விமானப்படையின் முன்னாள் தளபதி அர்ஜன் சிங்கிற்கு பிரதமர் அஞ்சலி செலுத்தினார்
September 17th, 09:36 pm
விமானப்படையின் முன்னாள் தளபதி அர்ஜன் சிங்கின் வீட்டிற்கு இன்று சென்ற பிரதமர் நரேந்திர மோடி, அவருக்கு அஞ்சலி செலுத்தினார். விமானப்படையின் முன்னாள் தளபதி அர்ஜன் சிங்கின் குடும்ப உறுப்பினர்களிடம் மோடி தனது இரங்கலை தெரிவித்துக் கொண்டார்.சர்தார் படேலின் முயற்சியினால் தான் “ஒரே பாரதம், வளமான பாரதம்” என்னும் கனவை நம்மால் நனவாக்க முடிகிறது” : பிரதமர் மோடி
September 17th, 12:26 pm
இன்று குஜராத்தில் உள்ள தபோய்-ல் பழங்குடி விடுதலை போராட்ட வீரர்களின் தேசிய அருங்காட்சியகத்திற்கான அடிக்கல்லை பிரதமர் இன்று நாட்டினார். ”அன்னிய ஆதிக்கத்தை எதிர்த்து போராடிய பழங்குடி இனத்தை சேர்ந்த விடுதலை போராட்ட வீரர்களை நாம் நினைவில் வைத்திருக்கிறோம்”, என பிரதமர் கூறினார்.சர்தார் சரோவர் அணைக்கட்டை நாட்டிற்கு அர்பணித்த பிரதமர் பழங்குடி விடுதலை போராட்ட வீரர்களின் தேசிய அருங்காட்சியகத்திற்கான அடிக்கல்லையும் நாட்டினார்.
September 17th, 12:25 pm
இன்று குஜராத்தில் உள்ள தபோய்-ல் பழங்குடி விடுதலை போராட்ட வீரர்களின் தேசிய அருங்காட்சியகத்திற்கான அடிக்கல்லை பிரதமர் இன்று நாட்டினார். ”அன்னிய ஆதிக்கத்தை எதிர்த்து போராடிய பழங்குடி இனத்தை சேர்ந்த விடுதலை போராட்ட வீரர்களை நாம் நினைவில் வைத்திருக்கிறோம்”, என பிரதமர் கூறினார்.விமான படையின் முன்னாள் தளபதி அர்ஜன் சிங் மறைவுக்கு பிரதமர் வருத்தம் தெரிவித்துள்ளார்
September 16th, 09:50 pm
விமான படையின் முன்னாள் தளபதி அர்ஜன் சிங் மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி வருத்தம் தெரிவித்துள்ளார். விமான படையில் அர்ஜன் சிங் பணியாற்றிய போது, அவர், திறன் வளர்ப்பிற்கு உறூதியாக முக்கியத்துவம் அளித்து வந்ததாகவும், அதன் காரணமாக பாதுகாப்பு துறையின் செயலாற்றல் வலுப்பட்டு வந்ததாகவும் தனது ட்வீட் செய்திகளில் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.விமானப்படைத் தளபதி அர்ஜன் சிங்கை மருத்துவமனையில் சென்று பார்த்த பிரதமர், அவர் விரைவில் குணமடைய வாழ்த்து தெரித்தார்
September 16th, 06:43 pm
பிரதமர் நரேந்திர மோடி, ஆர்&ஆர் மருத்துவமனையில், ஆபத்தான நிலையில் அனுமதிப்பட்டுள்ள விமான படையின் முன்னாள் தளபதி அர்ஜன் சிங்கை சென்று பார்த்தார். அவரது குடும்ப உறுப்பினர்களையும் சந்தித்து பேசிய மோடி, அவர் விரைவில் குணமடைய வேண்டும் என வாழ்த்து தெரிவித்தார்.