ஸ்ரீ அரவிந்தரின் 150-வது பிறந்தநாளை நினைவுகூரும் நிகழ்ச்சியில் பிரதமர் டிசம்பர் 13-ம் தேதி பங்கேற்கிறார்

December 12th, 06:10 pm

பிரதமர் திரு நரேந்திர மோடி, ஸ்ரீ அரவிந்தரின் 150-வது பிறந்தநாளை முன்னிட்டு அவரை நினைவுகூரும் நிகழ்ச்சியில், டிசம்பர் 13 ம் தேதி மாலை 5 மணிக்கு காணொலிக் காட்சி மூலம் பங்கேற்கிறார். 75-வது விடுதலைப் பெருவிழாவின் ஒரு பகுதியாக புதுச்சேரி கம்பன் கலை சங்கம் சார்பில் நடைபெறும் இந்த நிகழ்ச்சியில், ஸ்ரீ அரவிந்தருக்கு பெருமை சேர்க்கும் வகையில், நாணயம் மற்றும் நினைவு தபால் தலையை பிரதமர் வெளியிடுகிறார். நாடு முழுவதும் ஸ்ரீ அரவிந்தரைப் பின்பற்றுபவர்கள் பங்கேற்கும் இந்த நிகழ்ச்சியில், அவர் உரையாற்றவுள்ளார்.

ஸ்ரீஅரவிந்தரின் பிறந்தநாளில் அவரை பிரதமர் நினைவுகூர்ந்தார்

August 15th, 07:02 pm

ஸ்ரீஅரவிந்தரின் பிறந்தநாளான இன்று பிரதமர் திரு நரேந்திர மோடி அவருக்கு புகழாரம் சூட்டியுள்ளார். சிறந்த அறிவாளியான ஸ்ரீஅரவிந்தர், நமது நாட்டைப் பற்றி தெளிவான பார்வை கொண்டிருந்தார். கல்வி, அறிவுசார் திறன், துணிச்சல் ஆகியவற்றை கொண்ட அவர், நம்மை தொடர்ந்து ஊக்குவிக்கிறார் என்று பிரதமர் கூறியுள்ளார்.

இந்திய கலாசாரத்தின் அதிர்வு உலகெங்கிலும் உள்ள மக்களை எப்போதும் ஈர்த்துள்ளது: ‘மன் கீ பாத்’தின் (மனதின் குரல்) போது பிரதமர் மோடி.

January 30th, 11:30 am

நண்பர்களே, சுதந்திரத்தின் அமிர்த மஹோத்சவத்தின் இந்த வேளையில் தேசம் இந்த முயற்சிகள் வாயிலாக தேசிய அடையாளங்களை மீண்டும் நிறுவிக் கொண்டிருக்கிறது. இண்டியா கேட்டிற்கு அருகே, அமர் ஜவான் ஜோதி, இதன் அருகிலேயே தேசிய போர் நினைவுச்சின்னத்தில் ஒளிவிடும் தீபங்கள் ஒருங்கிணைக்கப்பட்டன. இந்த உணர்ச்சிபூர்வமான சந்தர்ப்பத்தின் போது எத்தனையோ நாட்டுமக்கள் மற்றும் தியாகிகளின் குடும்பங்களின் கண்களில் கண்ணீர் நிரம்பியது. தேசிய போர் நினைவுச்சின்னத்தில், சுதந்திரத்திற்குப் பிறகு உயிர்த்தியாகம் செய்த, தேசத்தின் அனைத்துத் தியாகிகளின் பெயர்களும் பொறிக்கப்பட்டிருக்கின்றன. உயிர்த்தியாகிகளின் நினைவகத்தின் முன்னால் ஒளிவிடும் அமர் ஜவான் ஜோதி, தியாகிகளின் அமரத்துவத்தை எடுத்துக்காட்டுகிறது, என்று சில முன்னாள் இராணுவத்தினர் எனக்குக் கடிதம் வாயிலாகத் தெரிவித்திருந்தார்கள். உண்மையில், அமர் ஜவான் ஜோதியைப் போலவே நமது உயிர்த்தியாகிகள், அவர்கள் அளிக்கும் உத்வேகம்-பங்களிப்பு ஆகியவையும் அமரத்துவம் வாய்ந்தவை. எப்போது உங்களுக்கு வாய்ப்புக் கிடைக்கிறதோ, நீங்கள் கண்டிப்பாக தேசிய போர் நினைவுச்சின்னம் சென்று பாருங்கள் என்று உங்கள் அனைவரிடத்திலும் நான் வேண்டிக் கொள்கிறேன். உங்கள் குடும்பத்தார்-குழந்தைகளோடு சென்று காணுங்கள். ஒரு அலாதியான ஆற்றலையும் உத்வேகத்தையும் இங்கே உங்களால் அனுபவிக்க இயலும்.

