மணிப்பூரின் இம்பாலில், மாநில மற்றும் யூனியன் பிரதேச இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர்கள் பங்கேற்ற சிந்தனை முகாம் நிகழ்ச்சியில் பிரதமர் நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்

April 24th, 10:10 am

இந்த ஆண்டு சிந்தனை முகாம் மணிப்பூரில் நடைபெறுவது மகிழ்ச்சியளிக்கிறது. வடகிழக்கு மாநிலங்களைச் சேர்ந்த பல விளையாட்டு வீரர்கள் நாட்டுக்காக கோப்பைகளை வென்று மூவர்ணக் கொடியின் புகழை மேலும் உயர்த்தியுள்ளனர். இந்தப் பகுதியின் உள்ளூர் விளையாட்டுகளான சாகோல் கஞ்சாய், தங்-டா, யூபி லக்பி, முக்னா மற்றும் ஹியாங் தன்பா போன்றவை தனித்துவமான ஈர்ப்பைக் கொண்டுள்ளன. நாட்டின் விளையாட்டுப் பாரம்பரியத்தை முன்னோக்கி எடுத்துச் செல்வதில் மணிப்பூரும், வடகிழக்கு மாநிலங்களும் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கியுள்ளன. மணிப்பூரின் ஊ-லவாபி விளையாட்டு கபடியைப் போன்றது. இதேபோல் ஹியாங் தன்னபா விளையாட்டு கேரள மாநிலத்தில் நடத்தப்படும் படகுப் போட்டியை போன்றது. போலோ எனப்படும் குதிரையேற்றத்துடன் மணிப்பூர் மாநிலம் வரலாற்று ரீதியிலான நீண்ட தொடர்பைக் கொண்டுள்ளது. அத்துடன் வடகிழக்கு மாநிலங்கள் நாட்டின் கலாச்சார பன்முகத்தன்மைக்கு புதிய வண்ணங்களை சேர்த்து இருப்பதுடன் விளையாட்டுப் பன்முகத்தன்மைக்கும் புதிய பரிமாணத்தை வழங்கியுள்ளன. சிந்தனை முகாமின் இறுதியில் நாடு முழுவதும் உள்ள விளையாட்டுத்துறை அமைச்சர்கள் சிறந்த கற்றல் அனுபவத்தை பெறுவார்கள்.

மணிப்பூரின் இம்பாலில் நடைபெற்ற மாநில மற்றும் யூனியன் பிரதேச இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர்கள் பங்கேற்ற சிந்தனை முகாம் நிகழ்ச்சியில் பிரதமர் உரையாற்றினார்

April 24th, 10:05 am

மணிப்பூரின் இம்பாலில் இன்று நடைபெற்ற மாநில மற்றும் யூனியன் பிரதேச இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர்கள் பங்கேற்ற சிந்தனை முகாம் நிகழ்ச்சியில் பிரதமர் திரு நரேந்திர மோடி காணொலி மூலம் உரையாற்றினார்.

Social Media Corner – 6th November 2016

November 06th, 08:02 pm

Your daily does of governance updates from Social Media. Your tweets on governance get featured here daily. Keep reading and sharing!

2016-ம் ஆண்டுக்கான ஆசிய சாம்பியன்ஸ் கோப்பையை வென்ற இந்திய மகளிர் ஹாக்கி அணிக்கு பிரதமர் பாராட்டு

November 05th, 07:50 pm

Prime Minister Shri Narendra Modi has congratulated the Indian Women’s Hockey Team for winning the Asian Champions Trophy 2016.