ஆஸ்திரேலிய பிரதமர் திரு அந்தோணி அல்பானீஸுடன் பிரதமர் திரு நரேந்திர மோடி உரையாடினார்

August 26th, 01:02 pm

ஆஸ்திரேலிய பிரதமர் திரு அந்தோணி அல்பனீஸுடன் பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று உரையாடினார். குவாட் அமைப்பு உள்ளிட்ட பலதரப்பு அமைப்புகளில் இருதரப்பு உறவுகளிலும் ஒத்துழைப்பிலும் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்து இரு தலைவர்களும் ஆய்வு செய்தனர்.

We are laying a strong foundation for India's next thousand years: PM Modi in Austria

July 10th, 11:00 pm

PM Modi addressed the Indian community in Vienna. He spoke about the transformative progress achieved by the country in the last 10 years and expressed confidence that India will become the third largest economy in the near future, on its way to becoming a developed country - Viksit Bharat - by 2047.

ஆஸ்திரியாவில் இந்திய சமூகத்தினரிடையே பிரதமர் உரை

July 10th, 10:45 pm

வியன்னாவில் இந்திய சமூகத்தினர் ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் பிரதமர் திரு. நரேந்திர மோடி உரையாற்றினார். பிரதமருக்கு உற்சாகமான மற்றும் சிறப்பான வரவேற்பை அவர்கள் வழங்கினார்கள். ஆஸ்திரிய மத்திய தொழிலாளர் மற்றும் பொருளாதார அமைச்சர் மேதகு திரு மார்ட்டின் கோச்சரும் இந்தக்கூட்டத்தில் கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியில் நாடு முழுவதிலுமிருந்து இந்திய வம்சாவளியினர் பங்கேற்றனர்.

நோபல் பரிசு பெற்ற திரு. ஆன்டன் ஜீலிங்கருடன் பிரதமர் சந்திப்பு

July 10th, 09:48 pm

நோபல் பரிசு பெற்ற புகழ்பெற்ற ஆஸ்திரிய இயற்பியல் அறிஞர் திரு. ஆன்டன் ஜீலிங்கரை பிரதமர் திரு. நரேந்திர மோடி சந்தித்துப் பேசினார். குவாண்டம் இயக்கவியல் குறித்த தனது பணிக்காக அறியப்பட்ட திரு ஜீலிங்கர், 2022-ஆம் ஆண்டில் இயற்பியலுக்கான நோபல் பரிசைப் பெற்றார்.

ஆஸ்திரிய இந்தியவியலாளர்களுடன் பிரதமர் சந்திப்பு

July 10th, 09:47 pm

இந்திய வரலாறு குறித்த நான்கு முன்னணி ஆஸ்திரிய இந்தியவியலாளர்கள் மற்றும் அறிஞர்களை பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று சந்தித்தார். பௌத்த தத்துவ அறிஞரும் மொழியியலாளருமான டாக்டர் பிர்கிட் கெல்னர், நவீன தெற்காசியாவின் அறிஞர் பேராசிரியர் மார்ட்டின் கென்ஸ்லே, வியன்னா பல்கலைக்கழகத்தின் தெற்காசிய ஆய்வுகள் பேராசிரியர் டாக்டர் போரயின் லாரியோஸ் மற்றும் வியன்னா பல்கலைக்கழகத்தின் இந்தியவியல் துறைத் தலைவர் டாக்டர் கரின் ப்ரீசென்டான்ஸ்.ஆகியோருடன் அவர் உரையாடினார்.

மேம்படுத்தப்பட்ட இந்திய-ஆஸ்திரிய கூட்டாண்மை குறித்த கூட்டறிக்கை

July 10th, 09:15 pm

பிரதமர் திரு. கார்ல் நெஹாமர் அவர்களின் அழைப்பின் பேரில், பிரதமர் திரு. நரேந்திர மோடி ஜூலை 9 முதல் 10 வரை ஆஸ்திரியாவுக்கு அரசு முறை பயணம் மேற்கொண்டார். தனது பயணத்தின்போது, ஆஸ்திரிய அதிபர் மேதகு திரு அலெக்சாண்டர் வான் டெர் பெல்லனை சந்தித்த அவர், பிரதமர் திரு நெஹாமருடன் இருதரப்பு பேச்சுவார்த்தைகளை நடத்தினார். 41 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியப் பிரதமர் ஒருவர் ஆஸ்திரியா செல்வது இதுவே முதல் முறையாகும். இது, இரு நாடுகளுக்கும் இடையிலான தூதரக உறவுகளின் 75 வது ஆண்டாகும்.

பிரதமரின் ஆஸ்திரிய அதிபருடனான சந்திப்பு

July 10th, 09:13 pm

பிரதமர் திரு நரேந்திர மோடி ஆஸ்திரிய அதிபர் திரு அலெக்சாண்டர் வான் டெர் பெல்லனை வியன்னாவில் இன்று சந்தித்துப் பேசினார். அப்போது அதிபர் திரு வான் டெர் பெல்லன், வரலாற்றுச் சிறப்புமிக்க வகையில் மூன்றாவது முறையாக பொறுப்பேற்றுள்ளதற்காக பிரதமருக்கு வாழ்த்து தெரிவித்தார்.

ஆஸ்திரிய-இந்திய தலைமைச் செயல் அதிகாரிகள் கூட்டத்தில் பிரதமர் உரையாற்றினார்

July 10th, 07:01 pm

பிரதமர் திரு நரேந்திர மோடியும், ஆஸ்திரிய பிரதமர் திரு கார்ல் நெஹாமரும், உள்கட்டமைப்பு, வாகன உற்பத்தி, எரிசக்தி, பொறியியல், புதிய தொழில்கள் உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சேர்ந்த முன்னணி ஆஸ்திரிய, இந்திய நிறுவனங்களைச் சேர்ந்த தலைமைச் செயல் அதிகாரிகளிடையே இன்று (10.07.2024) கூட்டாக உரையாற்றினர்.

