ஸ்மார்ட் இந்தியா ஹேக்கத்தான் 2024-ல் பிரதமர் ஆற்றிய உரையின் தமிழாக்கம்
December 11th, 05:00 pm
செங்கோட்டையில் இருந்து ஒரு விஷயத்தை நான் எப்போதும் குறிப்பிட்டு வந்திருக்கிறேன் என்பதை நீங்கள் அனைவரும் நினைவில் கொள்ள வேண்டும். அனைவரும் இணைவோம், அனைவரின் முயற்சியும் முக்கியம் என்று நான் கூறியுள்ளேன். இன்றைய பாரதம் அனைவரின் கூட்டு முயற்சிகளின் மூலமே துரித வேகத்தில் முன்னேறிச் செல்ல முடியும். இந்த கொள்கைக்கு இன்று ஒரு உதாரணம் அமைந்துள்ளது. ஸ்மார்ட் இந்தியா ஹேக்கத்தானின் இந்த பிரம்மாண்டமான இறுதிப் போட்டிக்காக நான் ஆவலுடன் காத்திருக்கிறேன். உங்களைப் போன்ற இளம் கண்டுபிடிப்பாளர்களுடன் இருக்கும் போதெல்லாம், புதிய நுண்ணறிவுகளைக் கற்றுக்கொள்ளவும், புரிந்து கொள்ளவும் எனக்கு வாய்ப்பு கிடைக்கிறது. உங்கள் அனைவரிடமிருந்தும் எனக்கு அதிக எதிர்பார்ப்புகள் உள்ளன. உங்களைப் போன்ற இளம் கண்டுபிடிப்பாளர்களுக்கு 21+ம் நூற்றாண்டு பாரதத்தைப் பார்ப்பதில் ஒரு தனித்துவமான கண்ணோட்டம் உள்ளது. அதனால்தான் உங்கள் தீர்வுகளும் தனித்துவமானவைகளாக இருக்கின்றன. இப்போது, இந்த ஹேக்கத்தானில் நாட்டின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த குழுக்கள் என்ன பணியாற்றி வருகின்றன என்பதை அறிய நான் ஆர்வமாக உள்ளேன். உங்கள் கண்டுபிடிப்புகள் பற்றி அறிய மிகவும் ஆவலாக உள்ளேன். எனவே, ஆரம்பிக்கலாம்!நவீன இந்தியா ஹேக்கத்தான் 2024 பங்கேற்பாளர்களுடன் பிரதமர் திரு. நரேந்திர மோடி கலந்துரையாடினார்
December 11th, 04:30 pm
நவீன இந்தியா ஹேக்கத்தான் 2024-இன் பிரமாண்ட நிறைவு நிகழ்ச்சியில் பிரதமர் திரு. நரேந்திர மோடி காணொலிக் காட்சி மூலம் இளம் கண்டுபிடிப்பாளர்களுடன் கலந்துரையாடினார். நிகழ்ச்சியில் கூடியிருந்தவர்களிடையே உரையாற்றிய பிரதமர், செங்கோட்டையில் இருந்து ஆற்றிய உரைகளில் 'அனைவரும் இணைவோம்' என்ற நடைமுறையை மீண்டும் மீண்டும் வலியுறுத்தியதை நினைவுபடுத்தினார். நவீன இந்தியா ஹேக்கத்தானின் மாபெரும் இறுதிப் போட்டிக்காக நான் ஆவலுடன் காத்திருந்தேன் என்று கூறிய பிரதமர், இளம் கண்டுபிடிப்பாளர்கள் மத்தியில் தான் இருக்கும்போது, புதியவற்றைக் கற்றுக்கொள்ளவும், புரிந்து கொள்ளவும் தனக்கு வாய்ப்பு கிடைக்கிறது என்று குறிப்பிட்டார். இளம் கண்டுபிடிப்பாளர்களிடம் இருந்து தாம் அதிகம் எதிர்பார்ப்பதாக தெரிவித்த பிரதமர், 21-ஆம் நூற்றாண்டின் இந்தியாவை வித்தியாசமாகப் பார்க்கும் தொலைநோக்குப் பார்வையை அவர்கள் கொண்டிருப்பதாகத் தெரிவித்தார். எனவே, உங்கள் தீர்வுகளும் வேறுபட்டவை, ஒரு புதிய சவால் வரும்போது, நீங்கள் புதிய மற்றும் தனித்துவமான தீர்வுகளைக் கொண்டு வருகிறீர்கள் என்று திரு மோடி கூறினார். கடந்த காலத்தில் ஹேக்கத்தான் போட்டிகளில் பங்கேற்றதை நினைவுகூர்ந்த பிரதமர், ஹேக்கத்தான் போட்டிகளின் வெளியீடு குறித்து தான் ஒருபோதும் ஏமாற்றம் அடைந்ததில்லை என்றார். நீங்கள் எனது நம்பிக்கையை நீங்கள் வலுப்படுத்தியுள்ளீர்கள் என்று கூறிய அவர், கடந்த காலங்களில் வழங்கப்பட்ட தீர்வுகள் பல்வேறு அமைச்சகங்களில் பயன்படுத்தப்படுகின்றன என்பதை அடிக்கோடிட்டுக் காட்டினார்.Science for Self-Reliance is our mantra: PM Modi
