
This is the right time to Create In India, Create For The World: PM Modi at WAVES Summit
May 01st, 03:35 pm
At the inaugural address of WAVES 2025, PM Modi called it a landmark moment for the global creative community. He emphasized that the summit unites over 100 nations through storytelling, music, gaming, and innovation, showcasing India's leadership in culture and creativity.
பிரதமர் திரு நரேந்திர மோடி வேவ்ஸ் 2025 உச்சி மாநாட்டை தொடங்கி வைத்தார்
May 01st, 11:15 am
மும்பையில் உள்ள ஜியோ உலக மையத்தில் இந்தியாவின் முதலாவது உலக ஒலி, ஒளி மற்றும் பொழுதுபோக்கு உச்சி மாநாட்டை பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் உரையாற்றிய அவர், மகாராஷ்டிரா தினம் மற்றும் குஜராத் மாநில தினம் இன்று கொண்டாடப்படுவதை முன்னிட்டு அனைவருக்கும் வாழ்த்துத் தெரிவித்தார். அனைத்து சர்வதேச பிரமுகர்கள், தூதர்கள் மற்றும் படைப்பாற்றல் தொழில்துறையைச் சேர்ந்தவர்கள் வந்திருப்பதை குறிப்பிட்ட பிரதமர், இந்த நிகழ்வின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தார். 100-க்கும் மேற்பட்ட நாடுகளின் கலைஞர்கள், புதுமைப் படைப்பாளர்கள், முதலீட்டாளர்கள், கொள்கை வகுப்பாளர்கள் ஆகியோர் திறமையையும், படைப்பாற்றலையும் கொண்ட உலகளாவிய அமைப்புக்கு அடித்தளம் அமைக்க ஒன்றிணைந்துள்ளனர் என்று அவர் கூறினார். வேவ்ஸ் என்பது ஒரு சுருக்கப்பெயர் மட்டுமே அல்ல என்றும், இது கலாச்சாரம், படைப்பாற்றல் மற்றும் உலகளாவிய தொடர்பைக் குறிக்கும் ஒரு அலை என்றும் அவர் குறிப்பிட்டார். மேலும் இந்த உச்சிமாநாடு திரைப்படங்கள், இசை, கேமிங், அனிமேஷன், கதைசொல்லல் ஆகியவற்றின் விரிவான உலகத்தை எடுத்துக்காட்டுகிறது என்று அவர் தெரிவித்தார். கலைஞர்கள் மற்றும் படைப்பாளர்களை ஒருங்கிணைக்கவும் ஒத்துழைத்து செயல்படவும் உலகளாவிய தளத்தை இது வழங்குகிறது என அவர் கூறினார். இந்த வரலாற்று சிறப்புமிக்க நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள அனைவரையும் பாராட்டிய பிரதமர், இந்தியா மற்றும் வெளிநாடுகளில் இருந்து வந்துள்ள சிறப்பு விருந்தினர்களை அன்புடன் வரவேற்றார்.
பத்மஸ்ரீ ராம்சஹாய் பாண்டே மறைவுக்கு பிரதமர் இரங்கல்
April 09th, 04:58 pm
புகழ்பெற்ற நாட்டுப்புறக் கலைஞர் பத்மஸ்ரீ ராம்சஹாய் பாண்டே மறைவிற்குப் பிரதமர் திரு நரேந்திர மோடி ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.புதுதில்லியில் நாளை (2025 பிப்ரவரி 28) ஜஹான்-இ-குஸ்ருவ் நிகழ்ச்சியில் பிரதமர் பங்கேற்கிறார்
February 27th, 06:30 pm
புதுதில்லியில் உள்ள சுந்தர் நர்சரியில் நாளை (பிப்ரவரி 28) இரவு 7:30 மணியளவில் மாபெரும் சூஃபி இசை விழாவான ஜஹான்-இ-குஸ்ரு 2025-ல் பிரதமர் திரு நரேந்திர மோடி பங்கேற்கிறார்.பராக்ரம தினத்தன்று பிரதமர் ஆற்றிய உரை
January 23rd, 11:30 am
நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் பிறந்தநாளான இன்று, நாடு முழுவதும் அவரை மரியாதையுடன் நினைவு கூர்கிறது. நேதாஜி சுபாஷ் பாபுவுக்கு எனது மரியாதைக்குரிய அஞ்சலியை செலுத்துகிறேன். இந்த ஆண்டு பராக்ரம தினம் பிரமாண்டமான கொண்டாட்டம் நேதாஜி பிறந்த இடத்தில் நடைபெறுகிறது. இதற்காக ஒடிசா மக்களுக்கும், ஒடிசா அரசுக்கும் எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். நேதாஜியின் வாழ்க்கை தொடர்பான பிரமாண்ட கண்காட்சியும் கட்டாக்கில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்தக் கண்காட்சியில், நேதாஜியின் வாழ்க்கை தொடர்பான பல பாரம்பரியங்கள் ஒன்றாகப் பாதுகாக்கப்பட்டுள்ளன. பல ஓவியர்கள் நேதாஜியின் வாழ்க்கை நிகழ்வுகளை வரைந்துள்ளனர். இவை அனைத்தையும் சேர்த்து நேதாஜியின் அடிப்படையிலான பல புத்தகங்களும் சேகரிக்கப்பட்டுள்ளன. நேதாஜியின் வாழ்க்கைப் பயணத்தின் இந்த மரபுகள் அனைத்தும் எனது இளம் இந்தியா, எனது இந்தியாவுக்கு ஒரு புதிய ஆற்றலைத் தரும்.பராக்ரம தினத்தை முன்னிட்டு பிரதமர் திரு நரேந்திர மோடி ஆற்றிய உரை
January 23rd, 11:25 am
பராக்ரம தினமாகக் கொண்டாடப்படும் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் பிறந்த நாளை முன்னிட்டு பிரதமர் திரு நரேந்திர மோடி காணொலி மூலம் இன்று உரையாற்றினார். இந்தத் தினத்தை முன்னிட்டு மக்களுக்கு வாழ்த்து தெரிவித்த பிரதமர், நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் பிறந்த நாளான இன்று நாடு முழுவதும் அவரை மரியாதையுடன் நினைவு கூர்கிறது என்றார். நேதாஜி சுபாஷ் சந்திர போஸுக்கு மரியாதை செலுத்திய திரு நரேந்திர மோடி, இந்த ஆண்டு பராக்ரம தினக் கொண்டாட்டங்கள் அவரது பிறந்த மாநிலமான ஒடிசாவில் நடைபெறுவதாகத் தெரிவித்தார். இந்த நிகழ்ச்சியை முன்னிட்டு ஒடிசா மக்களுக்கும், அரசுக்கும் அவர் வாழ்த்துத் தெரிவித்தார். நேதாஜியின் வாழ்க்கைப் பாரம்பரியத்தை அடிப்படையாகக் கொண்ட பிரமாண்டமான கண்காட்சி ஒடிசா மாநிலம் கட்டாக்கில் நடைபெறுகிறது என்று பிரதமர் தெரிவித்தார். நேதாஜியின் வாழ்க்கை தொடர்பான நிகழ்வுகளை பல கலைஞர்கள் காட்சிகளாக வரைந்துள்ளனர் என்றும் அவர் கூறினார். நேதாஜி தொடர்பான பல புத்தகங்கள் சேகரிக்கப்பட்டுள்ளன என்றும் அவர் கூறினார். நேதாஜியின் வாழ்க்கைப் பயணத்தின் இந்த மரபுகள் அனைத்தும் மை பாரத் தளத்திற்கு புதிய சக்தியை அளிக்கும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.சாஹிபாபாத் ஆர்.ஆர்.டி.எஸ் நிலையத்திலிருந்து புதிய அசோக் நகர் ஆர்.ஆர்.டி.எஸ் நிலையத்துக்கு நமோ பாரத் ரயிலில் பயணம் செய்த போது மாணவர்கள் மற்றும் ரயில் லோகோ பைலட்டுகளுடனான பிரதமரின் உரையாடலின் தமிழாக்கம்
January 05th, 08:50 pm
ஆமாம் ஐயா. இன்று, உங்களால் ஒவ்வொரு வீட்டிலும் யு.பி.ஐ பயன்படுத்தப்படுகிறது.தேசிய கைத்தறி தினத்தையொட்டி பிரதமர் வாழ்த்து தெரிவித்துள்ளார்
August 07th, 10:14 am
தேசிய கைத்தறி தினத்தையொட்டி நாட்டு மக்களுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இந்திய கைவினைஞர்களின் முயற்சிகளைப் பாராட்டிய அவர், 'உள்ளூர் தயாரிப்புகளை ஆதரிப்போம்' என்ற அரசின் உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்தினார்.Viksit Bharat Ambassador Artist Workshop Attracts Massive Participation at Delhi's Purana Quila
March 10th, 11:18 pm
On March 10, 2024, the historic Purana Quila in Delhi was filled with artistic energy as it hosted the 'Viksit Bharat Ambassadors Artist Workshop.' The National Gallery of Modern Art organised the workshop in collaboration with the Lalit Kala Akademi and the Ministry of Culture, Government of India. The theme of the day-long workshop was 'Viksit Bharat by 2047.' The workshop began registrations at 9 AM and concluded at 5 PM. Each artist was free to explore the medium, from sketching to acrylic painting, photography, and other art forms.செங்கோட்டையில் நடைபெற்ற பராக்கிரம தினக் கொண்டாட்டத்தில் பிரதமர் நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்