ஆஸ்திரிய பிரதமருடன் நடைபெற்ற கூட்டு செய்தியாளர் கூட்டத்தில் பிரதமர் திரு நரேந்திர மோடி வெளியிட்ட அறிக்கையின் தமிழாக்கம்

July 10th, 02:45 pm

அன்பான வரவேற்புக்கும், விருந்தோம்பலுக்கும் பிரதமர் நெஹாமருக்கு முதலில் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். எனது மூன்றாவது ஆட்சிக் காலத்தின் தொடக்கத்திலேயே ஆஸ்திரியாவுக்கு பயணம் மேற்கொள்ளும் வாய்ப்பு கிடைத்ததில் நான் மகிழ்ச்சி அடைகிறேன். எனது இந்தப் பயணம் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது, சிறப்பானது. 41 ஆண்டுகளுக்குப் பிறகு, இந்தியப் பிரதமர் ஒருவர் ஆஸ்திரியாவுக்கு பயணம் மேற்கொண்டுள்ளது சிறப்பானதாகும். நமது இருதரப்பு உறவுகள் 75 ஆண்டுகளை நிறைவு செய்துள்ள நிலையில், இந்தப் பயணம் நடைபெறுவது ஒரு இனிமையான தற்செயல் நிகழ்வாகும்.

பிரதமர் மோடி ஆஸ்திரியாவின் வியன்னா சென்றடைந்தார்

July 09th, 11:45 pm

பிரதமர் நரேந்திர மோடி தனது இரு நாடுகளுக்கான பயணத்தின் இரண்டாவது கட்டத்தின் தொடக்கமாக ஆஸ்திரியாவின் வியன்னா நகருக்கு வந்தார். பிரதமர் தனது பயணத்தின் போது, ​​அதிபர் அலெக்சாண்டர் வான் டெர் பெல்லன் மற்றும் அதிபர் கார்ல் நெஹம்மர் ஆகியோரை சந்திக்கிறார். 40 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியப் பிரதமர் ஒருவர் ஆஸ்திரியாவுக்குச் செல்வது இதுவே முதல்முறை.

ரஷ்யா, ஆஸ்திரியா ஆகிய நாடுகளுக்கான பயணம் குறித்து பிரதமரின் அறிக்கை

July 08th, 09:49 am

எரிசக்தி, பாதுகாப்பு, வர்த்தகம், முதலீடு, சுகாதாரம், கல்வி, கலாச்சாரம், சுற்றுலா, மக்களுக்கு இடையேயான பரிமாற்றங்கள் உள்ளிட்ட துறைகளில் கடந்த பத்து ஆண்டுகளில் இந்தியாவுக்கும் ரஷ்யாவுக்கும் இடையேயான சிறந்த முன்னுரிமை பாதுகாப்பு கூட்டாண்மை முன்னேறியுள்ளது.

இந்தியப் பிரதமரின் வருகைக்கு ஆஸ்திரியப் பிரதமர் வரவேற்பு தெரிவித்துள்ளார்: பிரதமர் மோடி நன்றி தெரிவித்துள்ளார்

July 07th, 08:57 am

ஆஸ்திரியாவுக்குக் கடந்த 40 ஆண்டுகளில் முதல் முறையாக இந்தியப் பிரதமர் ஒருவர் வருகை தருவதற்கு வரவேற்பு தெரிவித்து அந்நாட்டுப் பிரதமர் திரு கார்ல் நெஹம்மர் தெரிவித்த கருத்துகளுக்குப் பிரதமர் திரு நரேந்திர மோடி நன்றி தெரிவித்துள்ளார்.நாற்பது ஆண்டுகளில் இந்தியப் பிரதமர் ஒருவர் முதல் முறையாக வருகை தருவது சிறப்பு மிக்கதாகும். இந்தியாவுடனான தூதரக உறவுகளின் 75 ஆண்டுகளைக் கொண்டாடும் தருணத்தில் ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லாக இது அமைகிறது என்று ஆஸ்திரியப் பிரதமர் திரு கார்ல் நெஹம்மர் குறிப்பிட்டிருந்தார்.

ரஷ்யா, ஆஸ்திரியா ஆகிய நாடுகளுக்கு ஜூலை 08 முதல் 10-ம் தேதி வரை பிரதமர் பயணம்

July 04th, 05:00 pm

ரஷ்யா- ஆஸ்திரியா ஆகிய நாடுகளுக்குப் பிரதமர் திரு நரேந்திர மோடி ஜூலை 08 முதல் 10 வரை அரசு முறைப் பயணம் மேற்கொள்கிறார்.

Phone call between Prime Minister Shri Narendra Modi and H.E. (Dr.) Alexander Van der Bellen, Federal President of the Republic of Austria

May 26th, 08:00 pm

PM Modi had a telephone conversation with President Alexander Van der Bellen of Austria. Both the leaders reiterated their shared desire to further strengthen and persify India-Austria relations in the post-Covid world.

PM's meetings on the sidelines of St.Petersburg International Economic Forum

June 02nd, 10:38 pm

ஆஸ்த்ரியா அதிபர் திரு க்றிஸ்டியன் கெர்ன்-ஐ, SPIEF இடையே பிரதமர் நரேந்திர மோடி சந்தித்தார். பல்வேறு துறைகளில், இந்தியா-ஆஸ்த்ரியா இடையேயான இரு தரப்பு உறவுகள் தொடர்பாக பேச்சு வார்த்தைகள் நடந்தன.