September 26th, 05:15 pm
PM Modi dedicated to the nation three PARAM Rudra Supercomputers worth around Rs 130 crore. Developed indigenously under the National Supercomputing Mission, these supercomputers have been deployed in Pune, Delhi and Kolkata to facilitate pioneering scientific research. The PM also inaugurated a High-Performance Computing system tailored for weather and climate research.மூன்று பரம் ருத்ரா சூப்பர் கம்ப்யூட்டர்களை பிரதமர் திரு நரேந்திர மோடி காணொலிக் காட்சி மூலம் நாட்டுக்கு அர்ப்பணித்தார்
September 26th, 05:00 pm
சுமார் ரூ.130 கோடி மதிப்பிலான மூன்று பரம் ருத்ரா சூப்பர் கம்ப்யூட்டர்களை பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று காணொலிக் காட்சி மூலம் நாட்டுக்கு அர்ப்பணித்தார். தேசிய சூப்பர் கம்ப்யூட்டிங் இயக்கத்தின் (NSM) கீழ் உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட இந்த சூப்பர் கம்ப்யூட்டர்கள், முன்னோடி அறிவியல் ஆராய்ச்சிக்கு உதவுவதற்காக புனே, டெல்லி மற்றும் கொல்கத்தாவில் நிறுவப்பட்டுள்ளன. வானிலை மற்றும் பருவநிலை ஆராய்ச்சிக்காக வடிவமைக்கப்பட்ட உயர் செயல்திறன் கொண்ட கம்ப்யூட்டிங் (HPC) அமைப்பையும் பிரதமர் தொடங்கி வைத்தார்.பீகார் மாநிலம் ராஜ்கிரில் நாளந்தா பல்கலைக்கழக வளாகத் திறப்பு விழாவில் பிரதமர் ஆற்றிய உரை
June 19th, 10:31 am
மூன்றாவது முறையாக பதவியேற்ற முதல் 10 நாட்களுக்குள், நாளந்தாவுக்கு வரும் வாய்ப்பு எனக்கு கிடைத்துள்ளது. இது உண்மையில் எனக்கு கிடைத்த நல்வாய்ப்பு. பாரதத்தின் வளர்ச்சிப் பயணத்திற்கான ஒரு நல்ல அறிகுறியாக இதைப் பார்க்கிறேன். நாளந்தா என்பது வெறும் பெயர் மட்டுமல்ல. நாளந்தா என்பது ஒரு அடையாளம், ஒரு மரியாதை. நாளந்தா என்பது ஒரு மதிப்பு, ஒரு மந்திரம், ஒரு பெருமிதம், ஒரு கதை. புத்தகங்கள் நெருப்பில் எரிந்தாலும் அறிவை அணைக்க முடியாது என்ற உண்மையை நாளந்தா வெளிப்படுத்துகிறது. நாளந்தாவின் அழிவு பாரதத்தை இருளால் நிரப்பியது. இப்போது, அதன் மறுசீரமைப்பு பாரதத்தின் பொற்காலத்தின் தொடக்கத்தைக் குறிக்கிறது.பீகார் மாநிலம் ராஜ்கிரில் நாளந்தா பல்கலைக்கழக வளாகத்தை பிரதமர் திறந்து வைத்தார்
June 19th, 10:30 am
பீகார் மாநிலம் ராஜ்கிரில் நாளந்தா பல்கலைக்கழகத்தின் புதிய வளாகத்தை பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று (19.06.2024) தொடங்கி வைத்தார். இந்தியா மற்றும் கிழக்கு ஆசிய உச்சி மாநாட்டு நாடுகளின் கூட்டு முயற்சியாக இந்தப் பல்கலைக்கழக வளாகம் அமைக்கப்பட்டுள்ளது. இதற்கான திறப்பு விழாவில் 17 நாடுகளின் தூதரகங்களின் பிரதிநிதிகள் உட்பட பல முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர். பிரதமர் இந்நிகழ்ச்சியில் மரக்கன்று ஒன்றையும் நட்டார்.புதுதில்லி பாரத மண்டபத்தில் நடைபெற்ற ஸ்டார்ட்-அப் மகா கும்பமேளாவில் பிரதமர் ஆற்றிய உரையின் தமிழாக்கம்
March 20th, 10:40 am
