லது தாவரங்கள் ஆகிய அனைத்துப் படைப்பினங்களின் ஒட்டுமொத்த உடல்நலன் தொடர்புடையது.“சுகாதாரம் மற்றும் மருத்துவ ஆராய்ச்சித் தொடர்பான பட்ஜெட்டுக்குப் பிந்தைய இணையவழிக் கருத்தரங்கில் பிரதமர் உரையாற்றினார்”
March 06th, 10:00 am
சுகாதாரம் மற்றும் மருத்துவ ஆராய்ச்சி தொடர்பான பட்ஜெட்டுக்குப் பிந்தைய இணையவழிக் கருத்தரங்கில் பிரதமர் திரு நரேந்திர மோடி உரையாற்றினார். 2023-ம் ஆண்டு பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டத் திட்டங்களை திறனுடன் அமல்படுத்துவது குறித்து கருத்துகளைக் கேட்டறிவதற்காக அரசு ஏற்பாடு செய்துள்ள பட்ஜெட்டுக்குப் பிந்தைய 12 இணையவழிக் கருத்தரங்குகளின்குஜராத்தில் முதலீட்டாளர் உச்சி மாநாட்டில் பிரதமர் ஆற்றிய உரையின் தமிழ் மொழியாக்கம்
August 13th, 11:01 am
மத்திய அமைச்சரவையில் எனது சக ஊழியர், திரு. நிதின் கட்கரி, குஜராத் முதல்வர் திரு. விஜய் ரூபானி, ஆட்டோ தொழிற்துறையுடன் தொடர்புடைய அனைத்து பங்குதாரர்கள், அனைத்து ஓஈம் OEM சங்கங்கள், உலோகம் மற்றும் ஸ்கிராப்பிங் தொழிலில் உள்ள அனைத்து உறுப்பினர்கள், பெரியோர்களே, தாய்மார்களே!குஜராத் முதலீட்டாளர் உச்சிமாநாட்டில் பிரதமர் உரையாற்றினார்
August 13th, 11:00 am
குஜராத் முதலீட்டாளர் உச்சிமாநாட்டில் பிரதமர் திரு.நரேந்திர மோடி காணொலி மூலம் உரையாற்றினார். தன்னார்வ வாகன நவீனமயமாக்கல் திட்டம் அல்லது பயன்தீர்ந்த வாகனங்களை அழிக்கும் கொள்கையின் கீழ், வாகன அழிப்பு உள்கட்டமைப்பை உருவாக்க முதலீடுகளை ஈர்க்கும் வகையில் இந்த மாநாட்டுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஒருங்கிணைந்த அழிப்பு மையத்தை உருவாக்குவதற்கு ,அலாங் கப்பல் உடைக்கும் தொழில் நடைபெறும் விதம் குறித்த விளக்கம் கவனம் பெற்றது. இந்த நிகழ்ச்சியில் மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர், குஜராத் முதலமைச்சர் ஆகியோர் கலந்து கொண்டனர்.இன்று அறிமுகமாகும் வாகனக் கழிவு கொள்கை இந்தியாவின் வளர்ச்சிப் பயணத்தில் குறிப்பிடத்தக்க மைல்கல்: பிரதமர்
August 13th, 10:22 am
இந்தியாவின் வளர்ச்சிப் பயணத்தில், இன்று தொடங்கப்பட்டுள்ள வாகனக் கழிவு கொள்கை ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல் என்று பிரதமர் திரு நரேந்திர மோடி கூறியுள்ளார்.ஆகஸ்ட் 13 அன்று குஜராத்தில் நடைபெறும் முதலீட்டாளர் உச்சி மாநாட்டில் பிரதமர் உரையாற்ற உள்ளார்
August 11th, 09:35 pm
குஜராத்தில், ஆகஸ்ட் 13-ந் தேதியன்று காலை 11 மணிக்கு நடைபெறவுள்ள முதலீட்டாளர் உச்சி மாநாட்டில் பிரதமர் திரு.நரேந்திர மோடி காணொலி வாயிலாக உரையாற்ற உள்ளார்.