புதுச்சேரியில் நடைபெற்ற 25-வது தேசிய இளைஞர் விழா தொடக்க நிகழ்ச்சியில் பிரதமர் ஆற்றிய உரையின் முக்கிய அம்சங்கள்

January 12th, 03:02 pm

புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை அவர்களே, முதலமைச்சர் என் ரங்கசாமி அவர்களே, திரு அனுராக் தாக்கூர் அவர்களே மற்றும் சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்களே, இளம் நண்பர்களே, அனைவருக்கும் தேசிய இளைஞர் தின வாழ்த்துக்கள்.

புதுச்சேரியில் 25-வது தேசிய இளையோர் விழாவைப் பிரதமர் தொடங்கி வைத்தார்

January 12th, 11:01 am

கூடியிருந்தோரிடையே உரையாற்றிய பிரதமர், தேசிய இளையோர் தினத்தன்று நாட்டு மக்களுக்கு வாழ்த்து தெரிவித்தார். சுவாமி விவேகானந்தருக்குத் தலைவணங்கிய பிரதமர், சுதந்திரத்தின் 75-வது ஆண்டு பெருவிழா நடைபெறும் இந்த ஆண்டில் அவரது பிறந்த நாள் அனைத்து வகையிலும் கூடுதல் ஊக்கமளிப்பதாக இருக்கிறது என்றார். இதே ஆண்டில் ஸ்ரீஅரவிந்தரின் 150-வது பிறந்த தினம் கொண்டாடப்படுவதும் மகாகவி சுப்பிரமணிய பாரதியின் 100-வது நினைவுதினம் அனுசரிக்கப்படுவதும் குறிப்பிடத்தக்கது என்று பிரதமர் கூறினார். “இந்த இரு துறவிகளும் புதுச்சேரியுடன் தனித்துவ உறவைக் கொண்டிருக்கிறார்கள். இலக்கியம் மற்றும் ஆன்மிகப் பயணத்தில் ஒருவர் மற்றொருவரின் கூட்டாளியாக இருந்திருக்கிறார்கள்” என்று பிரதமர் கூறினார்.

ஸ்ரீ அரவிந்தரின் 150-வது பிறந்த நாளைக் கொண்டாடுவதற்கான உயர்மட்டக் குழுவின் முதல் கூட்டத்திற்கு பிரதமர் தலைமை தாங்கினார்

December 24th, 06:52 pm

ஸ்ரீ அரவிந்தரின் 150-வது பிறந்த நாளைக் கொண்டாடுவதற்காக அமைக்கப்பட்டுள்ள உயர்நிலைக் குழுவின் முதல் கூட்டத்திற்கு பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று தலைமை தாங்கினார். உயர்நிலைக் குழு குறித்த அறிவிப்பு டிசம்பர் 20, 2021 அன்று வெளியிடப்பட்டது. பல்வேறு துறைகளைச் சேர்ந்த 53 பேர் குழுவில் உறுப்பினர்களாக உள்ளனர்.