அமைச்சரவையில் உள்ள எனது சக நண்பர்கள் திரு பியூஷ் கோயல் அவர்களே, திருமிகு அனுப்பிரியா படேல் அவர்களே, திரு சோம் பிரகாஷ் அவர்களே, மதிப்பிற்குரிய பிரமுகர்களே, நாடு முழுவதும் உள்ள புத்தொழில் நிறுவனங்களைச் சேர்ந்த நமது நண்பர்களே! உங்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். பலர் புத்தொழில் நிறுவனங்களைத் தொடங்குகிறார்கள், அரசியலில் அது இன்னும் அதிகமாக உள்ளது, அவை மீண்டும் மீண்டும் தொடங்கப்பட வேண்டும்.புதுதில்லி பாரத மண்டபத்தில் ஸ்டார்ட் அப் மகா கும்பமேளாவை பிரதமர் தொடங்கி வைத்தார்
March 20th, 10:36 am
புதுதில்லி பாரத மண்டபத்தில் இன்று ஸ்டார்ட்-அப் எனப்படும் புத்தொழில் நிறுவன மகா கும்பமேளாவை பிரதமர் திரு. நரேந்திர மோடி தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் காட்சிப்படுத்தப்பட்ட கண்காட்சியையும் அவர் பார்வையிட்டார்.எக்கனாமிக் டைம்ஸ் நவ் உலகளாவிய வர்த்தக உச்சி மாநாடு 2024-ல் பிரதமர் ஆற்றிய உரையின் தமிழாக்கம்
February 09th, 08:30 pm
கயானா பிரதமர் திரு. மார்க் பிலிப்ஸ் அவர்களே, திரு. வினீத் ஜெயின் அவர்களே, தொழில்துறைத் தலைவர்களே, தலைமைச் செயல் அதிகாரிகளே, இதர பிரமுகர்களே வணக்கம்.இ.டி.நவ் (எகனாமிக் டைம்ஸ் நவ் ) உலக வர்த்தக உச்சி மாநாடு 2024-ல் பிரதமரின் உரை
February 09th, 08:12 pm
புதுதில்லியில் உள்ள ஹோட்டல் தாஜ் பேலஸில் இன்று நடைபெற்ற இ.டி.நவ் (எகனாமிக் டைம்ஸ் நவ் ) உலகளாவிய வர்த்தக உச்சி மாநாடு 2024-ல் பிரதமர் திரு. நரேந்திர மோடி உரையாற்றினார்.7-வது இந்திய மொபைல் மாநாடு தொடக்க விழாவில் பிரதமர் ஆற்றிய உரையின் தமிழாக்கம்
October 27th, 10:56 am
இந்தியா மொபைல் மாநாட்டின் ஏழாவது பதிப்பில் உங்களுடன் பங்கேற்பது ஒரு மகிழ்ச்சியான அனுபவம். 21-ஆம் நூற்றாண்டின் வேகமாக மாறிவரும் உலகில், இந்த நிகழ்வு லட்சக் கணக்கானவர்களின் இயங்குநிலையை மாற்றும் சக்தியைக் கொண்டுள்ளது. ஒரு காலத்தில் நாம் எதிர்காலத்தைப் பற்றிப் பேசினோம், அது அடுத்த தசாப்தம் அல்லது 20-30 ஆண்டுகளுக்குப் பிறகு அல்லது அடுத்த நூற்றாண்டைக் குறிக்கிறது. ஆனால், இன்று, ஒவ்வொரு நாளும் தொழில்நுட்பத்தில் ஏற்பட்டுள்ள விரைவான மாற்றங்களால், ‘எதிர்காலம், இங்கேயும், இப்போதும் உள்ளது’ என்று சொல்கிறோம். தொலைத்தொடர்பு, தொழில்நுட்பம், இணைப்பு, 6ஜி, செயற்கை நுண்ணறிவு, சைபர் பாதுகாப்பு, குறைக்கடத்திகள், ட்ரோன்கள், விண்வெளித் துறை, ஆழ்கடல் ஆய்வு, பசுமை தொழில்நுட்பம் அல்லது பிற துறைகளாக இருந்தாலும், வரவிருக்கும் காலம் முற்றிலும் வேறுபட்டதாக இருக்கும். இளைய தலைமுறையினர் நாட்டின் எதிர்காலத்தை வழிநடத்துகிறார்கள், நமது தொழில்நுட்ப புரட்சியை வழிநடத்துகிறார்கள் என்பது நம் அனைவருக்கும் மகிழ்ச்சியான விஷயம்.7-வது இந்திய மொபைல் மாநாட்டை பிரதமர் தொடங்கி வைத்தார்
October 27th, 10:35 am
புதுதில்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் 7-வது இந்தியா மொபைல் மாநாடு 2023-ஐ பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று (27.10.2023) தொடங்கி வைத்தார். இந்திய மொபைல் மாநாடு (ஐஎம்சி) என்பது ஆசியாவின் மிகப்பெரிய தொலைத்தொடர்பு, ஊடக மற்றும் தொழில்நுட்பக் கூட்டமைப்பாகும். இந்த மாநாடு 2023 அக்டோபர் 27 முதல் 29 வரை 'உலகளாவிய டிஜிட்டல் கண்டுபிடிப்பு' என்ற கருப்பொருளுடன் நடைபெறுகிறது. ஐஎம்சி 2023 முக்கிய அதிநவீன தொழில்நுட்பங்களின் மேம்பாடு, உற்பத்தி மற்றும் ஏற்றுமதி ஆகியவற்றில் இந்தியாவின் நிலையை வலுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்த நிகழ்ச்சியில், நாடு முழுவதும் உள்ள கல்வி நிறுவனங்களுக்கு 100 '5ஜி பயன்பாட்டு ஆய்வகங்களை பிரதமர் வழங்கினார்.15-வது பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் பேச்சு
