ஆஷாத பூர்ணிமா- தம்மா சக்கர தின நிகழ்ச்சியில் பிரதமரின் செய்தி

July 24th, 08:44 am

உங்கள் அனைவருக்கும் இனிய தம்மா சக்கர தினம் மற்றும் ஆஷாத பூர்ணிமா வாழ்த்துகள். இன்று குரு பூர்ணிமாவையும் நாம் கொண்டாடுகிறோம். இந்த நாளில்தான், ஞானம் பெற்ற பிறகு உலகிற்கு தமது முதல் சமய உரையை பகவான் புத்தர் அருளினார். அறிவு எங்கு உள்ளதோ, அங்கு முழு நிறைவு இருக்கும் என்று நம் நாட்டில் கூறப்படுகிறது. இவ்வாறு தெரிவிப்பது புத்தராகவே இருக்கும்போது உலக நன்மையுடன் இணைந்த தத்துவமாக இயற்கையாகவே அது மாறுகிறது. துறவறம் மற்றும் சகிப்புத் தன்மையில் வேரூன்றி இருக்கும் புத்தர் இதனைக் கூறுகையில் இவை வெறும் வார்த்தைகள் மட்டுமல்ல, தர்மத்தின் ஒட்டுமொத்த சுழற்சியும் துவங்குகிறது. அன்று, வெறும் 5 சீடர்களுக்கு மட்டுமே அவர் அருளுரையை வழங்கினார், ஆனால் இன்றோ புத்தரின் மீது பற்று கொண்டுள்ள உலகம் முழுவதும் உள்ள மக்கள் அந்தத் தத்துவத்தைப் பின்பற்றி வருகிறார்கள்.

ஆஷாத பூர்ணிமா- தம்மா சக்கர தின நிகழ்ச்சியில் பிரதமரின் செய்தி

July 24th, 08:43 am

இன்றைய கொரோனா பெருந்தொற்று காலகட்டத்தில் பகவான் புத்தர் மிகவும் பொருத்தமாக இருப்பதாக பிரதமர் திரு நரேந்திர மோடி கூறியுள்ளார். புத்தர் காட்டிய வழியை பின்பற்றினால் எவ்வளவு கடினமான சவாலையும் நம்மால் எவ்வாறு எதிர்கொள்ள முடியும் என்பதை இந்தியா உணர்த்தியுள்ளது. புத்தரின் போதனைகளை ஒட்டுமொத்த உலகமும் ஒற்றுமையாகப் பின்பற்றுகிறது. இதில், சர்வதேச புத்தமத கூட்டமைப்பின் முன்முயற்சியான 'பிரார்த்தனையுடன் அன்பு செலுத்துதல்' பாராட்டுக்குரியது என்று ஆஷாத பூர்ணிமா- தம்மா சக்கர தின நிகழ்ச்சியில் தமது உரையின் போது பிரதமர் தெரிவித்தார்.

ஆஷாத பூர்ணிமா-தம்மா சக்கர தின நிகழ்ச்சியில் தமது செய்தியை பிரதமர் நாளை பகிர உள்ளார்

July 23rd, 09:49 pm

ஆஷாத பூர்ணிமா-தம்மா சக்கர தின நிகழ்ச்சியில் தமது செய்தியை நாளை, 2021 ஜூலை 24 அன்று காலை 8.30 மணிக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி பகிர உள்ளார்