சர்தார்தம் பவன் மற்றும் சர்தார்தம் இரண்டாம் கட்டப் பணிக்கான பூமிபூஜையின் போது பிரதமர் ஆற்றிய உரையின் முக்கிய அம்சங்கள்

September 11th, 11:01 am

இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள குஜராத் முதலமைச்சர் திரு. விஜய் ரூபானி அவர்களே, துணை முதலமைச்சர் திரு. நிதின் அவர்களே, எனது அமைச்சரவை தோழர்கள் திரு. பர்சோத்தம் ரூபலா, திரு. மன்சுக் மாண்டவியா, அனுப்பிரியா பட்டேல், நாடாளுமன்ற உறுப்பினரும் குஜராத் மாநில பிஜேபி தலைவர் திரு. சி.ஆர் பாட்டீல் , குஜராத் மாநில அமைச்சர்கள், சட்ட மன்ற , நாடாளுமன்ற உறுப்பினர்கள், சர்தார்தாம் அறக்கட்டளை உறுப்பினர்கள், சகோதர, சகோதரிகள் அனைவருக்கும் வணக்கம்!

சர்தார்தாம் பவன் மற்றும் சர்தார்தாம் 2வது பெண்கள் விடுதி பூமி பூஜையை, பிரதமர் தொடங்கி வைத்தார்

September 11th, 11:00 am

சர்தார்தாம் பவன் மற்றும் சர்தார்தாம் 2வது பெண்கள் விடுதி பூமி பூஜையை, காணொலி காட்சி மூலம் பிரதமர் திரு நரேந்திர மோடி தொடங்கி வைத்தார். குஜராத் முதல்வர் மற்றும் துணை முதல்வர் ஆகியோர் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

75-வது சுதந்திர தினத்தன்று செங்கோட்டை கொத்தளத்தில் பிரதமர் திரு. நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு உரையாற்றினார்

August 15th, 03:02 pm

இன்று விடுதலையின் அமிர்தப் பெருவிழா நாளில், நாடு தனது விடுதலைப் போராட்ட வீரர்கள் அனைவருக்கும், நாட்டைப் பாதுகாப்பதில் இரவு பகலாகப் பாடுபட்டு வரும் துணிச்சல் மிக்க வீரர்களுக்கும் தலைவணங்குகிறது. விடுதலைப் போராட்டத்தை மக்கள் போராட்டமாக மாற்றிய மகாத்மா காந்தியடிகள் விடுதலைக்காக அனைத்தையும் தியாகம் புரிந்த நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் அல்லது பகத் சிங், சந்திரசேகர் ஆசாத், பிஸ்மில், அசாபகுல்லா கான் போன்ற புரட்சியாளர்கள், ஜான்சிராணி லட்சுமி பாய், கிட்டூர் ராணி சென்னம்மா அல்லது கைடின்லு ராணி அல்லது மதன்கினிஹஸ்ரா, நாட்டின் முதல் பிரதமர் பண்டிட் நேரு, நாட்டை ஒன்றுபட்ட தேசமாக்கிய சர்தார் வல்லபாய் பட்டேல், இந்தியாவுக்கு எதிர்கால வழியைக் காட்டிய பாபா சாகிப் அம்பேத்கர் உள்ளிட்ட அனைவரையும் நாடு நினைவு கூருகிறது. இப் பெரும் ஆளுமைகளுக்கு நாடு நன்றிக்கடன்பட்டுள்ளது.

75-ஆவது சுதந்திர தினத்தன்று செங்கோட்டையிலிருந்து பிரதமர் ஆற்றிய உரை

August 15th, 07:38 am

75-ஆவது சுதந்திர தினம், விடுதலையின் அம்ருத் மஹோத்சவத்தை முன்னிட்டு உங்கள் அனைவருக்கும், உலகெங்கிலும் இருந்து இந்தியா மீதும் ஜனநாயகத்தின் மீதும் பற்று கொண்டிருப்பவர்கள் அனைவருக்கும் நல்வாழ்த்துகள்.