January 23rd, 06:31 pm
எனது அமைச்சரவை சகாக்களான திரு கிஷன் ரெட்டி அவர்களே, திரு அர்ஜுன் ராம் மெக்வால் அவர்களே, திருமதி மீனாட்சி லேகி அவர்களே, திரு அஜய் பட் அவர்களே, பிரிகேடியர் திரு ஆர்.எஸ்.சிகாரா அவர்களே, நேதாஜியின் இந்திய தேசிய ராணுவத்தில் பணியாற்றிய லெப்டினன்ட் ஆர். மாதவன் அவர்களே, எனதருமை நாட்டு மக்களே!தில்லி செங்கோட்டையில் பராக்ரம தினக் கொண்டாட்டத்தைக் குறிக்கும் நிகழ்ச்சியில் பிரதமர் உரையாற்றினார்
January 23rd, 06:30 pm
பிரதமர் திரு. நரேந்திர மோடி தில்லி செங்கோட்டையில் நடைபெற்ற பராக்ரம தினக் கொண்டாட்டங்களில் பங்கேற்றார். குடியரசு தின அலங்கார ஊர்திகள் மற்றும் கலாச்சார கண்காட்சிகளுடன் நாட்டின் வளமான பன்முகத்தன்மையை வெளிப்படுத்தும் பாரத் பர்வ் திட்டத்தையும் அவர் தொடங்கி வைத்தார். நேதாஜி குறித்த புகைப்படங்கள், ஓவியங்கள், புத்தகங்கள் மற்றும் சிற்பங்கள் அடங்கிய தேசிய ஆவணக் காப்பகத்தின் தொழில்நுட்பம் சார்ந்த கலந்துரையாடல் கண்காட்சியைப் பார்வையிட்ட பிரதமர், தேசிய நாடகப் பள்ளி வழங்கிய நேதாஜியின் வாழ்க்கை குறித்த நாடகத்தையும் பார்வையிட்டார். ஐ.என்.ஏவில் உயிருடன் இருக்கும் ஒரே முன்னாள் வீரரான லெப்டினன்ட் ஆர். மாதவனையும் அவர் பாராட்டினார். சுதந்திரப் போராட்டத்தில் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கிய பிரபலங்களின் பங்களிப்பை முறையாக கௌரவிக்க வேண்டும் என்ற பிரதமரின் தொலைநோக்குக்கு ஏற்ப, நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் பிறந்த நாளில் 2021 முதல் பராக்ரம தினம் கொண்டாடப்படுகிறது.கர்பா பாடலுக்கு இசை அமைத்த கலைஞர்களுக்கு பிரதமர் நன்றி தெரிவித்தார்
October 14th, 11:57 am
பல ஆண்டுகளுக்கு முன்பு தான் எழுதிய கர்பா பாடலுக்கு இசை, ஒலி கோர்ப்பு செய்த கலைஞர்கள் த்வானி பானுஷாலி, தனிஷ்க் பாக்சி மற்றும் ஜேஜஸ்ட் மியூசிக் குழுவினருக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று நன்றி தெரிவித்தார். வரவிருக்கும் நவராத்திரியின் போது ஒரு புதிய கர்பாவைப் பகிர்ந்து கொள்ளப் போவதாகவும் அவர் தெரிவித்தார்.புதுதில்லியில் கடமைப்பாதையின் துவக்க விழாவில் பிரதமரின் உரை
September 08th, 10:41 pm
இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வில் எனது அமைச்சரவை நண்பர்களான திரு ஹர்தீப் சிங் புரி, திரு ஜி. கிஷன் ரெட்டி, திரு அர்ஜுன் ராம் மேகவால், திருமதி மீனாட்சி லேகி மற்றும் திரு கௌசல் கிஷோர் ஆகியோர் இந்த மேடையில் உள்ளனர்.PM inaugurates 'Kartavya Path' and unveils the statue of Netaji Subhas Chandra Bose at India Gate
September 08th, 07:00 pm
PM Modi inaugurated Kartavya Path and unveiled the statue of Netaji Subhas Chandra Bose. Kingsway i.e. Rajpath, the symbol of colonialism, has become a matter of history from today and has been erased forever. Today a new history has been created in the form of Kartavya Path, he said.நேதாஜி சுபாஷ் சந்திரபோசின் சிற்பத்தைப் பிரதமர் பெற்றுக்கொண்டார்