August 23rd, 03:30 pm
15-வது பிரிக்ஸ் உச்சி மாநாட்டை பிரமாண்டமாக ஏற்பாடு செய்ததற்காகவும், எங்களுக்கு அளிக்கப்பட்ட அன்பான விருந்தோம்பலுக்காகவும் எனது அன்பு நண்பர் அதிபர் ராமஃபோசாவுக்கு நான் மீண்டும் ஒரு முறை வாழ்த்துக்களையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன்.77-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு பிரதமர் திரு. நரேந்திர மோடி செங்கோட்டையில் இருந்து நாட்டு மக்களுக்கு உரையாற்றினார்.
August 15th, 02:14 pm
எனதருமை 140 கோடி குடும்ப உறுப்பினர்கள், உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடு, இப்போது மக்கள் தொகையின் கண்ணோட்டத்தில் கூட நாம் நம்பிக்கையில் முதலிடத்தில் இருக்கிறோம் என்று பலர் கருதுகின்றனர். இவ்வளவு பெரிய நாடு, 140 கோடி நாட்டு மக்கள், எனது சகோதர சகோதரிகள், எனது குடும்ப உறுப்பினர்கள் இன்று சுதந்திரத் திருநாளைக் கொண்டாடுகிறார்கள். இந்தியாவை நேசிக்கும், இந்தியாவை மதிக்கும், இந்தியாவைப் பற்றி பெருமிதம் கொள்ளும் கோடிக்கணக்கான நாட்டு மக்களுக்கும், உலக மக்களுக்கும் இந்த மாபெரும் சுதந்திரத் திருநாளில் எனது நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.India Celebrates 77th Independence Day
August 15th, 09:46 am
On the occasion of India's 77th year of Independence, PM Modi addressed the nation from the Red Fort. He highlighted India's rich historical and cultural significance and projected India's endeavour to march towards the AmritKaal. He also spoke on India's rise in world affairs and how India's economic resurgence has served as a pole of overall global stability and resilient supply chains. PM Modi elaborated on the robust reforms and initiatives that have been undertaken over the past 9 years to promote India's stature in the world.77வது சுதந்திர தினத்தை முன்னிட்டு செங்கோட்டை கொத்தளத்தலிருந்து பிரதமர் திரு நரேந்திர மோடி நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்
August 15th, 07:00 am
உலகின் மிகப் பெரிய ஜனநாயகமாகவும் அதே போல் மக்கள் தொகை பின்னணியிலும் நாம் முதலாவது இடத்தில் இருப்பதாக நம்பிக்கைக் கொண்டுள்ளோம். அத்தகைய மகத்தான தேசம் இன்று தனது 140 கோடி சகோதர சகோதரிகள் மற்றும் அனைத்து குடும்ப உறுப்பினர்களுடன் சுதந்திரத் திருநாளைக் கொண்டாடுகிறது. இந்த முக்கியமான, புனிதமான தருணத்தில், நாட்டின் ஒவ்வொரு குடிமகனுக்கும், நமது தேசமான இந்தியாவை நேசிக்கும், மதிக்கும் மற்றும் பெருமை கொள்ளும் ஒவ்வொருவருக்கும் எனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.புதுதில்லியில் நடைபெற்ற தேசிய தொழில்நுட்ப தின விழாவில் பிரதமர் ஆற்றிய ஆங்கில உரையின் தமிழாக்கம்
