புதுதில்லியில் நடைபெற்ற 2-வது ஆசிய பசிபிக் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர்கள் மாநாட்டில் பிரதமர் ஆற்றிய உரை
September 12th, 04:00 pm
பல்வேறு நாடுகளிலிருந்து வந்துள்ள அனைத்து பிரமுகர்களையும் நான் மனதார வரவேற்கிறேன். கடந்த இரண்டு நாட்களில், இந்தத் துறை தொடர்பான பல முக்கியமான விஷயங்கள் குறித்து நீங்கள் விவாதித்தீர்கள். சிவில் விமானப் போக்குவரத்துத் துறையில் சில பிரகாசமான எண்ணங்கள் நம்மிடம் உள்ளன என்று நான் நம்புகிறேன், இது நமது கூட்டு உறுதிப்பாட்டையும், ஆசிய பசிபிக் பிராந்தியத்தின் திறனையும் பிரதிபலிக்கிறது. இந்த அமைப்பு 80 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது, நமது அமைச்சர் திரு நாயுடுவின் வழிகாட்டுதல் மற்றும் தலைமையின் கீழ், 'தாயின் பெயரில் ஒரு மரக்கன்று மூலம் 80,000 மரங்களை நடவு செய்யும் ஒரு பெரிய முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. இருப்பினும், மற்றொரு விஷயத்தை உங்கள் கவனத்திற்கு கொண்டு வர விரும்புகிறேன். நம் நாட்டில், ஒருவர் 80 வயதை எட்டும் போது, அது ஒரு சிறப்பான முறையில் கொண்டாடப்படுகிறது. நம் முன்னோர்களின் கூற்றுப்படி, 80 வயதை எட்டுவது என்றால் ஆயிரம் பௌர்ணமிகளைக் காணும் வாய்ப்பு கிடைத்தது. ஒரு வகையில், எங்கள் துறை நிறுவனமும் ஆயிரம் பௌர்ணமிகளைக் கண்டுள்ளது மற்றும் அதை நெருக்கமாகப் பார்த்த அனுபவம் உள்ளது.செப்டம்பர் 12 அன்று நடைபெறும் ஆசிய பசிபிக் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர்களின் இரண்டாவது மாநாட்டில் பிரதமர் பங்கேற்கிறார்
September 11th, 07:41 pm
அனைத்து உறுப்பு நாடுகளும் தில்லி பிரகடனத்தை ஏற்றுக்கொள்வதையும் பிரதமர் பிரகடனம் செய்வார். இந்தப் பிராந்தியத்தின் விமானப் போக்குவரத்துத் துறையை புதிய உச்சத்திற்கு கொண்டு செல்வதற்கான தொலைநோக்குப் பார்வை கொண்ட செயல்திட்டமாகும்.