April 05th, 02:40 pm
நேதாஜி சுபாஷ் சந்திரபோசின் சிற்பத்தை சிற்பக் கலைஞர் அருண் யோகிராஜிடமிருந்து பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று பெற்றுக்கொண்டார்.பண்டிட் பீம்சென் ஜோஷியின் 100-வது பிறந்தநாளில் பிரதமர் அவரை நினைவுகூர்ந்தார்
February 04th, 07:57 pm
பண்டிட் பீம்சென் ஜோஷியின் 100-வது பிறந்தநாளில் பிரதமர் திரு நரேந்திர மோடி அவரை நினைவுகூர்ந்தார்.100 கோடி தடுப்பூசி அளவுகளுக்குப் பிறகு, இந்தியா புதிய உற்சாகம் மற்றும் ஆற்றலுடன் முன்னேறுகிறது: மன் கி பாத்தின் போது பிரதமர் மோடி100 கோடி தடுப்பூசி அளவுகளுக்குப் பிறகு, இந்தியா புதிய உற்சாகம் மற்றும் ஆற்றலுடன் முன்னேறுகிறது: ‘மன் கீ பாத்தின்’ (மனதின் குரல்) போது பிரதமர் மோடி
October 24th, 11:30 am
எனதருமை நாட்டுமக்களே, உங்கள் அனைவருக்கும் என் வணக்கங்கள், கோடானுகோடி வணக்கங்கள். நான் ஏன் கோடானுகோடி என்று கூறுகிறேன் என்றால், 100 கோடி தடுப்பூசித் தவணைகளுக்குப் பிறகு இன்று தேசத்திலே புதிய உற்சாகம், புதிய சக்தி பெருக்கெடுத்துக் கொண்டிருக்கிறது. நமது தடுப்பூசித் திட்டத்தின் வெற்றி, பாரதத்தின் வல்லமையைப் பறைசாற்றுகிறது, அனைவரின் முயற்சி என்ற மந்திரத்தின் சக்தியைப் பிரதிபலிக்கிறது.இளம் கலைஞரின் ஓவியங்கள் மற்றும் பொது சுகாதாரத்தில் அவர் கொண்டுள்ள அக்கறைக்கு பிரதமர் பாராட்டு
August 26th, 06:02 pm
பெங்களூருவைச் சேர்ந்த மாணவரான திரு ஸ்டீவன் ஹாரிஸின் ஓவியங்களைப் பாராட்டி, பிரதமர் திரு நரேந்திர மோடி அவருக்குக் கடிதம் எழுதியுள்ளார். வளர்ந்து வரும் 20 வயது ஓவியர், பிரதமரின் 2 அழகு மிளிரும் ஓவியங்களுடன் ஓர் கடிதத்தையும் பிரதமருக்கு அனுப்பியிருந்தார். அவரை ஊக்கப்படுத்தியும், பாராட்டியும் பிரதமர் பதில் எழுதியுள்ளார்.மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த, பிரதமரின் கரிப் கல்யாண் அன்ன யோஜனா பயனாளிகளுடனான கலந்துரையாடலில் பிரதமரின் உரை
August 07th, 10:55 am
மத்தியப் பிரதேச ஆளுநரும், பழங்குடியினர் நலனுக்காக தனது முழு வாழ்க்கையையும் செலவிட்ட திரு மங்குபாய் படேல் அவர்களே, மத்தியப் பிரதேச முதல்வர் திரு சிவராஜ் சிங், மாநில அமைச்சர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ,க்கள் மற்றும் இந்நிகழ்ச்சியில் இணைந்துள்ள மத்தியப் பிரதேச சகோதர, சகோதரிகளே!மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த பிரதமரின் ஏழைகள் நல உணவுத் திட்ட பயனாளிகளுடன் பிரதமர் கலந்துரையாடல்
August 07th, 10:54 am
மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த பிரதமரின் ஏழைகள் நல உணவுத் திட்ட பயனாளிகளுடன் பிரதமர் திரு நரேந்திர மோடி, காணொலிக் காட்சி வாயிலாக இன்று கலந்துரையாடினார். மாநிலத்தில், தகுதி பெறும் நபர் எவரும் விடுபட்டு விடக்கூடாது என்பதை உறுதி செய்வதற்காக இந்த திட்டம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக ஓர் தீவிர பிரச்சாரம் மேற்கொள்ளப்படுகிறது. ஆகஸ்ட் 7, 2021-ஐ, பிரதமரின் ஏழைகள் நல உணவுத் திட்ட தினமாக அந்த மாநிலம் கொண்டாடுகிறது. மத்தியப் பிரதேச மாநிலத்தின் ஆளுநர் மற்றும் முதலமைச்சர், இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். மத்தியப் பிரதேசத்தில் இந்தத் திட்டத்தினால் சுமார் 5 கோடி பயனாளிகள், பயனடைந்து வருகிறார்கள்.