இந்தியா 75-வது சுதந்திர தினத்தை கொண்டாடுகிறது

August 15th, 07:37 am

நாடு 75-வது சுதந்திர தினத்தை கொண்டாடும் போது பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று செங்கோட்டையில் இருந்து நாட்டு மக்களுடன் உரையாற்றினார். உரையின் போது, பிரதமர் மோடி தனது அரசின் சாதனைகளை பட்டியலிட்டு, எதிர்காலத்திற்கான திட்டங்களை வகுத்தார். அவர் தனது பிரபலமான முழக்கமான சப்கா சாத், சப்கா விகாஸ் மற்றும் சப்கா விஸ்வாஸ் (ஒன்றாக, அனைவரின் வளர்ச்சிக்கும், அனைவரின் நம்பிக்கையுடனும்) இன்னொன்றைச் சேர்த்தார். இந்த குழுவிற்கு சமீபத்திய நுழைவு சப்கா பிரயாஸ் (அனைவரின் முயற்சி) ஆகும்.

PM Modi addresses public meeting at Puducherry

March 30th, 04:31 pm

Addressing a public meeting in Puducherry today, Prime Minister Narendra Modi said, “There is something special about Puducherry that keeps bringing me back here again and again.” He accused Congress government for its negligence and said, “In the long list of non-performing Congress governments over the years, the previous Puducherry Government has a special place. The ‘High Command’ Government of Puducherry failed on all fronts.”

பிரபுத்த பாரதா-வின் 125-ஆம் ஆண்டு விழாவில் பிரதமரின் உரை

January 31st, 03:01 pm

சுவாமி விவேகானந்தரால் தொடங்கப்பட்ட ராமகிருஷ்ணா இயக்கத்தின் மாதாந்திர சஞ்சிகையான பிரபுத்த பாரதா-வின் 125-ஆம் ஆண்டு விழாவில் பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று உரையாற்றினார்.

பிரபுத்த பாரதா-வின் 125-ஆம் ஆண்டு விழாவில் பிரதமர் உரையாற்றினார்

January 31st, 03:00 pm

சுவாமி விவேகானந்தரால் தொடங்கப்பட்ட ராமகிருஷ்ணா இயக்கத்தின் மாதாந்திர சஞ்சிகையான பிரபுத்த பாரதா-வின் 125-ஆம் ஆண்டு விழாவில் பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று உரையாற்றினார்.

'பிரபுத்த பாரதா'-வின் 125-ஆம் ஆண்டு விழாவில் 31 ஜனவரி அன்று பிரதமர் உரையாற்றவிருக்கிறார்

January 29th, 02:51 pm

1896-ஆம் ஆண்டு சுவாமி விவேகானந்தரால் தொடங்கப்பட்ட ராமகிருஷ்ண இயக்கத்தின் மாதாந்திர சஞ்சிகையான 'பிரபுத்த பாரதா'-வின் 125-ஆம் ஆண்டு விழாவில் 31 ஜனவரி அன்று பிற்பகல் 3.15 மணிக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி உரையாற்றவிருக்கிறார். மாயாவதியில் உள்ள அத்வைத ஆசிரமத்தால் இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்படுகிறது.

Social Media Corner 25 February 2018

February 25th, 07:27 pm

Your daily dose of governance updates from Social Media. Your tweets on governance get featured here daily. Keep reading and sharing!

புதுச்சேரியின் ஆரோவிலில் பிரதமர் திரு. நரேந்திர மோடி ஆற்றிய உரை

February 25th, 12:58 pm

ஆரோவிலின் பொன் விழா வாரக் கொண்டாட்டத்தில், பங்கேற்றதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன். ஆன்மிகத் தலைமையாக இந்தியா இருக்க வேண்டும் என்ற திரு. அரவிந்தரின் கனவு, இன்றும் கூட நமக்கு உந்துதலாக உள்ளது.

இரு மாநிலங்கள், இரு யூனியன் பிரதேசங்களில் 2 நாட்கள் பிரதமர் பயணம்

February 23rd, 04:13 pm

பிரதமர் திரு. நரேந்திர மோடி தமிழ்நாடு புதுச்சேரி உள்பட இரண்டு மாநிலங்கள், இரு யூனியன் பிரதேசங்களுக்கு இரு நாள் பயணம் மேற்கொள்கிறார். தமிழ்நாடு மற்றும் குஜராத் ஆகிய மாநிலங்களிலும், டாமன் டையூ, புதுச்சேரி ஆகிய யூனியன் பிரதேசங்களில் அவர் பல நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார்.