ஜி-7 உச்சிமாநாட்டிற்கு இடையே ஜப்பான் பிரதமருடன் பிரதமர் நரேந்திர மோடி சந்திப்பு

June 14th, 11:53 pm

இத்தாலியின் அபுலியாவில் ஜி-7 உச்சிமாநாட்டிற்கு இடையே ஜப்பான் பிரதமர் திரு ஃபூமியோ கிஷிடா-வுடன் பிரதமர் திரு நரேந்திர மோடி இருதரப்பு சந்திப்பை நடத்தினார்.

ஜி-7 உச்சிமாநாட்டிற்கு இடையே இத்தாலி பிரதமருடன் திரு நரேந்திர மோடி சந்திப்பு

June 14th, 11:40 pm

இத்தாலியின் அபுலியாவில் ஜி-7 உச்சிமாநாட்டிற்கு இடையே இத்தாலியக் குடியரசின் பிரதமர் திருமதி ஜார்ஜியா மெலோனியுடன், திரு நரேந்திர மோடி இருதரப்பு சந்திப்பை நடத்தினார். 3-வது முறையாக பிரதமராக பொறுப்பேற்றுள்ள பிரதமர் திரு நரேந்திர மோடிக்கு, திருமதி மெலோனி வாழ்த்துத் தெரிவித்தார். ஜி-7 உச்சிமாநாட்டில் பங்கேற்க தமக்கு அழைப்பு விடுத்த இத்தாலிப் பிரதமர் திருமதி மெலோனிக்கு நன்றி தெரிவித்த திரு மோடி, வெற்றிகரமான உச்சிமாநாட்டின் நிறைவுக் குறித்து பாராட்டு தெரிவித்தார்.

ஜி-7 உச்சிமாநாட்டின் மக்கள் தொடர்பு அமர்வில் பிரதமர் திரு நரேந்திர மோடி நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்

June 14th, 09:54 pm

முதலாவதாக இந்த உச்சிமாநாட்டிற்கு அழைப்பு விடுத்ததற்காகவும் நமக்கு அன்பான விருந்து உபசாரம் அளித்ததற்காகவும் பிரதமர் மெலோனிக்கு நான் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன். அதிபர் ஓலஃப் ஷோல்ஸ்-க்கு நான் பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவிக்கிறேன். ஜி-7 உச்சிமாநாடு தனித்துவமானது, வரலாற்றுச் சிறப்புமிக்கது. இந்தக் குழுவின் 50-வது ஆண்டின் ஜி-7 நண்பர்கள் அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துகள்.

ஜி7 உச்சிமாநாட்டில் செயற்கை நுண்ணறிவு, எரிசக்தி, ஆப்பிரிக்கா, மத்திய தரைக்கடல் பகுதி குறித்த பரப்புரை அமர்வில் பிரதமர் பங்கேற்பு

June 14th, 09:41 pm

இத்தாலியின் அபுலியாவில் இன்று நடைபெற்ற ஜி7 உச்சிமாநாட்டில் செயற்கை நுண்ணறிவு, எரிசக்தி, ஆப்பிரிக்கா, மத்திய தரைக்கடல் பகுதி குறித்த பரப்புரை கூட்டத்தில் பிரதமர் திரு நரேந்திர மோடி உரையாற்றினார். குழுவின் 50-வது ஆண்டு நிறைவை முன்னிட்டு அவர் வாழ்த்து தெரிவித்தார்.

ஜி-7 உச்சிமாநாட்டிற்கு இடையே இங்கிலாந்து பிரதமருடன் பிரதமர் சந்திப்பு

June 14th, 04:00 pm

இத்தாலியின் அபுலியா நகரில் நடைபெற்று வரும் ஜி-7 உச்சிமாநாட்டிற்கு இடையே, இங்கிலாந்து பிரதமர் திரு ரிஷி சுனக்குடன் பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று (14.06.2024) இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்தினார். தொடர்ந்து மூன்றாவது முறையாக வரலாற்று சிறப்புமிக்க வகையில் இந்தியாவின் பிரதமராக பொறுப்பேற்றுள்ள திரு நரேந்திர மோடிக்கு இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் வாழ்த்துத் தெரிவித்தார். இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்த இரு நாடுகளும் இணைந்து செயல்படுவதற்கான உறுதிப்பாட்டை இரு தலைவர்களும் மீண்டும் உறுதி செய்தனர்.