May 11th, 11:00 am
நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள எனது சக ஊழியர்களான திரு ராஜ்நாத் சிங் அவர்களே, டாக்டர் ஜிதேந்திர சிங் அவர்களே, அறிவியல் மற்றும் தொழில்நுட்ப சமூகத்தைச் சேர்ந்த உறுப்பினர்களும் எனது இளம் சக ஊழியர்களே, இந்திய வரலாற்றின் பெருமைமிகு நாட்களில் இன்றைய நாளும் ஒன்று. இந்த நாளில் தான் இந்திய அறிஞர்கள் பொக்ரான் அணுகுண்டு சோதனை நடத்தி இந்திய குடிமகன் ஒவ்வொருவரையும் பெருமை பட வைத்தனர். அடல் பிகாரிப் வாஜ்பாய், இந்தியாவின் அணுகுண்டு சோதனை வெற்றி பெற்றதை இந்த நாளில் அறிவித்ததை என்னால் ஒருபோதும் மறக்க முடியாது. பொக்ரான் அணுகுண்டு சோதனை, இந்தியாவின் அறிவியல் வல்லமையை நிரூபித்ததுடன், உலக அரங்கில் இந்தியாவிற்கு புதிய அடையாளத்தையும் நிலை நிறுத்தியது. “நாம் நமது பயணத்தை நிறுத்தவில்லை நமது வழியில் வரும் எந்தவொரு சவால்களுக்கும் அடிபணிந்ததில்லை” என்ற அடல் பிகாரி வாஜ்பாய்-ன் வார்த்தைகளை நினைவு கூறுகிறேன். நாட்டு மக்கள் அனைவருக்கும் எனது தேசிய தொழில்நுட்ப தின வாழ்த்துகள்.தேசிய தொழில்நுட்ப தினம் 2023-ஐ குறிக்கும் நிகழ்ச்சியை பிரதமர் மே 11 அன்று புதுதில்லியில் தொடங்கிவைத்தார்
May 11th, 10:30 am
தேசிய தொழில்நுட்ப தினம் 2023-ஐ குறிக்கும் நிகழ்ச்சியை பிரதமர் திரு நரேந்திர மோடி மே 11 அன்று புதுதில்லி, பிரகதி மைதானத்தில் தொடங்கிவைத்தார். தேசிய தொழில்நுட்ப தினத்தின் 25-வது ஆண்டு கொண்டாட்டம் மே 11-ல் தொடங்கி 14-ம் தேதி வரை நடைபெறுவதையொட்டி இந்நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இந்நிகழ்ச்சியில், ரூ.5800 கோடிக்கும் கூடுதல் மதிப்பிலான பல்வேறு அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மேம்பாடு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி முடிவுற்ற திட்டங்களை நாட்டுக்கு அர்ப்பணித்தார். நாட்டின் அறிவியல் நிறுவனங்களை வலுப்படுத்துவதன் மூலம் பிரதமரின் தற்சார்பு இந்தியா நோக்கத்தை அடையும்வகையில் இது அமைந்துள்ளது.If the world praises India it's because of your vote which elected a majority government in the Centre: PM Modi in Mudbidri
May 03rd, 11:01 am
Continuing his election campaigning spree, Prime Minister Narendra Modi today addressed a mega public meeting in Karnataka’s Mudbidri. May 10th, the day of the polls, is fast approaching. The BJP is determined to make Karnataka the top state and BJP's resolve is to make Karnataka a manufacturing super power. This is our roadmap for the coming years,” stated PM Modi.PM Modi addresses public meetings in Karnataka’s Mudbidri, Ankola and Bailhongal
May 03rd, 11:00 am
Continuing his election campaigning spree, Prime Minister Narendra Modi today addressed a mega public meeting in Karnataka’s Mudbidri. May 10th, the day of the polls, is fast approaching. The BJP is determined to make Karnataka the top state and BJP's resolve is to make Karnataka a manufacturing super power. This is our roadmap for the coming years,” stated PM Modi.