குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள அறிவியல் நகரத்தை பிரதமர் பார்வையிட்டார்
September 27th, 02:10 pm
குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள அறிவியல் நகரத்தை பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று பார்வையிட்டார். ரோபோட்டிக்ஸ் காட்சியகம், இயற்கை பூங்கா, நீர்வாழ் காட்சியகம், சுறா சுரங்கப்பாதை ஆகியவற்றை நடந்து சென்று அவர் பார்வையிட்டார்.டென்மார்க் பிரதமர் வருகையின் போது பரிமாறிக் கொள்ளப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் / ஒப்பந்தங்களின் பட்டியல்
October 09th, 03:54 pm
டென்மார்க் பிரதமர் வருகையின் போது பரிமாறிக் கொள்ளப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் / ஒப்பந்தங்களின் பட்டியல்டென்மார்க் பிரதமர் மேன்மைமிகு திருமிகு மெட்டே ஃபிரடெரிக்சன்னுடனான கூட்டு செய்தியாளர் சந்திப்பில் பிரதமர் திரு நரேந்திர மோடியின் உரையின் மொழிபெயர்ப்பு
October 09th, 01:38 pm
கொரோனா பெருந்தொற்று தொடங்குவதற்கு முன்பு, அரசு தலைவர்களின் வரவேற்புக்கு சாட்சியாக இந்த ஹைதராபாத் மாளிகை விளங்கியது. கடந்த 18-20 மாதங்களாக இந்த நடைமுறை நிறுத்தப்பட்டது. டேனிஷ் பிரதமரின் வருகையுடன் இன்று ஒரு புதிய தொடக்கம் உருவாகியிருப்பதில் நான் மகிழ்ச்சியடைகிறேன்.குஜராத்தில் பல்வேறு திட்டங்களை நாட்டுக்கு அர்ப்பணித்து பிரதமர் ஆற்றிய உரையின் முக்கிய அம்சங்கள்
July 16th, 04:05 pm
எனது அமைச்சரவை தோழரும், காந்திநகர் எம்பியுமான திரு அமித் ஷா அவர்களே, ரயில்வே அமைச்சர் திரு அஸ்வினி வைஷ்ணவ் அவர்களே, குஜராத் முதலமைச்சர் விஜய் ரூபானி அவர்களே, துணை முதலமைச்சர் நிதின் பாய் அவர்களே, ரயில்வே இணையமைச்சர் திருமதி தர்ஷனா ஜர்தோஷ் அவர்களே, குஜராத் மாநில அமைச்சர்களே, நாடாளுமன்ற உறுப்பினர்களே, குஜராத் மாநில பிஜேபி தலைவர் திரு சிஆர் பாட்டீல் அவர்களே, சட்டமன்ற உறுப்பினர்களே, எனது அன்புக்குரிய சகோதர, சகோதரிகளே அனைவருக்கும் வணக்கத்தையும், வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.குஜராத்தில் பல்வேறு திட்டங்களை பிரதமர் திறந்து வைத்து நாட்டுக்கு அர்ப்பணித்தார்
July 16th, 04:04 pm
குஜராத்தில் பல்வேறு முக்கிய ரயில்வே திட்டங்களை காணொலி மூலம் பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று திறந்து வைத்து நாட்டுக்கு அர்ப்பணித்தார். குஜராத் அறிவியல் நகரத்தி்ல் அமைக்கப்பட்டுள்ள நீர்வாழ் உயிரினங்கள் மற்றும் எந்திரவியல் காட்சியகங்கள் மற்றும் இயற்கை பூங்காவையும் அவர் திறந்து வைத்தார். காந்திநகர் கேப்பிடல்-வாரணாசி அதிவேக வாரந்திர எக்ஸ்பிரஸ் மற்றும் காந்திநகர் கேப்பிடல்-வரேத்தா இடையேயான மின்சார ரயில் சேவைகளையும் பிரதமர் துவக்கி வைத்தார்.குஜராத்தில் பல திட்டங்களை பிரதமர் ஜூலை 16ம் தேதி தொடங்கி வைத்து நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார்
July 14th, 06:45 pm
குஜராத்தில் பல முக்கிய ரயில் திட்டங்களை, பிரதமர் திரு நரேந்திர மோடி ஜூலை 16ம் தேதி அன்று காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்து நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார். இந்நிகழ்ச்சியின் போது, குஜராத் அறிவியல் நகரில் நீர்வாழ் உயிரின கூடம் மற்றும் ரோபோடிக்ஸ்(எந்திரனியல்) அரங்கத்தையும் அவர் தொடங்கி வைக்கிறார்.