
எழுச்சிமிகு வடகிழக்கு முதலீட்டாளர்கள் உச்சி மாநாட்டில் பிரதமர் ஆற்றிய உரையின் தமிழாக்கம்
May 23rd, 11:00 am
மத்திய அமைச்சரவையில் உள்ள எனது சக அமைச்சர்கள் திரு ஜோதிராதித்ய சிந்தியா அவர்களே, திரு சுகந்தா மஜும்தார் அவர்களே, மணிப்பூர் ஆளுநர் திரு அஜய் பல்லா அவர்களே, அசாம் முதலமைச்சர் திரு ஹிமந்தா பிஸ்வா சர்மா அவர்களே, அருணாச்சல பிரதேச முதலமைச்சர் திரு பேமா காண்டு அவர்களே, திரிபுரா முதலமைச்சர் திரு மாணிக் சஹா அவர்களே, மேகாலயா முதலமைச்சர் திரு கான்ராட் சங்மா அவர்களே, சிக்கிம் முதலமைச்சர் திரு பிரேம் சிங் தமங் அவர்களே, நாகாலாந்து முதலமைச்சர் திரு நெய்பியு ரியோ அவர்களே, மிசோரம் முதலமைச்சர் திரு லால்துஹோமா அவர்களே, அனைத்து தொழில் துறை தலைவர்களே, முதலீட்டாளர்களே, பெண்களே, தாய்மார்களே வணக்கம்!
பிரதமர் திரு. நரேந்திர மோடி, எழுச்சி பெறும் வடகிழக்கு முதலீட்டாளர்கள் உச்சி மாநாடு 2025-ஐ தொடங்கி வைத்தார்
May 23rd, 10:30 am
பிரதமர் திரு. நரேந்திர மோடி, இன்று புதுதில்லியின் பாரத் மண்டபத்தில் எழுச்சி பெறும் வடகிழக்கு முதலீட்டாளர்கள் உச்சி மாநாடு 2025-ஐ தொடங்கி வைத்தார். இந்த நிகழ்விற்கு வருகை தந்த அனைத்து பிரமுகர்களையும் அன்புடன் வரவேற்ற பிரதமர், வடகிழக்கு பிராந்தியத்தின் எதிர்காலம் குறித்து மிகுந்த நம்பிக்கையை வெளிப்படுத்தினார். பாரத் மண்டபத்தில் சமீபத்தில் நடைபெற்ற அஷ்டலட்சுமி மஹோத்சவத்தை நினைவு கூர்ந்த அவர், இன்றைய நிகழ்வு வடகிழக்கில் முதலீட்டின் கொண்டாட்டத்தைக் குறிக்கிறது என்பதை சுட்டிக் காட்டினார். இந்த உச்சிமாநாட்டிற்கு தொழில்துறை தலைவர்களின் குறிப்பிடத்தக்க வருகையை பிரதமர் எடுத்துரைத்தார். இந்தப் பிராந்தியத்தில் உள்ள வாய்ப்புகளையும் அவர் சுட்டிக் காட்டினார். அனைத்து அமைச்சகங்களுக்கும் மாநில அரசுகளுக்கும் அவர் தமது வாழ்த்துக்களைத் தெரிவித்து, ஒரு செழிப்பான முதலீட்டுக்கு ஏற்ற சூழலை உருவாக்குவதில் அவர்கள் மேற்கொண்டுள்ள முயற்சிகளைப் பாராட்டினார். வடகிழக்குப் பிராந்தியத்தின் தொடர்ச்சியான வளர்ச்சிக்கும், செழிப்புக்குமான தமது உறுதிப்பாட்டை மீண்டும் அவர் எடுத்துரைத்தார்.
புதுதில்லியில் அஷ்டலட்சுமி மகோத்சவ் தொடக்க விழாவில் பிரதமர் ஆற்றிய உரையின் தமிழாக்கம்
December 06th, 02:10 pm
அசாம் முதலமைச்சர் திரு ஹிமந்தா பிஸ்வா சர்மா அவர்களே, மேகாலயா முதலமைச்சர் திரு கான்ராட் சங்மா அவர்களே, திரிபுரா முதலமைச்சர் திரு மாணிக் சாஹா அவர்களே, சிக்கிம் முதலமைச்சர் திரு பிரேம் சிங் தமாங் அவர்களே, எனது அமைச்சரவை சகாக்களான திரு ஜோதிராதித்ய சிந்தியா அவர்களே, திரு சுகந்தா மஜும்தார் அவர்களே, அருணாச்சலப் பிரதேச துணை முதல்வர் பிற மக்கள் பிரதிநிதிகளே, வடகிழக்கைச் சேர்ந்த சகோதர, சகோதரிகளே!அஷ்டலட்சுமி மஹோத்சவத்தை பிரதமர் திரு நரேந்திர மோடி தொடங்கி வைத்தார்
December 06th, 02:08 pm
புதுதில்லி பாரத மண்டபத்தில் அஷ்டலட்சுமி மஹோத்சவத்தை பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியின்போது சிறப்பு அஞ்சல் தலையையும் பிரதமர் வெளியிட்டார். நிகழ்ச்சியில் பேசிய திரு நரேந்திர மோடி, இன்று பாபாசாகேப் டாக்டர் பி.ஆர்.அம்பேத்கரின் மஹாபரி நிர்வாண் தினம் என்பதைக் குறிப்பிட்டார். பாபாசாஹேப் அம்பேத்கரால் உருவாக்கப்பட்ட அரசியலமைப்புச் சட்டம் அனைத்து மக்களுக்கும் பெரும் உத்வேகத்தை அளிக்கிறது என்றும் அவர் கூறினார்.அஷ்டலட்சுமி மகா திருவிழாவை டிசம்பர் 6 அன்று பிரதமர் தொடங்கி வைக்கிறார்
December 05th, 06:28 pm
வடகிழக்கு இந்தியாவின் கலாச்சார துடிப்பை வெளிப்படுத்த வேண்டும் என்ற தனது உறுதிப்பாட்டிற்கு ஏற்ப, பிரதமர் திரு நரேந்திர மோடி டிசம்பர் 6 அன்று பிற்பகல் 3 மணியளவில் புதுதில்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் அஷ்டலட்சுமி மகா திருவிழாவைத் தொடங்கி வைக்கிறார்.