மின்னணு ஏற்றுமதியில் இந்தியாவின் முன்னேற்றத்தைப் பிரதமர் பாராட்டினார்
August 05th, 03:30 pm
மின்னணு ஏற்றுமதியில் இந்தியாவின் முன்னேற்றம் குறித்து பிரதமர் திரு நரேந்திர மோடி மிகுந்த மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். உலக அளவில் மின்னணு ஏற்றுமதி முதல் 3 இடங்களில் உள்ளது. புதியன காணும் இளைஞர் சக்திக்கு இந்தப் பெருமையை திரு மோடி அளித்தார். இந்த உத்வேகத்தை வரும் காலங்களிலும் தொடர இந்தியா உறுதிபூண்டுள்ளது என்று பிரதமர் மேலும் கூறினார்.மேற்கு வங்க ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் இரங்கல்
June 17th, 12:58 pm
மேற்கு வங்கத்தில் நிகழ்ந்த ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். மத்திய ரயில்வே அமைச்சர் திரு. அஸ்வினி வைஷ்ணவ் விபத்து நடந்த இடத்திற்குச் சென்று கொண்டிருக்கும் நிலையில், பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ மீட்புப் பணிகள் நடைபெற்று வருவதாக பிரதமர் உறுதியளித்தார். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு பிரதமரின் தேசிய நிவாரண நிதியில் இருந்து தலா ரூ.2 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரமும் வழங்கப்படும் என்று பிரதமர் அலுவலகம் அறிவித்துள்ளது.காட்கோபர் கிழக்கில் 'விக்சித் பாரத், விக்சித் மும்பை' (வளர்ந்த பாரத், வளர்ந்த மும்பை) க்கான விக்சித் பாரத் (வளர்ந்த பாரத்) தூதர்கள் சந்திப்பு
May 17th, 04:14 pm
விக்சித் பாரத் (வளர்ந்த பாரத்) தூதர்கள் மும்பையின் காட்கோபர் கிழக்கில் உள்ள பாட்டியா வாடியில் உள்ளூர் வைர வியாபாரிகள் மற்றும் வர்த்தகர்கள் சமூகத்துடன் தொடர்புகொள்வதற்காக சந்தித்தனர். அப்பகுதியில் இருந்து 300 க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் இந்த நிகழ்வில் இணைந்தனர், இதில் மத்திய ரயில்வே, தகவல் தொடர்பு மற்றும் ஐடி அமைச்சர் ஸ்ரீ அஸ்வினி வைஷ்ணவ் கலந்து கொண்டார். பங்கேற்பாளர்கள் தங்களின் ஆலோசனைகள் மற்றும் அனுபவங்களை அமைச்சரிடம் நேரடியாகப் பகிர்ந்து கொண்டதன் மூலம், சுதந்திரமான கருத்துப் பரிமாற்றம் நடைபெற்றது.அஞ்சலகக் கட்டுமானத்தின் முப்பரிமாண (3டி) அச்சுத்தொழில்நுட்பப் பயன்பாட்டைப் பிரதமர் பாராட்டியுள்ளார்
April 12th, 07:30 pm
பெங்களூரு அஞ்சலகக் கட்டுமானத்தில் முப்பரிமாண (3டி) அச்சுத் தொழில் நுட்பப் பயன்பாட்டைப் பிரதமர் திரு நரேந்திர மோடி பாராட்டியுள்ளார்.போபால் - புதுதில்லி இடையே வந்தே பாரத் விரைவு ரயிலைத் தொடங்கி வைத்து பிரதமரின் உரையின் ஆங்கில மொழியாக்கம்
April 01st, 03:51 pm
ராமநவமி அன்று இந்தூர் கோவிலில் நடந்த சோகம் குறித்து முதலில் எனது வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த விபத்தால் நம்மை விட்டு பிரிந்தவர்களுக்கு எனது அஞ்சலியை செலுத்துவதுடன் அவர்களது குடும்பத்தினருக்கு எனது இரங்கலையும் தெரிவித்துக் கொள்கிறேன். மேலும் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பக்தர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன்.மத்திய பிரதேசம் போபாலில் உள்ள ராணி கமலாபதி நிலையத்தில் வந்தே பாரத் அதிவிரைவு ரயிலை பிரதமர் கொடியசைத்து தொடங்கி வைத்தார்
April 01st, 03:30 pm
போபால் மற்றும் புது தில்லி இடையேயான வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலை மத்திய பிரதேச மாநிலம் போபாலில் உள்ள ராணி கமலாபதி ரயில் நிலையத்தில் பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று கொடியசைத்து தொடங்கி வைத்தார். பிரதமர் ராணி கமலாபதி புது தில்லி வந்தே பாரத் - எக்ஸ்பிரஸை ஆய்வு செய்தார். ரயிலில் குழந்தைகள் மற்றும் பணியாளர்களுடன் கலந்துரையாடினார்.